அன்பார்ந்த தோழர்களே,                                                            24.02.2020

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும், இவையன்றி வேறு சில பொறுப்புகளிலும் செயல்பட்டு வந்த நான், எல்லா பொறுப்புகளிலிருந்தும், குறிப்பாக, இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்து விலகுகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற காரணத்தினாலும், தமிழகமெங்குமுள்ள அமைப்புத் தோழர்களுக்கு எனது விலகலையும்  அதற்கான காரணத்தையும் தெரிவிப்பதற்கு வேறு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், அவசியமான விவரங்களை மட்டும் கோடிட்டுக் காட்டி எனது விலகலைத் தவிர்க்கவியலாமல் பொதுவெளியில் அறிவிக்கிறேன்.

எனக்கும் என்னுடன் இணைந்து விலகலை அறிவித்திருக்கும் தோழர் நாதனுக்கும் இது மிகவும் கடினமான ஒரு முடிவு. கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எனக்கும், 30 ஆண்டுகளாக அவருக்கும் அமைப்பு நடவடிக்கைகள்தான் வாழ்க்கையாக இருந்தன. ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.

தோழர் மருதையன்

அயோத்தி தீர்ப்பு, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்று மோடி அரசின் பார்ப்பன பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், எங்களது இந்த விலகல் அறிவிப்பு பலருக்கு வருத்தமளிக்கலாம், சிலருக்கு அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கலாம். நாடெங்கும் மாணவர்களும் முஸ்லிம் பெண்களும் இன்னும் பல்வேறு தரப்பினரும், அஞ்சாநெஞ்சினராய் பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கின்றனர். ஜனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதென்பது காலத்தின் தேவை. அத்தகைய முயற்சியில் முன்நிற்க வேண்டிய அமைப்பின் தலைமைத் தோழர்கள், அமைப்புக்கு உள்ளேயே இப்படியொரு நிலைமையைத் தோற்றுவிக்கிறோமே என்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.

சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்குப் பின்னர், எமது அமைப்புகளிலிருந்து சிலர் வெளியேறியதையும், வெளியேற்றப்பட்டதையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள். கார்ப்பரேட் காவி பாசிசம் அல்லது பார்ப்பன பாசிச அபாயத்தை அமைப்பிலிருக்கும் சில மூத்த தோழர்கள் மறுத்தனர். தங்களது எதிர்ப்பை எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி, சமூக ஊடகங்களின் வாயிலாக அமைப்புக்கு எதிராக ஒரு “பதிலிப்போர்” நடத்தினர்.

“1. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்தை ஆய்வின்றி சதித்தனமாக புகுத்திவிட்டேன் 2. அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்து செல்கிறேன் 3. நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும் திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன். 4. அமைப்பின் மூத்த தோழர்களுக்கிடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன் 5. கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன் 6. மூத்த தோழர்களை வீழ்த்தி விட்டு மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன்” – என்பன எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள். (கீற்று இணையதள கட்டுரை மற்றும் எழில்மாறன் உள்ளிட்ட சிலரின் முகநூல் பதிவுகள்). இவை தவிர தரம் தாழ்ந்த பல அவதூறுகளையும் கடந்த ஓராண்டாக வாய்வழியே பரப்பி வந்தனர்.

தங்களுக்கு உவப்பில்லாத அமைப்பின் முடிவுகள் அனைத்தையும் ஒரு சதிக்கோட்பாடாக மாற்றி, “குற்றத்தை” என் தலையில் சுமத்தினர். “போம்பழியெல்லாம் அமணன் தலையோடே” என பழி எதுவாகிலும் அதனைச் சமணர் தலையில் சுமத்திய ஆழ்வார்கள் நாயன்மார்களின் தந்திரம் இது.

அவதூறு செய்தவர்கள் என்னை மட்டும் தாக்கவில்லை. சென்ற ஆண்டு அமைப்பின் பிரதிநிதிகளால் ஜனநாயக பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கொச்சைப்படுத்தினர்.  அவ்வாறு முடிவெடுத்த பிரதிநிதிகள் அனைவருமே “செட் – அப் செய்து கொண்டுவரப்பட்ட மோசடிப்பேர்வழிகள்” என்று அனைவரையும் தூற்றினர். இந்த நபர்களை “சீர்குலைவு சக்திகள்” என்று அமைப்பின் தலைமை அறிவித்தது. அத்தகைய சிலர் அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

னால், வேறு சிலர் இதே அவதூறுகளை, அமைப்புக்குள் இருந்தபடியே ஓராண்டாகப் பரப்பி வந்தனர். சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரைத் தூண்டிவிடுவதே அமைப்பிற்கு உள்ளே இருக்கும் இந்த “தந்திரசாலிகள்”தான் என்று தலைமைக்குழுவுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும். இவர்கள்தான் சீர்குலைவு நடவடிக்கைகளின் ஆணிவேர் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தலைமைக்குழு ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவு காகிதத்தில் இருக்கிறது.

இருப்பினும், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று, இப்பிரச்சனை, சில முன்னணித் தோழர்களின் முன் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமைக்குழுவின் பெரும்பான்மையான தோழர்கள், அவதூறுப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைப்பிற்குள் செயல்பட்டு வந்தவர்களுக்கு “குற்றமற்றவர்கள்” என்று நற்சான்று கொடுத்து, அவர்களை நம்பவைத்தார்கள்.

அமைப்பை அவதூறு செய்தவர்களுக்குத் தலைமை சூட்டிய பெயர் “சீர்குலைவு சக்திகள்”. அத்தகைய சீர்குலைவு நடவடிக்கையைத் தூண்டியவர்களைக் காப்பாற்றுவதற்காக பொய் பேசிய தலைமைக்குழுவினை என்ன பெயரிட்டு அழைப்பது? இப்படியொரு தவறை கீழ்மட்டத்தில் யாரேனும் செய்திருந்தால், “சீர்குலைவு சக்திக்கு துணைபோனார்கள்” என்று குற்றம்சாட்டி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அமைப்பின் காவலர்களாக இருந்திருக்க வேண்டிய தலைமைக்குழுவின் பெரும்பான்மைத் தோழர்கள் சீர்குலைவின் காவலர்களாக நடந்து கொண்டிருக்கிறார்களே, என்ன செய்வது?

“அமைப்பின் பொதுமேடையில் அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள் தலைமைக்குழுவினரை விசாரிப்பதுதான் நியாயமான அமைப்புமுறை” என்று நானும் வெறு சில முழுநேர ஊழியர்களும் வலியுறுத்தினோம். “தாங்கள்தான் அமைப்பின் அதி உயர் தலைமை” என்பதால், தவறு செய்தவர்கள் தங்களுக்குள் சுயவிமர்சனம் செய்து பிரச்சனையை முடித்துக் கொள்வதுதான் அமைப்புமுறை  என்பது தலைமைக்குழு பெரும்பான்மையினரின் நிலை.

முதலாளித்துவ நீதிமுறையாலேயே ஒப்புக்கொள்ளப்படாத, “எனக்கு நானே நீதிபதி” என்ற நெறியை, இதுதான் பாட்டாளிவர்க்க அமைப்புமுறை என்று கூறியதை எங்களால் ஏற்கமுடியவில்லை. “பொறுப்புகளிலிருந்து விலகுகிறோம். சாதாரண உறுப்பினராக செயல்படுகிறோம்” என்று அக்டோபர் 16 அன்றே கடிதம் கொடுத்து விட்டோம். அதற்குப் பின்னரும் அவர்கள் நிலையில் மாற்றமில்லை. “உங்கள் தவறை அணிகள் மத்தியில் ஒப்புக்கொள்ளாவிட்டால், நாங்கள் அமைப்பிலிருந்தே வெளியேறுவோம்” என்று நாங்கள் கூறவில்லை. “இந்த முறைகேட்டுக்கு உடன்பட்டு தலைமைப் பொறுப்புகளில் நாங்கள் நீடிக்க முடியாது. உறுப்பினராக வேலை செய்கிறோம்” என்று மட்டுமே வலியுறுத்தினோம்.

எங்களது பதவி விலகல் அணிகளுக்குத் தெரிந்தால், ஏன், எதற்கு என்ற கேள்வி எழுமே, தங்களது தவறுகளும் தவிர்க்கவியலாமல் வெளியே வருமே என்பது அவர்களது கவலை. இதனால்தான் எனது கடிதத்தின் மீது முடிவே எடுக்காமல் 4 மாதங்களாக இழுத்தடித்தார்கள். நான் ம.க.இ.க வின் செயலராக இருக்கும்போதே என்னை மாநாட்டுப் பணிகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கி வைத்து எனக்குப் “பாடம்” புகட்டினார்கள். “மருதையன் எங்கே” என்று கேட்ட தோழர்களிடம் நான் ஆய்வுப்பணியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்தார்கள். தலைமையின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் அணிகளும் இதையெல்லாம் நம்பினார்கள்.

தாங்கள் செய்த முதல் தவறு அணிகளுக்குத் தெரிந்துவிடாமல் மறைப்பதற்காக, “அமைப்புமுறை” என்ற திரைக்குள் மறைந்து கொண்டு, அவர்கள் செய்த அடுத்தடுத்த தவறுகள், முதல் தவறைப் பன்மடங்கு விஞ்சிவிட்டன. இந்த நடவடிக்கைகளின் ஊடாக, அவர்களிடம் வெளிப்பட்ட நேர்மையின்மையும் அதிகாரத்துவப் போக்கும் அவர்களது இன்னொரு முகத்தை எனக்கு அறியத்தந்தன.

னது விலகலுக்கான காரணம் இதுமட்டுமேயல்ல. “அம்பேத்கரியம் + பெரியாரியம் + மார்க்சியம்” என்று அமைப்பின் கொள்கையை  கள்ளத்தனமாக மாற்றுவதற்காகத்தான்  “நீலநிற ஜீன்ஸ், கருப்பு சட்டை, தலையில் சிவப்பு துணி” என்று ம.க.இ.க கலைக்குழுவின் சீருடையை மருதையன் மாற்றிவிட்டார்” என்று ஒரு பிரச்சாரத்தை சென்ற ஆண்டு திருச்சி மாநாட்டிற்குப்பின் மேற்சொன்ன தந்திரசாலிகள் சமூக ஊடகங்களில் அவிழ்த்துவிட்டனர். இது ஒரு மலிவான அவதூறு என்று நான் விளக்கிய பின்னரும், தலைமைக்குழுவின் முக்கியத் தோழர்கள் இந்த சந்தேகப் பார்வையிலிருந்தே என்னை அணுகினர். அமைப்புக்குள் இருந்துகொண்டே இப்படிப்பட்ட அவதூறுகளைக் கிளப்பியவர்கள் கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டையே எதிர்ப்பவர்கள் என்பது தலைமைத் தோழர்களுக்குத் தெரியும். இருப்பினும் தலைமைத் தோழர்களின் “சந்தேகப்பார்வை” என்மீது இருந்ததேயொழிய, பார்ப்பன பாசிசம் என்ற அரசியலையே எதிர்ப்பவர்கள் மீது இல்லை.

“அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி”, “சதி நடக்கிறது”, “முக்கியத் தோழர்களை ஒதுக்கும் முயற்சி” என்பன போன்ற சொற்கள் என்னைக் குறிவைத்து ஓராண்டாகவே பேசப்பட்டு வருகின்றன. அவற்றை அப்போதெல்லாம் பொருட்படுத்தாத நான், இப்போது அந்தச் சொற்களின் முழுப்பொருளை புரிந்து கொள்கிறேன். இவை குறித்த விவரங்கள் தலைமைக்கு நான் எழுதிய கடிதங்களில் உள்ளன. மேற்கண்ட சொற்கள் அனைத்தும் எழில்மாறன் என்பவரின் கடிதத்தில் இடம்பெற்றிருப்பவை என்பதை மட்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

இறுதியாக, சனவரி,11 ஆம் தேதியன்று எங்கள் மீதான விமர்சனம் என்ற பெயரில் 20 பக்க கடிதமொன்றை அமைப்பின் முன்னணியாளர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். “எங்கள் மீதான விமர்சனத்தை எங்களிடம் கொடுத்து விளக்கம் கேட்காமல், மற்றவர்களிடம் கொடுத்து என்னைப் பற்றிக் கருத்துருவாக்கம் செய்வது நெறியற்ற செயல். எங்களுக்குக் கொடுங்கள், விளக்கமளிக்கிறோம்” என்று கேட்டுவிட்டோம். தரமறுக்கிறார்கள்.

ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகின்ற அதிகாரவர்க்கம், அதனை கேள்விக்குள்ளாக்குகின்ற செயல்பாட்டாளர்களை (whistle blowers) அவதூறு செய்து, பொய்வழக்கு போட்டு “உள்ளே” தள்ளுவது போல, என்மீது “பொய்வழக்கு” தொடுத்து “வெளியே” தள்ளுவதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். எனக்கெதிரான விமர்சனங்களை எனக்குத் தெரிவிக்க மறுத்து, என் முதுகுக்குப் பின்னால் மற்றவர்களிடம் சுற்றுக்கு விடுகிறார்கள். “அமைப்பு நலனை முன்னிட்டு இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது” என்று இந்த முறைகேட்டுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள்

தனிப்பட்ட தாக்குதலைச் சந்திப்பது எனக்குப் புதிய அனுபவமல்ல. அமைப்பின் முகமாக நான் அறியப்பட்ட காரணத்தினால், அமைப்பில் யாரோ செய்த தவறுகளுக்கெல்லாம் என் தலை உருண்டிருக்கிறது. இதை அமைப்பின் முன்னணித் தோழர்கள் அறிவார்கள். பல சந்தர்ப்பங்களில் நமது அமைப்பை விமர்சிப்பவர்களுக்கு எளிய தாக்குதல் இலக்காக நான் இருந்து வந்திருக்கிறேன்.

மொத்த அமைப்பின் தலைமை நானல்ல என்ற போதிலும், பார்ப்பனத்தலைமை என்ற விமர்சனத்தை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து என்னை மையப்படுத்தி பலர் வைத்திருக்கின்றனர். அப்படி விமர்சித்தவர்கள் யாருக்கும் என்மீது தனிப்பட்ட பகை கிடையாது. அது அவர்களது அரசியல் பார்வை. அத்தகைய பார்வை வருவதற்கான சமூக எதார்த்தமும் உள்ளது என்ற காரணத்தினால், அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் காட்டியதில்லை. பொதுமேடையில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது, தி.க வைச் சேர்ந்த எனது நண்பர்கள், அங்கேயே தமது கட்சியினரை மறுத்து வாதாடியிருக்கிறார்கள்.

அவர்கள் காட்டிய நேர்மை நமது அமைப்பின் முக்கியத் தோழர்களிடம் இல்லை. தம்மை விமர்சித்த ஒரே காரணத்துக்காக என் மீது தரம்தாழ்ந்த தாக்குதல் தொடுக்கவும்,  பொய்ப்பழி சுமத்தவும் இவர்கள் தயங்கவில்லை. எதுவாக இருந்தாலும் விமர்சனத்தை வெளிப்படையாக நேருக்குநேர் என்னிடம் சொல்லும் நேர்மை, அமைப்புக்குள்ளே இருந்து கொண்டு பதிலிப்போர் நடத்துவோரிடமும் இல்லை. தலைமைத் தோழர்களிடமும் இல்லை.

நான் உள்ளேயிருந்து போராடவே விரும்பினேன். “தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, உறுப்பினராக அமைப்பில் இயங்குகிறேன்” என்ற எனது கோரிக்கையை 4 மாதங்களாக முடக்கி வைத்திருந்தார்கள். தம் தவறை நியாயப்படுத்த எந்த அளவுக்கு நிலை தாழ்ந்து செல்வார்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில் பார்த்துவிட்டேன். நான் “வெளியேறுகிறேன்” என்று சொல்வதை விட, “வெளியேற்றப்படுகிறேன்” என்பதே உண்மை.

“இந்த அரசியல் தருணம் விலகுவதற்கு ஏற்றதல்ல” என்று பலரும் கருதலாம். ஆனால் இந்த அரசியல் – அமைப்புத் தலைமை மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். 35 ஆண்டுகள் முழுநேரமாகப் பணியாற்றி விட்டு, தவறை நேர்மையாக விமர்சித்த குற்றத்துக்காக, “சதிகாரன் – பதவி வேட்டைக்காரன் என்பன போன்ற அவதூறுகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், அமைப்பில் நீடிப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நான்கரை மாதங்களில் தலைமைக்குழுவுடனான எனது கடிதப் போக்குவரத்து, முன்னணித் தோழர்கள் குழுவின் கூட்டக் குறிப்புகள், எனக்கே தரப்படாத என் மீதான விமர்சனக் கடிதம் ஆகியவை உங்களுக்கு வாசிக்க கிடைக்குமானால் என்னுடைய கூற்றில் இருக்கும் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

தலைமையின்மீது நம்பிக்கை வைத்து, அதற்குக் கீழ்ப்படிந்து உழைக்கும் தோழர்களிடம், தலைமை தனது தவறுகளை மறைக்கிறது. நேர்மையின்றி நடந்து கொள்கிறது. “அமைப்பில் எல்லோரும் சமம்” என்று ஏட்டளவில் கூறிக்கொண்டாலும், “சிலர் மட்டும் கூடுதலாகச் சமம்” என்ற கருத்து தலைமைத் தோழர்கள் மனதில் இருக்கிறது. இவ்வாறு சிந்திப்பவர்கள், தங்கள் தவறை அணிகளுக்கு மறைப்பதும் கூட “அமைப்புநலனை முன்னிட்டுத்தான்” என்று நம்புகிறார்கள். தவறு வெளியில் தெரிந்தால் “தங்கள் மீது அணிகள் நம்பிக்கை இழக்கக் கூடும்” என்பது அவர்கள் கவலை. ஆனால் “அமைப்பின் மீது நம்பிக்கை போய்விடும்” என்று அதை சித்தரிக்கிறார்கள். “அணிகள்தான் அமைப்பு – தாங்கள் பிரதிநிதிகள் மட்டுமே” என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

அமைப்பு என்பது சிலரின் உடைமையல்ல. தலைமையால் தனது அதிகாரத்தின் துணை கொண்டு,  தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும். எத்தகைய கண்காணிப்புகளை உருவாக்கினாலும், “சரி – தவறுக்கிடையே நடுநிலை வகிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்” பலர் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது ஏட்டில் மட்டுமே இருக்க முடியும். இது இப்பிரச்சனையில் நான் பட்டுத் தெரிந்து கொண்ட கசப்பான உண்மை.

நான்கரை மாதங்களாக அமைப்புக் கட்டுப்பாடு கருதி நான் தோழர்கள் யாரிடமும் பேசவில்லை. இப்போது பேசுகிறேன். “பார், அமைப்பு விசயங்களைப் பொதுவெளியின் பேசுகிறான், சீர்குலைவு சக்தி” என்று அவர்கள் என்னை அழைக்கக்கூடும். அவர்களால் இவ்வாறு அழைக்கப்படுவதை ஒரு நகைச்சுவையாகவே நான் எடுத்துக் கொள்வேன். “அமைப்பின் கவுரவத்தைக் குலைக்கிறேன்” என்று குற்றம் சாட்டுவார்கள். தங்கள் போலி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமைப்பின் கவுரவத்தை சந்திக்கு கொண்டு வந்திருப்பவர்கள் அவர்கள்தான் என்பதே எனது பதில்.

பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு –  அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது. “அமைப்பு நலன்”, “அமைப்பு முறை” என்ற இரு சொற்றொடர்களைத் தங்களது தவறை மறைப்பதற்கான கேடயமாகவும், விமர்சிப்போரை வீழ்த்துவதற்கான வாளாகவும் இந்தத் தலைமை தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊன்றி நின்று போராடிப் பாருங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

நாங்கள் இந்த அமைப்பிலிருந்து விலகுகிறோம். நாற்பதாண்டு அமைப்பு வாழ்க்கையில் தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை. இன்று அவை வெறும் நினைவுகள் மட்டுமே.

நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன.

எனினும் நினைவுகளில் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை நான் அறிவேன். இன்று என்னுடைய நிஜம் இதுதான்.

விடைபெறுகிறேன் தோழர்களே!

தோழமையுள்ள,
மருதையன்

 ________________

 அன்பார்ந்த தோழர்களே,

சுமார் 30 ஆண்டுகளாக முழு நேர ஊழியராக அமைப்பில் செயல்பட்டு வருகிறேன். புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறேன். வினவு தளத்தை உருவாக்கி நடத்தி வருவதில் முக்கியப் பங்காற்றி வருகிறேன். ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன்.

கடந்த நான்கரை மாதங்களாக தோழர் மருதையனுடன் இணைந்து தலைமையின் நேர்மையின்மைக்கும் அதிகாரத்துவத்துக்கும் எதிராக நானும் போராடினேன். அவரது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதே காரணங்களுக்காக,  நானும் ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் விலகுகிறேன்.

தோழமையுள்ள,
நாதன்

_______

ன்று 24.2.2020 தேதியன்று எமது கோரிக்கையின் பேரில் கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் எமது விலகலை முன்வைத்தோம். மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிராகரித்தனர். ம.க.இ.க. செயலராக மருதையனும், மாநில செயற்குழு உறுப்பினராக நாதனும் செயல்படுவதில் எங்களுக்கு எவ்வித மாறுபாடும் இல்லாத நிலையில், உங்களுக்கும் எங்களுடனான உறவில் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலையில் நீங்கள் இருவரும் தொடர்ந்து பொறுப்பில் நீடிக்க வேண்டும் என மாநில செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க விரும்பிய போதிலும் தவிர்க்கவியலாத நிலையில் எமது இந்த விலகலை அறிவிக்கிறோம். மாநில செயற்குழு உறுப்பினர்களும் ம.க.இ.க தோழர்களும் புரிந்து கொள்ளுமாறும் எமது விலகலை அங்கீகரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுள்ள
மருதையன்
நாதன்

80 மறுமொழிகள்

    • சரியான முடிவு.. அஞ்சாமல் போராடு என்கிற முழக்கம் அமைப்பிற்க்குள்ளும் பொருந்தும்.

      வெளியில் மக்களுக்கு உபதேசிப்பது மட்டுமல்ல நாமும் அப்படி நடக்கிறோமா என்பது தான் நம்மை உரசி பார்க்க உதவம். சரி தவறுக்குள் அஞ்சாமல் போராடுவது சரிதான்.

    • மக்கள் புரட்சிக்காகத்தான் கட்சி என்று லெனின் கூறியது நினைவுக்கு வருகிறது. தோழர் மருதையன், தோழர் நாதனது முடிவு சரியானது, இதற்கு அமைப்பு தலைமை பதில் அளிக்காது, அணிகள்தான் போராட வேண்டும்.

      • // தவிர்க்கவியலாமல்//

        சாதாரணமானவர்கள் பயன்படுத்தும் வார்த்தை என்றாலும் ‘அறிவாளிகளுக்கு’ மட்டுமே தெரியும் அதை எப்படியெல்லாம் சாதூர்யமாக பயன்படுத்துவது என்று. பாவம் புரட்சியை உயிராக நேசிபவர்களுக்கு, எந்த முடிவையும் மக்கள் நலனுக்கு உட்பட்டு எடுப்பவர்களுக்கோ ‘பிடிபடாத’ வார்த்தையாக இன்றும் நீடிக்கிறது.
        #உலக முழுக்க உள்ள கம்யூனிஸ்டுகள் பல லட்சம்பேர் விவரிக்க முடியாத கொடூர சித்தரவதைக்கு ஆளாகி தமது இன்னுயிரை விடும்போதும் “தவிர்க்கவியலாமல்” எந்த கட்சி ரகசியத்தையும் சொல்லிவிடுவதில்லை!
        #பகத்சிங், திப்புசுல்தான், கட்டபொம்மன் கூட “தவிர்க்கவியலாமல்” மன்னிப்பு கேட்டிருக்கலாம்! பாவம் அந்தளவுக்கு அவர்கள் ‘அறிவாளிகள்’ இல்லை.
        பல “தவிர்க்கவியலாமல்” நடக்கும் சம்பவங்களை அடுக்கலாம்…
        #விவாசயிகள், பெண்கள, மாணவர்கள் மீது பொய்வழக்கு போடும் போலீசின் ‘நேர்மையை’ கொஞ்சம் உரசினாலும் போதும் “தவிர்க்கவியலாமல்” என்ற ‘கவிதை’ வந்துவிழும். “நான் நல்லவன் தான் ஆனா மேலிடத்து உத்தரவு நான் என்ன செய்யமுடியும் என்னோட “தவிர்க்கவியலாத” சூழலை புரிந்துக்கொள்ளுங்கள் “ என்ற கவிதையை உதிர்த்துவிட்டு செல்கிறார்கள்.
        #பெண்ணின் மீது ஆசிட் வீசுபவர்களும், காதல் தோல்விக்கு தற்கொலைக்கு முயல்பவர்களிடம் கேட்டாலும் தங்களின் “தவிர்க்கவியலாத” சூழலை சிறப்பாக விளக்குவார்கள்.
        #கோடிக்கணக்கான மக்கள் வாழ்வுரிமை பறிக்கப்படும் சூழில், இஸ்லாமிய பெண்கள் நடுத்தெருவில் போராடும் சூழலோடு ஒப்பிடுகையில் இவர்களின் “தவிர்க்கவியலாத” சூழலை நினைத்து எனக்கு வருத்தம் கூட வரவில்ல. ஐயோ பாவம் இந்த கடிதத்தை படிக்கும் போது என்னவோ சிலுவையில் தொங்கிய இயேசுவின் “தேவனே தேவனே….” என்ற ‘கவிதை’ வரிகள் நினைவுக்கு வருகிறதேயொழிய, தூக்கு மேடையில் நின்ற பகத்சிங்கின் வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை.
        #நல்லவேளை நான் அறிவாளி இல்லை, ஆகையால் இவர்களை போன்ற “தவிர்க்கவியலாத” சூழல் எனக்கு வராது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

      • ஜெர்மன் மத்திய கமிட்டியில் இருந்து விலகிய தோழர் கிளாரா ஜெட்கினை தோழர் லெனின் கடுமையாக கண்டித்தது உங்களுக்கும் பொருந்தும். அவராவது கோட்பாடு பிரச்சனைக்கா விலகினார் இங்கு அதுவும் இல்லை.
        என் நினைவுகளில் லெனின் -கிளாரா ஜெட்கின்.
        // “இல்லை, இல்லை” என்று லெனின் ஆட்சேபித்தார். அப்படி எதுவும் செய்ய வேண்டுமென நான் நினைக்க வில்லை. இதற்கு சான்றாக இப்பொழுது உங்களுக்குச் சரியானபடி சூடு கொடுக்கப் போகிறேன். மத்திய கமிட்டியில் இருந்து வெளியே ஓடும்படியான ஓர் அசட்டுச் செயலை (stupidity) – ஆம், அசட்டுச் செயல்தான் அது – செய்யும் அளவுக்கு நீங்கள் சென்றதேன்? அதைச் சொல்லுங்கள் எனக்கு. உங்களுடைய பகுத்தறிவு என்ன ஆயிற்று? அதுப்பற்றி நான் ரொம்ப கோபப்பட்டுக்கொண்டேன். கடுங் கோபமடைந்தேன். இது போன்ற ஒரு செயலின் விளைவுகள் குறித்து சிந்திக்காமலே, எப்படி நீங்கள் இவ்வளவு கண்மூடித்தனமாய் நடந்துக் கொள்ள முடிந்தது? அதுபற்றி எங்களுக்கு முதலில் தகவல் தெரிவிக்காமலே, எங்களுடைய அபிப்ராயம் என்னவென்று கேட்காமலே, எப்படி உங்களால் இவ்வாறு செய்ய முடிந்தது. நீங்கள் ஏன் எனக்கு எழுதவில்லை? குறைந்தது எனக்கு ஒரு தந்தியாவது அனுப்பியிருக்க வேண்டாமா?
        என்னை இந்த முடிவுக்கு வரும்படி செய்த எல்லா நிலைமைகளையும் நான் லெனினுக்கு விளக்கி கூறினேன். (அப்பொழுது எழுந்த நிலைமையின் காரணமாய் கணப்பொழுதில் நான் இம்முடிவுக்கு வர நேர்ந்து விட்டது.) ஆனால் நான் கூறிய நியாயங்கள் சரியானவை என்பதாய் லெனின் கருதவில்லை.
        “நல்ல தோழர் தான் நீங்கள்!” என்று கிளர்ச்சியுற்றவராய் அவர் வியந்துகொண்டார். “மத்திய கமிட்டியில் இருப்பதற்கான உரிமை, கட்சி அனைத்துமாக சேர்ந்து உங்களுக்கு வழங்கியதாகும்! தோழர்களில் ஒரு சிறு தொகுப்பினரால் மட்டும் வளங்கப்பட்டதல்ல. அது உங்கள்பால் வைக்க பட்ட இந்த நம்பிக்கையை துட்சமாக மதித்து நடந்துக்கொள்ள உங்களுக்கு உரிமை இல்லை”.
        என் செயலுக்காக நான் போதுமான அளவு வருந்தவில்லை என்பதை உணர்ந்த அவர், மத்திய கமிட்டியில் இருந்து நான் விலகியதன் தவறு குறித்ததுத் தொடர்ந்து என்னைக் கடிந்துக் கெண்டார்:
        “நீங்கள் சந்தர்ப்பவாதத்தின் படு மோசமான வகையின் உருவாகி விட்டதாக நேற்று மாதர் மாநாட்டில் பலரும் ஒரு முகமான முறையில் உங்களைத் தாக்கினர். உங்களுக்கு கிடைத்த நியாயமான ஒரு தண்டனையாகத்தானே இதனை கருத வேண்டியிருக்கிறது?……
        …..அருமை கிளாரா எப்பொழுதும் நாம் தொழிலாளர்களையோ, வெகுஜனங்களையோ நம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். எப்பொழுதும் அவர்களை பற்றியும், நாம் சாதிக்க முயலும் குறிக்கோளை பற்றியுமே சிந்தனை செய்ய வேண்டும். அப்பொழுது அற்ப விவகாரங்கள் யாவும் மறந்தொழிந்துவிடும். இவற்றால் தொல்லை செய்யபடாதோர் யாரும் உண்டா? நீங்கள் என்னை நம்ப வேண்டும், நானும் இவற்றின் தொல்லைகளுக்கு முழு அளவுக்கு இலக்காக நேர்ந்தது… அது போகட்டும் வரம்பு மீறிய உங்கள் செயலைப்பற்றி திரும்பவும் பேசுவோம். ஆலோசனை இல்லாத இது போன்ற செயலைத் திரும்பவும் மேற்கொள்ள மாட்டூர்கள் என்று எனக்கு நீங்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்; இல்லையேல், நமது நட்பு முடிவுற்றதாகிவிடும்.” \\

        https://www.marxists.org/archive/zetkin/1924/reminiscences-of-lenin.htm#ftnref4

        • ஒரு செய்தி: சீனாவில் கொரோனா வைரஸால் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர் அதே வைரஸ் தாக்குதலால் பாதிக்கிப்பட்டார்.

          நோய் மருத்துவரையும் தாக்கும் தன்மையுடையது. சரி விசியத்திற்கு வருவோம்…

          //ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான்\\

          போராட்டத்தில் ஏற்படும் உணர்ச்சி மகிழ்ச்சியா, கசப்பா என்பதை அதன் வெற்றி தோல்வி தீர்மானிப்பதில்லை, அது எந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பதிலிருந்து வருகிறது. அன்று போராட்டம் என்பதே மகிழ்ச்சியாக தெரிந்த உங்களுக்கு இன்று ஏன் கசப்பானதாக மாறியது என்பது தான் உங்களை நீங்கள் பரீசிலணை செய்துக்கொள்ள வேண்டிய இடம். இதற்கான காரணத்தை நான் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.

          நீங்கள் செய்த காரியத்தை ‘நமது’ தலைவர் லெனின் எப்படி கண்டித்தார் என்பதை சுட்டிக்காட்டி உள்ளேன். வரலாற்று பிழையை தவிர்ப்பதற்கு இன்னும் காலம் உங்கள் கையில் உள்ளது. உங்களை நம்பி அணிகள் கொடுத்த பொறுப்பை மதிப்பீர்கள் என நம்புகிறேன்.

          //“மகிழ்ச்சி என்றால் என்ன?” என்ற கேள்விக்கு போராட்டம் என்று பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ். கருத்தியல் துறையிலும், அரசியல் துறையிலுயம் அவர் நடத்திய போராட்டங்கள் ஒருபுறமிருக்கட்டும். குடும்ப வாழ்வில் அவர் சந்தித்த வறுமை, பட்டினி, உடல்நலக் கேடு, குழந்தையின் மரணம் போன்ற பல துன்பங்கள் “போராட்டம்’ என்ற அந்தச் சொல்லுக்குள் உறைந்திருக்கின்றன. போராட்டமே வாழ்க்கை என்றெல்லாம் பேசினாலும், போராட்டம் என்ற சொல் மகிழ்ச்சியின் எதிர்ச்சொல்லாகவே நடைமுறையில் பொருள் கொள்ளப்படுகிறது. //

    • விலகியவர்களுக்கு:
      தங்கள் கருத்து சரி என்ற ஒருபக்க கருத்தை தெரிவித்துவிட்டீர்கள்!
      உங்கள் கருத்து சரியென்றும் ஏற்கமுடியாது, தவறு என்றும் மறுக்க முடியாது! அது இருபக்க கருத்துகளையும் வைத்துதான் முடிவு செய்ய முடியும்! ஆனால் ஏதோ பெரிய பிரச்சனை இருப்பதாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அதை பற்றி பிறகு பேசுவோம்!
      எனக்கு ஒரு கேள்வி தான்.
      இந்த ஜனநாயகத்தை ஏன் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கவில்லை. ஆம்பள்ளி முனிராஜ் தோழர் கட்டுரையை ஏன் வினவில் வெளியிடவில்லை?
      மருதையன், நாதன் ஆகியோருக்கு வந்தால் இரத்தம், மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னியா?
      ஆ.மு. அடிதட்டுவர்க்கம் ஆகையால் வாய்ப்பில்லை, நீங்கள் பிரபுத்துவ வர்க்கம் அதனால் வினவில் வெளியிட வாய்ப்பு கிடைத்துவிட்டது.
      உங்க வர்க்க உணர்வு, நாணயம், நேர்மையெல்லாம் பல்லிளிக்குது போங்க!

      //அமைப்புக்கு உள்ளேயே இப்படியொரு நிலைமையைத் தோற்றுவிக்கிறோமே//

      அப்படியெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை!
      யாரோ ஒரு சிலரை நம்பியெல்லாம் புரட்சியோ, மக்களோ, அணிகளோ காத்துக்கெண்டிருக்கபோவதில்லை!
      பூனை கண்ணை மூடினால் ஒன்னும் ஆகாது. அதனால போய் வேலைய பாருங்க!

  1. தவறு தோழர்களே. நீங்கள் அமைப்புப் பணிகளிலிருந்து தற்போதுள்ள அரசியல் சூழலில் விலகுவதாக அறிவிப்பது உழைக்கும் மக்கள் வர்க்க அரசியலுக்கு நல்லதல்ல. வேறு விசயங்களை இங்கே நாம் இவ்விடம் விவாதிக்க விரும்பவில்லை.
    மார்க்சியத்தின் பால் பு.ஜ.தொ.மு ,பு.மா.இ.மு, பெ.வி.மு,ம.க.இ.க,ம.அ உள்ளிட்ட அமைப்பை ஆதரிக்கும் தோழன்
    சுரேஷ்.

  2. மருதையன் ஐயா மற்றும் நாதன் ஐயா விலகுவது சரியான முடிவு அல்ல

    மிகவும் அதிகமாக வருத்தமளிக்கிறது, என்னுடைய அரசியல் அறிவுக்கு மற்றும் என் நண்பர்களின அரசியல் தெளிவுக்கு மருதையன் ஐயா அவர்களே காரணம்,
    உடனடியாக நல்ல ஒரு முடிவை எடுக்கவும்
    எதிர் நோக்கி இருக்கிறோம்.

  3. அமைப்பின் தலைமைக்கே தோழர்களை மீண்டும் அமைப்பிற்குள் கொண்டு வரும் பொறுப்பிருக்கிறது. மருதையன் தோழர் சொல்வது உண்மை எனில் அமைப்பின் தலைமை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  4. முதலில் தோழர் மருதையனுக்கு வாழ்த்துகள்.இதை எழுதும் போது என் கண்களில் கண்ணீர் துளிகள் நிரம்பி வழிகின்றது…

    நான் ஒரு சாதாரண உறுப்பினராக 1997ல் விவிமு ல் இணைந்து பின்பு மகஇக பின்பு மக்கள் அதிகாரம் வரை (2018 பிப்ரவரி 22) அமைப்பு வேலைகளில் இருந்துள்ளேன். இன்று அவர் அமைப்பிலிருந்து வெளியேற கூறிய காரணங்கள் பொய் இல்லை என்பதை கீழ் நிலையில் இருக்கும் பொறுப்பாளர்களின் நடவடிக்கைகள் மூலம் உணர்கிறேன்.

    தஞ்சை தமிழ்மக்கள் இசைவிழா மறக்கமுடியாத நிகழ்வுகள்.

    கடைசியாக தஞ்சை “விவசாயியை வாழவிடு !” கருத்தரக்கின் போது பார்த்ததும், பேசியதும் தான் கடைசி நிகழ்வு.

    தோழரின் முடிவு வரவேற்கக்கூடியதே…

    சுயவிமர்சனம் இல்லாமல் எதையும் மாற்றமுடியாது.

    ஆனாலும் மணிப்பூரின் ஷர்மிளாவிற்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தார் அதுவே இப்போது தோழர் மருதயனுக்கும் பொருந்தும்.

    • தருமர் அவர்களே, உங்களைப் போன்ற சீர்குலைவுவாதிகளுக்கு ஆதரவாக அமைப்புத் தலைமை இருக்கும் போது உங்களுக்கு கண்ணீர் வருவது அதிர்ச்சியூட்டுகிறது. நாயமாக நீங்கள் சிரிக்க வேண்டுமல்லவா?

      • Mr.முத்து அவர்களே..

        உங்களைப்போல பிழைப்புக்காக அமைப்பில் இருப்பவர்களுக்கு கண்ணீர் வராதே…
        நான் எனது கருத்தை பதிவிட்டுள்ளேன்.நீங்க உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்.

  5. தோழர்.மருதையன் அவர்களின் விலகல் மிக ,மிக, மிக வருத்தமளிக்கிறது. நிச்சயமாக தோழர்கள் மருதையன் அவர்களும் தோழர் நாதன் அவர்களும் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தோழர் மருதையன் அவர்கள் இல்லாமல் நம் அமைப்பு என்பதை எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தோழர்கள் தமது விலகலை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
    தோழமையுடன்,

    இ.கோ.வெங்கடேசன்
    ஒசூர்

  6. தோழர்கள் விலகலுக்கான காரணத்தை படித்த போது அதிர்ச்சியாக இருக்கிறது. அமைப்புத் தலைமை இப்படி இருக்குமா கேள்வி எழுகிறது. உரிய பதில் அளிக்கப்படுவது அனைவருக்கும் நல்லது.

  7. தோழர்களின் விலகல் மிகவும் சோர்வை உண்டாக்குகிறது.
    இதைத்தானே சீர்குலைவுவாதிகள் என்று அழைக்கப்பட்ட அமைப்பின் துரோகக் கும்பல் விரும்பியது.
    இதற்கு மேலும் சம்பந்தப்பட்டவர்களின் மீது தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அது மிகவும் ஆபத்தானதாகும்.
    மிகவும் கலங்கிய மனதுடன்.
    நந்தன்.

  8. சீர்குலைவு செய்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்பதை தலைமை விளக்க வேண்டும்

    • அதுதான் புரியாத புதிராக உள்ளது.
      குற்றமிழைத்தவர்கள் நடவடிக்கை எடுக்காத தலைமை நாளை புரட்சியை எப்படி தலைமை தாங்கி நடத்தும்?
      வெளியே சென்ற துரோகிகளுக்கு உள்ளிருந்தே வேலைத்திட்டம் வகுத்து கொடுத்து வந்திருக்கிறார் ஒருவர் அது உறுதியாக தெரிநத பின்னரும் நடவடிக்கை இல்லை எனில், சங்கரமடத்திற்கும் இந்த தலைமைக்கும் என்ன வித்தியாசம்?

  9. எந்த ஒரு தனி நபருக்காகவும் நான் இந்த அமைப்பிற்கு வரவில்லை.

    அமைப்பு முன்வைத்த அரசியலை ஏற்று தான் இன்றுவரை இருக்கிறேன். இயன்றவரை உழைக்கிறேன். இயன்ற அளவு உழைப்பேன்.

    • விழலுக்கு இறைத்த நீராய் உழைப்பு மாறக்கூடாது.

      ஜனநாயகம் வேண்டும்.

  10. வெளியேறுகிறோம் என்பதைவிட வெளியேற்றப்பட்டோம் என்று அவர்கள் கூறியிருப்பதும் … பொதுவெளியில் சொல்வதைத்தவிர வேறு வழியில்லை என்பதும் … உட்கட்சி போராட்டம் நடத்தி பாருங்கள் நாங்கள் சொல்வதன் உண்மை புரியும் என்பதும் … நாம் பரிசீலிக்க வேண்டிய விசயமாக படுகிறது. மையமான கேள்விகளிலிருந்து விலகி அமைப்பு நடைமுறை … அமைப்பு நலன் … அரசியல் சூழல் … என்று பசப்புவதும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களை நோக்கி கேள்வி எழுப்பாமல் பாதிக்கப்பட்டவனிடமே முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதும் நேர்மையற்ற பச்சை
    அயோக்கியத்தனமாகப்படுகிறது.

  11. அதிர்ச்சியாக இருக்கிறது.. இவர்களது விலகல் அல்ல. நக்சல்பாரி அமைப்பாக மக்கள் முன் நிற்கும் ஒரு அமைப்பின் உள்ளே இத்தனை சீர்கேடு என்பதுதான் அதிர்ச்சி. அணிகள் மத்தியில் தலைமைக் குழு முழுவதும் விசாரிக்கப்பட வேண்டும்.

  12. இதை வினவு வெளியிட்டதன் மூலம் சீர்குலைவு வேலைக்குத் துணை போயிருப்பதை அறிய முடிகிறது. ஒருவழியாச் சோலிய முடிச்சாச்சு.

    • குருசாமிமயில்வாகனின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. குறுகுறுப்பில் அழுவதா சிரிப்பதா அறுப்பதா என்று விளங்காமல் உளறுகிறது.

    • எது சீர்குலைவு?
      உள்ளிருந்தே சீர்குலைவுக்ளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த துரோக கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அதனை தலைமை ஏற்காமல், வழக்கை தொடுத்தவனுக்கே தண்டனை வழங்கும் முறையை எதிர்த்து வெளியேறுவது அதனை பொதுவெளியில் அம்பலபடுத்துவதுமா?
      என்ன ஒரு வக்கிர மனோபாவம்.

    • நாட்டுல நடக்குற எந்த பிரச்சனை பத்தியும் வாய் தொறக்காம மகஇக வ பத்தி மட்டும் பேசுனா முதல் ஆளா வந்து கமெண்ட் ல வாந்தி எடுக்குற, பேஸ்புக்ல உக்காந்து பொறனி பேசுறதையே முழுநேர வேலையா பாக்குற குருசாமி மாதிரி‌ ஆளுங்களுக்கு கொண்டாட்டமா தான்‌ இருக்கும் 🙊🤪😂

  13. தோழர்கள் இருவரது முடிவும் சரியானது. இதில் பரிதாபம் கொள்வதற்கும் கண்ணீர் வடிப்பதற்கு இடமில்லை .

    அமைப்பிற்கு உள்ளேயே இருந்து வேலை செய்யும் சாதாரண உறுப்பினராகிய என்னால் எடுக்க முடியாது. எவ்வித சலனத்தையும் உண்டு பண்ண முடியாது..

    இந்த முடிவை தலைமையில் இருக்கும் தோழர்கள் மட்டுமே எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். இதுதான் உண்மையில் கலகத்தை ஏற்படுத்தும் .

    இது சரியான உட்கட்சி போராட்டமாக மாற வேண்டும். அமைப்பிற்கு வெளியே அல்லது அணிகளுக்கு இடையே ஜனநாயகத்தை எதிர் பார்க்கும் தலைமை முதலில் ஜனநாயகத்தை கடைபிடிக்க வேண்டும்.

  14. சமீபகாலமாக அமைப்பின் போராட்ட முறைகளில் சந்தேகம் இருந்தது, நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் அது உறுதியாகவே உள்ளது. பல்லாயிரம் தோழர்களை வசீகரித்த தோழரின் விலகல் வருத்தமளிக்கிறது. பார்ப்போம் எதிர் வரும் நாட்களில் விலகியவர்களின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கப்போகிறதென்று.

  15. இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைப்பினுள் இருந்திருக்க வேண்டிய பரஸ்பர நம்பிக்கையை உங்களது தலைமையே தகர்த்துள்ளது. கட்சி / அமைப்பு போன்றவற்றில் இணைந்து செயல்படுவது ஒரு தன்னார்வத்தின் அடிப்படையில் தான். அந்த தன்னார்வம் என்பது ஒரு பொது நோக்கத்திற்காக இந்த அமைப்பு அல்லது கட்சி பொருத்தமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருவது. அமைப்பின் மீதான நம்பிக்கைக்கு தொடர்ந்து நிலவ அந்த அமைப்பினுள் இருப்பவர்களுக்கு இடையில் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை.

    பரஸ்பர நம்பிக்கையே தகர்ந்த பின் அதற்குள்ளே இருந்து செயல்படுவது சித்திரவதையாகத் தான் இருக்க முடியும். அந்த வகையில் விலகல் முடிவு சரியானது தான். இதற்கு மேல் அமைப்பினுள் இருப்பவர்கள் ஏன் அந்த பரஸ்பர நம்பிக்கையை குலைத்தீர்கள் என்று தலைமையை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். அல்லது அவர்களும் ஒரு நாள் இதே போல் குப்பையைப் போல் தூக்கி எறியப்பட்டு விடுவார்கள்.

    மித்ரன்

  16. சொந்த வாழ்க்கைக்காக அமைப்பிலிருந்து விலகினாலும், மருதையன் தோழரின் மீதான அபிமானம் என்றுமே குறைந்ததில்லை. அவரது உரைகளை, எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.

    இன்றைக்கு அவருக்கு நேர்ந்த அநீதிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.

    புரட்சியை நேசிக்கும் தோழர்கள் அமைப்புத் தலைமையைக் கேள்வி கேளுங்கள்.

  17. தோழர் மருதையனுக்கே இந்த கதி என்றால் சாதாரணர்களுக்கு? தான் வெளியேறவில்லை, வெளியேற்றப்படும் நிலை என்று அவர் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.

  18. இந்த அறிவிப்பின் Content குறித்து விமர்சனத்திற்குள் நான் போகவில்லை.

    ஆனால்,

    வினவு தளம் நடத்துபவர்கள் விலகினால் இப்படி அறிவிக்கலாமா? இவ்வாய்ப்பு இல்லாதவர்கள்?

    சரி வெளிப்படையாக அறிவிப்பது என முடிவாகிவிட்டால், தங்கள் கைவசமிருக்கும் தலைமையின் அல்லது எதிர் தரப்பு கருத்துக்களை அல்லது அறிக்கையையுமல்லவா (ரகசியம் காத்து) சேர்த்து வெளியிட்டிருக்கவேண்டும்?

    ஞாலன்

    • @ ஞாலன், கன்டென்டுக்குள்ளே போகாமலே இப்படி அப்படி செய்திருக்கவேண்டுமென கூறுவது முரண்படுவதில்லையா?

  19. நம்பர் 2 வை வெளியேற்ற முடியாததின் விளைவு நானே (ஆத்திரம் அழுகையாக வரும் என்பது போல )வெளியேறுகிறேன் என்று கூறுவது.

    • தருமருக்கும் ஒரே ஃபோட்டோ, சூர்யாவுக்கும் அதே ஃபோட்ட்டோ. தருமர் அழுகிறார். சூர்யா கொண்டாடுகிறார். கொண்டையை மறைக்க தெரியாத அப்பாவியா இல்லை அயோக்கியரா!

      • மருதையன் தோழரின்- வெளியேறவில்லை, வெளியேற்றப்படும் நிலை என்று அவர் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.

        தோழர்கள் தமது விலகலை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

      • ஆமாம் நண்பரே ஒரே மெயில் ID தான் ஆனால் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் உடனிருந்து அந்த அறிவிப்பை படித்துவிட்டு கருத்தை பதிவிட கூறுகிறார்கள். தேவையெனில் அதையும் பதிவிடுகிறேன்.பொறுத்திருங்கள்.

      • அப்பாவி தனமாக தப்பு செய்து மாட்டிக்கொண்ட அயோக்கியர்!
        அவ்வளவு தான்.

        • தமிழ் அவர்களே யோக்கிய பட்டம் எந்த கடையில் கிடைக்கிறது..? வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். நடந்த நிகழ்வுக்கு காரண காரியங்களை பரிசீலனை செய்யுங்கள் அதன் மேல் விமர்சனம் செய்யுங்கள்.

          மூஞ்சிக்கு முகமூடி அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டாம்.

          வினவுக்கு தெரியும் இந்த மெயில் ID யிலிருந்து தான் திருப்பூர் -உடுமலை-கோவை பகுதி நிகழ்வுகளும் செய்திகளும் அனுப்பப்பட்டது என்று.

          ஆகையால் இனிமேலாவது தோழர் மருதையன் அறிக்கை பற்றி பேசுங்கள்.

          சாதாரண கீழ்நிலை உறுப்பினர் தலைமை மேல் கூறிய குற்றச்சாட்டுக்கும் மகஇக பொதுச்செயலர் தலைமை மேல் கூறிய குற்றச்சாட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லையே.

  20. தலைமை தான் அமைப்பு என்றென்னுவது அயோக்கியத்தனம். தலைமை உறுப்பு மட்டும் தான் அணிகள்தான் அமைப்பு என்பதை புரியவைக்கும் நேரமிது. கேள்வி எழுப்புங்கள்.

  21. தோழர்களின் விலகல் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நம்ப முடியவில்லை… இது கனவாக இருக்க கூடாதா என்று மனம் ஏங்குகிறது.

    ஜனநாயக-மத்தியத்துவம், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பரிசீலனை, விமர்சன சுயவிமர்சன நடைமுறைகளைக் கொண்ட புரட்சிகர கம்யூனிச அமைப்புக்குள்ளேயே ஜனநாயக விரோதப் போக்கு இருப்பதை தோழர்களின் கடிதம் வெளிப்படுத்தியுள்ளது.

    தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு எதிர்நீச்சல் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. எதிர்த்துப் போராடுவோம்!

  22. ஊரு ரெண்டுபட்டால், கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் வருவது இயல்புதானே..

    இதில் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால், ஆளாளுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு திரிப்பதும், எரியிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதும் தான்.

    சகிக்க முடியவில்லை..

  23. சமீபகாலமாக இவ்வமைப்புகளின் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்களை உணர முடிந்தது. அதன் காரணிகள் இப்போது வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.

  24. ” இருப்பினும், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று, இப்பிரச்சனை, சில முன்னணித் தோழர்களின் முன் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமைக்குழுவின் பெரும்பான்மையான தோழர்கள், அவதூறுப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைப்பிற்குள் செயல்பட்டு வந்தவர்களுக்கு “குற்றமற்றவர்கள்” என்று நற்சான்று கொடுத்து, அவர்களை நம்பவைத்தார்கள்.”

    அமைப்புக்குள் அன்னிய சக்திகள் ஊடுறுவி இருக்கிறது என்பது தெளிவு.

  25. கருத்து வேறுபாடு காரணமாக இந்த விலகல் நிகழ்ந்திருப்பின் அதை விவாதிக்கலாம். அன்னிய சக்திகள் ஊடுறுவி இருப்பின் அது அமைப்பின் கட்டமைப்பு குறைபாடே.

  26. சொந்த வாழ்க்கைக்காக அமைப்பிலிருந்து விலகினாலும், மருதையன் தோழரின் மீதான அபிமானம் என்றுமே குறைந்ததில்லை. அவரது உரைகளை, எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.

    இன்றைக்கு அவருக்கு நேர்ந்த அநீதிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.

    புரட்சியை நேசிக்கும் தோழர்கள் அமைப்புத் தலைமையைக் கேள்வி கேளுங்கள்.

  27. Maruthaian Aia!

    Nalla velai seithirukkureerkal.

    Ippothu unkalukku niraiya neeram irulkum.
    Oru siru aalosanai -arivurai alla-.
    Meendum orumurai Geethai vasital enna?
    Swamy Sitbhavanantharin vilakkavurai arumaiyaka irukkum.
    Yogavasisdam europe il “visayam arintha vadarankalil” irakasiyamaka vasikkappaddu vanthathu unkalukku theriyuma?

    Karl Marx kuuda thanathu iruthiklalankalil india aanmikaththil aarvam kadinaramee?

    Anpudanum natpudanum,
    Arul Chinnaiah

  28. தோழர் மருதையன் அனல் பேச்சு அவரின் உருவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லாமல் உக்கிரமாய் இருக்கும் கூட்டத்தில் கடைசியில் அமர்ந்திருக்கும் பாமரனையும் சென்று சேர்வதாய் இருக்கும் இனி இவர்போல் தோழர் கிடைப்பார்களா என்றால்???????

  29. தோழர்களே முதலில் உங்களின் இத்துணை ஆண்டுகால கடும் அரசியல் பணிகளுக்கு நெஞ்சம் நிமிர்த்தி வணக்கம் செலுத்துகிறேன்…திருச்சியில் கடந்த ஞாயிறு தினம் மக்கள் வெள்ளத்தால் சிவந்தது என்றால் நீங்களும்,வெளியில் முகம் தெரியா தோழர்களின் உழைப்புமே காரணம்…அமைப்புத்தலைமையோடு உங்களுக்கு முரண் எனில் உள்ளிருந்து தொடர்ச்சியாக போராடுவது தானே நியாயம்..மாநில செயற்குழு உறுப்பினர்களும் மகஇக தோழர்களும் உங்களோடு(உங்களின் கூற்றுப்படி யே)நிற்கையில் நீங்கள் உள்ளிருந்து போராடித்தானே இருக்க வேண்டும்..அமைப்பில் தற்போது சேர்ந்து போராட்டத்தின் ஊடாக அரசியல் கற்கும் ஒரு இளம் தோழருக்கு வேண்டுமாயின் இப்படி முடிவெடுக்க மனம் வந்திருக்கலாம்..அது தவறுமில்லை..உங்களுக்கு எப்படி இது சாத்தியமானது?என் மீதான விமர்சனங்களை நகைச்சுவையோடு கடந்து போவேன் என்கிறீர்கள்..ஏன் அதே மனநிலையில் தலைமைக்கு எதிராக தொடர்ந்து போராடியிருக்க உங்களை எது தடுத்தது?உங்கள் பக்கம் நியாயமெனில் தொடர்ந்து போராடி அதைக் களையும் வழி முறைகளை அல்லவா நீங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்? மூன்று நாள் முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அப்படி ஒரு உரை நிகழ்த்திவிட்டு இன்று எப்படி உங்களிடமிருந்து இப்படி ஒரு முடிவு?நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மகஇக தோழனாக வந்து அதன் பொதுச்செயலாளராக உயர்ந்தது உங்களின் தனித்த அரசியல் புரிதலாயினும் அதை நீங்கள் அடைந்தது.. அமைப்பு, தலைமை அதன் வழிகாட்டல்கள்தானே.?.கார்ப்பரேட் காவி பாசிசம் என்னும் முழக்கம் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனில்..எப்படி ஒரு மாநாட்டை சிறப்பாக நடத்தியிருக்க இயலும்?தோழர்களே தலைமை உங்களை இந்நிமிடம் வரை வெளியேற்றாத போது நீங்கள் எப்படி பொது வெளியில் உங்கள் விஷத்தை அறிவிக்கலாம்?அமைப்பிலிருந்து ஏராளமானோர் வெளியேற்றப் பட்டிருக்கும் போது வினவு எப்படி உங்கள் விலகலை மட்டும் விலாவாரியாக வெளியிடலாம்..?வினவு தலைமைக்கு கட்டுப்பட்ட தளம் இல்லையா?மதிப்பின் தகு தோழர்களே..மருதையன் முதல் இன்று மாலை அமைப்பு வென்றெடுத்த இளம் தோழர் வரை தலைமைக்கு கட்டுப்பட்டவர்களா இல்லையா? அதன் மீது விமர்சனம் எனில் தலைமையை தகர்த்தெறியும் வரை போராடுவதை விடுத்து இப்படி முடிவெடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?உங்கள் மூளையின் மூலை வரை ஆக்ரமித்து புரட்சியை வேண்டும் உங்களின் சிவப்புச் சிந்தனையை எப்படித் தடுப்பீர்கள்.?நித்தம் நித்தம் உங்களை வாட்டும் அரசியல் பசியை,புரட்சியின் சுவாசத்தை எதைக்கொண்டு அடைப்பீர்கள்? அரசியல் விலகி பெட்டிக்கடை வைத்து பிழைக்கப்போகும் மூளையானதா உங்களது?மன்னித்து கொள்ளுங்கள் தோழர்களே..நான்.மகஇக செயலாளர் ஆனாலும் மாநாட்டுப் பணிகளில் இருந்து என்னை விலக்கி வைத்தார்கள் என்று சொல்லுவதில் எனக்கு உடன் பாடில்லை..தலைமை அப்படி அறிவுறுத்தினால் ஏற்று பின்பற்றுவது தானே முறை?தோழர்களே தலைமையோடு உங்கள் முரண் என்பது உங்களின் சுயம் மறுத்ததால் ஏற்பட்டதாக இருக்குமோ என்று நான் ஐயம் கொள்கிறேன்…என் ஐயம் பிழையாக கூட இருக்கலாம்… நீங்கள் மட்டுமல்ல அங்கீகாரத்திற்கு ஏங்காத,ஏற்காத தியாக போராளிகளே கம்யூனிஸ்ட்டுகள்..என்று முழங்கிய நீங்கள் அப்படி ஒரு சிந்தையில் எப்படி இருப்பீர்கள் என்றும் தெளிகிறேன்..என் கருத்து தவறாயின் மன்னியுங்கள்…நாற்பது ஆண்டுகால உங்களின் அரசியல் உழைப்பு இப்படி நிறைவடைவதை என்னால் ஏற்க இயலவில்லை…விலகலை அறிவித்த பின்னர் அதை பரிசீலியுங்கள் என்று சம்பிரதாய வார்த்தை சொல்ல என் மனம் ஒப்பவில்லை…மருதையன் தோழரா இப்படி என்று கொஞ்சமே கொஞ்சம் நான் கற்றுக்கொண்ட அரசியல் கண்ணோட்டப்படி ஆச்சரியப்படவும் விருப்பமில்லை…ஏனெனில் இந்தப் போராட்டம் நம்மோடு துவங்கவுமில்லை…நம்மோடு முடியப் போவதும் இல்லை…

  30. மன்னிக்கவும்..விலகலை அறிவிக்கலாம்?என்பதற்கு பதிலாக விஷத்தை அறிவிக்கலாம்?என்று தவறுதலாக தட்டச்சு செய்துவிட்டேன்…

  31. தலையில் இடி விழுந்தது போலான செய்தி. தோழர் மருதையன் இல்லாத மகஇக-வை நினைத்தும் பார்க்க முடியாது. மதிநுட்பமும் அறிவுக்கூர்மையும் தொலைநோக்கும் நிரம்பிய போராளி. காவி பாசிசம் எனும் முழக்கம் உண்மையில் பார்ப்பன பாசிசம் என்றுதான் வந்திருக்க வேண்டும். காவி மற்றும் சநாதனம் எனும் சொற்கள் கூர்மை குறைவானவை என்றே நான் பார்க்கிறேன். தோழர் மாவோவின் ‘தலைமையை தகர்தெறியுங்கள்’ எனும் முழக்கம்தான் நினைவுக்கு வருகிறது.

  32. தோழர் மருதையன் அனல் பேச்சு அவரின் உருவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லாமல் உக்கிரமாய் இருக்கும்.
    கூட்டத்தில் கடைசியில் அமர்ந்திருக்கும் பாமரனையும் சென்று சேர்வதாய் இருக்கும் இனி இவர்போல் தோழர் கிடைப்பார்களா…..???

  33. யாரோ மருதையன் என்று சொல்கிறார்கள் நாதன் என்று சொல்கிறார்கள் நம்மை போன்ற சாதாரண பொதுஜனத்திற்கு தான் இவர்கள் யார் என்று தெரியவில்லை போல… அது என்ன தலைமை, யார் அது ?

    • சம்பந்தமில்லாம குறுக்குசால் ஒட்டலாமா?

      தோழர் மருதையனைப் பற்றித் தெரிஞ்சுக்காமலேயே என்னென்ன வார்த்தைகளையெல்லாம் வினவின் பல பதிவுகளில் பின்னூட்டமிட்டுருக்கீங்க!

      இந்த மூன்று பதிவுகளை மட்டுமாவது கொஞ்சம் படிங்க….

      1. மகிழ்ச்சியின் தருணங்கள் !!
      https://www.vinavu.com/2010/07/30/moments-of-joy/

      2.பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும்
      https://www.vinavu.com/2010/12/29/on-reading/

      3. 21-ம் நூற்றாண்டிலா இப்படி?
      https://www.vinavu.com/2013/01/01/marxian-era/

  34. This is not time to discuss this type of issues, How
    you people can decide over night means( 4 1/2 month) of duration. this is 40 years of relationship between you and this nation is burning now don’t pore petrol on that you people. Pls discuss fast com to an conclusion.

  35. தோழர் மருதையன்மீது இன்னும் பலவிதமான அவதூறுகள் வலம் வருகின்றன. அதற்கும் தோழர் விளக்கம் கொடுத்து அவர்கள் வாயை அடைக்க வேண்டும். வினவும் அதை வெளியிட வேண்டும். சிலர் வாயைத் தொறக்காம புரட்சிகரப் பணிகள்ல இருக்காங்க போலிருக்கு? பாக்கலாம்.

  36. வேதனையான ஒன்று .. மக்கள் அதிகாரம் ம.க.இ.க போன்ற மக்கள் திரள் அமைப்புகள் இப்படி சிதறி போவது உழைக்கும் மக்களுக்கு தான் பெரும் இழப்பு, மேலும் இது உழைக்கும் மக்களுக்கு தோழர்கள் செய்த துரோகம். பாசிச காவிகள் எதிர்பார்த்த ஒன்றை நிறைவேற்றிவிட்டார்கள் தோழர்கள் ..1991 இல் நடந்த சோவியத் வீழ்ச்சியை இது நினைவூட்டுகின்றது ..

  37. Comrades,

    I am not a member of any political party but a common man. Also I keenly follow spread of socialist principle, especially the re-awakening of communist philosophy among masses of Tamilnadu after the fall of USSR. I am sure Ma.Ka.E.Ka has not simply created a dent in Tamilnadu but great impact in ways ahead of many organisations aligned to spread communism among masses in Tamilnadu.

    What sort of childish fight is going on inside Ma.Ka.E.Ka?

    At this man-made crucial juncture, this words of Che comes to my mind – Socialism is young and has its mistakes. We revolutionaries often lack the knowledge and intellectual audacity needed to meet the task of developing the new man and woman with methods different from the conventional ones; conventional methods suffer from the influences of the society that created them.

    ‘One step forward two steps back’ is not simply a title of Com.Lenin’s book. It is lesson to all comrades to have better clarity. Com.Lenin mentions, as last words in that book, “In its struggle for power the proletariat has no other weapon but organisation”

    Hope sanity prevails with all inside Ma.Ka.E.Ka.

    Please discuss with all within your organisation and come to terms to

  38. அடேய்.. அட்டடேய்… என்னமா புழுகறீங்கடா? அவதூறு என்பதற்கு அகராதியில் அர்த்தம் வினவு தளம் என்றே இருக்கும். அவ்வளவு அவதூறுகள். இப்ப இவரை அவதூறு செய்றாங்களாம் இவர் விலகறாராம். போங்கடா.. வேற வேல இருந்தா பாருங்க

  39. தோழர்கள் நாதன் மற்றும் மருதையன் ஆகியோர் வினவு மற்றும் மகஇகவிலிருந்து விலகியதாக வந்திருக்கும் செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. என்னுடைய கட்டுரைகளை வினவு விரும்பி பிரசுரித்து வந்தது. நான் குறைவாகவே எழுதினேன். நேரம் ஒதுக்கி நிறைய எழுத வேண்டும் என்று பலமுறை எண்ணியதுண்டு. எழுதுவதற்கும், மொழிப்பெயர்ப்புக்கும் பல ஆங்கிலக் கட்டுரைகளைச் சேமித்து வைப்பேன். வினவில் எனது ஒரு கட்டுரை வெளிவந்தால் மனம் குதூகலிக்கும். சில கட்டுரைகளுக்கு தோழர்கள் வழங்கும் பாராட்டுகள் மிகுந்த உற்சாகம் கொடுக்கும். இப்போது வினவிலிருந்து தோழர் நாதன் விலகியுள்ளதன் மூலம் எனக்கும் அந்த அமைப்புக்கும் இருந்த மெல்லிய (அழகிய) தோழமை உணர்வு முறிந்துள்ளது. நேற்றிரவு வினவு கட்டுரையை செல்பேசியில் வாசித்த போது எனது கைகள் நடுங்கி கொண்டிருந்தன. அதற்கு முந்தின நாள் இரவு பத்தரை வரை வினவில் மக்களதிகாரம் மாநாட்டின் நேரலையை பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு முக்கியமான நேரத்தில் இப்படியான ஒரு நிகழ்வு என்று அயர்ச்சி மேலும் கூடுகிறது.

    தமிழகத்தின் மிக முக்கியமான சிந்தனையாளராக அறியப்பட வேண்டியவர் தோழர் மருதையன். ஒட்டுமொத்தமாக அரசியல் பயணத்திலிருந்து இரண்டு தோழர்களும் வெளியேறுகிறார்கள் என்றால் அது தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு என்றால் மிகையில்லை. நீங்கள் வேறெந்த தீவிர இடதுசாரி அமைப்பின் கருத்துக்களையும் வாசித்து பாருங்கள். 10 நிமிடத்துக்கு மேல் உங்களால் அந்த கருத்துக்களில் ஒன்றியிருக்க முடியாது. இடதுசாரிகள் மட்டுமே வாசிக்க முடிவதிலிருந்து அரசியல், அறிவுத் தாகம் கொண்ட எவரும் வாசிக்க முடிகின்ற ஒரு இடதுசாரி அழகியலை புதிய கலாச்சாரம் கொண்டிருந்தது. புதிய கலாச்சாரம் அதன் தொடர்ச்சியாக வினவு ஆகியவவற்றின் மொழி என்பது நவீனத்துவத்துக்குள் வழக்காடிய ஒரு எதிர்நவீனத்துவம் எனலாம். கார்ப்பரேட் — காவிப் பாசிசம் என்ற வரையறுப்பு மிகவும் சரியானது. அதனை தலைமையில் உள்ள சிலரே எதிர்ப்பதை என்ன சொல்வது? சி.பி.எம்மிற்குள்ளும் பிரகாஷ் காரட் மாதிரியானவர்கள் இது போன்ற கருத்தை தான் கொண்டிருக்கிறார்கள்.

    அருந்ததி ராய், டீஸ்தா சேதல்வாட், ஆனந்த் டெல்டும்டே, தியாகு, லெனின் பாரதி, திமுகவின் சில தலைவர்கள் ஆகியோரை மகஇக கூட்டங்களுக்கு அழைத்துப் பேச வைப்பது காலத்தின் தேவையை உணர்ந்த சிறந்த செயல் தந்திரங்கள். ஒரு தனிநபர் அல்லது அமைப்பு தனக்குள்ளே தான் முடங்க வேண்டும் என்பது தான் அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்பு. ஒரு அமைப்புடன் தனிநபர் நெருங்குவதை அதிகார வர்க்கம் விரும்புவதில்லை. அது போல ஒரு அமைப்பு மற்றொரு தோழமை சக்தியுடன் நெருங்குவதை வெறுக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். கருத்துரையாளர்கள் என்ன பேசினார்கள்? அம்பேத்கருடன் பெரியாரை ஏன் இணைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். பெரியார் – அம்பேத்கர் – பகத்சிங் என்ற இணைப்பு வடிவம் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. பார்ப்பனீயம் மக்களை எப்படி சாதியால் பிளவுபடுத்தி வைத்ததோ அது போல ஜனநாயக – சோசலிச அமைப்புகள் ஒன்று சேராமல் பிளவுபட்டு கிடக்க வேண்டும் என்று அதிகார வர்க்கம் விரும்புகிறது.

    இன்று ஒரு கட்சி ஒரு போராட்டத்தை நீடிக்கும் தன்மையில் முன்னெடுக்கும் நிலைமை இல்லை. ஊர் கூடி தேர் இழுப்பது போன்று பல கரங்கள் தேவைப்படுகின்றன. வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பது இசுலாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு. ஆர்.எஸ்.எசும் பல்வேறு இந்துத்துவ அமைப்புகளின் கூட்டமைப்புடன் தான் செயல்படுகிறது. முற்போக்கு அமைப்புகள் மட்டும் தான் சிதறியக் குழுக்களாக உள்ளன. ஜனநாயக அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. வெளியே வந்திருக்கும் தோழர்கள் அதற்குரிய ஆகிருதியை கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. இது அல்லது இது போன்றதொரு தேவையின் நிமித்தத்துக்கு உங்கள் ஆற்றல் பயன்பட வேண்டும் என்று அன்பாய் வேண்டுகிறேன்.

  40. கடந்த சில வருடங்களாகவே வினவு தளம் தி மு கா வின் கொள்கைப்பரப்பு அங்கமாக மாறி விட்டதோ என்ற பல நீண்ட கால வினவு ஆதரவாளர்களின் சந்தேகம் ஊர்ஜிதம் செய்யும் வண்ணத்தில் உள்ளது தோழர் மருதையனின் அமைப்பு விலகு கடிதம். ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் என்று வினவால் கடுமையாக தாக்கப்பட்டு கொண்டிருந்த சமகால அரசியல் கட்சிகளில் தி மு கா விற்கு மட்டும் விலக்களித்து, அக்கட்சிக்கு மறைமுகமாக கொடி தூக்கும் வேலையை தோழர் மருதையன் மற்றும் அமைப்பினர் சிலர், சில காலமாக செய்து வந்ததார்களோ என்ற எனது ஐயம் இவ்விலகல் நிகழ்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளதாகவே கருதுகிறேன்.

  41. விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு கருத்து கூட பெட்டகத்தை திறந்து வையுங்கள்.. கொடும் துயர பிணியில் வெந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான அனைத்து வித தொழிலாளர் விவசாயிகள் மாணவர்கள் அறிவுத் துறையினருக்கு கலங்கரை விளக்காக நம்பிக்கையின் நட்சத்திரமாக எண்ணி வந்த அரசியல் தலைமையில் பிளவு யாராகினும் பரவாய் இல்லை ஒரு கனம் மார்க்சினுடைய ஜென்னி மார்க்சினுடைய துயரம் அளவு துயவற்று விட்டீர்களா இல்லை மார்க்சு ஏங்கல்ஸ் லெனின் மாவோவுடைய சரிவை விட சாதனையை விட பெரிய மூளை பெரிய துயரங்கள் அடைந்து விட்டீர்களா ஏன் இந்த அவசர கதி முடிவுகள் ஸ்டாலின் தன் மகனை இழந்த போதும் நிதானமாகத் தான் இருந்தார் தன் மீது அவமானகரமான அவதூறு வந்த போதும் நிதானமாகத் தாள் இருந்தார் வேகமாக ஓடிப்போய் அறிவு வியாபாரிகளிடம் வேலைக்கு சேர்ந்து விடாதீர்கள்

  42. எங்களது மகிழ்ச்சியின் (தருனங்கள் ) மீது போர் தொடுக்காதிர்கள். பகத்சிங் உங்களை தோழராக ஏற்றுக்கொள்ள மாட்டார் நீங்கள் எல்லோரும் எலனிவடைய தேசழர்கள் மார்க்சின் மாணவர்கள் அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் திப்புவின் போர்வாளை தூக்கி எரியாதீர்கள் செஞ்சுடரை மதியுங்கள் வானத்துக்கு கீழே விவாதித்து முடிவு எடுக்க முடியாத ஒன்று உண்டோ . ஒதுங்கி செல்ல உரிமை இல்லை தோழர்களே பஸ் டிக்கெட்டை மட்டும் பையில் வைத்து கொண்டு மீதம் அனைத்தையும் எதர் மோகோல் பெட்டியில் திருச்சி மாநாட்டில் போட்டு வந்த எண்ணற்ற கூலி தொழிலாளர்கள் எத்தனையோ பேர்க்கு உங்கள் அளவு அறிவு இல்லாதிருக்களாம் ஆனால் புதிய ஜனநாயக அரசியல் தலைமை மீது எதிர்கால எம் சந்திதியினருக்கு விடுதலை உண்டு என எண்ணி வந்தேறும் இத்தனை நாட்கள் பொய்களின் கை பிடித்த உணர்வை அளித்து விடாதீர் எங்கள் முகத்தில் சவக் கலை அடைய விடாதீர்

  43. கம்யூனிஸ்டுகள் நாம் கஸ்ட ஜூவிகள் என்பது எதிரி நமக்கு கொடுக்கும் கஸ்டம் அல்ல எதிரி கொடுக்கும் துயரம் நாம் முன் அறிந்ததே. சக தோழர் கொடுக்கும் துயரம் கண்ணுக்கும் இமைக்கும் நடக்கும் போராட்டம ேம இந்த தலைமை தளத்துக்கு தியாகம் அற்பணிப்பு புரட்சியின் மீது அளவொன்னா காதல் இன்றி நிச்சயமாக ஒரு மேஜையை சுற்றி நீங்கள் எவரும் அமர்ந்திருக்க முடியாது பின் ஏன் குழவாதம் வறட்டு கவுரவம் 18 வயது மாணவன் மாவோவின் மேற்கோள் படித்து ஜனநாயகம் மத்தியஸ்துவம் விமர்சனம் சுயவிமர்சனம் எனும் முறைமையை தெரிந்து மகிழ்ச்சியில் இரவு முழக்க தூங்காது மகிழ்ச்சியில் 3.30 மணியில் இருந்து 5.30 வரை தெற்கு வங் அற்றி யாரிடமாவது தெரிவித்து பகிர்ந்து கொள்ள ஆசையாய் அலைகிறான் அந்த ஆயுதம் வழக்கொளிற்து போய் விட்டதாக அவன் எண்ணி விட கூடாது

  44. தோழர்கள் மருதையன்,நாதன் ஆகியோரின்24-04-2020  “வினவு அறிவிப்பு” புரட்சிகர ஜனநாயக சக்திகளிடம் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.   தோழர்கள் மருதையன் மற்றும் நாதனின் அறிவிப்புகள் அரசியல் விலகல் என்று நாம் கருதவில்லை. அவர்கள் அரசியல் தற்கொலை செய்துகொள்ளும் கோழைகள் அல்ல என்றும் நாம் முழுமையாக நம்புகிறோம். 
           தோழர்கள் பொதுவெளியில் அறிவிப்பை  வெளியிட்டுவிட்ட பிறகு திரும்ப பெறுங்கள் என்ற கோரிக்கை அர்த்தமற்றது.  நாம் அறிவுரை கூறுமளவிற்கு தோழர்கள் பலவீனமானவர்கள் என்றும் நாம் கருதவில்லை.

    வரலாற்றில் தனிநபர் பாத்திரம் குறித்து புரிந்து கொண்டவர்களிடம் இச்சமபவம் ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தாது.

    இந்திய புரட்சிகர அரசியல் வரலாற்றில் விக்ரமாதித்த வேதாளங்களாக சிலரை நாம் கண்டிருக்கிறோம். தானே கட்டியமைத்த அமைப்புக்கு தானேஒரு தடைக்கல்லாய்மாறி தனது நடைமுறைமூலமே தகர்த்தெறிந்த தோழர்.கொண்டபள்ளி  சீதாராமையா, தான்உருவாக்கிய அமைப்பை தனது நடைமுறை மூலமே சவளைப்பிள்ளையாக்கி சுகம் கண்ட தோழர்.கோதண்டராமன் போன்றவர்களின் வரலாற்று பாத்திரத்தை நாம்மால் மறக்கமுடியாது. பாரிய கருத்து மாறுபாடு கொண்டிருந்த போதும் புரட்சிகர ஐக்கியத்திற்காக  மத்யத்துவ நடைமுறைகளை பின்பற்றி புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து சிறைதண்டணை அனுபவிக்கும் கத்தீப் அன்சாரி போன்ற உயர்ந்த தோழர்களையும்  நம்மால் மறக்க இயலாது.
    புரட்சிகர அமைப்பில் இதுபோன்ற விலகள்  சம்பவம் புதியது அல்ல.

    பத்து ஆண்டுகளுக்கு முன்னால்  இல. கோவிந்தசாமியின்  “உண்மைகளில் ஊன்றி நின்று” என்ற வெளியீடு புரட்சிகர அமைப்பில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசியது. அப்போது ஒலித்த  பொதுஉடமை இயக்கம் குறித்து புளித்துபோன “ஜனநாயக மறுப்பு பல்லவி ” இப்போதும்  ஒலிக்கிறது. இது இரண்டு தாடிக்காரர்களின் சரவாதிகாரம் என்று மார்கஸ் காலத்திலும் ஒலித்தது. லெனின், ஸடாலின், மாவோ காலத்திலும் ஒலித்தது.
          இந்த விலகல் அறிவிப்புக்கு பிறகு சுயநலமிகளின் “சாத்தான் வேதம் ஓதல்” கூச்சலைதான் நம்மால் சகித்துகொள்ள முடியவில்லை. இதற்கு மாற்றாக விலகிஓடி  புலம்புவதை ஓர் நடைமுறையாகக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?  தோழர்கள் மருதையன், நாதன் மீதும், எதிர்தரப்பபாக சித்தரிக்கப்படும்  தோழர்கள் மீதும் கல்லேறிபவர்களுக்கு  பேசுவதற்க்கு எந்தவித தகுதியும்கிடையாது.
    இந்த நரிகளின் ஊளை சத்தங்களை புறக்கணித்து  புரடசிகர ஜனநாயக நடைமுறையை பின்பற்றி, ஊக்கமான செயல்பாட்டை உயர்த்தி பிடித்து பயணிப்பது மட்டுமே  உடனடிக்கடமயாக இருக்க முடியும்.

      தனிநபர் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை புறந்தள்ளி புரட்சிகர அரசியல் அமைப்பை கட்டியமைக்கும் நோக்கில் ஊக்கமுடன் உண்மைகளில் ஊன்றிநின்று பரிசீலிப்பதும்,சிறந்த நடைமுறையை உறுவாக்கி செயல்படுவதுமான பயணிப்பில் தோழர்கள் மருதையன் நாதன் ஆகியோர் மட்டுமல்ல சிதறிக்கிடக்கும் புரட்சிகர சக்திகளின் ஒன்றிணைவார்கள் என்பதில் நம்பிக்கைகொணடு முன்னேறுவோம்.
      

  45. இந்த மாதிரியான மொக்கை வடிவத்தை ( current web design) கொண்டு வந்ததற்கே மருதையனை நீக்கி இருக்க வேண்டும். பழைய வடிவமே படிப்பதற்கு எளிதாக இருந்தது. குறைந்து போன வாசகர் எண்ணிக்கையே நான் சொல்வதற்கு சான்று. பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல் இருக்கிறது இப்போது.

    மருதையன் இத்தனை ஆண்டுகள் பதவியல் இருந்தது ஜனநாயகப்படி தேர்ந்தெடுத்தா இல்லை , நியமன பதவியா? காமெடி பண்ணாதீங்க மருதையன்… முழுக்க திராவிட கருத்துக்களை, ngo கருத்துக்களுக்கு பலியாகிவட்ட அமைப்பு இது.

  46. c.nepolian February 25, 2020 At 2:46 am

    தோழர்களே முதலில் உங்களின் இத்துணை ஆண்டுகால கடும் அரசியல் பணிகளுக்கு நெஞ்சம் நிமிர்த்தி வணக்கம் செலுத்துகிறேன்…திருச்சியில் கடந்த ஞாயிறு தினம் மக்கள் வெள்ளத்தால் சிவந்தது என்றால் நீங்களும்,வெளியில் முகம் தெரியா தோழர்களின் உழைப்புமே காரணம்…அமைப்புத்தலைமையோடு உங்களுக்கு முரண் எனில் உள்ளிருந்து தொடர்ச்சியாக போராடுவது தானே நியாயம்..மாநில செயற்குழு உறுப்பினர்களும் மகஇக தோழர்களும் உங்களோடு(உங்களின் கூற்றுப்படி யே)நிற்கையில் நீங்கள் உள்ளிருந்து போராடித்தானே இருக்க வேண்டும்..அமைப்பில் தற்போது சேர்ந்து போராட்டத்தின் ஊடாக அரசியல் கற்கும் ஒரு இளம் தோழருக்கு வேண்டுமாயின் இப்படி முடிவெடுக்க மனம் வந்திருக்கலாம்..அது தவறுமில்லை..உங்களுக்கு எப்படி இது சாத்தியமானது?என் மீதான விமர்சனங்களை நகைச்சுவையோடு கடந்து போவேன் என்கிறீர்கள்..ஏன் அதே மனநிலையில் தலைமைக்கு எதிராக தொடர்ந்து போராடியிருக்க உங்களை எது தடுத்தது?உங்கள் பக்கம் நியாயமெனில் தொடர்ந்து போராடி அதைக் களையும் வழி முறைகளை அல்லவா நீங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்? மூன்று நாள் முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அப்படி ஒரு உரை நிகழ்த்திவிட்டு இன்று எப்படி உங்களிடமிருந்து இப்படி ஒரு முடிவு?நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மகஇக தோழனாக வந்து அதன் பொதுச்செயலாளராக உயர்ந்தது உங்களின் தனித்த அரசியல் புரிதலாயினும் அதை நீங்கள் அடைந்தது.. அமைப்பு, தலைமை அதன் வழிகாட்டல்கள்தானே.?.கார்ப்பரேட் காவி பாசிசம் என்னும் முழக்கம் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனில்..எப்படி ஒரு மாநாட்டை சிறப்பாக நடத்தியிருக்க இயலும்?தோழர்களே தலைமை உங்களை இந்நிமிடம் வரை வெளியேற்றாத போது நீங்கள் எப்படி பொது வெளியில் உங்கள் விஷத்தை அறிவிக்கலாம்?அமைப்பிலிருந்து ஏராளமானோர் வெளியேற்றப் பட்டிருக்கும் போது வினவு எப்படி உங்கள் விலகலை மட்டும் விலாவாரியாக வெளியிடலாம்..?வினவு தலைமைக்கு கட்டுப்பட்ட தளம் இல்லையா?மதிப்பின் தகு தோழர்களே..மருதையன் முதல் இன்று மாலை அமைப்பு வென்றெடுத்த இளம் தோழர் வரை தலைமைக்கு கட்டுப்பட்டவர்களா இல்லையா? அதன் மீது விமர்சனம் எனில் தலைமையை தகர்த்தெறியும் வரை போராடுவதை விடுத்து இப்படி முடிவெடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?உங்கள் மூளையின் மூலை வரை ஆக்ரமித்து புரட்சியை வேண்டும் உங்களின் சிவப்புச் சிந்தனையை எப்படித் தடுப்பீர்கள்.?நித்தம் நித்தம் உங்களை வாட்டும் அரசியல் பசியை,புரட்சியின் சுவாசத்தை எதைக்கொண்டு அடைப்பீர்கள்? அரசியல் விலகி பெட்டிக்கடை வைத்து பிழைக்கப்போகும் மூளையானதா உங்களது?மன்னித்து கொள்ளுங்கள் தோழர்களே..நான்.மகஇக செயலாளர் ஆனாலும் மாநாட்டுப் பணிகளில் இருந்து என்னை விலக்கி வைத்தார்கள் என்று சொல்லுவதில் எனக்கு உடன் பாடில்லை..தலைமை அப்படி அறிவுறுத்தினால் ஏற்று பின்பற்றுவது தானே முறை?தோழர்களே தலைமையோடு உங்கள் முரண் என்பது உங்களின் சுயம் மறுத்ததால் ஏற்பட்டதாக இருக்குமோ என்று நான் ஐயம் கொள்கிறேன்…என் ஐயம் பிழையாக கூட இருக்கலாம்… நீங்கள் மட்டுமல்ல அங்கீகாரத்திற்கு ஏங்காத,ஏற்காத தியாக போராளிகளே கம்யூனிஸ்ட்டுகள்..என்று முழங்கிய நீங்கள் அப்படி ஒரு சிந்தையில் எப்படி இருப்பீர்கள் என்றும் தெளிகிறேன்..என் கருத்து தவறாயின் மன்னியுங்கள்…நாற்பது ஆண்டுகால உங்களின் அரசியல் உழைப்பு இப்படி நிறைவடைவதை என்னால் ஏற்க இயலவில்லை…விலகலை அறிவித்த பின்னர் அதை பரிசீலியுங்கள் என்று சம்பிரதாய வார்த்தை சொல்ல என் மனம் ஒப்பவில்லை…மருதையன் தோழரா இப்படி என்று கொஞ்சமே கொஞ்சம் நான் கற்றுக்கொண்ட அரசியல் கண்ணோட்டப்படி ஆச்சரியப்படவும் விருப்பமில்லை…ஏனெனில் இந்தப் போராட்டம் நம்மோடு துவங்கவுமில்லை…நம்மோடு முடியப் போவதும் இல்லை…

    Avatarc.nepolian February 25, 2020 At 2:57 am
    மன்னிக்கவும்..விலகலை அறிவிக்கலாம்?என்பதற்கு பதிலாக விஷத்தை அறிவிக்கலாம்?என்று தவறுதலாக தட்டச்சு செய்துவிட்டேன்…

    Kumar February 25, 2020 At 9:29 pm
    விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு கருத்து கூட பெட்டகத்தை திறந்து வையுங்கள்.. கொடும் துயர பிணியில் வெந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான அனைத்து வித தொழிலாளர் விவசாயிகள் மாணவர்கள் அறிவுத் துறையினருக்கு கலங்கரை விளக்காக நம்பிக்கையின் நட்சத்திரமாக எண்ணி வந்த அரசியல் தலைமையில் பிளவு யாராகினும் பரவாய் இல்லை ஒரு கனம் மார்க்சினுடைய ஜென்னி மார்க்சினுடைய துயரம் அளவு துயவற்று விட்டீர்களா இல்லை மார்க்சு ஏங்கல்ஸ் லெனின் மாவோவுடைய சரிவை விட சாதனையை விட பெரிய மூளை பெரிய துயரங்கள் அடைந்து விட்டீர்களா ஏன் இந்த அவசர கதி முடிவுகள் ஸ்டாலின் தன் மகனை இழந்த போதும் நிதானமாகத் தான் இருந்தார் தன் மீது அவமானகரமான அவதூறு வந்த போதும் நிதானமாகத் தாள் இருந்தார் வேகமாக ஓடிப்போய் அறிவு வியாபாரிகளிடம் வேலைக்கு சேர்ந்து விடாதீர்கள்

    பதில்
    AvatarKumar February 25, 2020 At 9:50 pm
    எங்களது மகிழ்ச்சியின் (தருனங்கள் ) மீது போர் தொடுக்காதிர்கள். பகத்சிங் உங்களை தோழராக ஏற்றுக்கொள்ள மாட்டார் நீங்கள் எல்லோரும் எலனிவடைய தேசழர்கள் மார்க்சின் மாணவர்கள் அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் திப்புவின் போர்வாளை தூக்கி எரியாதீர்கள் செஞ்சுடரை மதியுங்கள் வானத்துக்கு கீழே விவாதித்து முடிவு எடுக்க முடியாத ஒன்று உண்டோ . ஒதுங்கி செல்ல உரிமை இல்லை தோழர்களே பஸ் டிக்கெட்டை மட்டும் பையில் வைத்து கொண்டு மீதம் அனைத்தையும் தெர்மோகோல் பெட்டியில் திருச்சி மாநாட்டில் போட்டு வந்த எண்ணற்ற கூலி தொழிலாளர்கள் எத்தனையோ பேர்க்கு உங்கள் அளவு அறிவு இல்லாதிருக்கலாம் ஆனால் புதிய ஜனநாயக அரசியல் தலைமை மீது எதிர்கால எம் சந்ததிதியினருக்கு விடுதலை உண்டு என எண்ணி வந்தேறும் இத்தனை நாட்கள் பொய்களின் கை பிடித்த உணர்வை அளித்து விடாதீர் எங்கள் முகத்தில் சவக் கலை அடைய விடாதீர்

    AvatarKumar February 25, 2020 At 10:05 pm

    கம்யூனிஸ்டுகள் நாம் கஸ்ட ஜீவிகள் என்பது எதிரி நமக்கு கொடுக்கும் கஸ்டம் அல்ல எதிரி கொடுக்கும் துயரம் நாம் முன் அறிந்ததே. சக தோழர் கொடுக்கும் துயரம் கண்ணுக்கும், இமைக்கும் நடக்கும் போராட்டமே இந்த தலைமை தளத்துக்கு தியாகம் அற்பணிப்பு புரட்சியின் மீது அளவொன்னா காதல் இன்றி நிச்சயமாக ஒரு மேஜையை சுற்றி நீங்கள் எவரும் அமர்ந்திருக்க முடியாது பின் ஏன் குழுவாதம் வறட்டு கவுரவம் 18 வயது மாணவன் மாவோவின் மேற்கோள் படித்து ஜனநாயகம் மத்தியஸ்துவம், விமர்சனம், சுயவிமர்சனம் எனும் முறைமையை தெரிந்து மகிழ்ச்சியில் இரவு முழுக்க தூங்காது மகிழ்ச்சியில் 3.30 மணியில் இருந்து 5.30 வரை தெற்கு வங் அற்றி யாரிடமாவது தெரிவித்து பகிர்ந்து கொள்ள ஆசையாய் அலைகிறான் அந்த ஆயுதம் வழக்கொழிந்து போய் விட்டதாக அவன் எண்ணி விடக் கூடாது

    தஞ்சை இராவணன் February 29, 2020 At 11:36 pm
    தோழர்கள் மருதையன்,நாதன் ஆகியோரின்24-04-2020 “வினவு அறிவிப்பு” புரட்சிகர ஜனநாயக சக்திகளிடம் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தோழர்கள் மருதையன் மற்றும் நாதனின் அறிவிப்புகள் அரசியல் விலகல் என்று நாம் கருதவில்லை. அவர்கள் அரசியல் தற்கொலை செய்துகொள்ளும் கோழைகள் அல்ல என்றும் நாம் முழுமையாக நம்புகிறோம்.
    தோழர்கள் பொதுவெளியில் அறிவிப்பை வெளியிட்டுவிட்ட பிறகு திரும்ப பெறுங்கள் என்ற கோரிக்கை அர்த்தமற்றது. நாம் அறிவுரை கூறுமளவிற்கு தோழர்கள் பலவீனமானவர்கள் என்றும் நாம் கருதவில்லை.

    வரலாற்றில் தனிநபர் பாத்திரம் குறித்து புரிந்து கொண்டவர்களிடம் இச்சம்பவம் ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தாது.

    இந்திய புரட்சிகர அரசியல் வரலாற்றில் விக்ரமாதித்த வேதாளங்களாக சிலரை நாம் கண்டிருக்கிறோம். தானே கட்டியமைத்த அமைப்புக்கு தானேஒரு தடைக்கல்லாய்மாறி தனது நடைமுறைமூலமே தகர்த்தெறிந்த தோழர்.கொண்டபள்ளி சீதாராமையா, தான்உருவாக்கிய அமைப்பை தனது நடைமுறை மூலமே சவளைப்பிள்ளையாக்கி சுகம் கண்ட தோழர்.கோதண்டராமன் போன்றவர்களின் வரலாற்று பாத்திரத்தை நம்மால் மறக்கமுடியாது. பாரிய கருத்து மாறுபாடு கொண்டிருந்த போதும் புரட்சிகர ஐக்கியத்திற்காக, மத்யத்துவ நடைமுறைகளை பின்பற்றி புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து சிறைத்தண்டணை அனுபவிக்கும் கத்தீப் அன்சாரி போன்ற உயர்ந்த தோழர்களையும் நம்மால் மறக்க இயலாது.
    புரட்சிகர அமைப்பில் இதுபோன்ற விலகல் சம்பவம் புதியது அல்ல.

    பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இல. கோவிந்தசாமியின் “உண்மைகளில் ஊன்றி நின்று” என்ற வெளியீடு புரட்சிகர அமைப்பில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசியது. அப்போது ஒலித்த பொதுஉடமை இயக்கம் குறித்து புளித்துபோன “ஜனநாயக மறுப்பு பல்லவி ” இப்போதும் ஒலிக்கிறது. இது இரண்டு தாடிக்காரர்களின் சர்வாதிகாரம் என்று மார்க்ஸ் காலத்திலும் ஒலித்தது. லெனின், ஸ்டாலின், மாவோ காலத்திலும் ஒலித்தது.
    இந்த விலகல் அறிவிப்புக்கு பிறகு சுயநலமிகளின் “சாத்தான் வேதம் ஓதல்” கூச்சலைதான் நம்மால் சகித்துகொள்ள முடியவில்லை. இதற்கு மாற்றாக விலகி ஓடி புலம்புவதை ஓர் நடைமுறையாகக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது? தோழர்கள் மருதையன், நாதன் மீதும், எதிர்தரப்பாக சித்தரிக்கப்படும் தோழர்கள் மீதும் கல்லெறிபவர்களுக்கு, பேசுவதற்கு எந்தவித தகுதியும் கிடையாது.
    இந்த நரிகளின் ஊளை சத்தங்களை புறக்கணித்து புரட்சிகர ஜனநாயக நடைமுறையை பின்பற்றி, ஊக்கமான செயல்பாட்டை உயர்த்தி பிடித்து பயணிப்பது மட்டுமே உடனடிக்கடமயாக இருக்க முடியும்.

    தனிநபர் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை புறந்தள்ளி புரட்சிகர அரசியல் அமைப்பை கட்டியமைக்கும் நோக்கில் ஊக்கமுடன் உண்மைகளில் ஊன்றிநின்று பரிசீலிப்பதும்,சிறந்த நடைமுறையை உறுவாக்கி செயல்படுவதுமான பயணிப்பில் தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோர் மட்டுமல்ல சிதறிக்கிடக்கும் புரட்சிகர சக்திகள் ஒன்றிணைவார்கள் என்பதில் நம்பிக்கைகொண்டு முன்னேறுவோம்.

    புது நிலவு.
    மக்களை நேசிப்பவர்களே, புரட்சியை நேசிப்பவர்கள்.புரட்சியை நேசிப்பவர்களே, அமைப்பை நேசிப்பவர்கள்.

  47. வினவின் மறுமோழிப் பகுதி திறந்திருப்பதற்க்காக நன்றி சொல்வோம். பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில  விவாதம்  நின்று பேவது கவலை அளிக்கிறது என்றாலும் உணர்ச்சிவசப்பட்ட  புலம்பல்கள், உதிரிகளின் ஆரவார ஆவேசங்கள்,கூச்சல்கள் ஒய்ந்துவிட்டன என்பதில் மகிழ்ச்சியே.
    மிகவும் ஆபாயகரமான சூழலில் சமூகமும் நாமும இருக்கிறோம். மேலும் மேலும் நம்பிக்கைகள் தகர்ந்து வருகிறன என்றாலும்             “புரட்சியாளனுக்கு புரமுதுகு காட்ட உரிமை இல்லை” என்பதுதான் இயற்க்கை விதி. உள்ளும் புறமும் போராடுவது மட்டுமே திர்வு. ஆக்க பூர்வமான விவாதத்தை வாய்ப்பு கிடைக்கும் வரையில் பின்னூட்டத்தில் தோழர்கள் தோடரலாம் அல்லவா?
    உப்பை சர்க்கரை என்றுகூறி
    தெறிந்தே தின்றவர்களுக்கு தண்ணீர் குடிப்பதுதான தண்டணை. அதற்காக நாம் வருந்த முடியாது.
    புரட்சியை நேசிக்கும் தோழர்கள் அமைப்புச் சிக்கலை உருவாக்கும் என்று ஒதுங்குவது மேலும் புதை சேற்றில் மூழ்கத்தான் உதவும் என்பதை உணர்ந்து மேசையில் திறந்து வைத்து விவாதிப்பதே புரட்சிக்கும் சமுகத்திற்கும் உதவும் செயலாக இருக்கும். திறந்தமனதுடன் கோட்பாட்டுப் பிரச்சனைககளை விவாதிப்போம்.

  48. அமைப்பிலிருந்து விலகுகிறோம் !
    – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

    பாட்டாளி வர்க்க அரசியலை துறந்து முதலாளித்துவ அரசியலுக்கு திரும்பிய சீர்குலைவுவாதிகளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள்!

  49. அமைப்பில் இருந்து விலகினால், முதலாளித்துவ அரசியலுக்கு போனதாக அர்த்தமா தோழர்.

    முதலில் இந்த பொருந்தாத வியாக்கியானங்களைமும் வெறுப்பு உமிழ்வுகளையும் தோழர்கள் மாற்றிக்கொள்ளனும்.

    இதுவரை ஏற்பட்ட சீரழிவுகளுக்கு இந்த கேவலமான விமர்சனபுத்தி தான் காரணம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க