27.11.2023

பெறுதல்: தொலைக்காட்சி , பத்திரிக்கை ஆசிரியர் / தலைமைச் செய்தியாளர்

ஊடகவியலாளர் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்,
மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்க்கும் போராட்டங்களும்
விவசாயிகள் மீதான திமுக அரசின் அடக்குமுறைகளும்

உண்மை அறியும் குழுவின் அறிக்கை

29.11.2023 – புதன் கிழமை பகல்12 மணி –
சென்னை பத்திரிகையாளர் மன்றம் – பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா சுற்றியுள்ள 11 கிராமப்பகுதிகளில் உள்ள 3,175 ஏக்கர் நிலத்தை செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கையப்படுத்த அறிவித்த நாள் முதல் தற்போது வரையிலான நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் அதிகாரம் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்கள், கைது செய்யப்பட்டவர்கள், எதிர்த்தரப்பினர் உள்ளிட்ட பலரையும் சந்திக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது பொய்வழக்குகள் பதிவிட்டது, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி மன்னிப்பு கடிதங்கள் பெற்றது உள்ளிட்ட மேலும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை உண்மை அறியும் குழு அறிந்துள்ளது. உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பினை 29.11.2023 அன்று புதன்கிழமை 12 மணி அளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. இச் சந்திப்பில் பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தங்களின் ஊடகவியலாளர் மற்றும் புகைப்பட கலைஞரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை,
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க