அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் காத்திருப்புப் போராட்டம் வெல்லட்டும்!

அரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பாக மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0

ரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பாக மூன்று நாள் தொடர் காத்​திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு திட்ட (சி.ஏ.எஸ்.) ஊதியம் மற்றும் அதற்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது.
  • யு.ஜி.சி. நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்.ஃபில். (Phil) மற்றும் பி.எச்.டி. (PhDs) பட்டத்துக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
  • புத்தொளி / புத்தாக்க பயிற்சி கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்.
  • அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • யு.ஜி.சி. அறிவித்துள்ளபடி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு பி.எச்.டி. கட்டாயம் என்பதைத் தளர்த்த வேண்டும்.

உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்கம் (AUT – Association of University Teachers) மற்​றும் மதுரை காம​ராஜர், மனோன்மணீயம் சுந்​தர​னார், அன்னை தெரசா மற்​றும் அழகப்பா பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Teresa and Alagappa University Teachers’ Association – MUTA) உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.

போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி நாகராஜன், “முதல் ஐந்து ஆண்டுகள், அதற்குப் பிறகு ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் பணிநிலை மேம்பாட்டு ஊதியம் உயர்த்தப்படும். 10 வருடம் பணி முடித்தால் இணைப் பேராசிரியர், 30 வருடம் பணி முடித்தால் பேராசிரியர் என நிலை உயர்த்தப்படுவார்கள். பணிநிலை மேம்பாட்டு ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணைப்படி, எட்டு மண்டலங்களில் இரண்டு மண்டலங்களில் மட்டுமே பணிநிலை மேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது சென்னை, மதுரை, நெல்லை, தருமபுரி, திருச்சி, வேலூர் ஆகிய ஆறு மண்டலத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் 6,500 பேருக்கு வழங்கப்படாமல் உள்ளது”.

மேலும், “இது தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். அமைச்சர், இயக்குநர் ஆகியோரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை. நிதித்துறை ஒப்புதல் பெற்றுத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணைப்படி ஊதியம் கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். ஊதியத்திற்காக ஆசிரியர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அச்சட்டத்தின்படி 35 சதவிகிதம் தமிழ்நாட்டு மாணவர்களைச் சேர்க்க வேண்டும். அதற்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு பொருந்தும். எஞ்சிய 65 சதவிகிதம் அளவிற்கு வெளி மாநில மாணவர்களைச் சேர்க்கலாம். இட ஒதுக்கீடு கிடையாது. இதனை ஏற்க முடியுமா? எனவே, இச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜெ.காந்திராஜ், “அரசு உதவிபெறும் கல்​லூரி ஆசிரியர்​கள் தங்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, கடந்த நான்கு ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர். ஆனால், அரசு எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​காமல் மௌனமாக இருந்து வரு​கிறது. தற்போது நடைபெறும் மூன்று நாள் தொடர் போராட்டத்துக்குப் பின்னரும் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக டிசம்பர் 8-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டமும், அதைத் தொடர்ந்து மாணவர்களை ஈடுபடுத்தி போராட்டமும் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று ஆட்சிக்கு வந்தது தி.மு.க அரசு. ஆனால், நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் துரோகமிழைத்து வருகிறது. உயர்கல்வி துறையை கார்ப்பரேட் மயமாக்குவதற்காகப் பேராசிரியர்களின் கோரிக்கைகளைத் திட்டமிட்டே புறக்கணித்து வருகிறது.

சமீபத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகளைக் கைகழுவிவிடும் வகையில், அவற்றைத் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான மசோதாவை தி.மு.க. அரசு நிறைவேற்றியது இதற்கு துலக்கமான சான்று. எனவே, தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் தி.மு.க. அரசின் கல்வி கார்ப்பரேட்மயமாக்க கொள்கை – நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க