பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டம் || Live Blog

ணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் “தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக டிசம்பர் 18 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்த தி.மு.க. அரசு (வாக்குறுதி 356) அதைத் தற்போது வரை நிறைவேற்ற மறுக்கிறது. மாறாக, போராடும் செவிலியர்களை போலீசைக் கொண்டு மிகக் கொடூரமாக ஒடுக்கி வருகிறது.

வினவு மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக செவிலியர்களைக் கைது செய்து 5 – 6 இடங்களில் பிரித்து அடைத்து வைத்ததாகவும், கழிவறை செல்வதற்குக் கூட அனுமதிக்காமல் துன்புறுத்தியதாகவும் அவர்கள் தங்களது ஆதங்கத்தை பு.மா.இ.மு. தோழர்களிடம் வெளிப்படுத்தினர்.

இப்போராட்டம் குறித்த செய்திகள் இந்த லைவ் பிளாக்கில் தொடர்ந்து பகிரப்படும்.

***

Live Blog:

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க