Wednesday, October 9, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய தொழிலாளிமே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம்

மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம்

போட்டியே இல்லாமல் (இல்லாமல் ஆக்கப்பட்டு) இரண்டு பி.ஜே.பி. எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தோராயப் புள்ளி விவரங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது.

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மே நாள் சூளுரைப்போம் !
ஆர் எஸ் எஸ் பாஜக அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்!
மக்கள் எழுச்சியை கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசைக் கட்டியமைபோம்!

என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மே நாளில் தமிழ்நாடு முழுவதும் எமது அமைப்புகளின் சார்பாக பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த அடிப்படையில்
01.05. 2024 மாலை 5.00 மணி அளவில், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நாளான மே நாளையொட்டி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் நடத்திய பேரணி-ஆர்ப்பாட்டம் எழுச்சியாக நடந்து முடிந்தது. பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு கிளை உறுப்பினர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள் மட்டுமன்றி ம.நே.ம.க., வி.சி.க. தோழர்கள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு இப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்தனர்.

சரியாக 5 மணி அளவில் செய்யாறு பேருந்து நிலையம் அருகில் புறப்பட்ட பேரணி, பகுதிவாழ் உழைக்கும் மக்கள் மற்றும் வணிகர்கள் திரளாக பார்வையிட தோழர்களின் விண்ணதிரும் முழக்கங்களோடு 2 கிலோமீட்டர் வரை சென்று ஆரணி கூட்டு ரோட்டில் நிறைவடைந்தது. மக்கள் அதிகாரம் தோழர் திலகவதி, புஜதொமு சுந்தர் ஆகியோர் முழக்கங்களை எழுப்பினர்.


படிக்க: மே நாள்: பாசிசத்தை வீழ்த்த சபதமேற்போம்!


தோழர்.கே.சௌந்தரராஜன் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினார். முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அவர் தனது தலைமை உரையில்,

“தொழிலாளி வர்க்கம் தான் போராடிப் பெற்ற அடிப்படைக் கோரிக்கைகளான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் மற்றும் சங்கமாக அணிதிரளும் உரிமை போன்ற அனைத்தையும் அழித்துவிடும் வகையில், காண்ட்ராக்ட்மயம் இன்று தீவிரமாகி வருகிறது. பெயரளவில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு, 44 சட்டங்கள் நான்கு சட்டத் தொகுப்புகளாக சுருக்கப்பட்டு விட்டன. நமது உரிமைகளை நாம் மீட்க வேண்டும் என்றால், அரசியலை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசியல் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது” என்பதை சுட்டிக்காட்டி தலைமை உரையை நிறைவு செய்தார்.

வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சுந்தர் அவர்கள் பேசுகையில்,

“சர்வதேச அளவில் இன்றைக்கு தொழில்துறையில் காண்ட்ராக்ட்மயத்தை தீவிரமாக்கி, முதலாளிகளினுடைய கொள்ளை லாபத்துக்காக தொழிலாளிகளை கொத்தடிமைகளாக்கி வருகிறார்கள். உலக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டே செல்கிறார்கள். ஏழைகளுடைய சதவீதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த இடத்திலும் தொழிலாளி வர்க்கத்தின் மீது இரக்கப்பட்டு எந்த முதலாளியும் சமரசம் செய்து கொண்டதில்லை. நாமும் செய்து கொள்ள முடியாது” என்று உணர்வூட்டி பேசினார்.

மே நாள் கண்டன உரையை பதிவு செய்த காஞ்சிபுரம் மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் தோழர் சரவணன் அவர்கள் பேசுகையில்,

நம் நாட்டைப் பொறுத்தவரை முதலாளிகளுடன் கைகோர்த்துக்கொண்டு பிஜேபி அரசு பாசிசத்தை அரங்கேற்றுகிறது.


படிக்க: LIVE: மே நாள் சூளுரைப்போம்! | தமிழ்நாடு தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டம்


நடந்து முடிந்த தேர்தலில் இரண்டு கட்டங்கள் முடிவடைந்து இருக்கிறது. மூன்றாவது கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பாசிசக் கும்பலுக்கு வெறி தலைக்கேறி உள்ளது. போட்டியே இல்லாமல் (இல்லாமல் ஆக்கப்பட்டு) இரண்டு பி.ஜே.பி. எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நடைபெற்ற இரண்டு கட்டத் தேர்தல்களில், எவ்வளவு வாக்கு சதவீதம் என்பதை அறிவிக்கக் கூட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. தேர்தல் ஆணையத்தின் தோராயப் புள்ளி விவரங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது. நீதிமன்றத்தில் இ.வி.எம். (E.V.M) வாக்கு மிசின் நம்பகத்தன்மை இல்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இபிஎம் மெஷினை ஹேக் செய்ய முடியும் என்கிறார்கள். ஆனால் இ.வி.எம். (E.V.M) நம்பகத்தன்மை உடையது தான் என நீதிமன்றம் கூறுகிறது. பாசிசம் உச்சத்தில் இருக்கிறது. நாம் சமரசமாகப் போகவே முடியாது. போராட்டமே வழி.

விவசாயிகளுக்கான விளைபொருள் கிடையாது. தொழிலாளர்களுக்கு உரிய வேலை நேரம் கிடையாது. மாணவர்களுக்கு கல்வி உரிமை கிடையாது. இப்படி அனைத்து வகையிலும் நம்மை அடிமைப்படுத்துகிறார்கள்.

இதற்கெல்லாம் இந்த தேர்தல் முறையில் நமக்கு பதில் கிடைக்குமா என்பதுதான் நம்மிடையே இருக்கும் கேள்வி. பி.ஜே.பி.க்கு என்று ஒரு வேலை திட்டம் உள்ளது. அதை நோக்கித்தான் அது பயணிக்கிறது. 10 ஆண்டுகளில் பி.ஜே.பி. இந்தியாவில் ஏகப்பட்ட சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் கூட, பி.ஜே.பி. தன்னுடைய வேலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீரும். காரணம் காங்கிரஸ் ஆண்ட ஏழுபது ஆண்டுகள் ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி. இமயமலை போல் வளர்ந்து உள்ளது.

பாசிசத்தை வீழ்த்த ஒரே மாற்று, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு தான் என்று விளக்கினார்.

செய்யாரில் நடத்தப்பட்ட இந்த பேரணி – ஆர்ப்பாட்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் மத்தியில் பாசிசத்திற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற உணர்வூட்டும் வகையில் அமைந்தது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர் சங்கர் அவர்கள் நன்றியுரையை கூறினார்.

பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்துடன் பேரணி – ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மாநில (ஒருங்கிணைப்புக் குழு )
மக்கள் அதிகாரம்
காஞ்சிபுரம்-இராணிப்பேட்டை
தொலைபேசி எண்:
9786076201

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க