தெலங்கானா: பாசிச மோடி அரசின் ஏமாற்று வாக்குறுதிகள்

ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம் 2014-இன் 13-வது அட்டவணையின் கீழ், இந்திய அரசு ஆந்திரப் பிரதேச மாநிலத்திலும் தெலங்கானா மாநிலத்திலும் தலா ஒரு பழங்குடி பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். ஆந்திராவில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டாலும், தெலங்கானாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை.

லோயா லெவலுக்கு போக வேணாம் என அமித்ஷாவிற்கு ஆலோசனை கொடுக்கிறாரோ மோடிஜி?

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 8

பாசிச பிஜேபி அரசு இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானாவின் மேம்பாட்டிற்காக நிதி வழங்குவதாகவும், பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்குவதாகவும் வாக்குறுதிகளை அளித்திருந்தது.

ஆனால், தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பின்பும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அதில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் நான்கு குறித்துப் பார்ப்போம்.

முலுகு மாவட்டத்தில் பழங்குடியினர் பல்கலைக்கழகம்

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தெலங்கானாவின் முலுகு (Mulugu) மாவட்டத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை (Sammakka Sarakka Central Tribal University)  நிறுவுவதற்காக மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று அக்டோபர் 4-ஆம் தேதி மத்திய அமைச்சரவை தெரிவித்தது. அக்டோபர் மாதத்தில் மோடி நடத்திய பொதுக் கூட்டத்தில் கூட இந்த வாக்குறுதி குறித்து பல முறை பேசினார்.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம் 2014-இன் 13-வது அட்டவணையின் கீழ், இந்திய அரசு ஆந்திரப் பிரதேச மாநிலத்திலும் தெலங்கானா மாநிலத்திலும் தலா ஒரு பழங்குடி பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். ஆந்திராவில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டாலும், தெலங்கானாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை. ஒன்றிய மோடி அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டி பழங்குடி.மக்கள் பல போராட்டங்களை  நடத்தியுள்ளனர்.

இவ்வளவு காலம் எதையும் செய்யாமல், தற்போது தேர்தல் சமயத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.

நிஜாமாபாத்தில் மஞ்சள் வாரியம்

2018 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலின் போது பாசிச பிஜேபி தேசிய அளவில் மஞ்சள் வாரியம் அமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. தேசிய மஞ்சள் வாரியம் (National Turmeric Board) தெலங்கானாவில் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், அதை கண்டுகொள்ளவே இல்லை. கடந்த மார்ச் மாதம், நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் வாக்குறுதி அளித்திருந்த பிஜேபி எம்.பி-யான அரவிந்த் தர்மபுரியை (Arvind Dharmapuri) கேலி செய்யும் வகையில் மஞ்சள் நிற பலகைகளை எடுத்து வந்து விவசாயிகள் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். “மஞ்சள் பலகை; இதுதான் எங்கள் மாண்புமிகு எம்.பி கொண்டு வந்த பலகை” என்று அந்த பலகைகளில் கூறப்பட்டிருந்தது.

அக்டோபர் 1, 2023 அன்று, பிரதமர் மோடி மகபூப்நகர் மாவட்டத்தில், மத்திய அரசு தெலங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவும் என்று அறிவித்தார். தெலங்கானாவில் மஞ்சள் விவசாயிகளின் நலனுக்காக வாரியம் அமைக்கப்படும் என்பது அம்மாநில உருவாக்கத்திற்குப் பிறகு பிஜேபி தலைவர்கள் அளித்த வாக்குறுதியாகும். வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து விவசாயிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிஜேபி தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தனர். இந்த பித்தலாட்ட்த்தைக் கண்டித்து 2021-ஆம் ஆண்டில் நிஜாமாபாத் மாவட்டத்தில் தெலங்கானா விவசாயிகள் தமிழ்நாடு பிஜேபி தேர்தல் அறிக்கையின் நகல்களை எரித்தனர்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மஞ்சள் உற்பத்தியில் தெலங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் மஞ்சள் விவசாயம் மற்றும் மஞ்சள் பொருட்களின் வளர்ச்சிக்கு வாரியம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை.


படிக்க:ராமரும் பசுவும் எங்களுடையது! சத்தீஸ்கர், ராஜஸ்தான் காங்கிரஸ்


ஹனுமகொண்டா மாவட்டத்தில் காஜிபேட் ரயில் பெட்டி தொழிற்சாலை

ஹனுமகொண்டா (Hanumakonda) மாவட்டம் காஜிபேட்டையில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கத் தவறியதற்காக மத்திய அரசை அடுத்தடுத்து வந்த தெலங்கானா அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றன. 1980-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பல்வேறு மத்திய அரசுகள் இதிலிருந்து பின்வாங்கின. தெலங்கானா மாநிலம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திர மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் 13-வது அட்டவணை, பிரிவு 93-இல் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது, ஆனால் தற்போது மத்தியில் இருக்கும் பிஜேபியும் இதற்கு முனைப்பு காட்டவில்லை.

தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தெலங்கானா மக்களுக்கு 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானா தேர்தலுக்கு முன்னதாக தனது தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதியை பிஜேபி அளித்திருந்தது. இருப்பினும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஜூலை 2023-இல், இதை விமர்சித்த பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி.ராமாராவ்,’ தெலங்கானாவுக்கு ரயில் பெட்டி தொழிற்சாலையை மறுத்த பிரதமர் மோடி, குஜராத்தில் ரூ.21,000 கோடி செலவில் ரயில் பெட்டி தொழிற்சாலையை நிறுவியுள்ளார்” என்று கூறினார்.

ஆதிலாபாத் மாவட்டத்தில் சிமென்ட் ஆலையை மீண்டும் திறப்பதாக அளித்த வாக்குறுதி

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (சி.சி.ஐ) சிமெண்ட் ஆலையின் செயல்பாடு 1996-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட்து; 2008-ஆம் ஆண்டில் மூடப்பட்டது. 2023 அக்டோபரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கு முன்னதாக, இந்த ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆதிலாபாத்தில் பல சுவரொட்டிகள் தோன்றின. “இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனை மீண்டும் திறக்கவும், அமித் ஷா அவர்களே, உடனடியாக பதிலளிக்கவும்” என்று சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தது.

2018-ஆம் ஆண்டில் தேர்தல் பேரணியின் போது, தொழிற்சாலையை மீண்டும் திறப்பதாக வாக்குறுதி அளித்த அமித் ஷாவின் அணிவகுப்பை கோபமுற்றிருந்த தொழிலாளர்கள் தடுக்க முயன்றனர்.

மே 2022-இல் ஆதிலாபாத் சி.சி.ஐ பிரிவின் சொத்துக்களை விற்பதற்காக அந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. அம்முடிவை ஆளும் பி.ஆர்.எஸ் அரசு கடுமையாக எதிர்த்தது.

தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகள் பாசிச மோடி அரசின் காதுகளில் விழவில்லை.



வருண்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க