privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகுடியுரிமை சட்டம் : 144 தடையை மீறி நாடு முழுவதும் போராட்டம் !

குடியுரிமை சட்டம் : 144 தடையை மீறி நாடு முழுவதும் போராட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று தடையை மீறி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். உத்தர பிரதேசம், கர்நாட மாநிலங்களில் பெருந்திரளாக மக்கள் கூடுவதற்கு 144 தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இடதுசாரி அமைப்புகள் மற்றும் முசுலீம் அமைப்புகள் பெங்களூருவின் காலாபுராகி பகுதியில் கூடி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர்.

பெங்களூருவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கர்நாடக போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

டெல்லியின் செங்கோட்டை அருகே போராட்டம் நடக்க இருந்தநிலையில் அங்கே 144 அமலாக்கப்பட்டது. செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் தடையை மீறி போராட்டத்துக்குச் சென்றபோது செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !
♦ முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

காலை 11 மணியளவில் மத்திய டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவையும் மொபைல் சேவையும் நிறுத்தப்பட்டது.

தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா போன்றவை நகரத்தின் சில பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளை நிறுத்துமாறு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைத்ததாக ட்விட்டரில் தெரிவித்தன. அரசின் அச்சுறுத்தலின் பேரில் தங்களுடைய நிலைப்பாட்டிருந்து அவை பின்வாங்கின.

குஜராத்தின் வட்காம் பகுதியில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னாவில் ராஜேந்திர நகர் பகுதியில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்கள் தங்கள் எல்லையைக் கண்காணிக்கும்படி (டெல்லியில் போராட்டக்காரர்களின் வருகையைத் தடுக்க)அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

டெல்லி மண்டி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ, சிபிஎம் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டவர்களை போலீசு கைது செய்தது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பல நாட்களாக இணைய இணைப்பு துண்டிப்பட்டுள்ள நிலையில், அசாமில் நடந்த பெருந்திரள் போராட்டம்…

போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென அனுமதி மறுத்தது சென்னை போலீசு. தடையை மீறி மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் அச்சுறுத்தல், போலீசு அதிகாரத்தை மீறி மக்கள் இன்று போராட்டங்களில் பங்கெடுத்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக போராட்டக்களத்திலிருந்து அப்புறப்படுத்திக்கொண்டே இருக்கிறது போலீசு. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை அவர்கள் போராட்டத்திலிருந்து திரும்பப் போவதில்லை என உறுதியாக உள்ளனர்.


அனிதா
செய்தி ஆதாரம் : ஸ்க்ரால்.

  1. போராடுபவன் குடியுரிமையை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசம் மக்களுக்காக இவன் விட்டுக்கொடுக்கட்டும்

    • போராட்டம்மா‌னது இப்போதுள்ள அரசியல் சட்டத்தை பார்ப்பன பாசிச கும்பல் ஒழித்துக் கட்ட எத்தனிப்பதற்கு எதிரான போர். சந்தேகமிருந்தால் rssன் இலக்கு என்ன என்பதைப் படித்துப் பார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க