ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | கருத்தரங்கம்
நாள்: 13-02-2026 | நேரம்: மாலை 4:30 மணி
இடம்: பிஸி ஃபுட் அரங்கம் (Busy Food Hall), போத்தனூர் சாலை, கோவை.

தலைமை:
தோழர் செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி (ததேமமு)
வரவேற்புரை:
தோழர் சகுந்தலா தங்கராசு,
இணைப் பொதுச்செயலாளர்,
தலித் விடுதலைக் கட்சி
முன்னிலை:
தோழர்கள்
துரை அசோகன்,
கோவை மாவட்ட அமைப்பாளர்,
ததேமமு.
மோகன்ராஜ்,
கோவை மாவட்டச் செயலாளர்,
PUCL.
திருமொழி,
தமிழ்த்தேச இறையாண்மை.
கருத்துரை:
தோழர்கள்
கோவை கு.இராமகிருட்டிணன்,
பொதுச்செயலாளர்,
தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்.
து.வன்னி அரசு,
துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
நெல்லை முபாரக்,
மாநிலத் தலைவர்,
எஸ்.டி.பி.ஐ.
செங்கோட்டையன்,
மாநில பொதுச்செயலாளர்,
தலித் விடுதலைக் கட்சி.
கே.எஸ்.அப்துல் ரகுமான்,
மாநிலத் தலைவர்,
வெல்ஃபர் கட்சி.
பழனி பாரூக் அப்துல்லா,
மாநில அமைப்புச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
பவானி பா.மோகன்,
மூத்த வழக்கறிஞர்.
ச.பாலமுருகன்,
தேசிய செயலாளர்,
மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL).
M.S. சபீர் அலி,
தேசிய செயலாளர்,
ஒருங்கிணைப்பாளர்,
கோவை இசுலாமிய கூட்டமைப்பு
மாறன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
அருண்சோரி,
தலைமைக் குழு,
ததேமமு.
NPகுமார்,
மத்திய கமிட்டி உறுப்பினர்,
சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார்.
பார்த்திபன்,
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்.
கரு. தமிழரசன்,
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்.
சிறைபட்டோர் உறவுகள்:
திருமதி ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்
A.S.இஸ்மாயில்
நன்றியுரை:
தோழர் ராஜன்,
கோவை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

இங்கு நடந்துவருவது ஒருவித கருணைக் கொலை ( euthanasia ). இனி நேரடியான கொலையாகக் கூட இருக்கலாம். எது எப்படியாயினும் ஒரு விடயத்தை நான் தீர்மானமாக முடிவு செய்துள்ளேன். இந்த விதமாக நான் மரணத்திற்கு அடிபணிய மாட்டேன். அதாவது மரணிக்க மாட்டேன். இந்த் சிறையில் வைத்து நான் மரணிக்க மாட்டேன்; ஆணால் உயிர் தியாகியாக வாய்ப்புள்ளது.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் இந்த சிறையில் கிடந்து இறந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கேட்ட போது மற்றவர்களோடு நீயும்தானே முந்தி கொண்டு சொன்னாய் – ‘ நாங்கள் ஒரு வீர தியாகியின் பிள்ளைகள் என்று பெருமை கொள்வோம்’ என்று. அந்த தைரியம் எல்லாம் குறைந்து போய்விட்டதா?
– E. அபூபக்கர் சாகிப், திகார் சிறையில் இருந்து தன் மகளுக்கு எழுதிய பதில் கடிதத்தில் இருந்து)
பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு, சிறைப்பட்ட நாள் 22-2-2022
***
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (ஊபா, UAPA) பொய் வழக்குகள் புனையப்பட்டு நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்குகளைத் தொடுப்பது பெரும்பாலும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ, NIA) ஆகும்.
- ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 இல் இருந்து 10 ஆண்டுகள் வரை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைக்கப்படுவது சாதாரண விசயமாக ஆகிவிட்டது.
- நீதிமன்றங்களும் பிணை மனுவை எடுக்காமல் தள்ளிப்போட்டு இவர்களை நீண்ட காலம் சிறையில் வைப்பதற்கு துணை செய்கின்றன
- ஊபா (UAPA) வழக்குகளில் குற்றம் மெய்பிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவது 2.25% வழக்குகளில்தான் என்று என்.ஐ.ஏ. விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென்று கடந்த மார்ச் 2025 இல் உளதுறை அமைச்சர் அமித் ஷா என்.ஐ.ஏ. வழக்குகளில் 100% குற்றம் மெய்ப்பிக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் நீட்டி முழக்கினார்.
- என்.ஐ.ஏ. வலைதளத்தில் உள்ள தரவுகளை ஆய்வு செய்தால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. என்.ஐ.ஏ தொடங்கியது முதல் செப்டம்பர் 2025 வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 633. தீர்ப்பு வெளிவந்த வழக்குகள் 133. இதில் 79 வழக்குகள்தான் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டவை. எஞ்சிய 54 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாமே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவ்வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. அதில் 49 வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டவர்கள் ஏழை இசுலாமியர்களே!
- காரணம் விசாரணையும் தொடங்கவில்லை, பிணையும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் பல சிறையிலேயே கழிந்துவிட்ட நிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டால் தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டு நீங்கள் வெளியே வர முடியும் இல்லை என்றால் நீங்கள் சிறையிலேயே சாக வேண்டியதுதான் என்று என்.ஐ.ஏ.. அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் இதனால் அவர்கள் தாம் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள்! இதற்கு பெயர் தான் குற்றம் மெய்ப்பிக்கப்படுவதா? இதுதான் என்.ஐ.ஏ. வின் புலனாய்வு திறனா? நேர்மை!யா?
- சாதாரண கைதிகளுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவ உதவிகள்கூட இவர்களுக்கு சிறையில் மறுக்கப்படுகிறது. இதுவரை அருட்தந்தை ஸ்டேன் சாமி, பேராசிரியர் சாய்பாபா, காஞ்சனா நானாவேர் போன்றோர் சிகிச்சை மறுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள்! இப்போது E.அபூபக்கர், A.S. இஸ்மாயில்,மகேஷ் ராவத், காசுமீரைச் சேர்ந்த ஷபீர் அகமது ஷா போன்றோர் சிகிச்சைக்கான பிணை மறுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிறையில் கொல்லப்படுகிறார்கள்.
- சிறையில் இருப்போரின் குடும்பங்கள் ’பயங்கரவாதியின் குடும்பம்’, ’தேச விரோதியின் குடும்பம்’ என்ற முத்திரையோடு சமூகத்தில் இருந்து தனிமைப்பட்டு கண்ணீரோடு தத்தளிக்கின்றன.
பீமா கோரேகான் வழக்கு, தில்லி கலவர வழக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு, ஹிஸ்புட் தெஹ் ரீர் வழக்கு ஆகியவை மேற்சொன்ன விவரங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
நாடெங்கிலும் உள்ள இசுலாமியர்கள், மொழிவழித் தேசியம் பேசக் கூடியவர்கள், மத்திய இந்தியாவை சேர்ந்த பழங்குடிகள், நக்சல்பாரிகள், உழவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் ஊபாவின் (UAPA) கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டு செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என யாரும் விட்டுவைக்கப்பட வில்லை.
இவர்கள் ஆட்சியியாளர்களின் கொள்கையில் இருந்து மாறுபட்டு பேசவும் எழுதவும் மக்களைத் திரட்டவும் போராடவும் செய்தனர். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சந்தை என்ற ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் இந்துத்துவக் கொள்கையோடு முரண்பட்டனர். இந்து, இந்தி, இந்து தேசம் – கார்ப்பரேட் ஏகபோகம் என்ற கொள்கையை எதிர்த்தார்கள். இதனால், இவர்கள் ஆட்சியாளர்களால் சதித்தனமாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
”நாங்கள் இரண்டாம் நிலை குடிமக்கள் கிடையாது, சம உரிமை கொண்ட மண்ணின் மைந்தர்கள், எங்கள் முன்னோர்கள் போல நாங்களும் எமது அடுத்த தலைமுறையும் இங்கு சமமாக வாழ உரிமை உண்டு” என்று இசுலாமியர்கள் போராடுவது குற்றமா?
”இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று காசுமீரிகளும் சீக்கியர்களும் அசாமியர்களும் போராடுவது குற்றமா?
எங்கள் முன்னோர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இக்காட்டையும் மலையையும் கனிம வளங்களையும் பாதுகாத்து எமக்கு கையளித்துப் போனதை கார்ப்பரேட்கள் கபளீகரம் செய்யக் கூடாது என்று பழங்குடிகள் போர்க்கோலம் பூண்டிருப்பது குற்றமா?
எது குற்றம்?
இதை குற்றமென்று அரசமைப்புச் சட்டம் சொல்லவில்லையே! அதை மீறி ஆட்சியில் இருப்போர்தான் இதை குற்றமாக்கி, நம்மை வேட்டையாடி வருகின்றனர்.
’வேட்டையாடப் படுவோம்’ என்று தெரியாமலா இவர்கள் எதிர்த்து நின்றார்கள்? இல்லை. ’இன்றில்லாவிட்டாலும் நாளை நம்மை சிறைபிடிப்பார்கள்’ என்று எதிர்பார்த்துதான் அவர்கள் துணிந்து நின்றார்கள்.
எந்த சமுதாயத்தின், எந்த மக்கள் கூட்டத்தின் கன்னியமான வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் மாண்புக்கும் தலைநிமிர்வுக்கும் அவர்கள் போராடினார்களோ அவர்களே மெளனித்து நிற்கிறார்கள். இதைதான் சிறைபட்டோர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சிறைக்குப் போனவர்களைப் பலர் மறந்தேவிட்டனர்.. நினைவில் வைத்திருக்கும் சிலரோ விடுதலைக்காக குரல் கொடுக்க தயங்குகின்றனர்.
நமது பேச்சை நிறுத்தத்தான் பாசிச ஆட்சியாளர்கள் நம்மில் சிலரை சிறையில் தள்ளுகிறார்கள். ஊபாவுக்கும்(UAPA) என்.ஐ.ஏ.வுக்கு(NIA) அஞ்சி நாம் நமது பேச்சை நிறுத்திவிட்டால், அடிபணிய மறுத்து சிறை புகுந்தவர்களின் தியாகம் மண்ணோடு மண்ணாகிப் போகாதா?
***
நமது இருப்பும் வாழ்வும் வளங்களும் எதிர்காலமும் கேள்விக் குறியாகாதா? யார் பேச மறுத்தால் என்ன? நாம் பேசுவோம். நாம் நமது பேச்சை நிறுத்தப் போவதில்லை. அதிகார பீடங்கள் அதிரும்படி திகாரிலும் புழலிலும் தலோஜாவிலும் சிறைபட்டிருக்கும் நமது வீரர்களுக்கு கேட்கும்படி….
உரத்துச் சொல்வோம்! விடுதலை செய்! விடுதலை செய்!
ஊபா (UAPA) சிறைவாசிகளை விடுதலை செய்!
ஒருங்கிணைப்பு:
தமிழ்த்தேச மக்கள் முன்னணி,
தலித் விடுதலைக் கட்சி,
மக்கள் அதிகாரக் கழகம்,
சிபிஐ (எம்-எல்) ரெட் ஸ்டார்.
95971 07489 | 99522 07408 | 98655 28145 | 94456 16828
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











