குற்றவியல் சட்ட மசோதாக்கள்: JAAC பொதுக்குழு தீர்மானம்

குற்றவியல் சட்ட மசோதாக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-ற்கு எதிரானவை ஆகும்.

மிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)-ன் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று 19.08.2023 தேதி, காலை 10.30 மணிக்கு தொடங்கி, திருச்சியில் நடைபெற்றது அதில் தலைவ‌ர் திரு. P.நந்தகுமார் அவர்கள் தலைமையிலும், செயலாளர் திரு.K.பன்னீர்செல்வன் அவர்கள் மற்றும் பொருளாளர் திரு. D.ரவி அவர்கள் முன்னிலையில் IPC, Cr.PC, IEA ஆகிய சட்டங்களை புதியதாக வடமொழி தலைப்புடன் தாக்கல் செய்துள்ள மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெறுதல் தொடர்பாக  நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:

  1. (i) JAAC பொதுக்குழுவில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் கடந்த 11.08.2023 அன்று தற்போது நடைமுறையில் உள்ள
    1.இந்திய தண்டனைச் சட்டம்,
    2.குற்றவியல் நடைமுறைச் சட்டம், மற்றும்
    3.இந்திய சாட்சிய சட்டம்
    ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி அமைத்து, வடமொழி தலைப்புகளில்
    1.பாரதிய நியாய ஷன்ஹிதா 2023,
    2.பாதிய நஹ்ரிக் சுரக்ஷா 2023,
    3.பாரதிய சக்ஷய அதிநயம் 2023
    என மாற்றியமைத்து தாக்கல் செய்துள்ள மசோதாக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-ற்கு எதிரானவை ஆகும். இதனை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்த கூட்டுக் குழுவின் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்றும்,(ii) புதியதாக வடமொழி தலைப்பிட்டு தாக்கல் செய்துள்ள முப்பெரும் சட்ட மசோதாக்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று வரும் 23.08.2023 அன்று மாநிலம் தழுவிய அளவில் அந்தந்த வழக்கறிஞர்கள் சங்கங்கள் தங்கள் நீதிமன்ற வாயில் முன்பு காலை 11 மணி அளவில் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்வது என்றும்,

    (iii) புதிய முப்பெரும் சட்ட மசோதாக்களை முழுமையாக திரும்ப பெற கோரி திருச்சியில் மாபெரும் பேரணி நடத்துவது எனவும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்,

  1. (i) புதிய முப்பெரும் சட்ட மசோதாக்களை முழுமையாக திரும்ப பெற கோரி மாண்புமிகு குடியரசுத் தலைவர், மாண்புமிகு மத்திய சட்ட அமைச்சர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாண்புமிகு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாண்புமிகு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் ஆகியோர்களுக்கு வடமொழியில் பெயர் வைத்து தாக்கல் செய்துள்ள முப்பெரும் சட்ட மசோதாக்களை திரும்ப பெற கோரி கூட்டுக் குழுவின் மூலம் கோரிக்கை மனுவை (Memorandum) அனுப்புவது என்றும்,(ii) புதிய முப்பெரும் சட்ட மசோதாக்களை முழுமையாக திரும்ப பெற கோரி, JAAC அமைப்பின் கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும், அந்தந்த வழக்கறிஞர் சங்கங்களின் மூலம் தனித்தனியாக தீர்மானம் நிறைவேற்றி மாண்புமிகு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த நகலை ஜாக் தலைமைக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்றும்,

    (iii) புதிய முப்பெரும் சட்ட மசோதாக்களை முழுமையாக திரும்ப பெற கோரி அந்தந்த வழக்கறிஞர்கள் சங்கங்கள் தங்களின் வழக்கறிஞர் உறுப்பினர்களை தனித்தனியாக கோரிக்கை மனுக்களை மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்து ஒரே சமயத்தில் அதிகப்படியான மனுக்களை அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்றும்,

  1. புதிய முப்பெரும் சட்ட மசோதாக்களை தேவை இன்மை குறித்து மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு முதலில் அந்தந்த வழக்கறிஞர்கள் சங்கங்களில் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்றும், புதிய சட்ட மசோதாக்களை குறித்து விவாதிக்க ஒவ்வொரு சங்கமும் ஒரு குழு அமைத்து புதிய சட்டத்தின் தீமை குறித்து எழுத்து மூலமான டிராப்ட்டை (draft) ஜாக் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  2. தற்போது கீழமை நீதிமன்றங்களில் புதியதாக தாக்கல் செய்யப்படும் மனுக்களை இ ஃபைலிங் முறையில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதால் இ ஃபைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், கீழமை நீதிமன்றங்களில் இ ஃபைலிங் முறையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுடன், மேனுவலாக தாக்கல் செய்யப்படும் பழைய நடைமுறைப்படி நேரடியாக தாக்கல் செய்யப்படும் மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று JAAC வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நமது பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

P.நந்தகுமார், தலைவர்.
K.பன்னீர்செல்வன், பொதுச்செயலாளர்.
D.ரவி, பொருளாளர்.
(தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு – JAAC)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க