இனவெறி, போர் வெறி பிடித்த இசுரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு வர இருந்ததாகவும் அது இறுதி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, டெல்லி குண்டுவெடிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.
காசா மீதான இனப்படுகொலை காரணமாக உலக அரங்கில் நெதன்யாகு தனிமைப்பட்டுப் போயிருக்கும் சூழலில், சரிந்துவரும் தனது அரசியல் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இசுரேலில் நெதன்யாகுவின் ஆட்சி நீடித்தால்தான் இசுரேல் பாதுகாப்பாக இருக்கும் என்ற பிரச்சாரத்தை அவரது கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். உலகத் தலைவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, அவர் தனிமைப்படவில்லை என்ற பொய்ப் பிரச்சாரத்தை அவரது கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில் ஒன்றாகவே அவரது இந்தியப் பயணம் திட்டமிடப்பட்டது.
இதைப்போலவே, 2017-ஆம் ஆண்டில் நெதன்யாகு அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டிருந்த சூழலில், இசுரேலுக்குப் பயணம் செய்து, நெதன்யாகுவிற்கு ஆதரவு தெரிவித்தார் பார்ப்பன பாசிஸ்ட் மோடி. அதைப்போலவே, இப்போதும் இந்தியாவிற்கு நெதன்யாகுவை அழைத்துப் பங்கேற்க வைப்பதன் மூலம் ஆதரவு கொடுக்கிறார் மோடி.
நெதன்யாகு போர்க்குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அவரைக் கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரைத்தான் பாசிச மோடி, நமது நாட்டிற்கு அழைக்கிறார்.
உண்மையில், பார்ப்பன பாசிசத்தை முன்னிறுத்தும் இந்த மோடி-அமித்ஷா கும்பலானது, இந்தியா நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சர்வதேச குற்றவாளிகளுக்கு மற்ற நாடுகள் அடைக்கலம் கொடுத்தால், அந்த நாட்டை வரவேற்றுக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
படிக்க: காசாவிற்கான உங்களது குரலைத் தாழ்த்தாதீர்கள்!
எனினும், நெதன்யாகு போர்க்குற்றவாளி என்பதையும் தாண்டி, மோடியின் எஜமானரான அமெரிக்க மேலாதிக்க வெறிபிடித்த டிரம்பியின் நெருங்கிய கூட்டாளி. இந்த அடிமை விசுவாசமும் நெதன்யாகுவை இந்தியாவிற்கு அழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அது மட்டுமின்றி, தனது பாசிச ஆட்சி முறைக்கு உதவியாக பெகாசஸ் உளவு செயலியை ஏவி சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டவர்களை உளவு பார்ப்பதிலும் நெதன்யாகு அவருக்கு உதவிவருபவர். மோடியின் நெஞ்சில் குடியிருக்கும் கார்ப்ப்ரேட் கொடூரனான அதானியுடன் இசுரேல் தொழில் உறவுகளை மேற்கொள்கிறது.
நெதன்யாகுவின் இந்தியப் பயணம் தற்போது ரத்தாகியிருக்கலாம். ஆனால், அவரை இந்தியாவிற்கு அழைத்து கௌரவிப்பதற்கு மோடி அரசு மிகவும் ஆவலாகவே இருக்கிறது. ஆகையால், மீண்டும் அவரது இந்தியப் பயணத்திற்கு நாள் குறிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பாலஸ்தீனர்களின் நாட்டை ஆக்கிரமித்து, அம்மக்களை அன்றாடம் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி என்ற வகையில், நெதன்யாகுவின் இந்தியப் பயணமானது, நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் பாசிசத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அனைவருக்கும் பெருத்த அவமானமாகும். அந்தப் போர்க்குற்றவாளியின் இந்தியப் பயணமானது மக்கள் போராட்டங்களால் மட்டுமே இனி ரத்தாக வேண்டும். அதற்காக, நெதன்யாகுவின் இந்தியப் பயணத்திற்கு எதிராகக் குரல் கொடுப்போம்!
![]()
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











