தேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் ! தோழர் மருதையன் உரை | காணொளி

ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ,    அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்... (மேலும்)

டந்த 2016-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பின் (DE MONETISATION) நோக்கம் – சிறுதொழில், விவசாயத்தை கார்ப்பரேட் நலனுக்கு பலியாக்குவது

2019-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமையழிப்பின் (DE CITIZENISATION) இலக்கு – முஸ்லிம் சமூகத்தினர் மட்டும்தானா?

பணமதிப்பழிப்பு கருப்புபண பேர்வழிகளைத்தான் பாதிக்கும் என்று மோடி சொன்னார். ஏமாந்தீர்கள்….

படிக்க :
♦ எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
♦ நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
♦ கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
♦ வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

குடியுரிமை அழிப்பின் பாதிப்பு முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்கிறார்கள். மீண்டும் நம்பி ஏமாறப்போகிறீர்களா?

இந்த அரசமைப்புக்கு இறையாண்மையை வழங்கியவர்கள் மக்கள்.    மக்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டா?

இந்தியாவைக் கொள்ளையடிக்க சவுதி இளவரசரின் மூலதனம் எல்லை தாண்டி வரலாம். வங்க தேசத்திலிருந்து முஸ்லிம் தொழிலாளி உழைத்துப் பிழைக்க இங்கே வரக்கூடாதா?

கீழடி நாகரிகத்தின் மைந்தனே!
நீ இம்மண்ணின் குடிமகனா என்பதை டில்லியிலிருந்து
ஒரு அகர்வாலோ, அணில்வாலோ தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்கிறாயா?

ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ,    அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்…

எச்சரிக்கிறது… கேள்விகளை எழுப்புகிறது… விடை தேடுகிறது… தோழர் மருதையனின் இந்த உரை.

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு செய்திப் பிரிவு

6 மறுமொழிகள்

 1. ஆழமான அற்புதமான உரை. வகுப்பறையில் பாடம் கேட்டதுபோல் இருக்கிறது. திரும்பத் திரும்பக் கேட்டு புரிந்துகொண்டு … முழுமையாக புரிந்துகொள்ள முயன்று செயலாற்ற வேண்டிய தருணமிது. நன்றி.

 2. ….இப்படி தனது முகநூலில் பதிவிட்டு இருக்கிறார், அ.மார்க்ஸ்.
  …தொலைக் காட்சியில் இப்போது, இன்று எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பேசியது, ஓடிக் கொண்டுள்ளது. மூஞ்சியைக் கடு கடு என்று வைத்துக் கொண்டு மிக ஆவேசமாக,

  “இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவாங்கன்னு சொல்லி இங்கே யாரை ஏமாத்துறீங்க. பாதிக்கப்பட்டவர்னு யாராவது ஒருத்தரைச் சொல்லுங்க. அதைக் கேட்டா உங்களால் சொல்ல முடியலை…”

  என கூப்பாடு போடுகிறார் அவர். இவர் முதலமைச்சர்தானே. ஏதாவது புரிந்து பேசுகிறாரா இல்லையா? குடியுரிமைப் பதிவேடு வேலை ஏப்ரல்1 இல் தான் தொடங்குகிறது. அதன்பின் அவர்கள் மோடியும் அமித்ஷாவும் தயாரித்துள்ள NPR படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு நாம் என்ன பதில் அளித்துள்ளோம் என்பதை வைத்து அவர்கள் “சந்தேகத்துக்குரிய குடிமக்கள்” களைக் கண்டு பிடித்து அவர்களின் பெயருக்கு முன் “D” (அதாவது Doubtful) எனப் பதியப் போகிறார்கள்.

  அதன்பின்தான் மோடி அரசின் அதிகாரிகள் நம் வீட்டுக்கு வந்து நம் தாலியை அறுக்கப் போகிறார்கள். தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்கப் போகிறார்கள்.

  இதெல்லாம் அவருக்குப் புரிகிறதா இல்லையா? கட்சிக்காரர்களுக்கும் புரியாவிட்டால் யாராவது அதிகாரிகளுக்குமா புரியவில்லை?என்கிறார்.

  இங்கு தோழர் மருதையன் உரை, மிக விரைவில் இந்திய குடிமக்களை நிர்வாணமாக்கி வதைமுகாம்களில் அடைக்கும் மோடி கும்பலின் குரூரத்தை கண்முண் நிறுத்துகிறது.
  ஏதோ தமிழ்நாட்டில் பிறந்ததால் நாம் தப்பிக்க வழியிருக்கிறது என்று தோன்றுகிறது.இம்மாதிரியான ஜனநாயக சக்திகளின் வளையத்திற்குள் நம்மை ஒப்புக்கொடுப்போம். இக்கருத்துக்களுக்கு நாம் செவிசாய்த்தால்தான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மனித வேட்டையிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.மரணபயம் துறப்போம்! மனிதநேயம் காப்போம்!

 3. நண்பர் மதி குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியான சந்தேகத்தை உங்கள் மறுமொழி எளிமையான எழத்துவடிவில் நறுக்கென்று உணர்த்துகிறது..சிறு பிரசுரமாக அச்சிட்டே ஊர்தோறும் தரலாம்..

 4. இப்படியொரு நிலைமை இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டதற்கு வாழ்ந்த வள்ளுவத்தின் குடும்ப அரசியலும் அளப்பறிய ஊழலும் தான் காரணம். மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து கொண்டு இவர்கள் நடத்திய கூத்தை பார்த்த வட இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு வாக்களித்தார்கள். காரணிகளை விமர்சிக்காமல் ஆதரித்துக் கொண்டு விளைவுகளை விமர்சித்துக் கொண்டு இருக்கிறது இந்த மக இக வினவு கும்பல்

 5. மக்கள் அதிகாரம் மாநாட்டில் தோழர் மருதையன் உரையாற்றுகிறாரா? நிகழ்ச்சி நிரலில் அவர் பெயர் இல்லை என நினைக்கிறேன்.

 6. 1:13:06
  “தன்னெழுச்சியாக இதுவரை அரசியலுக்கு வராதவர்கள் வீதியில் நிற்கிறார்கள். மாணவர்கள் எந்த கட்சியின் தலைமையில் இல்லை வீதியில் நிற்கிறார்கள். அரசியல் இயக்கங்கள் கட்சிகள் எல்லாம் தோற்று விட்டன மக்கள் இயக்கம் முன்னாலே சென்று கொண்டிருக்கிறது அந்த மக்கள் இயக்கத்தோடு இணைந்து கொள்வது எப்படி என்பதை தான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது”

  தன்னெழுச்சி வாதத்திற்கு பின்னால் வால் பிடிப்பதுதான் மார்க்சிய லெனினியம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததா?

  மார்க்சிய லெனினியத்தின் உயிரை எடுத்துவிட்டு பேசுவதற்கு பெரும் துணிச்சல் தான் வேண்டும்!

  தன் எழுச்சியான போராட்டங்களை எப்படி உணர்வு பூர்வமான போராட்டமாக மாற்றப்போகிறோம், எப்படி இவர்களை புரட்சிகர கட்சியின் தலைமையின் கீழ் புரட்சிகர லட்சியத்தை நோக்கி வழிநடத்த போகிறோம் என்பதே நம்முன்னால் உள்ள பிரச்சனை!

  இந்த கண்ணோட்டமே இதில் இல்லையே?

  பிறகு நீங்கள் பாசிசத்தை பற்றி பேசி உள்ளீர்கள், ஆனால் அதன் உயிர்நாடியை விட்டுவிட்டீர்கள்!

  “முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் வெளிப்பாடுதான் பாசிசம்” என்கிற புரிதல் இந்த பேச்சில் வெளிப்படவில்லை ஆகவே சரியான தீர்வை கூட முன்வைக்க முடியவில்லை என்பதாக பார்க்கிறேன்.

  மன்னிக்கவும் எனக்கு மட்டுமல்ல போராடும் மக்களுக்கும் உங்களுடைய பேச்சு ஏமாற்றத்தை தான் கொடுக்கிறது என்பதை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  நன்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க