ந்திய மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து வாங்கியுள்ள ரஃபேல் விமானத்தில் ஓம் என எழுதுவது, தேங்காய் உடைப்பது, எலுமிச்சை பழத்தை டயருக்கு அடியில் வைப்பது இந்தியாவை இந்து தேசம் என கூறும் மறைமுக அறிவிப்பு.

இதனை டிவிட்டரில் பலரும் கண்டித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக…

***

எதுக்குடா ரஃபேலு… ரெண்டு எலுமிச்சை, நாலு மஞ்சா கயிறு போதாதா !
மந்திரிச்சி விட்டா எதிரி நாடுகளும் பஞ்சா பறந்திடுமே !

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல், ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

ஊடகங்களின் வாயைக் கட்டிய இந்துக் குறியீடு !

ராஜ்நாத்தைப் போல, முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே. ஆண்டனி சிலுவையை வரைந்திருந்தால், இந்ந்தியாவும் ஊடகங்களும் கொலைவெறியோடு கதறியிருக்கும் !

கருத்துப்படம் : வேலன்

ஷாலினி :

இது நமது பாரம்பரியம், மதச் சடங்கு என்றெல்லாம் கூறுபவர்களுக்கு, இந்தியா என்பது முசுலீம்கள், கிறித்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் பல்வேறு மக்கள் இந்த நாட்டைஉயர்த்த தங்களது வரியை செலுத்துகிறார்கள். மத்திய அரசாங்கம் ஏன் இந்துக்களின் சடங்குகளை மட்டும் பின்பற்றுகிறது?

சமீர் ஹூடா :

பல்லாயிரக்கணக்கான கோடி செலவழித்து நாட்டைப் பாதுகாக்க ஜெட் விமானம் வாங்கவும். அதனைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கவும். அதற்கு பதிலாக நாட்டைப் பாதுகாக்க ஏன் முதலிலேயே எலுமிச்சையை வாங்கி அனைத்து பணத்தையும் சேமிக்கக் கூடாது ?

ரஹ்மது :

டஸ்ஸால்ட் மற்றும் ஏவியேசன் குழுவினரே, நாங்கள் இப்போதுதான் ரஃபேல் பூஜையைத் துவக்கியுள்ளோம். நாங்கள் கேடு விளைவிக்கும் பார்வைகளின் எதிர்ப்பை நசுக்க, எலுமிச்சையின் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த வகையான பாதுகாப்பு அமைப்பை ஏன் ரஃபேல் விமானத்தில் நீங்கள் பொறுத்தவில்லை ?

இந்திய மின்னணுப் படை :

ஒருவழியாக ரஃபேல் தயாராகிவிட்டது !

சத்தூட்டி :

மொத்த ரஃபேல் ஒப்பந்தமும் அவரது சமூகத்திற்கு மட்டுமானது என்பதை உறுதி செய்யும் வகையில் வரிப்பணத்தை எடுத்து இந்துத்துவாவை பரப்ப முயற்சிக்கிறார் இந்த அமைதி விரும்பி !

#பாஜகதோற்றது :

இதற்காகத்தான் இந்தியா வேண்டிக் கிடந்தது.

சுஷில் யதி :

இந்த உலகிற்கு நமது பங்களிப்பு! #RafalePujaPolitics

இஷ்ரத் வளி :

மாட்டுக்கறி உண்பவர்களால் செய்துமுடிக்கப்பட்ட விமானத்தை இப்படித்தான் நீங்கள் சுத்திகரிக்க முடியும்
#RafalePujaPolitics

முகமது சமி :

என்ன இது ? தனது மதத்தின் குறியீட்டை ஏன் இவர் வரைகிறார் ? முசுலீம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனின் வரிப்பணத்தில் இருந்துதான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒருவேளை, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி, இவரைப் போல சிலுவைக் குறியீட்டை வரைந்திருந்தால், மொத்த இந்தியாவும், அதன் ஊடகங்களும் பெரும் கொலை நடந்ததாகக் கதறியிருக்குமே ? #RafalePujaPolitics

மிதுன் கே மது :

நமது அரசியல் சாசன சட்டப் பிரிவு 51A (h) “ அறிவியல் வேட்கை, மனிதம் மற்றும் அறிந்து கொள்வதற்கும், சீர்திருத்துவதற்குமான உத்வேகம் ஆகியவற்றை வளர்ப்பதுவும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்று குறிப்பிடுகிறது

சந்தீப் வர்ரி :

இந்தியா தனது முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்றிருக்கிறது. ஒருவேளை, பிரான்ஸ் “விமானத்தின் மீது தேங்காய் உடைத்து விட்டதால் வாரண்டி கிடையாது” என்று கூறிவிட்டது என்றால் என்ன நிலைமை என்பதை கற்பனைச் செய்து பாருங்கள் #RafalePujaPolitics #RafaleDeal

டி.ஆர்.பி.ராஜா :

ரஃபேல் விமானத்தின் சக்கரங்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றனவா ? அல்லது அந்த எலுமிச்சம்பழங்கள் மிகவும் பெரியதாக இருக்கின்றனவா ? ரஃபேல் பூஜை தொடர்பான அரசியலை மறந்துவிடுங்கள். நான் பெரிய எலுமிச்சைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொள்கிறேன்.

நயீம் :

இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வகை நிறுத்துவான்.
#RafalePujaPolitics

மணீஷ் குப்தா :

#RafalePujaPolitics Is it necessary
இது அவசியமா ?

ஸ்ரீகாந்த் :

அவை சாதாரண எலுமிச்சைகள் அல்ல. அவை மேகமூட்டமான சூழலிலும் எதிரியின் விமானங்களைக் கண்டுபிடிக்கவல்ல ரேடார்கள்.
#RafalePujaPolitics #RajnathSingh #RafaleDeal

பீர் சடாஷா:

என்னத்த சொல்ல ? #RafalePujaPolitics

சுரேஷ் திக்வால்:

“120 மில்லியன் டாலர் பாதுகாப்பு” எதிர் “5 ரூபாய் எலுமிச்சை”. இந்தியா இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது.
#RafalePujaPolitics #RafaleOurPride

வொய்ட் ப்ளேஸ்:

மொத்த உலகும் இந்தியாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது! ஒன்னுத்துக்கும் ஆகாத பசங்க ! என்ன செய்கிறார்கள்? இவர்கள் என்ன பைத்தியமா ?

ஷோஹில் ரெய்னா :

மன்னிக்கவும், 56” இன்ச்சைக் காணவில்லை.
#RafalePujaPolitics

ரேட்டோபஸ் :

நம்ம பாதுகாப்பு அமைச்சரையே புரிந்துகொள்ளாத முட்டாள்களாக இருக்கிறார்கள். சக்கரத்திற்கு அடியில் வைக்கப்படும் எலுமிச்சை, நிம்பஸ் எனும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும். ரேடார்களில் இருந்து மறைந்து கொள்ள உதவும். இது பழைய பாதுகாப்புத் தொழில்நுட்பம். எதிரி விமானம் நம்மைத் துறத்தி வந்தால் “முந்திச் செல்லாதே, பொறுத்துவா” என வரைந்து வைப்போம்.

க்ருஷிகா :

உங்கள் தலைவர் அவரது நண்பருக்கு உதவுவதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியதால் மட்டுமே இது பெருமைக்குரியதாகி விடுவதில்லை. அது ரஃபேல் ஊழல் என்றாகிவிடுகிறது. பிரான்சில் அமைச்சர் மூலமாக அமானுஷ்ய பூஜைகள் நடத்துவது ஊழலை இல்லாமல் செய்துவிடாது.

க்ருஷிகா :

ரஃபேல் எங்கள் பெருமை என டிவிட் செய்யும் பக்தாள்களுக்கு,
அருமை முட்டாள்களே, இவை ஃபிரெஞ்சு பொறியியலாளர்களால் கட்டப்பட்டது. பிரெஞ்சு அரசுக்கும் திப்பு சுல்தானுக்கும் 18-ம் நூற்றாண்டில் நல்ல உறவு இருந்தது. அவர் பிரெஞ்சுடன் கூட்டணி வைத்திருந்தார். இங்கு ஏதாவது பெருமைக்குரியது என்று சொல்லப்படவேண்டுமெனில், தேஜாஸ் மட்டுமே பெருமைக்குரியதாக இருக்க முடியும். ஏனெனில் அதுமட்டுமே இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

சைது முகமது கான் :

ரஃபேல் டெலிவரிக்கு முன் / டெலிவரிக்குப் பின்

ஸ்நேகா அரோரா :

இது இந்தியப் பாரம்பரியம் #RafalePujaPolitics

ஆர்.கே தகர்வால் :

#RafalePujaPolitics
வெறும் 20 நாள் இடைவெளி மட்டுமே இருந்தது. இந்த இடைவெளிக்கு இந்தியா செலவழித்த தொகை ரூ. 58,000 கோடி. பிரான்ஸ் லட்சுமியை அள்ளிக் கொண்டது. “துர்கா பூஜை” எதிர் “லட்சுமி பூஜை”

சுனில் :

நாட்டைப் பாதுகாக்க இந்தியா ரஃபேல் விமானத்தை வாங்கியது. பின்னர் ரஃபேலைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கியது. பின்னர் எலுமிச்சையைப் பாதுகாக்க பூச்சிக் கொல்லியை வாங்கியது.
#RafalePujaPolitics

சயீது அகமது :

பிரெஞ்சு பொறியாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ச்சியாக மாட்டுக்கறியும், பன்றிக்கறியுமே உண்டு வருகின்றனர். அதன் காரணமாகவும், மாட்டுக்கறி தின்னும் பாகிஸ்தானின் கெட்ட பார்வைக்கு எதிராகவும், புனிதப்படுத்துதலும் சுத்திகரிப்பும் இத்தகைய சடங்குகளால் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.#RafalePujaPolitics

ராஜேந்திர குமார் :

எலுமிச்சையும் மிளகாயும் கொண்டுவா ! ரஃபேலைப் பாதுகாப்போம் ! #RafalePujaPolitics


தொகுப்பு :  நந்தன்

7 மறுமொழிகள்

 1. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடக்கும் மிக மோசமான (மோசடி) பிரச்சாரம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.

  மத குறியீடு இல்லாத உலக ராணுவம் எதுவுமே கிடையாது. அவ்வுளவு ஏன் இந்தியா கப்பல் படையின் சின்னத்தில் கூட கிறிஸ்துவ கிராஸ் இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் அனைத்து ராணுவத்தின் சின்னங்களில் (முக்கியமாக பிரிட்டன்) கிறிஸ்துவ கிராஸ் இருக்கும். அதேபோல் இஸ்லாமிய நாடுகளிலும்.

  கம்யூனிச நாடுகளில் கம்யூனிச சின்னத்தை அதிகாரபூர்வமாக பயன்படுத்துவார்கள்.

  கிறிஸ்துவ நாடுகளிலும் சரி இஸ்லாமிய நாடுகளிலும் சரி வேறு மதத்தை சேர்ந்த யாருமே ஏன் கிறிஸ்துவ இஸ்லாமிய சின்னங்களை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்க முடியாது.

  இன்று அமெரிக்காவை ஜனநாயகத்தின் சிகரம் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த அமெரிக்காவில் (கிறிஸ்துவ) மதநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அரசு உயர் பதவிகளுக்கு வர முடியும். இதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் தனி சட்டமே உள்ளது…

  இந்தியாவில் மட்டுமே இது எல்லாம் சாத்தியம்.

  ********************
  இந்தியா மட்டுமே உலகின் ஒரே உண்மையான மதசார்பின்மை நாடு அதற்கு முழுக்காரணம் ஹிந்துக்கள் மட்டுமே அவர்களை இப்போது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், கம்யூனிஸ்ட்கள் என்று ஒருவர் விடாமல் சீண்டி கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் இது மதவாதத்தில் தான் போய் முடியும்.
  ********************

  பெரும்பான்மை இந்தியா மக்களின் உணர்வை புரிந்து கொண்டு பேசுங்கள்.

   • எனக்கு மட்டும் மந்திர சக்தி இருந்தது என்று வைத்துக்கொள்ளுங்களேன் முதல் காரியமாக இந்தியாவில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்களையும் பிடித்து அவர்களை எல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாத ஏழு கடல் ஏழு மலை தாண்டி கொண்டு போய் விட்டுவிடுவேன், அவர்கள் மீண்டும் இந்தியாவிற்குள் வர முடியாதபடி செய்து விடுவேன். இந்திய கம்யூனிஸ்ட்களை போன்ற போலியானவர்கள், மனிதநேயம் இல்லாதவர்கள் உலகத்தில் வேறு எங்குமே இருக்க முடியாது, இந்திய மக்களின் முதல் எதிரிகள் கம்யூனிஸ்ட்கள்.

    ஆனால் நடைமுறையில் இது சாத்தியம் இல்லை, ஒன்று மட்டும் நிச்சயம் இந்திய கம்யூனிஸ்ட்கள் போன்ற தேசவிரோதிகளையும் சமாளித்து எங்கள் நாடு முன்னேறும், முன்னேற வேண்டும், மனித இனத்திற்கு இது மிகவும் அவசியம்.

 2. First Amendment (Amendment I) USA constitution
  “Congress shall make no law respecting an establishment of religion, or prohibiting the free exercise thereof; or abridging the freedom of speech, or of the press; or the right of the people peaceably to assemble, and to petition the Government for a redress of grievances”
  இன்று அமெரிக்காவை ஜனநாயகத்தின் சிகரம் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த அமெரிக்காவில் (கிறிஸ்துவ) மதநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அரசு உயர் பதவிகளுக்கு வர முடியும். இதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் தனி சட்டமே உள்ளது…இது எவ்வளவு பெரிய பொய் …

  • நான் என்ன கம்யூனிஸ்ட்டா இல்ல கிறிஸ்துவனா பொய்களை சொல்ல… இது நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி

   “Mississippi’s Constitution says, “No person who denies the existence of a Supreme Being shall hold any office in this state.” North Carolina’s says, “The following persons shall be disqualified for office: First, any person who shall deny the being of Almighty God.”

   பல மாகாணங்களில் இது போன்ற சட்டங்கள் உள்ளது, நீங்கள் கிறிஸ்துவராக அரசு பதவிகளுக்கு முதல் தகுதி.

   அதேபோல் மிக சமீபத்தில் அதிபர் டிரம்ப் அகதிகளுக்கு கிறிஸ்துவ டெஸ்ட் வைத்து அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே அமெரிக்கா குடியுரிமை என்று சொல்லியிருக்கிறார். தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் வேலை பார்ப்பவர்கள் கிறிஸ்துவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற பேச்சும் ஆரம்பித்து இருக்கிறது.

   பாக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இருப்பவர்கள் தான் கிறிஸ்துவ நாடுகள். பிரேசில் போன்ற நாடுகளில் எல்லாம் நீங்கள் ஹிந்து மதத்தை பற்றி அவதூறாக பேசுவதுபோல் கிறிஸ்துவ மதத்தை பற்றி அவதூறாக பேசினால் உங்கள் உயிர் உங்களுக்கு இல்லை.

   ======================
   உலகத்திலேயே இந்தியா மட்டுமே உண்மையான மதசார்பின்மை நாடு… அதற்கு முழு காரணம் ஹிந்து மக்களின் பெருந்தன்மை. இதே இந்தியாவில் இஸ்லாமோ அல்லது கிறிஸ்துவமோ பெரும்பான்மையினராக இருந்தால் நிச்சயம் இந்தியா மதசார்பின்மை நாடாக இருந்து இருக்காது, அதற்கு ஆதாரம் காஷ்மீர், மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்கள்.
   ======================

 3. Mr. Mani,

  I am pretty sure that you are a retired government servant (Jealously watching all the changes that happening against the radicalized religious thinking),having enough time to troll here for everything. But I am not. I have to earn to feed my family.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க