வெனிசுலா அதிபர் கடத்தல்: அமெரிக்காவின் மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!

வெனிசுலா அதிபர் மதுரோவை விடுதலை செய்!

***

Release Venezuelan President Maduro!

***

வெனிசுலா அதிபர் கடத்தல்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சதி!

உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா வெனிசுலா நாட்டின் இறையாண்மையை நசுக்கி அந்நாட்டை அடிமைப்படுத்தும் நோக்கில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை நாடுபுகுந்து கடத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடிபணிய மறுத்த வெனிசுலா அதிபர் மதுரோவின்  நாட்டுப்பற்று உலக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது!

உலகிலேயே அதிக எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள வெனிசுலாவை கைப்பற்றுவதன் மூலம், தனது மேலாதிக்கத்திற்கு சவால் விட்டுவரும் வெனிசுலாவை அடக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் சதியை முறியடிக்க வேண்டியது உலக மக்களின் கடமை!

***

வெனிசுலா அதிபர் கடத்தல்:
வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

வெனிசுலாவின்  எண்ணெய் வளத்தையும், தென்னமெரிக்க கனிம வளங்களையும் கொள்ளையிடத் துடிக்கும், ட்ரம்ப் – மஸ்க் பாசிச கும்பலின் கொட்டத்தை முறியடிப்போம்!

ட்ரம்பின் பாசிச வெறியாட்டத்தைக் கண்டிக்க வக்கற்ற  கோழை மோடி அரசின் துரோகத்தைக் கண்டிப்போம்!

மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்கவே!

மதுரோவை விடுதலை செய் – வெனிசுலாவில் இருந்து  இராணுவத்தை வெளியேற்று! – என உலக மக்கள் அனைவரும் முழங்குவோம்!

உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா ஒழிக!

தேசப்பற்று கொண்ட வெனிசுலா மக்கள் போராட்டம் வெல்க!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க