privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉலகம்புலம்பெயர்வதில் உலகிலேயே நம்பர் 1 இந்தியாதான் : ஐநா அறிக்கை !

புலம்பெயர்வதில் உலகிலேயே நம்பர் 1 இந்தியாதான் : ஐநா அறிக்கை !

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தனது ‘உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020’ -இல் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இப்போது 270 மில்லியனாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

-

ர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோரில் 17.5 மில்லியன் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து 78.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மிக அதிகமாக பணம் அனுப்பியதாக ஐ.நா. குடியேற்ற முகமை தெரிவித்துள்ளது.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தனது ‘உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020’ -இல் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இப்போது 270 மில்லியனாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்வதே அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 51 மில்லியன் மக்கள் அந்நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள்.

இது உலக மக்கள் தொகையில் மிகச் சிறிய அளவே எனினும், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட, கடைசி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

“இந்த எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் மிகச் சிறிய சதவீதமாகவே (3.5 சதவீதமாக) உள்ளது, அதாவது உலகளவில் பெரும்பான்மையான மக்கள் (96.5 சதவீதம்) அவர்கள் பிறந்த நாட்டிலேயே வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020 கூறுகிறது.

ஐ.நா. அமைப்பின் கூற்றுப்படி, சர்வதேச குடியேறியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (141 மில்லியன்) ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழ்கின்றனர். இதில் 52 சதவிகிதம் ஆண்கள்; குடியேறியவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் வேலை தேடுகிறார்கள்; அதாவது சுமார் 164 மில்லியன் மக்கள் வேலை தேடுகிறார்கள்.

சர்வதேச புலம்பெயர்ந்தோரில் அதிக எண்ணிக்கை கொண்ட மிகப்பெரிய நாடாக இந்தியா தொடர்கிறது. வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் குடியேறிய இந்தியர்கள் (17.5 மில்லியன்), மெக்ஸிகோ (11.8 மில்லியன்), சீனா (10.7 மில்லியன்). அவர்களுடைய இலக்கு நாடு அமெரிக்கா (50.7 மில்லியன் சர்வதேச புலம்பெயர்ந்தோர்) வாகவே இருக்கிறது.

படிக்க:
தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க.. ?
♦ பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

2018-ம் ஆண்டில் சர்வதேச அளவில் பணம் அனுப்புவது 689 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நாடுகள்… இந்தியா (78.6 பில்லியன் அமெரிக்க டாலர்), சீனா (67.4 பில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் மெக்சிகோ (35.7 பில்லியன் அமெரிக்க டாலர்).

பணம் அனுப்பும் நாடுகளில் அமெரிக்கா (68.0 பில்லியன் அமெரிக்க டாலர்) முதல் இடத்திலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (44.4 பில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் சவுதி அரேபியாவும் (36.1 பில்லியன் அமெரிக்க டாலர்) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்கு பயணம் செய்திருந்தாலும், ஏழை நாடுகளிலிருந்து பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற பணக்கார நாடுகளுக்கு இடம்பெயர்வதும் அதிகளவில் நடப்பதை இந்த அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது .

“இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரக்கூடும். குறிப்பாக வளர்ந்து வரும் சில துணை பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் மக்கள் தொகை வரவிருக்கும் பத்தாண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வருங்கால சந்ததியினருக்கு இடம்பெயர்வு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில், பெரும்பாலான சர்வதேச குடியேறியவர்கள் தங்கள் பிறந்த பகுதிகளுக்குள்ளேயே தங்கிவிடுகிறார்கள். ஆனால், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் மற்றும் வட அமெரிக்காவிலிருந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர் அப்படி செய்வதில்லை.

மத்திய கிழக்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட வளைகுடா நாடுகளில் உலகில் அதிகளவில் தற்காலிக தொழிலாளர்கள் குடியேறியுள்ளனர், மக்கள் தொகையில் 90 சதவீத மக்களாக அவர்கள் உள்ளனர்.

படிக்க:
குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்
♦ வங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை !

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, மியான்மர், தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் வன்முறை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவில் மக்கள் உள் இடப்பெயர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையம், 1998-ம் ஆண்டு தனது கண்காணிப்பைத் தொடங்கியதிலிருந்து 2018-ம் ஆண்டு வரை 41.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிரியாவில் 6.1 மில்லியன் மக்கள் உள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். அடுத்தடுத்து கொலம்பியா (5.8 மில்லியன்) மற்றும் காங்கோ (3.1 மில்லியன்) நாடுகளில் அதிக உள் இடப்பெயர்வு நடந்துள்ளது.

ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகால மோதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானைவிட (2.5 மில்லியன் மக்கள்) சிரியாவில் (ஆறு மில்லியன் மக்கள்) அதிக அளவிலான அகதிகள் வெளியேறியுள்ளனர்.

காலநிலை மற்றும் வானிலை பேரழிவுகளும் மக்களின் இடப்பெயர்வுக்கு காரணமாகியிருக்கின்றன. 2018-ம் ஆண்டின் இறுதியில் தாக்கிய சூறாவளி மங்குட் காரணமாக பிலிப்பைன்ஸில் 3.8 மில்லியன் மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். இது உலகளவில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும் என்கிறது மேற்கண்ட அறிக்கை.

சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக அளவில் புலம்பெயரக்கூடிய சூழலில், இந்துத்துவ கும்பல் இந்தியாவில் இருக்கும் புலம்பெயர்ந்தோரை 2024-ம் ஆண்டுக்குள் நிச்சயம் திருப்பி அனுப்புவோம் என கூக்குரலிடுகிறது. இந்தியர்கள் தேடிச்செல்லும் வளர்ந்த நாடுகள் இதையே திருப்பிச் சொன்னால், இந்தியர்களின் நிலை என்ன ஆகும்?


கலைமதி
நன்றி : தி பிரிண்ட்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க