Description
ஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் அனைத்தும் நம்மை பார்ப்பனிய ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் கீழ் இருத்தி வைக்கவும் அவற்றுக்கு எதிராகத் திரண்டெழாத வகையில் நம்மைக் கண்காணிக்கவுமே கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்பதை தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்!
“குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! “ புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்!
- தேசிய குடிமக்கள் பதிவேடு: ஒரு கேடான வழிமுறை!
- ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
- அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது!
- குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு!
- தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு!
- முஸ்லீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்!
- ஆதார் கண்காணிப்பு: மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு அகண்ட பாரத கனவும் 40 இலட்சம் அசாமிய அகதிகளும்!
- ஆதார்: மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
- ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’: மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல்!
- அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள்: முஸ்லீம்களுக்கு எதிரான சதி!
- சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார்! மோடியின் அடுத்த அடி!
- அசாம்: 51 உயிரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு!
- அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம்!
- இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது!
- குடியுரிமை சட்டத் திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம்!
- நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா!
பதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்