Description
காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- காவிரி : கர்நாடகத்தின் அடாவடி ! மைய அரசின் நழுவும் தீர்வு !!
- தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது !
- அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு ! ஆவதென்ன ?
- காவிரி ஓரம் குடிநீர் இல்லா துயரம் !
- மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி !
- காவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா ?
- காவியைக் கரைக்கும் காவிரி !
- காவிரி பிரச்சினை : மோடி அரசே முதன்மை குற்றவாளி !
- காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா ?
- என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !
- காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? – நேரடி ரிப்போர்ட்
- சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
- தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?
- காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !
- காவிரி நீர் மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் – பத்திரிகை செய்தி
காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! – கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வு அமலாக்கம் அனைத்திலும் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்புகளை திணித்த உச்சநீதி மன்றத்திடம் நடுநிலைமையோ, நியாயமோ கிடையாது. இழந்துபோன உரிமைகளை மீட்கும் அவசரமான காலத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையையும், நீரின்றி அழியும் விவசாயிகளின் வாழ்வையும் ஆவணப்படுத்துகிறது, இந்த புதிய கலாச்சாரம் தொகுப்பு!
பதினைந்து கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்