CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் !
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !
அஞ்சாதே போராடு !

மாநாடு – கலைநிகழ்ச்சி

நாள் : 23 பிப்ரவரி, ஞாயிறு மாலை 5 மணி,
இடம் : திருச்சி உழவர் சந்தை.

நிகழ்ச்சி நிரல் :

வரவேற்புரை :

தோழர் சூர்யா
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தலைமை :

தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

தொடக்க உரை :

நீதிபதி கோபால கவுடா
மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

உரையாற்றுவோர் :

திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)

வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு

தோழர் தியாகு 
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்

திரு. பாலாஜி
ஜெ.என்.யூ மாணவர் (JNUSU முன்னாள் தலைவர்), டெல்லி

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கலை நிகழ்ச்சி : ம.க.இ.க. கலைக்குழு

நன்றியுரை :

தோழர் செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

மோடி – அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும்.
புதிய இந்தியா எழட்டும்! கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழட்டும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

உரையாற்றுபவர்கள் பற்றிய குறிப்பு :

நீதிபதி கோபால கவுடா
மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

நீதிபதி கோபால கவுடா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழகத்தில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலை, மங்களூரில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு படுகொலை ஆகியவை குறித்த உண்மை அறியும் குழுவில் பங்கேற்று, தனது கண்டனத்தைப் பதிவு செய்தவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். தற்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நாடு முழுவதும் தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார்.

திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)

ர்நாடகாவில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “பன்முகத் தன்மை கொண்ட நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. சமரசங்கள் அதிகரித்துள்ள இந்தக் காலச் சூழ்நிலையில், நான் ஐ.ஏ.எஸ் பணியில் இருப்பது தார்மீகரீதியாக சரியாக இருக்காது; எனவே, பதவியிலிருந்து நான் விலகுகிறேன்” என்று கூறி ராஜினாமா செய்துள்ளார்.

திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்

“மேற்கு தொடர்ச்சி மலை” படத்தின் இயக்குநர். “உலகமயமாக்கலுக்குப் பிறகு, 200 வருடங்களில் நடக்கும் மாற்றத்தை வெறும் 20 வருடங்களிலேயே சந்தித்துவிட்டோம். அடித்தட்டு மக்களுக்கு உடைமைதான் சொத்து. ஆனால், அதில்தான் மிகப்பெரிய அரசியலும் நடக்கிறது. நான் சிறுவயதில் பார்த்த சம்பவங்களும் மக்களின் வாழ்க்கையும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது; அதுதான் இந்தப் படமெடுக்கக் காரணம்.”

வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு

பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலன் அவர்கள், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மட்டுமல்லாமல் கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராகவும் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில், தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக தனது ஆழமான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்.

கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக உள்ளார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321

தலைமை அலுவலகம்:
16, முல்லைநகர் வணிக வளாகம், 2வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை -083.
E-mail: ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn |

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க