இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்த பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை

”நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான்.”

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இராணுவ பதற்றம் அதிகரிப்பது குறித்து பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலகத்தின் அறிக்கை:

மார்க்சிஸ்ட்-லெனினிச மரபில் ஊன்றி நிற்கும்  பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முதலாளித்துவ அரசால் தொடங்கப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பையும், பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்படும் எதிர் ஆக்கிரமிப்பையும் உறுதியாகக் கண்டிக்கிறது. இவை விடுதலைப் போர்கள் அல்ல, இவை பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்படுபவையும் அல்ல, அவை தொழிலாள வர்க்கத்தின் செலவில் பிராந்திய மேலாதிக்கத்திற்கான  பகை கொண்ட முதலாளித்துவ நாடுகளின் இராணுவ ஆக்கிரமிப்பின் போர்கள்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உழைக்கும் மக்களுக்கு அந்தந்த ஆளும் வர்க்கங்களின் தேசியவாத போர் மிரட்டல்களில் எந்தப் பங்கும் இல்லை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில், இந்த ஆத்திரமூட்டல்கள் துணைக்கண்டத்தை பேரழிவில்  ஆழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன, இதன் விளைவு சாதி, மதம் அல்லது வர்க்கம் என்ற பாகுபாடு இன்றி அழிவை ஏற்படுத்தும். மாறாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அளவுக்கு மீறிய வகையில்  அழிக்கும். இத்தகைய இராணுவ தோரணை ஒரு திசைதிருப்பல் ஆகும். முதலாளித்துவ சுரண்டல், பணவீக்கம், வேலையின்மை மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றின் ஆழமடைந்து வரும் நெருக்கடியை மறைக்கும் ஒரு புகைத் திரை. இது பிற்போக்குத்தனமான தேசியவாதத்தைத் தூண்டவும், வர்க்க உணர்வின் எழுச்சி அலையை நசுக்கவும் முதலாளித்துவ ஆட்சிகள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் ஒரு செயல் உத்தி  ஆகும்.

பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி, தெற்காசியா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தையும் முற்போக்கு சக்திகளையும் இந்தப் பொய்யான தேசியவாதத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது. நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான். எந்த மாயையும் வேண்டாம்… நீடித்த அமைதிக்கான பாதை போரிடும் நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர பேண்ட்-எய்ட்களில் அல்ல, மாறாக முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவதன் மூலம், முதலாளித்துவ இராணுவவாதத்தை அகற்றுவதன் மூலம், எல்லைகளுக்கு அப்பால் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம் மட்டுமே நீடித்த அமைதியை உருவாக்க முடியும்.

சர்வதேச ஒற்றுமையின் போர் முழக்கத்தால் பேரினவாதத்தின் போர் முரசுகள் மௌனமாக்கப்படட்டும்.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!

புரட்சி ஓங்குக!

இன்குலாப் ஜிந்தாபாத்!”

***

“No India-Pakistan War, but Class War – Down with Bourgeois Militarism”- Communist Party of Pakistan

Statement of the Central Secretariat of the Communist Party of Pakistan on the escalation of military tension between India and Pakistan:

“The Communist Party of Pakistan, grounded in the Marxist-Leninist tradition, firmly condemns the military aggression initiated by the Indian bourgeois state and the counter-aggression launched by the Pakistani ruling class. These are not wars of liberation, nor are they in the interest of the proletariat, they are the wars of rival bourgeois military aggression for regional hegemony at the expense of the working class.

We assert that the working masses of India and Pakistan have no stake in the nationalist sabre-rattling of their respective ruling classes. In a region armed with nuclear weapons, these provocations risk plunging the subcontinent into catastrophic annihilation, an outcome that would spare neither caste, creed, nor class, but would disproportionately destroy the lives and livelihoods of workers, peasants, and the poor. Such military posturing is a diversion, a smokescreen to veil the deepening crisis of capitalist exploitation, inflation, unemployment, and social unrest. It is a tactic long used by bourgeois regimes to stoke reactionary nationalism and crush the rising tide of class consciousness.

The Communist Party of Pakistan calls upon the working class and progressive forces across South Asia to reject this false nationalism and embrace proletarian internationalism. Our struggle is not with the workers across the border, but with the comprador bourgeoisie, feudal remnants, and military-industrial complexes that profit from bloodshed. Let there be no illusion the path to lasting peace lies not in diplomatic band-aids between warring states, but in the revolutionary transformation of society through the overthrow of capitalism, the dismantling of bourgeois militarism, and the unity of the working class beyond borders.

Let the war drums of chauvinism be silenced by the battle cry of international solidarity.

Workers of the World, Unite!

Inquilab Zindabad!”


முகநூலில்: Karumalaiyan

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க