41 -ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்!
அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
தங்களின் பேராதரவோடு புதிய ஜனநாயகம் இதழ், நாற்பது ஆண்டுகளைக் கடந்து 41-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு புரட்சிகர இதழ் இத்தனை ஆண்டுகாலம், தொடர்ந்து இயங்கி வருகிறதென்றால் அது எளிதான காரியம் அல்ல. புரட்சிகர அரசியலை நேசிக்கும் வாசகத் தோழர்களின் ஆதரவின்றி இது சாத்தியமாகி இருக்காது.
இந்நேரத்தில் புதிய ஜனநாயகத்தின் வெற்றிகரமான பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும், வாசகர்களுக்கும், முகவர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியில் அச்சு ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை பாசிச தாக்குதலை எதிர்கொண்டுவரும் சூழலில், உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்களுக்கு எதிராகவும், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றை முன்வைத்தும் புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக வினையாற்றி வருகிறது.
இந்நிலையில், கடும் பொருளாதாரச் சுமைகளுக்கிடையிலும் முறையாக மாதந்தோறும் புதிய ஜனநாயகம் ஏட்டைக் கொண்டு வருகிறோம். புரட்சிகரப் போராட்டத்தில் மக்களின் அறிவாயுதமாக, புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவர ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











