அசாம்: சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி முஸ்லீம்களின் வீடுகளை இடிக்கும் பா.ஜ.க அரசு!

திடீரென்று செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு உடனடியாக இடத்தை காலி செய்யும்படி போலிசார் தெரிவித்தனர். வேறு இடத்திற்குச் சென்று தங்குவதற்கு இடமில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்த சிறிது நேரத்தில் முஸ்லீம் மக்களின் தற்காலிக வீடுகளை புல்டோசரைக் கொண்டு போலிசார் இடித்தனர்.

டந்த செப்டம்பர் 12 ஆம் தேதி அசாம் மாநிலத்தின் கச்சுதாலி கிராமத்தில் உள்ள முஸ்லீம் மக்களின் வீடுகளை இடிக்கும் போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு இளைஞர்ககாலை சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக முஸ்லீம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் ஏற்கெனவே அசாம் அரசு தர்ராங் மாவட்டத்தில் உள்ள மயோங் பாஸ்பரி கிராமத்திலிருந்த முஸ்லீம்களை ரோஹிங்கா முஸ்லீம்கள் என்று கூறி பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் வெளியேற்றியது. அதனால், கவுகாத்தியின் புறநகர்ப் பகுதியில் உள்ள சோனாபூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கச்சுதாலி கிராமத்தில் தார்ப்பாய் மற்றும் தற்காலிக வீடுகளை அமைத்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு உடனடியாக இடத்தை காலி செய்யும்படி போலிசார் தெரிவித்தனர். வேறு இடத்திற்குச் சென்று தங்குவதற்கு இடமில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்த சிறிது நேரத்தில் முஸ்லீம் மக்களின் தற்காலிக வீடுகளை புல்டோசரைக் கொண்டு போலிசார் இடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலிசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடு பட்ட மக்கள் மீது திட்டமிட்டே போலிசானது துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது.


படிக்க: அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்


அரசின் அடக்குமுறைகள் பற்றி அப்பகுதியில் வாழ்ந்து வரும் 40 வயதான கியாசுதீன் கூறுகையில் “நாங்கள் சட்டவிரோத குடியேறிகளோ அல்லது அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களோ இல்லை. நாங்கள் எங்கள் கிராமம் அழிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கே குடியேறினோம். இங்கு வசிக்கும் அனைவரும் கர்ணாகாட்டில் வேலை செய்து புதிதாக வீடு கட்ட 1 கத்தா அல்லது 2 கத்தா நிலத்தை வாங்கினார்கள். என்னிடம் என்.ஆர்.சி உள்ளது. இருந்தபோதும் எங்களைச் சட்டவிரோதமானவர்கள் போன்றே பார்க்கின்றனர். இங்கு யாரும் சட்டவிரோதமானவர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளையோ அல்லது கட்டிடங்களையோ புல்டோசர் கொண்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இடிப்பதற்கு அக்டோபர் 1 தேதி வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால் அதற்கு முன்னரே மியான்மாரிலிருந்து வந்தவர்கள், ரோஹிங்கா முஸ்லீம்கள் என்று கூறி முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றம் அமைதி காத்து விட்டது.

அசாம் அரசானது அங்கேயே வாழ்ந்து வரும் முஸ்லீம் மக்களை “மியான்மாரிலிருந்து வந்தவர்கள், ரோஹிங்கா முஸ்லீம்கள்” என்கிற பொய்யான பிரச்சாரத்தின் மூலம் வெளியேற்றுவது என்பது  தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுபோல பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்கள் உடல் / மன ரீதியாகத் தாக்குதலுக்கு ஆளாவதும், இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க