Saturday, January 31, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
108 பதிவுகள் 0 மறுமொழிகள்

கறிக்கோழி விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட ஒன்பது பேரைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மீண்டும் பதற்றமாகும் நெல்லை! காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட சாதியோ, ஆதிக்க சாதியோ, பிள்ளையைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது, யாரை இந்த சாதி நெருப்பு சாம்பலாக்குமோ என்ற பெரும்பயம் தென்மாவட்டத்து பெற்றோர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது.

‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!

“சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” என நொச்சிலி கிராம மக்கள் கோரியுள்ளனர்.

திருச்செந்தூர் அருந்ததிய இளைஞர் சாதிவெறிப் படுகொலை!

‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது‌. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும் ‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!

சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் "ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே" பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று 'இ-ஸ்கேன்' செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு! | ம.அ.க.

அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.

Venezuela President abducted! Fascist Trump’s fanatic pursuit of hegemony!

This attack on Venezuela, which has consistently fought and spoken out against the US aggression and fascist actions, is an attack on the people of the world.

வெனிசுலா அதிபர் கைது! பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வந்த வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக மக்கள் அனைவரின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

To love – marry beyond caste, religion Need Democracy | Revolutionary Anti-caste marriage |...

The RSS, BJP, and the Sangh Parivar on one side, and their subservient allies — the dominant caste supremacist outfits and political partie s— keep nurturing the poison of caste pride, desperate to preserve this rotten system somehow.

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் – தேவாலயங்களில் அத்துமீறல்கள்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச சங்கப் பரிவாரங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கின. அடுத்ததாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளன.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர் || நூல்

சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களின் பங்களிப்பையும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டை நிறுவ வேண்டிய அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.

சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் || நூல்

டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.

பணி நிரந்தரம் கோரும் செவிலியர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.

பாசிச சக்திகள் மென்மேலும் வளரக்கூடாது என்பதில் போராடும் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கும் அந்த பொறுப்பு வேண்டும். தனியார்மய - தாராளமய - உலகமய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது,போலீசு ஆட்சியை நடத்துவது ஆகியவை பாசிச சக்திகளுக்குப் பயன்தரக்கூடியவையாகும்.

ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.

தருமபுரி: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குளறுபடியை உடனடியாக சரி செய்!

தமிழ்நாடு அரசு நேரடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து ஆலை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.