நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சக்தி மெட்ரிக் பள்ளி ஓர் தொடர்முறை குற்ற கும்பல் | மருது வீடியோ

நக்கீரன் பத்திரிகையாளர்கள் சக்தி மெட்ரிக் பள்ளி குண்டர்களால் தாக்கப்பட்டத்தை கண்டித்து REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்தப்பேட்டி வீடியோவில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

க்கீரன் பத்திரிகையினுடைய முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் அவரது கேமராமேன் அஜித் ஆகியோர் கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் – சமீபத்தில் ஸ்ரீமதி மரண வழக்கில் கைதாகி விடுதலையான – ரவிக்குமார் மற்றும் அந்த பகுதியில் தலித் மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதலையும் வன்கொடுமைகளையும் நடத்தியவர் என்று குற்றம்சாட்டப்பட்ட ராஜசேகர் என்ற நபர் ஆகியோரின் கூலிப்படையால் இரண்டுமுறை தாக்கியிருக்கிறார்கள்.

அந்த பள்ளிக்கு வெளியே அவர்கள் கார் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர்களிடமிருந்து தப்பித்து சென்ற போது அவர்கள் காரை தலைவாசல் வரை பின் தொடர்ந்து மீண்டும் இரண்டு பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை பார்க்கும்போது நமக்கு என்ன கேள்வி எழுகிறது. இது தமிழ்நாடா? இல்லை உத்தரப்பிரதேசமா?

நக்கீரன் செய்தியாளர்கள் சக்தி மெட்ரிக் பள்ளி குண்டர்களால் தாக்கப்பட்டத்தை கண்டித்து REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்தப்பேட்டி வீடியோவில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க