அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

“அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் ! (பாருங்கள் ! பகிருங்கள் !)

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எதிர்வரும் பிப்ரவரி 23 அன்று திருச்சி உழவர் சந்தை திடலில் நடைபெறவிருக்கும் “அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் !

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள் :

அஞ்சாதே… போராடு !
அஞ்சாதே… போராடு !

CAA, NPR, NRC எதிர்த்திடு !
காவி கார்ப்பரேட்
பாசிசம் ஒழித்திடு ! ( அஞ்சாதே போராடு…)

ஜே.என்.யூ, ஜாமியா
அலிகர் போராட்டம் !
தேசத்தையே இணைத்தது
மாணவர் போராட்டம் !

சிஏஏ பாயுது
முசுலீமுக்கு எதிரா !
போராட்டக்களத்திலே
இந்துக்களும் திரளா !

இது அமித்ஷா வெறுப்பு !
மோடி வெறுப்பு !
ஆறாண்டு கால
ஆட்சியின் மேல்வெறுப்பு !

கார்ப்பரேட் – காவி
பாசிச எதிர்ப்பு !

நூறுகோடி மக்கள் சொத்து
ஒருசிலர் குவிப்பு !
பதினெட்டு கோடி மக்கள்
உணவின்றி தவிப்பு !

நாட்டையே வதைத்த
பணமதிப்பழிப்பு !
மாடுறித்தவர்கள்
தோலையே உரிப்பு !

நீட்டு ரேட்டுன்னு
கல்வி பறிப்பு !
ஜிஎஸ்டி வரிபோட்டு
சிறுதொழில் அழிப்பு !

எல்லாம் தனியார் !
வேலை இழப்பு !
இந்தி சமஸ்கிருதம்
அனைத்திலும் திணிப்பு !

அத்தனை வெறுப்பின்
மொத்த உருவிது !
எத்தனை முறைதான்
அடங்கிப் போவது !
எத்தனை நாள்தான்
பய்ந்து சாவது !

இந்த முறை மக்கள்
எழுந்துவிட்டார்கள் !
கவுண்ட் டவுன் ஆகுது
காவியின் நாட்கள் !  (அஞ்சாதே போராடு…)

பின்வாங்க மாட்டேனென்று
பேசுகிறார் அமித்ஷா !
பின்னடைவில் பொருளாதாரம்
மூழ்குது முழுசா !

இது
தோல்வியின் மேல் நிற்பவர்கள்
கொண்டுவந்த சட்டம் !
இந்து
ராஷ்டிரம்தான் இவர்கள்
நீண்டகாலத் திட்டம் !

இனி
போராட்டம் நாடெங்கும்
தீயாகப்பற்றும் !
டெல்லி
சாகின்பாக்கிலும்
ஜல்லிக்கட்டு யுத்தம் !

அஞ்சாதே… போராடு !

எழுதப்படிக்காத
இந்தியனுக்கு
எங்கேருக்கு பெர்த்து
சர்டிஃபிகேட்டு !
உன்னோட டாக்குமெண்டு
முன்னோர்கள் டாக்குமெண்டு
எடுத்துக்கொடுக்கலன்னா
முகாமில் அடைப்பு !

ஆவணத்த காப்பது
அரசின் பொறுப்பு அத
நம்மகிட்டா கேட்டா
சுடுகாட்ட காட்டு !

என்.ஆர்.சி-என்.பி.ஆர்
கணக்கெடுப்பு – இது
அரசு எதிர்ப்பாளர்
களையெடுப்பு !

மீத்தேன எதிர்த்தா
நீயூட்ரினோவ எதிர்த்தா
அணு உலை, ஸ்டெர்லைட்டு
கெயில எதிர்த்தா
முகாமில் அடைப்பு !

எத்தனைபேர அடப்ப ?
எத்தனை நாள் அடப்ப ?

பதினோரு மாநிலத்தில்
என் ஆர் சிக்கு மறுப்பு !
மாதம் ரெண்டை கடந்தும்
மக்களின் கொதிப்பு !

வகுப்பறையை துறந்து
மாணவர்கள் எதிர்ப்பு !
இன்று
அம்பேத்கர் பெரியார்
அனைவரின் கரத்தில் !
இன்குலாப் ஜிந்தாபாத்
இசுலாமியர் உதட்டில் !

நீ சுட்டு கொல்லலாம் !
என்சொத்தை பிடுங்கலாம் !
வழக்குப்போடலாம் !
சிறையில் தள்ளலாம் !
தவிர்க்க முடியாது
மூலதன அழிவு !

உலகமே அறியும்
ஹிட்லரின் முடிவு !
போதும் போதும் உங்கள்
தேசபக்த நடிப்பு !
இது
காவி பாசிசத்தின்
கடைசி துடிப்பு ! (அஞ்சாதே போராடு …)

2 மறுமொழிகள்

  1. ஆஹா..இது காவி பாசிசத்தின் கடைசி துடிப்பு என்ற கோவன் அவர்களின் வரியும்..அதன் பின்னணியில் வினவின் காட்சிக் கோர்ப்பும் அருமை..காவிக்கு அஞ்சுபவர்களையும் அச்சம் உதறி வீதிக்கு இழுக்கும் பாடல் வரிகள்…அஞ்சமாட்டோம் போராடுவோம்..இது வேறு தமிழகம்…

    • கம்யூனிச பாசிசம் என்று சொல்வதே சரியாக இருக்கும், கம்யூனிஸ்ட்கள் சுயநலத்திற்காக மக்களை அழிவில் தள்ளுபவர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க