கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஜனநாயக விரோதம் ! | வீடியோ

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு செயல்பட்டால், மக்கள் தனது கோபத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வெளிபடுத்துவார்கள்.

சாதாரண மக்கள் எப்போதும் கோபம் கொள்வதில்லை. ஆனால், அலட்சிய செயல்பாடு கோபத்தை தூண்டும். இருபது ஆண்டுகாலம் கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியின் தனியார்மயக்கொள்ளையையும் மரணங்களின் அலட்சியங்களையும் எதிர்த்தே மக்கள் கோபமடைந்திருக்கிறார்கள்.

மக்கள் மீதான அலட்சியப்போக்கை பலநாட்களாக தமிழக அரசு கையாண்டதன் விளைவே மக்களின் கோபம் கள்ளக்குறிச்சியில் அதிகரிக்க காரணம். தன் மகளை மறுக்கூராய்வு செய்யவேண்டும் என்ற சாதாரணக்கோரிக்கையை கூட நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தியது போலீசும் மாவட்ட நிர்வாகமும்.

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு செயல்பட்டால், மக்கள் தனது கோபத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வெளிபடுத்துவார்கள். இதுபோன்ற பல்வேறு விளக்கங்களை இந்த காணொலியில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி அவர்கள்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஜனநாயக விரோதம் !

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க