அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த கெனோஷா நகரப் போலீசு கருப்பின இளைஞர் ஒருவரை சுட்டதைத் தொடர்ந்து அந்நகரமே மக்கள் போராட்டத்தால் பற்றி எரிகிறது.
கடந்த 23-ம் தேதி பட்டப் பகலில் 29 வயது கருப்பின இளைஞரான ஜேக்கப் ப்ளேக் என்பவரை துப்பாக்கியால் போலீசு சுட்டது. வாகனத்தில் காத்திருந்த தமது மூன்று குழந்தைகளை நோக்கிச் சென்ற ஜேக்கப்பை முதுகில் பலமுறை சுட்டுள்ளது போலீசு. அதனை ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து ச்மூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து கெனோஷா மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கையும் மீறி வீதியில் இறங்கி பாட்டில்களையும் பட்டாசுகளையும் வீசி எறிந்து மக்கள் போராடத் துவங்கியுள்ளனர். “நீதியில்லையேல் அமைதியில்லை” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் போராடினர். போராடும் மக்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்கத் துவங்கியது போலீசு.











தமிழாக்கம் : நந்தன்
நன்றி : அல்ஜசீரா