முகப்புசெய்திஇந்தியாஇஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

குஜராத்தை மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

-

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்த மோடி அரசாங்கம், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. ஜம்மு – காஷ்மீர், மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் என பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் கிரீஷ் சந்திர முர்மு. லடாக் ஆளுராக ஆர்.கே. மத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரீஷ் சந்திர முர்மு (வட்டமிடப்பட்டுள்ள நபர்).

குஜராத் மாநிலத்தில் 1985 வருட ஐ.ஏ.எஸ். தொகுப்பில் தேர்வான முர்மு, தற்போது மத்திய நிதியமைச்சகத்தில் பணியாற்றுகிறார். மத்திய பாதுகாப்பு செயலாளராகவும் தலைமை தகவல் ஆணையராகவும் பணியாற்றியர் மதூர். இவரும் குஜராத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் சிங், கோவாவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ‘புதிய’ மாநிலங்களின் ‘முதல்’ ஆளுநர்களாக முர்முவும் மதூரும் அக்டோபர் 30-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளனர்.

ஒடிசாவைச் சேர்ந்தவர் முர்மு, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் குஜராத் ஆட்சி காலத்தில் அவர்களுடைய நம்பகமான ஆளாக இருந்தவர். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது முதலமைச்சர் அலுவலகத்தின் முதன்மை செயலாளராக இருந்தவர் முர்மு.

படிக்க:
ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !
♦ இஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வைப் பழி வாங்கும் மோடி அரசு !

மோடி – அமித் ஷா கூட்டணி அரசியலில் பல முக்கியமான முடிவுகளை எடுத்தபோது இவர் ஆலோசனை வழங்கியதாக ஊடகங்கள் எழுதியிருக்கின்றன. குறிப்பாக, இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அவர்களை விடுவிக்க அந்த வழக்கை மேற்பார்வையிட்டு சட்ட நுணுக்கங்கள் சொன்னதாகவும் அதனால் அவர்களால் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக மாறியதாகவும் முர்முவுடன் பணியாற்றிவர்கள் கூறுகிறார்கள்.

முர்மு, மூத்த வழக்கறிஞர் கமல் திரிவேதியுடன் இணைந்து அப்போதைய மத்திய இளைய உள்துறை அமைச்சர் பிரஃபூல் பட்டேலுடன் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் குறித்து பேரம் பேசிய ஆடியோவை தெஹல்கா இதழ் வெளியிட்டது. காங்கிரஸ் அரசாங்கத்தின் போது அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணை குழுவால் முர்முவும் விசாரிக்கப்பட்டார். இந்த ஆடியோ ஆதாரங்கள் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன.

அதுபோல, ‘சாகேப்புக்காக’ அமித் ஷா ஒரு இளம் பெண்ணை வேவு பார்த்த விசயத்திலும் முர்மு உதவியிருக்கிறார்.

போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான்.

‘சட்ட நுணுக்களை’ அறிந்தபடியால், ஜம்மு – காஷ்மீரின் முக்கியமான பதவியை மோடி – ஷா, முர்முவுக்கு வழங்கியிருப்பதாக அவருடன் பணியாற்றியர்கள் கூறுகிறார்கள்.

ஜம்மு – காஷ்மீர் கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒடுக்குமுறைகளை நீட்டிக்கவும் உலகத்தின் பார்வையிலிருந்து ‘ஒடுக்குமுறை’யை மறைய வைக்கவும் முர்முவால் முடியும் என மோடி அரசாங்கம் நம்புகிறது.

டெல்லிக்கு வந்தவுடன் முர்முவுவையும் தன்னுடைய மத்திய அரசாங்கத்துக்கு பணியாற்ற அழைத்துக்கொண்டார் மோடி. நவம்பர் 30-ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், தனது ‘சாகேப்புகளை’ மகிழ்வித்த காரணத்துக்காக ஆளுநர் பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார் முர்மு.

குஜராத் மாநிலத்தை மோடி – அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் நாசகார வேலைகளை எதிர்த்து நின்ற சஞ்சீவ் பட் போன்ற அதிகாரிகள் வாழ்நாள் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.


அனிதா
நன்றி : தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க