மேற்கு வங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி டெப்ஸ்மிதா சவுத்ரி குடியுரிமை சட்ட திருத்த நகலை விழா மேடையில் கிழித்தெறிந்து, பாசிச அரசின் முகத்தில் வீசியிருக்கிறார்.
துணைவேந்தர் பிரதீப் கோஷிடமிருந்து, முதுகலை சர்வதேச உறவுகள் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றதற்கான சான்றிதழ்களைப் பெற்ற மாணவி டெப்ஸ்மிதா, அவரிடம் ஒரு நிமிடம் அனுமதி கோரினார்.
குடியுரிமை திருத்த மசோதாவின் ஒரு பக்கத்தின் நகலை எடுத்து, அதை மேடையிலேயே கிழித்து எறிந்த அவர், “நாங்கள் ஆவணங்களைக் காட்ட மாட்டோம்” என அறிவித்து, “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என கை உயர்த்தி முழக்கமிட்டார். பின்னர் அவருடைய பட்டத்தையும் பதக்கத்தையும் மேடையிலிருந்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
Debsmita Chowdhury rips the vile Citizenship Amendment Act & chants 'Inquilab Zindabad' on the stage after receiving the Gold medal (Dept of International Relations) at Jadavpur University Convocation, 2019.
The youth continue to inspire.#CAA_NRCProtests#NRC_CAA_Protest pic.twitter.com/vztEMlMwx5— Bodhisattva Sen Roy (@insenroy) December 24, 2019
இதன் வீடியோ துணுக்கு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. “எனது எதிர்ப்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் பாரபட்சமான, மாணவர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும்தான்” என டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தனது செயல்பாடு குறித்து தெரிவித்துள்ளார்.
“மோடி அரசாங்கத்தின் மீது மாணவர்களின் வெறுப்பு மற்றும் அதிருப்தியின் உச்சக்கட்டத்தை காட்டவே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். அத்துடன் மைய அரசின் வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாறிய ஆளுநரின் பங்குக்கும் சேர்த்ததே. அவர் மாநில அரசுகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் நிறுவனமாக மாறிவிட்டார்”

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல் தன்னை பாதித்ததாகவும், அவரது எதிர்ப்பு மோடி அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மைக்கு”எதிரானது என்றும் டெப்ஸ்மிதா கூறியுள்ளார்.
தான் ஒரு தனிப்பட்ட மாணவராகத்தான் இதைச் செய்ததாகவும், வளாகத்துக்குள்ளும் வெளியேயும் எந்தவொரு அரசியல் அமைப்புடனும் தொடர்பில் இல்லையென்றும் அவர் கூறியுள்ளார். “தங்கப் பதக்கம் வென்றதற்காக மேடையில் எனக்கு சிறுது நேரம் கூடுதலாகக் கிடைத்தது. எனது எதிர்ப்பு குரலை உயர்த்த அதைப் பயன்படுத்திக்கொண்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படிக்க:
♦ பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !
♦ பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !
கடந்த திங்கள்கிழமை அன்று புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்து தனது எதிர்ப்பைக் காட்டினார் மாணவி ரபீஹா அப்துரஹிம். போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குடியரசு தலைவர் பட்டமளிப்பு அரங்கத்தில் இருக்கும்வரை இவரை அரங்கத்துக்கு வெளியே அனுப்பியது புதுவை போலீசு. அதன்பின் அனுமதிக்கப்பட்ட ரபீஹா, தனது தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்தார்.
மோடி அரசின் பாசிசத்தை, மாணவர்களுக்கு எதிரான அதன் திட்டங்களை உணர்ந்திருக்கும் மாணவர் சமூகம் எழுச்சியுடன் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவருகிறது.
அனிதா
நன்றி: டெலிகிராப் இந்தியா.
No problem டூப்ளிகேட் certificate வாங்கி கொள்ளலாம் என்ற திமிர்…
படித்தாலும் சிந்திக்க தெரியாத முட்டாள்கள், தேசவிரோத மக்கள் விரோத கம்யூனிஸ்ட்களின் பொய்களை நம்பி இப்படி செய்து இருக்கிறார்கள். இதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டும்
அந்த பொண்ணு சட்ட நகலை கிழிச்சிருக்கு. இந்த உயிரினம் duplicate certificate வாங்கிக்கலாம்னு பேசுது..!
தலைப்பைக்கூட ஒழுங்கா படிக்காம விவாதத்துக்கு வந்து பார்ப்பனியத்தின் காலை நக்குது இந்த சூத்திர முண்டம்..!
மணி சார் உங்கள் வீட்டில் பாத்திரம் ஏதேனும் கீழே விழுந்தால் கூட கம்யூனிஸ்ட்டுகளின் சதி என்பீர்களோ?ஆயினும் வினவின் தொடர் வாசகரான தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்…பார்த்து இந்து விரோதியாக மாறிவிடப்போகிறீர்கள்….
இந்திய மக்களின் விரோதிகளான கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக தனி மனிதனாக என்னால் முடிந்த கருத்து போர் அவ்வுளவு தான்… நான் எந்த சூழ்நிலையிலும் எங்கள் நாட்டு மக்களின் எதிரிகளான (சீனா பாக்கிஸ்தான் கைக்கூலிகளான) கம்யூனிஸ்ட்களோடு சேர மாட்டேன்.
கருத்துப் போர் புரியும் மணி சாரின் பணி தொடரட்டும்…ஒரு சின்ன சந்தேகம்…இன்று இந்திய மக்கள் படும் அளவில்லா துன்பங்களுக்கு யார் காரணம்..?ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாவா?அல்லது பாக்கின் இம்ரான் கானின் கட்சியா?
உங்களால் முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள்.
GST காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வர நினைத்த திட்டம் ஆனால் வேண்டும் என்றே ஊழல் மற்றும் கருப்பு பண முதலைகளுக்காக இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். அதை பிஜேபி அரசு கொண்டு வந்து இருக்கிறது, இதனால் மத்திய மற்றும் மாநில 17 வரிகள் மாற்றப்பட்டு ஒரே வாரியாக கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இதனால் ஏற்பட்ட பலன்கள் பல உலக அளவில் இந்தியாவின் போட்டியிடும் தன்மை அதிகரிக்கும்
அடுத்தது ஒவ்வொரு மாநில செக்கபோஸ்டிலும் வரிகள் செலுத்தி விட்டு லாரிகள் செல்வதற்குள் பல மணிநேரங்கள் வீண் ஆகின்றன, அது இப்போது இல்லை, இதனால் சரக்குகள் (காய்கறி உட்பட) விரைவாக பல மாநிலங்களுக்கு செல்லலாம்.
GST வரிகளை இணையதளம் மூலமே செலுத்தி விடலாம்.
குடியுரிமை சட்டமும் வரவேற்க வேண்டிய ஒன்று (இதில் கிறிஸ்துவர்களை சேர்த்து இருக்க கூடாது என்றே நினைக்கிறேன்). இந்த சட்டமும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய ஒரு சட்டம், வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கிடப்பில் போட்டு வைத்த ஒரு சட்டம்.
இம்ரான் கானை எல்லாம் மோடியோடு compare செய்வது தவறு… அதற்கு இம்ரான் கானுக்கு தகுதியே இல்லை.
மோடி இன்று வரையில் கிறிஸ்துவர்களை பற்றியோ அல்லது இஸ்லாமியர்களை பற்றியோ அல்லது அவர்களின் மதங்களின் சகிப்பின்மையை பற்றியோ ஒரு வார்த்தை தவறாக பேசியதில்லை ஆனால் இம்ரான் கான் பாக்கிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருப்பதில் தவறில்லை ஆனால் இந்தியா மட்டும் ஹிந்து நாடாக இருக்க கூடாது என்று பேசி கொண்டு இருப்பவர்.
மோடியை பற்றி வினவு கூட்டங்கள் பொய்களை பரப்பி கொண்டு இருக்கின்றன… இதை விட மோசமான கேவலம் வேறு எதுவும் கிடையாது.
என் GST குடியுரிமை சட்டம் எல்லாம் எப்படி தவறாக இருக்க முடியும் ? இஸ்லாமிய நாடுகளின் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தானே.
பங்களாதேஷ் குடிமக்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் குறைந்தது 700 பேர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியிருக்கிறார்கள்… இது பங்களாதேஷ் பல்கலைக்கழக ஆய்வு தகவல்.
அவ்வுளவு போரையும் ஏன் இந்தியா ஏற்க வேண்டும் ?
ஒரு பக்கம் ஹிந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் அவர்கள் இந்தியாவிற்கு வர விரும்புகிறார்கள், இன்னொரு பக்கம் வேலை தேடி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் இஸ்லாமியர்கள் வருகிறார்கள்.
இவர்கள் இருவரின் கொடுமைப்படுத்த மக்களுக்கு தானே குடியுரிமை கொடுக்க வேண்டும்.
சட்ட விரோதமாக வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்க வேண்டும்
நேர்மையாக பதில் சொல்லுங்கள்.
இங்கே விவாதமே தேவையில்லை ….! தடுப்பு முகாம்களில் சந்திக்கும் பாேது விலாவரியா பேசிக்கலாம் … !என்ன காவி அல்லக்கைகளுக்கு மட்டும் ஷா கேட்குற குடியுரிமை ஆதாரம் இருக்கவா பாேகுது …?
அதனால சமரசம் உலாவும் இடத்தில் வச்சி செஞ்சிக்கலாம் …!
மணி சார் முஸ்லீம்கள் கிருத்தவர்களை விடுங்கள்…இந்திய நாட்டின் இந்து மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும்…அதாவது வேலை கல்வி மருத்துவம் மின்சாரம் போக்குவரத்து விவசாயம் சாதியின்மை மற்றும் இன்ன பிற துறைகள்…இவைகள் குறித்து மோடி அவர்களிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது…?மோடியின் நேர்மை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை…உங்கள் மீது இருக்கிறது…. நீங்கள் சொல்லுங்களேன்…
நீட் தேர்வு வருவதற்கு முன்பே நான் பல காலமாக அது பற்றி பலரிடமும் பேசி கொண்டு இருக்கிறேன் காரணம் பணம் கொடுத்து படித்த மறுத்தவர்கள் திறமையின்மையை நான் கண்கூடாகவே பார்த்து இருக்கிறேன் அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பற்றி வினவு உட்பட ஒருவருமே இன்று வரையில் பேசியதில்லை. அதேபோல் ஜிப்மர் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று வந்த மருத்துவர்களின் திறமையையும் பார்த்து இருக்கிறேன்.
வினவு கூட்டங்கள் நீட் தேர்வை எதிர்ப்பதன் மூலம் மிக பெரிய அநீதியை சாதாரண மக்களுக்கு செய்து இருக்கிறது.
உடனே இவர்கள் மதிப்பெண்களை மட்டும் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் திறமையாக இல்லையா என்று கேட்கிறார்கள்.
நான் பேசுவது பொது தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களை பெற்ற ஒருவர் 2 கோடி ரூபாய் கொடுத்து மருத்துவர் ஆகும் போது அவரின் திறமையை பற்றிய கேள்விகள்… இந்த அக்கரமத்தை வினவு கூட்டங்கள் உட்பட ஒருவருமே பேசவில்லை காரணம் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போக வேண்டும் என்பதே இந்த அயோக்கியர்களின் நோக்கம்.
8 வழி சாலை திட்டம் கொண்டு வந்தால் போராட்டம்
நாடு சுத்தமாக இருக்க ஸ்வாட்ச் பாரத் திட்டம் கொண்டு வந்தால் போராட்டம்
அணு மின் நிலையம் கொண்டு வந்தால் போராட்டம்
இது நாள் வரையில் உரிமைகள் இல்லாமல் அகதிகளாக இருப்பவர்களுக்கு சட்டபூர்வமாக குடியுரிமை கொண்டு வந்தால் போராட்டம்
புதிய கல்வி திட்டம் கொண்டு வந்தால் அது பற்றிய பொய்களை பரப்பி போராட்டம் (இதில் சூர்யாவின் எதிர்ப்பும் தவறு) திறமையான இந்தியா உருவாக்க வேண்டியது அவசியம் அப்போது தான் உண்மையாக வளர்ச்சி உருவாகும்.
பெரிய தொழிற்சாலைகள் மீது அவதூறுகளை பரப்பி கார்ப்பரேட் என்றாலே என்னமோ பேய் பிசாசு என்பது போல் பொய் பிம்பத்தை உருவாக்கி போராட்டங்கள் மற்றும் அவதூறுகள்.
அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் தடுத்து கொண்டே கூடவே வளர்ச்சி இல்லை வேலைவாய்ப்பு இல்லை என்ற முதலை கண்ணீர் வேறு வடிப்பார்கள் இந்த அயோக்கியர்கள்.
சென்ற காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்திய கம்யூனிஸ்ட்களின் முழு அய்யோக்கியத்தனமும் எனக்கு தெரிந்தது. இதன் பிறகு தான் இந்தியா சீனா போரின் போது கூட கம்யூனிஸ்ட்கள் சீனாவை ஆதரித்தது பற்றி படித்து தெரிந்து கொண்டேன்.
மன்மோகன் சிங் அமெரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம் செய்த போது அதை எதிர்த்தவர்கள் 3 பேர்… ஒருவர் இந்தியா கம்யூனிஸ்ட்கள், இன்னொருவர் பாக்கிஸ்தான்.
இவர்கள் இருவருமே மிக வெளிப்படையாக அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள்.
3 வது நபர் சீனா, இந்திய கம்யூனிஸ்ட்கள் சீனாவின் நலனுக்காக இந்திய அரசையே கவிழ்க்கும் செயலில் ஈடுபட்ட போது சீனா அமைதியாக இருந்தார்கள், கம்யூனிஸ்ட்கள் பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகு சீனா நேரடியாக காலத்தில் இறங்கி எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
இதே ஒப்பந்தத்தை சீனாவும் அமெரிக்காவிடம் செய்து இருக்கிறது ஆனால் ஆனாலும் அய்யோக்கியத்தனமாக இந்தியா வளர்ந்து விட கூடாது என்ற தீய நோக்கத்தில் சீனா இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது.
அதேபோல் இந்தியா வளர்ந்து விட கூடாது என்று நினைப்பவர்கள் இந்தியா கம்யூனிஸ்ட்கள். இவர்களை போன்ற மிக மோசமான அயோக்கியர்கள் உலகில் வேறு எங்குமே இருக்க மாட்டார்கள்.
நீண்ட பதிலுக்கு நன்றி மணி சார்…ஆனாலும் இந்த கேவலங்களையே நீங்கள் சாதனை என்கிறீர்கள்…இதில்வினவை வசை பாடுதல் வேறு…. மாற்றுக்கருத்து இருப்பதில் தவறில்லை…சிந்தனையை முட்டுச்சந்தில் இருத்திவைப்பதுதான் தவறு… என்ன செய்ய காவிகள் அதைத்தானே விரும்புகிறார்கள்..நாம் நேரில் விவாதித்தால் நீங்கள் கம்யூனிஸ்டாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது…”சந்திக்கலாமா”?