privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !

காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !

அரசாங்க விதிமுறைகளின்படி, தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட 15 நாட்களில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது காலாவதியாகிவிடும். அந்த விதிமுறையை தளர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ.

-

டந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலுக்குப் பின், பெயர் வெளியிடப்படாத அரசியல் கட்சியினருக்கு நன்கொடையாக வந்த ரூ. 10 கோடி மதிப்பிலான காலாவதியான தேர்தல் பத்திரங்களை நிதியமைச்சகம் விதிகளை மீறி அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியாவில் வெளியான நிதின் சேதி எழுதிய செய்தி கட்டுரையில், தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் கமாடோர் லோகேஷ் பத்ரா வெளிக்கொண்டுவந்த ஆவணங்களின்படி, அரசியல் கட்சிகள் வைத்துள்ள காலாவதியான தேர்தல் பத்திரங்களை பெற்றுக்கொள்ளும்படி எஸ்.பி.ஐ. வங்கியை மத்திய அமைச்சகம் வலியுறுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, ரூ. 20 கோடி மதிப்பிலான காலாவதியான பத்திரங்களை சிலர் வைத்திருப்பதாக எஸ்.பி.ஐ. வங்கி, மத்திய நிதி அமைச்சகத்துக்கு எழுதியுள்ளது. இதில் பாதியளவிலான தேர்தல் பத்திரங்கள் 2018 மே 3-ம் தேதியும் பாதியளவு பத்திரங்கள் 2018, மே 5-லும் வாங்கப்பட்டவை.

மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பான விதிமுறைகளில் கூடுதல் விற்பனை என்ற விதிமுறை இல்லை என்றபோதும், பிரதமர் அலுவலகம் கேட்டதற்கிணங்க, கூடுதல் பத்திரங்கள் விற்பனைக்கு வந்தபோது இந்தப் பத்திரங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்க விதிமுறைகளின்படி, தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட 15 நாட்களில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். பத்திரம் காலாவதியானால், அந்த நிதி பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி ஒரு கட்சி அல்லது கட்சிகளின் பிரதிநிதிகள் காலாவதியான பத்திரங்களை எஸ்.பி.ஐ. வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்காக பாஜக அரசின் நிதிஅமைச்சகம் விதிமீறல்களை அனுமதித்திருக்க வாய்ப்பில்லை.  எனில் அது பாஜகவுக்காக செய்யப்பட்ட விதிமீறலாகத்தான் இருக்கும் என்று நாம் தாராளமாக சந்தேகிக்கலாம்.

எஸ்.பி.ஐ. வங்கிக்கு ஒரு தேர்தல் பத்திரத்தை 15 நாட்களுக்குள் ஏற்கலாம் என்கிற விதிமுறை நன்றாகத் தெரிந்திருந்தபோதும், இந்தக் காலாவதியான பத்திரங்களை ஏற்கலாமா வேண்டாமா என மத்திய நிதியமைச்சகத்திடம் கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறார் எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் ரஜனீஷ் குமார்.

அதே நாளில், மத்திய அமைச்சகம் உடனடியாக பதில் அனுப்புகிறது. பொருளாதார விவகாரத் துறை துணை இயக்குனர் விஜய் குமார், இந்தப் பத்திரங்கள் காலாவதியானவைதான், ஆனால் ஒருமுறை விதிவிலக்கு அளிக்கலாம் என பதில் எழுதுகிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற வசதிகளைப் பெற முடியாது எனவும் சொல்கிறார்.

படிக்க:
♦ தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !
♦ தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி !

விஜய் குமார் எழுதிய கடிதம், பொருளாதார விவகாரத் துறையின் செயலாளர் எஸ்.சி. கார்க் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதாவது 2018, மே 5-ம் தேதி வாங்கிய பத்திரங்கள் டெபாசிட் செய்யப்படுகின்றன. மே 3-ம் தேதி வாங்கிய பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு செல்கின்றன.

இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கியும் தேர்தல் ஆணையமும் மோடி அரசிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், தேர்தல் நிதி வாங்குவதில் பெரிய சீர்திருத்தத்தைச் செய்கிறோம் எனக் கூறிக்கொண்டு, மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர முறை, முழுக்க முழுக்க பாஜக-வின் தகிடுதத்தங்களுக்காகவே உதவி இருக்கிறது என்பது பட்டவர்த்தனமாக நிரூபணமாகியிருக்கிறது.

வங்கியில் போதிய இருப்பு வைக்கவில்லை என்பதற்காக ரூ. 1,772 -கோடியை சாமானியர்களிடம் வசூலித்த எஸ்.பி.ஐ., காலாவதியான தேர்தல் பத்திரங்களின் நிதியை எஜமானரின் கட்சிக்கு தானாக சென்று நிதியை வழங்கியிருக்கிறது. கட்சிகள் – முதலாளிகள் – வங்கி தலைவர்களுக்கிடையேயான இந்தக் கள்ளக்கூட்டணியே இந்தியாவின் அரசு வங்கிகளின் அழிவுக்குக் காரணம்.


அனிதா
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க