Tuesday, October 15, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுசென்னையில் மே தின ஆர்ப்பாட்டம்!

சென்னையில் மே தின ஆர்ப்பாட்டம்!

138-வது மே நாள் அன்று எமது அமைப்புகளின் சார்பாக பேரணி - ஆர்ப்பாட்டம் தமிழகம் - புதுவையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை - ஆவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

-

138-வது மே நாள் அன்று எமது அமைப்புகளின் சார்பாக பேரணி – ஆர்ப்பாட்டம் தமிழகம் – புதுவையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை – ஆவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி மற்றும் மகளிர் முன்னணி அமைப்புகள் இணைந்து நடத்த திட்டமிட்டப்பட்டு எழுச்சிகரமாக மே தின ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

பகுதியில் பேரணிக்கு போலீசுத்துறை அனுமதி மறுத்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-யின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா.சிவா தலைமை தாங்கினார். மே தினம் எதற்காக உருவானது, நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று தனது உரையை விளக்கினார்.

படிக்க : நெல்லையில் மே தின ஆர்ப்பாட்டம்!

அடுத்ததாக, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் தோழர் பழனி மே தின உரையில்  சர்வதேச அளவில் இந்த மே தினம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் இந்த மே நாளில் போராடி பெற்ற உரிமைகள் எல்லாம் எப்படி இருக்கிறது. என்றும் தற்பொழுது சர்வதேச அளவில் போட்டிகளும், போர்களும் எவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கி பேசினார். குறிப்பாக பாசிச கும்பல் கொண்டு வரக்கூடிய கொள்கைகள் தான் பாசிச அடக்குமுறை செலுத்துவதற்கு காரணம் என்பதையும், பாசிச கும்பலை வீழ்த்த வேண்டுமெனில் புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணை வேண்டும் என பேசினார்.

அடுத்ததாக, மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் தனது மே தின உரையில், வேண்டாம் பிஜேபி.; வேண்டும் ஜனநாயகம் என்ற முழக்கத்தை முன்வைத்து இன்று நடந்து கொண்டிருக்கின்ற பத்தாண்டு கால மோடி ஆட்சியில் இந்த பாசிச கும்பல் மக்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறது என்றும் ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களை எல்லாம் மாற்றி அதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு  சேவை செய்வதையும், அதனை இருக்கின்ற சட்டங்கள் மூலமாக எப்படி செய்வது என்பதை சிந்தித்து செயல்படுகிறது செய்து வருகிறது என்றும், மக்களுக்கு துளி அளவு நன்மை செய்யவில்லை என்பதையும், மேலும் பல்வேறு போராட்டங்கள்  நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக பல்வேறு போராட்டங்கள் மோடி அரசை தோல்வி முகத்தில் நிறுத்தி உள்ளது. நாம் பாசிச கும்பலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை ஒருங்கிணைத்து  மக்கள் எழுச்சியை கட்டியமைக்க வேண்டும் இதுதான் பாசிசத்தை வீழ்த்தும் என்பதை பல்வேறு சான்றுகளை சொல்லி தனது மே தின உரையை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து பேசிய மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் சார்ந்த தோழர்  புவனசேகர் அவர்கள் தனது உரையில் சர்வதேச அளவில் இந்த மே தினம் குறிப்பாக இன்று எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மே தினத்தில் உருவான சலுகை எல்லாம் இன்று எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதையும் விளக்கிப் பேசினார்.

இறுதியாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் தனது உரையில், மாணவர்கள் இளைஞர்கள் இன்று எப்படி இந்த மே தினத்தை பார்க்கிறார்கள் என்றும், இன்று நடக்கக்கூடிய இந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் எப்படி நாடு சீரழிந்துள்ளது என்பதையும் மாணவர்கள் மத்தியில் அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், பாசிச அபாயத்தை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைக்க வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்.

படிக்க : சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்

இறுதியாக நன்றியுரை ஆற்றிய தோழர் ஜவகர் ம.ஜ.இ.மு. முன்னதாக பேசிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி கூறி தனது உரையை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில்  இடையிடையே ஆசான்களை நினைவு கூறும் வகையிலும் இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் முழக்கங்கள் முழங்கப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தின் இறுதி வரை உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டது.கூட்டத்தில் சுமார் 150 பேர் வரை கலந்து கொண்டு மே தின நிகழ்ச்சியில் தங்களது பங்களிப்பை ஆற்றினார்கள்.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
மக்கள் அதிகாரம்

சென்னை- திருவள்ளூர் மாவட்டம்.

000

138 – வது மே தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான டி.ஐ. மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தில் மே தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் செல்வம் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார். சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் பா. விஜயகுமார் கொடியேற்றி முழக்கமிட்டார்.

மாவட்ட செயலாளர் தோழர் சரவணன் மற்றும் சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் பா விஜயகுமார் மே தின உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் மாவட்ட குழு தோழர்களும் தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டு மே தின தியாகிகளை நெஞ்சில் ஏந்தி முழக்கமிட்டனர்.

இணைப்பு சங்க பொருளாளர் தோழர் மகேஷ் குமார் நன்றி உரையாற்றி கூட்டத்தை முடித்து வைத்தார்.

000

138 வது மே தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் கிளை சங்கமான சாய் மிர்ரா ஆலையில் சங்கத்தின் செயலாளர் தோழர் ராஜா தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டல பொருளாளர் தோழர் சக்திவேல் கொடியேற்றி உரையாற்றினார்.

கூட்டத்திற்கு கிளை சங்கத்தின் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
மக்கள் அதிகாரம்

சென்னை- திருவள்ளூர் மாவட்டம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க