கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 4,484 போலீஸ் காவலில் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியா முழுவதும் போலீஸ் என்கவுன்ட்டர்களில் 233 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 952 காவல் மரணங்கள் (2020 இல் 451 மற்றும் 2021 இல் 501) பதிவாகியுள்ளன – இது இந்தியாவிலேயே மிக அதிகம். உ.பி.க்கு அடுத்தபடியாக மேற்குவங்கம் உள்ளது. காவலில் வைக்கப்பட்ட மரணங்கள் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடந்துவருகிறது.
நவம்பர் 2021-ல், காஸ்கஞ்சில் போலீஸ் காவலில் இருக்கும் போது அல்தாப் இறந்துவிட்டார். அல்தாப் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறிய நிலையில், குடும்பத்தினர் போலீசு கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அல்தாப் இளம் பெண்ணுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டார். கஸ்கஞ்ச் போலீசார் அல்தாப் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 363, 366 கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
சமீபத்தில், 2022 ஆண்டு ஏப்ரல் மாதம், மாநிலத்தின் படவுன் பகுதியில், ரெஹான் ஷா என்ற இஸ்லாமிய இளைஞன், மாநில போலீசுத்துறையால் கொடூரமான தாக்குதலுக்குள்ளானார். போலீசு அவருக்கு மின்சாரம் பாச்சும் தண்டனை கொடுத்ததாகவும், மலக்குடல் வழியாக பிளாஸ்டிக் பைப்பை தள்ளியதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஷா பசு கடத்தல் மற்றும் படுகொலையில் ஈடுபட்டதாக போலீசு குற்றம்சாட்டுகிறது.
படிக்க : சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் 2022 ஜூலை மாதம், முஸ்லீம் இளைஞர் ஷாபாஸ் அலி மற்றும் அவரது தந்தை ஷாவேஸ் அலி ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காவலில் வைக்கப்பட்டிருந்தபோது போலீசு மிருகத்தனமான தாக்குதலுக்குள்ளானார்கள் அந்த இளைஞர்கள்.
பக்கத்து வீட்டில் இருந்து இரண்டு கடத்தல்காரர்களை பிடிக்க முயன்ற போலீசு, விசாரணை என்ற கூறி இவர்கள் இருவரையும் கைதுசெய்தது. போலீசு துரத்தியதில் உண்மையான குற்றவாளிகள் அலியின் வீட்டில் ஒளிந்துகொண்டர். போலீசு கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக, தந்தையையும் மகனையும் கைது செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அனஸ் தன்வீர், உத்தரப்பிரதேசத்தின் காவல் இறப்புத் தரவுகள் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைக் காட்டுவதாக உள்ளது என்றார். “பெரும்பாலான வன்முறைகள் மற்றும் இறப்புகளின் முடிவில் முஸ்லீம்கள் இருப்பதைக் மாத வாரியான விவரங்கள் கூறுகின்றன” என்று தன்வீர் கூறினார்.
அமைச்சர் ராய், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, காவலில் வைக்கப்படும் சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்புகளைப் பொறுத்தவரை, ஷாஃபி முகமது (2018) மற்றும் பரம்வீர் சிங் சைனி (2021) ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. உ.பி., மாநிலத்தில் உள்ள எந்த காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. விசாரணையின் போது உடல் அணிந்த கேமராக்கள் அல்லது வீடியோ கிராஃபியின் பயன்பாடு குறைவாக உள்ளது. இது முற்றிலும் அத்துமீறல் மற்றும் அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை கேலி செய்கிறது” என்று கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நடந்த போலீசு காவல் கொலைகள் 4,484-ல் உத்தரப்பிரதேசத்தில் தான் 952 என்ற எண்ணிக்கையில் அதிக போலீசு காவல் கொலைகள் நடந்துள்ளது. போலீசுக்கு இருக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான கட்டற்ற சுதந்திரம் என்பது காவி பயங்கரவாத அரசான யோகி அரசு மிகவும் கொடூரமாக பயன்படுத்துகிறது என்பதையே இந்த கொலைகள் நமக்கு உணர்த்துகிறது.
உழைக்கும் மக்களை ஒடுக்கும் போலீசுத்துறை ஒருபோதும் நமக்கு உதவாது ஏனெனில் அது ஆளும் வர்க்கத்தின் வன்முறை கருவியாகும். இது இயல்பிலேயே அப்படித்தான் பாசிசமாக நடந்துகொள்ளும். எனவே, இந்த காவி-கார்ப்பரேட் பாசிச அரசை அடித்து நொறுக்காத வரை உழைக்கும் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையில்லை!
![]()
காளி










