பேரணி – பழைய பேருந்து நிலையம், மந்தாரக்குப்பம், நெய்வேலி, கடலூர்.
ஆர்ப்பாட்டம் – என்.எல்.சி. நிர்வாக அலுவலகம் சுரங்கம் -II முன்பு
நாள்: 27-1-2026 10.00 மணி
என்எல்சி நிர்வாகமே! மாவட்ட நிர்வாகமே!
- 2008, 2009 வரையில் 5 லட்சம், 6 லட்சம் கொடுக்கப்பட்ட நிலத்திற்கு விவசாயிகளுக்கு 2023 வழங்கிய உயர் இழப்பீட்டு கருணைத் தொகையை 10 லட்சம் ரூபாய் விடுபட்ட கிராமங்களுக்கு உடனே வழங்கு.
- 10 கிராம மக்களின் போராட்டம் 4 கிராமங்களுக்கு மட்டும் நிவாரணமா? மீதம் உள்ள கிராமங்களுக்கும் நிவாரணம், வேலை வாய்ப்புகளை உடனே வழங்கு.
- கம்மாபுரம், கோபாலபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சாத்தப்பாடி, ஊ. ஆதனூர் ஆகிய கிராமங்களுக்கு நிலங்களுக்கு உடனே உயர் இழப்பீடு தொகையை வழங்கு. வாழ்வாதார தொகையை உடனே வழங்கு.
- கோட்டகம், கொளக்குடி. வளையமாதேவி. கங்கைகொண்டான் விவசாயிகளுக்கு மீதம் உள்ள நிவாரணம், வாழ்வாதார தொகையை உடனே வழங்கு.
- ஒரு லட்சத்து ஒன்பது ஆயிரம் வாழ்வாதாரம் தொகையை வாங்கியவர்களுக்கும் வாங்காதவர்களுக்கும் தற்காலம் வழங்குவது போல் 17 லட்சம் ரூபாய் வரை உடனே வழங்கு.
- 2009 ல் வழங்கிய 1 ஏக்கர் நிலத்திற்கு 6 லட்சம் 10 ஆண்டுகள் கழித்து அதற்கு மேல் வழங்கப்பட்டிருந்தால் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டபடி மூன்று மடங்கு உயர்த்தி வழங்கு.
- 2009 ல் வழங்கிய 6 லட்சம் வாங்காமல் உள்ளவர்களுக்கு தற்காலம் 2026 ல் 25 லட்ச ரூபாய்யாக வட்டியுடன் வழங்கு.
- முத்துகிருஷ்ணாபுரம், இந்திராநகர் மாற்றுகுடியிருப்பு பகுதி விவசாயிகளுக்கு மனைகளுக்கு சென்ட் ஒன்றுக்கு இரண்டரை இலட்ச ரூபாய் அளவிற்கு உடனே வழங்கு. மேலும் வீடு கட்டுமான தொகையும் உடனே வழங்கு.
- கம்மாபுரம், கோபாலபுரம், சாத்தப்பாடி, ஊ.ஆதனூர். வளையமாதேவி. மதுவானமேடு கிராமங்களில் வாய்க்கால், மண்மேடு சுரங்கம் என்று வகைப்படுத்தாமல் நிவாரணம் உடனே வழங்கு.
- என்.எல்.சி. எடுக்கப்பட்ட நிலங்களில் 2006 முதல் எடுக்கப்பட்ட அனைத்து ஆழ்துளை குழாய் கிணறு போர்வெல் மின் இணைப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்கு. 2014-ம் ஆண்டுக்குப் பின் உள்ள போர்வெல்லுக்கு நிவாரணம் என்பதை ஏற்கமுடியாது.
- நிலம், மனை வழங்கிய விவசாயிகள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பை உடனே வழங்கு அல்லது ஒரு கோடி ரூபாய் வழங்குக.
விவசாயிகளை பிரித்தாலும் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல்
ஒருங்கிணைந்து போராடுவோம்!
விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு:- 9994687586 / 94432 37937 / 8883552777
9965888572 / 8754305455 / 6381102041
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











