பா.ஜ.க ஆட்சி செய்யும் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை டெல்லி போலீசு வெளியிட்டுள்ளது. அதன்படி காணாமல் போனவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள், 298 பேர் ஆண்கள். 191 பேர் சிறுவர்-சிறுமியர்களில் 146 பேர் சிறுமிகள், 45 பேர் சிறுவர்கள் என்று ஒரு நாளைக்கு சராசரியாக 54 பேர் காணாமல் போயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் தற்போது வரை 235 பேரைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்; 572 பேர் கண்டுபிடிக்கவில்லை.
மேலும் 169 இளம்பருவத்தினர் காணாமல் போயுள்ளனர். இவர்களில்138 பேர் டீனேஜ் பெண்கள், 31 பேர் சிறுவர்கள். போலீசு 29 சிறுமிகளையும், 19 சிறுவர்களையும் கண்டுபிடித்துள்ளது. ஆனால் 70 சதவீதம் பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குறிப்பாக 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5,000க்கும் மேற்பட்ட டீனேஜர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3,500 பெண் குழந்தைகள் காணாமல் போவதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு , 5,081 டீனேஜர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டபோது. அவர்களில் 3,970 பேர் சிறுமிகள். அதில் 1,013 பேர் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் போக்கு ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 2025 ஆம் ஆண்டில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 14,870-ஆக உயர்ந்துள்ளது. இந்த தரவுகள் டீனேஜர்களுக்கு பாதுகாப்பற்றதாக டெல்லி மாறி வருவதை உணர்த்துகின்றன.
அதேபோல், 15 நாட்களில் ஒவ்வொரு நாளும் 13 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி 8 முதல் 12 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில் எட்டு சிறுவர்கள், ஐந்து சிறுமியர்கள். அதில் மூன்று சிறுவர்களை மட்டுமே போலீஸ் கண்டுபிடித்துள்ளது. மற்ற குழந்தைகளின் நிலை கேள்வியாகவே உள்ளது.
எட்டு வயதுக்குட்பட்ட பிரிவில் மொத்தம் ஒன்பது குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்களில் மூன்று சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆறு குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
படிக்க: மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்
முக்கியமாக கடந்த ஆண்டு டெல்லியில் மட்டும் 24,508 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 14,870 பெண்கள்; 9,638 ஆண்கள். அதில் 15,421 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்; 9,087 பேர் ‘தேடப்பட்டு வருவதாக’ தரவுகள் கூறுகின்றன.
இதனைவிட அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் என்னவென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் டெல்லியில் மட்டும் 2,32,737 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் தோராயமாக 1,80,000 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 52,000 பேரின் வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பெண்கள், குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது என்பதை மறுத்துள்ள டெஸ்லி போலீஸ், இதுபோன்ற வதந்திகள் பணம் கொடுத்துப் பரப்பப்படுகிறது என்று காணாமல் போனவர்கள் குறித்து உண்மை தரவுகளை வெளியிடாமல் மறைத்து பாசிச கும்பலுக்கு களங்கம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
காணாமல் போனவர்கள் குறித்த செய்தி வேகமாக மக்கள் மத்தியில் பரவியதையடுத்து போலீஸ் தரவு ஒன்றையும் வெளியிட்டது. அதில் ஜனவரி மாதத்தில் 1,777 காணாமல் போன வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது மாத சராசரியை விடக் குறைவு என்றும் கூறப்பட்டிருந்தது. “ஒப்பிட்டுப் பார்க்கையில், 2025 ஆம் ஆண்டில் 24,508 காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; இது மாதத்திற்குச் சராசரியாக சுமார் 2,042 வழக்குகள் ஆகும். ஜனவரி மாத எண்ணிக்கை ஒப்பிட்டளவில் குறைவாகவே உள்ளது. இது எந்தவொரு புதிய போக்கையும் சுட்டிக்காட்டவில்லை” என்று தன்னுடைய நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்குக் கேவலமான முறையில் ஒப்பீடுகளைக் கூறிக்கொண்டிருக்கிறது.
உண்மையில் டெல்லியில் குழந்தைகளைக் கடத்துகின்ற கும்பல்கள் கொடூரமான முறையில் குழந்தைகளின் கை, கால்களில் சூடு வைத்தும் காயங்களை உண்டாக்கியும் நடைமேடைகளில் பிச்சை எடுக்க வைக்கின்றனர். குழந்தைகள் வெளிநாடுகளில் விற்கப்படுகின்றர். தரகர்களால் கடத்தப்படுகின்ற இளம்பெண்கள் மீளமுடியாத நரகமான பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். காமவெறி பிடித்த மிருகங்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். கிட்னி, இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வியாபாரம் செய்யும் மாஃபியா கும்பல்களாலும் கடத்தப்படுகின்றனர்.
பா.ஜ.க ஆட்சியில் நாட்டின் தலைநகரில் வசிக்கும் மக்களுக்குக் கூட உரிய பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











