Monday, October 14, 2024
முகப்புசெய்திஇந்தியா’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !

’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !

சி.ஏ.ஏ.-வுக்கு எதிராகப் பேசக்கூடாது, என கொக்கரிக்கிறது காவி கும்பல். இனி மோடிக்கு எதிராக சிந்திப்பதுகூட சங்கிகளின் அகராதியில் குற்றமாகிவிடும் போலிருக்கிறது.

-

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பயணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஊபர் ஓட்டுநருக்கு பாஜக எம்.எல்.ஏ மங்கல் பிரபாத் லோதா பாராட்டி ‘விருது’ கொடுத்துள்ளார்.

விருதின் பெயர் ‘விழிப்புணர்வு குடிமகன் விருது’! மும்பை சாண்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் வைத்து வண்டி ஓட்டுநர் ரோஹித் கவுருக்கு பாஜக எம்.எல்.ஏ இந்த விருதை வழங்கியுள்ளார்.

காரில் பயணம் செய்த கவிஞரும் சமூக ஆர்வலருமான பப்பாதித்யா சர்க்கார், CAA -க்கு எதிராக ஒரு “தேஷ விரோத சதித்திட்டத்தை” தீட்டியதாகவும் லோதா குற்றம் சாட்டியுள்ளார்.

கேப் ஓட்டுநர் (இடது) – கவிஞர்-ஆர்வலர் பப்பாதித்யா சர்க்கார்.

“ரோஹித் கவுர்… குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேச விரோத சதித்திட்டத்தை வகுத்த உபேர் டாக்ஸி பயணியை ஒப்படைத்தவர். மும்பை மக்கள் சார்பாக ரோஹித் கவுரை சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் அழைத்து எச்சரிக்கை குடிமகன் விருதை வழங்கினேன்” என எம்.எல்.ஏ. லோதா ட்வீட் செய்துள்ளார்.

ரோஹித் கவுரை வாழ்த்தும் படங்களையும் அவர் தனது ட்விட்டில் பகிர்ந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு, கவிஞரை உபேர் வண்டியின் ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஜெய்ப்பூரில் வசிக்கும் சர்க்கார், காலா கோடா விழாவில் கவிதை வாசிப்பு அமர்வுக்காக பிப்ரவரி 3-ம் தேதி மும்பைக்கு வந்தார். மும்பையில் நாக்பாடாவில் நடந்து வரும் சி.ஏ.ஏ – என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்றார்.

புதன்கிழமை இரவு, ஒரு உபேர் வண்டியில் பயணித்தபோது, CAA -க்கு எதிரான போராட்டங்களை ஒரு நண்பருடன் தொலைபேசியில் விவாதித்திருக்கிறார்.

அதைக் கேட்டு, வண்டி ஓட்டுநர் போலீஸ்காரர்களை வரவழைத்து, சர்க்காரை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேசுவதே பெரிய குற்றம் என கருதிக் கொண்டிருக்கும் ஒரு சங்கி பக்தரான அந்த உபேர் ஓட்டுநரின் ‘குற்றச்சாட்டை’ காவலர்களும் விசாரித்துள்ளனர். சர்க்காரை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று தீர விசாரித்துவிட்டே அனுப்பியிருக்கிறது போலீசு.

படிக்க:
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! அச்சுநூல்

அதன்பிறகும் உபேர் ஓட்டுநர் சொன்னதுதான் முத்தாய்ப்பானது…“காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதற்கு சர்க்கார் நன்றி சொல்ல வேண்டும். வேறு எங்காவது அழைத்துச் சென்றிருந்தால் கதையே வேறாகியிருக்கும்!”.

23 வயதான கவிஞர், தான் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் மீறி, ஓட்டுநருக்கு எதிராக ஏதும் புகார் அளிக்கப் போவதில்லை; ஏனெனில், அது அவரது வாழ்க்கையையும் அழிக்கக்கூடும் என்கிறார்.

ஓட்டுனரின் கடுமையான நடத்தையும், வன்முறை மொழியும் நாட்டின் சூழ்நிலையை பிரதிபலிப்பதாக சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவினர் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கும் காவி கும்பல் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினாலே சிறையில் தள்ள வேண்டும் என்கிறது. இதுதான் பாசிசம் !


அனிதா
நன்றி :  தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க