Wednesday, September 27, 2023
முகப்புசெய்திஇந்தியாஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2013-ம் ஆண்டைவிட குறைந்தது !

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2013-ம் ஆண்டைவிட குறைந்தது !

வளர்ச்சி, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் இவை எல்லாம் எங்கோ கேட்டதுபோல் உள்ளதா ? 2014 தேர்தலின் போது மோடி கொடுத்த வாக்குறுதி. அதன் இலட்சணம் ஜி.டி.பி.-யில் எதிரொலிக்கிறது.

-

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் இருண்ட பக்கத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. மேலும் ஒரு மோசமான அடியாக, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2013-ம் ஆண்டைவிட குறைந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் கடந்த காலாண்டின் நிலை, ஆறாண்டுக்கு முந்தைய நிலையைவிட கீழான நிலைக்குச் சென்றுள்ளது. பொருளாதார வளர்ச்சி விகித குறியீடு 5% -க்கும் குறைவான நிலைக்குச் சென்றுள்ளது. கார் விற்பனை வீழ்ச்சி, தொழிற்சாலை உற்பத்தி குறைவு மற்றும் ஏற்றுமதி சரிவு என பல மாதங்களாக இந்திய பொருளாதாரம் கண்டுவரும் வீழ்ச்சியின் உச்சமாக ஜிடிபி குறைந்துள்ளது.

பொருளாதாரத்தை சீராக்குகிறோம் என்கிற பெயரில் மோடி அரசு, கார்ப்பரேட் வரிகளைக் குறைத்தது, ரியல் எஸ்டேட்டை தூக்கி நிறுத்த சிறப்பு நிதியை உருவாக்கியது, வங்கிகளைகளை இணைத்தது, இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது. இதையெல்லாம் செய்தால் இந்திய பொருளாதாரம் உச்சிக்குச் சென்றுவிடும் என மோடி அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் முதலாளித்துவ ஊடகங்கள் கூறின.

ஆனாலும், ஒன்றும் நடக்கவில்லை. முதலாளித்துவ நிபுணர்கள் கூறும் காரணங்களைக் கேட்போம். சிங்கப்பூரில் உள்ள டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தைமூர் பேக், “பொருளாதாரத்தின் பரந்த அளவை பாதிக்கும் ஒரு வெளிப்படையான கடன் நெருக்கடியுடன், உள்நாட்டு தேவை நீண்டகால பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. உற்பத்தியும் விற்பனையும் அழுத்ததில் உள்ளன. வரி வசூல் குறைவாக இருப்பதால், பொது செலவுகளை சமாளிக்க முடியவில்லை” என்கிறார் .

புளூம்பர்க், 41 பொருளாதார வல்லுநர்களும் சராசரியாக மதிப்பிட்டுள்ளதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது. 2013 மார்ச் காலாண்டிலிருந்து இது மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சி நிலையாகும்.

கடந்த ஆண்டுவரை இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்தது. 2016-ம் ஆண்டு 9.4 சதவீதமாக உயர்ந்திருந்திருந்தது. சிறுவணிகங்கள், நுகர்வோருக்கு கடன் வழங்கும் நிழல் வங்கிகளிடையே ஏற்பட்ட நெருக்கடி, ஊரக செலவினத்தை குறைத்தது. மேலும், உலக அளவிலான பொருளாதார நெருக்கடியும் வளர்ச்சியை சீராக குறைக்கக் காரணம் என சொல்லப்பட்டது.

படிக்க:
மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

“மந்த நிலையின் தன்மை பரந்த அடிப்படையிலானது. நுகர்வு மற்றும் முதலீடு சார்ந்த துறைகள் வலியை உணர்கின்றன” என்கிறார் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிட்டின் தலைமை பொருளாதார நிபுணர் இந்திரனில் பான்.

“உலகளாவிய மந்தமும், தொடர்ந்துகொண்டிருக்கும் மோசமான உள்நாட்டு நிலையும் உள்ளபோது இதிலிருந்து மீள்வது படிப்படியாகத்தான் நிகழும்” என்கிறார் அவர்.

ரிசர்வ் வங்கி ஏற்கனவே இந்த ஆண்டு வட்டி விகிதங்களை 135 அடிப்படை புள்ளிகளாக குறைத்துள்ளது. இது 2009-க்குப் பிறகு மிகக் குறைவானதாகும். நடுத்தர கால பணவீக்க இலக்கு 4 சதவீதத்தை மீறுவதைக் கண்டறிந்து, டிசம்பர் 5-ஆம் தேதி மற்றொரு வட்டி விகித குறைப்பை ரிசர்வ் வங்கி வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த மோசமான வளர்ச்சி நிலையும் வட்டி விகித குறைப்பும் ரூபாயின் மதிப்பை குறைத்து, ஆசியாவிலேயே மோசமாக செயல்படும் நாணயமாக ரூபாயை மாற்றியுள்ளது.

பொருளாதார சீரழிவு நடந்துகொண்டிருப்பதை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொள்ளும் நிலையில் இருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு எப்போதும் கதவை திறந்தே வைத்திருப்பதாக கூறுகிறார். பரந்த அளவிலான பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

உலக பொருளாதாரம் சீரடையும்போது, இந்தியாவின் பொருளாதாரம் சீரடையும் என நம்பிக்கையாக முடிக்கிறது புளூம்பர்க். இதையேதான் பணமதிப்பழிப்பு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, நுகர்வு பொருட்களின் விற்பனை குறைவு போன்ற பொருளாதார பாதிப்புகள் வந்தபோதும் முதலாளித்துவ அறிஞர்கள் சொன்னார்கள். ஆனால், நிலைமை மோசமாகிக்கொண்டே இருக்கிறது. இவை அனைத்தும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் தனிநபர்கள் நிகழ்த்திய பொருளாதார குளறுபடிகள் என்பதை வசதியாக அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.


அனிதா
நன்றி
: தி பிரிண்ட். 

  1. சீனாவுடன் மோத வெளிக்கிட்டு குட்டுடைப்பட்டு நிற்கிறது இந்தியா. எந்த சொறி நாய் கத்தினாலும் சீனாவில் பொருளாதாரம் இந்தியாவை விட மிக அதிகம். சீனாவுக்கு அமெரிக்காவுடன்தான் போட்டி. என்னதான் அமெரிக்காவுக்கு தாஜா பண்ணி முக்கினாலும் நமது பொருளாதாரம் மிக மிக சீனாவுக்கு மிக கீழே. நல்லா கதறி சாகட்டும். இப்போ பாருங்கள் மாட்டு மூத்திரம் குடிக்கும் நாய்கள் பாகிஸ்தான் எம்மை விடைக்குறைவு என்று திசைதிருப்புவார்கள். நீ என்னதான் கத்தினாலும் இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கீழே தான். பாகிஸ்தான் சீனாவுடன் நிற்கிறது. எங்கே அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து சீனாவை மிரட்டும் என்றும் பாகிஸ்தானை மிரட்டும் என்றும் ஒரு வெறி நாய் ஒன்று திசை திருப்பி சுழன்று சுழன்று கூச்சல் போடுமே. காணவில்லையே..மாட்டு மூத்திரம் குடிக்கப்போய்விட்டதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க