நெல்லை: 9-ஆம் வகுப்பு தலித் மாணவருக்கு அரிவாள் வெட்டு

தலித் மற்றும் மறவர் ஜாதி மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்சினை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கு தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளோடு வந்த மறவர் சாதி மாணவன் தலித் மாணவனை வெட்டி இருக்கிறான்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே இருக்கும் டோனாவூர் பகுதியில் அரசு உதவி பெறும் உவாக்கர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. களக்காடு அருகே ஊச்சிக்குளத்தில் உள்ள விடுதியில் தங்கிப் பயிலும் சங்கரன் கோவில் மேலச்செவலை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, அதே வகுப்பில் படிக்கும் வடுகச்சிமதிலை ஊரைச் சேர்ந்த மறவர் சாதி மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்க வந்த வடுகச்சிமதிலையைச் சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலித் மற்றும் மறவர் ஜாதி மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்சினை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கு தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளோடு வந்த மறவர் சாதி மாணவன் தலித் மாணவனை வெட்டி இருக்கிறான்.

படிக்கும் மாணவர்கள் மத்தியில் சண்டை வருவதும், அடித்துக் கொள்வதும் இயல்பானது. ஆனால் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு வந்து சக மாணவனை கொலைவெறியோடு வெட்டுவது அசாதாரணமானது. இது தற்போது நெல்லைப் பகுதியில் சாதாரணமாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வாக மாறிப் போயுள்ளது.

கவின் படுகொலைக்குப் பின் சமூக வலைத்தளங்களில் சாதிவெறியை கக்கும் விதமாகவும், கொலையாளிக்கு ஆதரவாகவும் பல்வேறு பதிவுகள் சாதி வெறியர்களால் வெளியிடப்பட்டன. இது சாதியின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களை மென்மேலும் ஊக்குவிக்கின்றன.

ஆதிக்கச் சாதிச் சங்கங்களும் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தூண்டிவிட்டு சாதிவெறி நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்கின்றன.

இந்த ஆதிக்கச் சாதி சங்கங்களுக்குப் பின்னால் இருந்து ஆர்.எஸ்.எஸ் – இந்துத்துவ கும்பல்கள் செயல்படுகின்றன.

சாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுக்கும் நாம் ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் கும்பல்களையும் தடை செய்யப் போராட வேண்டும். இதுதான் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு மாற்றாக இருக்கும்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க