மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்டத்தில் குஜராத்தில் தாஹோத் உட்பட 25 தொகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் தாஹோத் மக்களவைத் தொகுதியின் சந்த்ராம்பூர் தாலுக்கா, பர்த்தம்புரா கிராமத்தில் ஒருவர் கள்ள ஓட்டு போட்டதை இன்ஸ்டாவில் நேரடி ஒளிபரப்பு செய்தார் விஜய் பாபோர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் இந்நபரை போலீஸ் கைது செய்தது. தேர்தல் ஆணையமும் தாஹோத் மக்களவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
விஜய் பாபோர் பாஜகவின் குஜராத் மாநில பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவரான ரமேஷ் பாபோரின் மகன். இந்த நேரலையில் இவர் குறிப்பாக ‘இந்த மெஷின்கள் எல்லாம் என் அப்பாவுடையது’ என்று கூறுகிறார். இன்ஸ்டாவில் ஒளிப்பரப்பி கொண்டிருந்ததை தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த அதிகாரிகளை மிரட்டியும் மேலும் 2 கள்ள ஓட்டையும் போட்டு உள்ளார் விஜய் பாபோர்.
படிக்க: மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்
விஜய் பாபோர், தாஹோத் மக்களவைத் தொகுதியின் மற்றொரு வாக்கு சாவடியிலும் போலி வாக்குப்பதிவு செய்ய முயன்றதையும், கொலை மிரட்டல் விடுத்ததையும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் பிரபா தாவியாத் போலீசில் புகார் அளித்தார்.
தாஹோத் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் பிரபா தாவியாத் செய்தியாளரிடம் பேசுகையில்: ”சந்த்ராம்யூர் சட்டப்பேரவை தொகுதியில் பர்த்தம்யூர் வாக்கு சாவடியில் எண் 220 இல் நடந்த சம்பவத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இது ஜனநாயகத்தை மீறும் சம்பவம். வரிசையில் நின்றிருந்த மக்களை வாக்களிக்க விடாமல், வாக்கு சாவடியை கைப்பற்றி, அதிகாரத்தின் பெயரால் பா.ஜ.க. வினர் ஜனநாயகத்தை மீறியுள்ளனர். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இப்படி சட்ட மீறல்களையும், தில்லு முல்லுகளையும் செய்து, நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று RSS-BJP எண்ணுகிறது. அறவே ஜனநாயகத் தன்மை இல்லாத இந்த பாசிச கும்பலை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தை நம்மால் நிலை நாட்ட முடியாது.
சமரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube