முகப்புசெய்திஇந்தியாபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !

படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !

மனைவியை தள்ளி வைத்த ஸ்ரீ ராமனும், மோடியும் படித்தவர்களா? என்பதை மோகன் பகவத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

-

டந்த வாரம் பிப்ரவரி 16-ம் நாள் அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், ‘படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து அதிகம் நடக்கிறது’ எனத் தெரிவித்தார்.

“அற்பத்தனமான விசயங்களுக்காக சண்டை போடுகிறார்கள். படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து வழக்குகள் அதிகம் போடப்படுகின்றன. ஏனென்றால் கல்வி மற்றும் செல்வத்துடன் ஆணவமும் சேர்ந்து விடுகிறது. இதன் விளைவாக குடும்பங்கள் பிரிந்து செல்கின்றன. சமுதாயம் ஒரு குடும்பம் என்பதால் சமூகம் சிதைவுக்குள்ளாகிறது” என பேசியிருந்தார்.

மோகன் பகவத்தின் பேச்சு, ஆர்.எஸ்.எஸ் –இன் பழமைவாத கண்ணோட்டத்தை அப்படியே பிரதிபலிப்பதாக சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.

பாலிவுட் நடிகர் சோனம் கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “எந்த விவேகமுள்ள மனிதர் இப்படி பேசுவார்? பிற்போக்குத்தனமான முட்டாள்தனமான பேச்சுக்கள்” என கடுமையாக எழுதியுள்ளார்.

2013-ஆம் ஆண்டு மோகன் பகவத், “பெண்கள் வெறும் இல்லத்தரசிகள் மட்டுமே இருக்க வேண்டும், அந்தப் பெண் தனது வீட்டுக் கடமைகளைச் செய்யத் தவறினால், அவள் கைவிடப்படலாம். எனக் கூறியிருந்தார் என்பதை பலர் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டிருந்தனர்.

படிக்க:
கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் படித்தவர்களை குறிப்பாக பெண்களை வெறுக்கும் ஒரு ஆணாதிக்கவாதி. படித்த, வசதி படைத்தவர்களுக்கு சுய மரியாதை உண்டு. படிக்காதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உங்கள் மோடியைப் போலவே வாழ்க்கைத் துணையையும் கைவிடுகிறார்கள் என ஒரு ட்விட்டர் பதிவு விமர்சிக்கிறது.

படிப்பில் பிந்தங்கிய உத்தர பிரதேச மாநிலத்தில்தான் விவாகரத்துகள் அதிகமாக நடக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெண்கள் படிக்கக்கூடாது; வேலைக்குப்போகக்கூடாது; சுயமாக சிந்திக்கக்கூடாது என பல வழிகளில் சொல்லிவருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். அடிப்படைவாதிகள்.

“ஒரு பெண் தன் தந்தையால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், திருமணத்திற்குப் பிறகு கணவனின் காவலில் இருக்க வேண்டும், விதவையாக இருக்கும்போது மகனின் பராமரிப்பில் இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னை சுயாதீனமாக உறுதிப்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.” என்கிற மனுதர்மத்தின் வார்த்தைகளைத்தான் பகவத் கூறுவதாக பத்திரிகையாளர் ஜூனைத் சிக்கந்தர்.

படிக்க:
♦ சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

அந்தவகையில் குடும்ப வன்முறைகளை, சுரண்டல்களை சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தச் சொல்கிறார் மோகன் பகவத். இந்து ராஷ்டிரத்தில் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்.


கலைமதி
செய்தி ஆதாரம் :  தி வயர். 

 1. RSS தலைவர் சொன்னது ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்…

  குடும்ப அமைப்பை சிதறடிக்க சொல்லப்படும் பசப்பு வார்த்தைக்கு பெயர் தான் முற்போக்கு தனம்.

  பெண்ணிற்கு எதற்கு குடும்பம், எதற்கு கற்பு, எதற்கு குழந்தைகள் என்று கேட்ட ஈவேரா கூட்டங்களுக்கு RSS தலைவர் குடும்ப அமைப்பை பற்றி பேசுவது பிற்போக்குத்தனமாகவே இருக்கும்.

 2. கேரளா உத்தர பிரதேஷ் விட மிக குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலம், கேரளாவின் 3 கோடி மக்கள் வசிக்கிறார்கள், உத்தர பிரதேசில் 20 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

  2018ல் கேரளாவில் 62 ஆயிரம் விவாகரத்து வழக்கு பதிவு ஆகி இருக்கிறது. அதே 2018 ல் உத்தர பிரதேசத்தில் 2.60 விவாகரத்து வழக்குகள் பதிவு ஆகி இருக்கிறது. அதாவுது உத்தர பிரதேசத்தை விட கேரளாவில் சதவீத அடிப்படையில் 4 மடங்கு அதிக விவாகரத்து வழக்குகள் பதிவு ஆகி இருக்கிறது. அதாவுது படித்தவர்கள் நன்றாக சம்பாதிப்பவர்கள் அதிகம் வசிக்கும் கேரளாவில் தான் நாட்டிலேயே மிக அதிக வழக்கு பதிவு ஆகி இருக்கிறது.

  இன்னும் சொல்ல போனால் 2016 ல் கேரளாவில் தான் நாட்டிலேயே மிக அதிக விவாகரத்து வழக்குகள் பதிவு ஆனது, கேரளாவை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேஷ் கூட கேரளாவை விட குறைவான வழக்குகள் தான்.

  வினவு கூட்டங்களுக்கு இந்திய மக்களின் நலன் பற்றி அக்கறை கிடையாது ஆனால் RSS இயக்கத்திற்கு மக்களின் நலன் பற்றி அக்கறை இருப்பதை தான் இந்த கட்டுரை காட்டுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க