Friday, September 22, 2023
முகப்புசெய்திதமிழ்நாடுசெப் 17: ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! கடலூர் மண்டலத்தில் மாநாடு பிரச்சாரம்!

செப் 17: ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! கடலூர் மண்டலத்தில் மாநாடு பிரச்சாரம்!

ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுவோம் வாரீர்!

-

ர்.எஸ்.எஸ்-பிஜேபி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டினை ஒட்டி கடலூரில் அரசு குடியிருப்பு, மின்சாரத் துறை அலுவலகங்கள், இஸ்லாமியர் வாழும் பகுதிகளான நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, கடலூர் துறைமுகம், புதுவை சிக்னல் பிரச்சாரங்கள், கடைவீதி என பல்வேறு இடங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுவாக மக்கள் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பும்,அவநம்பிக்கையும் கொண்டுள்ளனர். GST வரியால் எங்களுடைய வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என ஒரு வயதான பெண்மணி கடுமையான வசைச் சொற்களால் மோடியை திட்டிட்டு தீர்த்தார். நாம் ஓட்டு போட்டு எந்த ஒரு பயனையும் இதுவரை அடையவில்லை என்று கூறினார்.

 

இஸ்லாமிய பெண் ஒருவர் நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலைசெய்து நாட்டிற்கு அதிகமான வரியை செலுத்துகிறோம். ஆனால் தமிழக அரசோ ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.க்கு எதிராக எதுவும் பேசாமல் திராவிட மாடல் ஆட்சி என்று எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறிய திமுக, இன்று அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கின்றது. திமுக அரசை நாங்கள் நம்பியிருந்தோம் ஆனால் அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள். திமுக அரசும் மோடி அரசுக்கு பணிந்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.என்று கூறினார்.

மின்சாரத் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி (ADE) நம்முடன் இணைந்து அனைத்து மின்சார அலுவலகங்களுக்கும் சென்று மின்சாரம் தனியார் மயமாகிக் கொண்டிருக்கிறது, எதிர்வரும் காலத்தில் நமக்கு ஊதியம் பற்றாக்குறை ஏற்பட உள்ளது என்றும் அதை எதிர்த்துப் போராட நாம் மக்கள் அதிகாரத்தோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கூறி, அனைவரும் மாநாட்டிற்கு வாருங்கள் மக்கள் அதிகார மாநாட்டுக்கு நிதி தாருங்கள் என்றார்.

SDPI தோழர் ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், “நீங்கள் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு உணவளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி நமக்கு மதிய உணவு அளித்தார்.

மீனவர் பகுதி, தலித் பகுதியில், ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யை பற்றி நான் பேசினால் பிரச்சினை வருகிறது; ஏனென்றால் நான் ஒரு இஸ்லாமியர், ரகுமானாக பேசினால் பிரச்சினை; ஆனால் ரமேஷ் ஆக பேசினால் பிரச்சினை வருவதில்லை. மீனவர் பகுதிகளிலும் தலித் பகுதிகளிலும் பிஜேபி அதிகப்படியாக வேலைசெய்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் நீங்கள்சென்று வேலை செய்ய வேண்டும் என்று கூறி நமக்கு உற்சாகமூட்டினார்.

ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுவோம் வாரீர்!

பாசிசத்திற்கு எதிராக கைக்கோர்ப்போம்!

தகவல்:
கடலூர் மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க