கடந்த 2016-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பின் (DE MONETISATION) நோக்கம் – சிறுதொழில், விவசாயத்தை கார்ப்பரேட் நலனுக்கு பலியாக்குவது
2019-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமையழிப்பின் (DE CITIZENISATION) இலக்கு – முஸ்லிம் சமூகத்தினர் மட்டும்தானா?
பணமதிப்பழிப்பு கருப்புபண பேர்வழிகளைத்தான் பாதிக்கும் என்று மோடி சொன்னார். ஏமாந்தீர்கள்….
படிக்க :
♦ எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
♦ நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
♦ கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
♦ வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !
குடியுரிமை அழிப்பின் பாதிப்பு முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்கிறார்கள். மீண்டும் நம்பி ஏமாறப்போகிறீர்களா?
இந்த அரசமைப்புக்கு இறையாண்மையை வழங்கியவர்கள் மக்கள். மக்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டா?
இந்தியாவைக் கொள்ளையடிக்க சவுதி இளவரசரின் மூலதனம் எல்லை தாண்டி வரலாம். வங்க தேசத்திலிருந்து முஸ்லிம் தொழிலாளி உழைத்துப் பிழைக்க இங்கே வரக்கூடாதா?
கீழடி நாகரிகத்தின் மைந்தனே!
நீ இம்மண்ணின் குடிமகனா என்பதை டில்லியிலிருந்து
ஒரு அகர்வாலோ, அணில்வாலோ தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்கிறாயா?
ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ, அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்…
எச்சரிக்கிறது… கேள்விகளை எழுப்புகிறது… விடை தேடுகிறது… தோழர் மருதையனின் இந்த உரை.
பாருங்கள் ! பகிருங்கள் !
