Tuesday, October 15, 2024
முகப்புகலைகவிதைபாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை

பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை

சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல, சாளர கம்பிகளுக்குப்பின் இருந்துக்கொண்டு விடுதலைக்கான சுவாசக்காற்றினை ஒருபோதும் சுவாசிக்க முடியாது என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம் போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.

-

பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்?

பாலஸ்தீனம்!
உலக வரைபடத்தில் இருந்து
களவாடப்பட்ட ஓர் தேசம்!

இளம் பிஞ்சுகளின்
இறுதி கதறல்களும்,
மரண ஓலங்களும் கேட்கும்
மரண தேசம்!

காசா வீதிகளில் கட்டிட குவியல்களுக்கு
அடியில் புதைந்து கிடக்கும்
பச்சிளம் குழந்தைகளும்
பிறக்காமலேயே தாயின் கருவறையிலேயே
புதைக்கப்பட்ட சிசுக்களின் கதைகளும்
நம் இதயத்துடிப்பை ஒரு நிமிடம்
நிறுத்திவிட்டே செல்கிறது…

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளினால்
மரணித்த தாயின் மார்பினில் பால் தேடும்
குழந்தைக்குத் தெரிய வாய்ப்பில்லை,
தன் தாயின் மரணச் செய்தி.

இஸ்ரேல் எனும் யூத இனவெறி பிடித்த ஓநாய்
பாலஸ்தீன மக்களின் ரத்தம் குடிக்க
நடத்தும் இறுதி யுத்தமே, இப்போர்!

படிக்க: நாங்கள் ராமனின் அணில்கள் அல்ல! | கவிதை

அமெரிக்கா எனும் மரண வியாபாரியின்
அரசியல் மேலாதிக்க போட்டிக்கும்,
ஆயுத வியாபார முதலைகளுக்கு
தீனிபோடவுமே இப்போர்!

உருக்குலைந்த உடல்களையும்,
எஞ்சிய உயிர்களையும் காப்பாற்ற
தப்பிப்பிழைத்த மக்கள் தஞ்சம் புகுந்த மருத்துவமனை மீது
குண்டு மழை பொழிந்து கொல்கிறது, இனவெறி இஸ்ரேல்.

பசித்த வயிறு ஒட்டிக் கிடக்க,
துண்டு ரொட்டிக்கு மக்களை
திண்டாட வைத்துவிட்டு சத்தமின்றி
மற்றொரு யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

35 ஆயிரத்திற்கும் அதிகமான
பிணங்களை கண்ட பின்பும்
லட்சம் மக்களை அகதிகளாக்கிய பின்பும் அடங்காத
இஸ்ரேலின் ரத்த வெறிக்கு
அடுத்தக் குறி ரஃபா!

ஆனால்,
சுட்டெரிக்கும் சூரிய வெப்பம்
நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல,
சாளர கம்பிகளுக்குப் பின் இருந்துக்கொண்டு
விடுதலைக்கான சுவாசக்காற்றினை
ஒருபோதும் சுவாசிக்க முடியாது
என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம்
போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.

அந்த ஆயுதம்,
அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களை பூகம்பமாய்
ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.

ஆம், அதுவே நமக்குமான ஆயுதம்!
உலகம் முழுவதும் அவ்வாயுதங்களை
ஏந்தி களம் காண்போம்!
பாலஸ்தீன விடுதலைக்கான
விடியலை நோக்கி
பாதைகள் படைப்போம்!

செந்தாழன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க