”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!”
பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்.
அன்பார்ந்த தோழர்களே ! ஜனநாயக சக்திகளே !
”சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு !” என்ற தலைப்பில் மே ஒன்றாம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மீனாட்சி மற்றும் கள்ளழகர் திருவிழாவை ஒட்டி இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக மீனாட்சி மற்றும் கள்ளழகர் ஊர்வலம் நடத்தும் தேதிகளிலும் மதுரையில் எந்த ஒரு அமைப்புக்கும் போராட்டம் நடத்தவோ பேரணி நடத்தவோ அனுமதி இல்லை என்ற நிலைமையே இருந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் இது ஒரு புதிய சூழல். மீனாட்சி மற்றும் கள்ளழகர் ஊர்வலத்தை ஒட்டி தமிழ்நாட்டு போலீசை தொடர்ந்து அச்சத்திலேயே ஆர் எஸ் எஸ் – பாஜக பாசிச கும்பல் வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக வருகின்ற மே 15 அன்று மேற்கண்ட தலைப்பில் மாநாடு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கெனவே இரண்டு முறை மாநாடு திட்டமிடும்போது தங்கள் நேரத்தில் மாற்றிக்கொண்டு வருவதாக உறுதி அளித்த தலைவர்கள் இந்த முறையும் மாநாட்டின் நோக்கத்தை ஏற்று தங்களுடைய நேரத்தை ஒதுக்கி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
ஏற்கெனவே திட்டமிட்ட அதே தலைப்பிலேயே திட்டமிட்ட அனைத்து பேச்சாளர்களும் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். ஆகவே வழக்கம் போல தோழர்களும் ஜனநாயக சக்திகளும் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி( மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321
