மக்கள் அதிகாரக் கழகம்
டிசம்பர் 25 – சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா || ம.அ.க அறிவிப்பு
நவம்பர் 29-இல் நடக்க இருந்த சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா டிசம்பர் 25ஆம் தேதி (25.12.2025) வெண்மணி ஈகியர் நாளில், மாலை 4.00 மணி அளவில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அதே திருமண மண்டபத்தில் (அ.பா.வளையாபதி மகால், திருமோகூர், யா.ஒத்தக்கடை, மதுரை) நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்
தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!
உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மண ஏற்பு விழா ஒத்திவைப்பு – அறிவிப்பு
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அமைப்பின் முதுபெரும் தோழர் இறந்துவிட்ட காரணத்தினால் மண ஏற்பு விழாவினை ஒத்தி வைக்கிறோம். திருமணம் நடத்துவதற்கான குறிப்பான தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.
பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு: கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!
பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
கோவை மாணவி மீதான பாலியல் வன்முறை: தோற்றுப் போனது அரசு கட்டமைப்பு!
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகள்: கார்ப்பரேட்மயமாக்கல்தான் தற்சார்பா?
ஏற்கெனவே மரபணு திருத்தப்பட்ட நெல் விதிகளைத் தடை செய்யக் கோரி விவசாயிகள் போராடிவரும் சூழலில், தற்போது மத்திய அரசு மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
சாலையோரக் கடைகளை அடாவடியாக அகற்றிய ஓசூர் மாநகராட்சி!
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களை பெரும் தனியார் நிறுவனங்கள், அரசியல் செல்வாக்குள்ள தனி நபர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. உழைக்கும் மக்களுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?
கிருஷ்ணகிரி: யானைகள் தாக்கி விவசாயிகள் பலி! மாவட்ட நிர்வாகமும், வனத்துறையுமே குற்றவாளிகள்!
வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றவில்லை. யானைத் தாக்குதலால் விவசாயிகள் உயிரிழக்கும்போது வாக்குறுதிகள் கொடுப்பது, அதன் பிறகு அலட்சியமாக இருப்பது என்ற போக்கிலேயே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும் பாசிச நடவடிக்கையே!
வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும், பாஜக-வின் பாசிச உறுப்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
கிருஷ்ணகிரி: பருவமழையால் பயிர்கள் சேதம்!
கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் அஞ்செட்டி, உரிகம், தின்னூர், அத்திக்கோட்டா, எஸ்.குருபட்டி மற்றும் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
தஞ்சை: கபிஸ்தலம் – தலித் மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்குதல்! | ம.அ.க கண்டனம்
கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.
தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | ம.அ.க
அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் பல வாரங்கள் காலம் கடத்துவதாலும், கொள்முதல் நிலையங்கள் தேவையான இடவசதியும் முறையான பாதுகாப்பு வசதியும் இல்லாததாளும் டன் கணக்கில் நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சேதமடைந்து வருகின்றன.
தனியார் பல்கலைக் கழக திருத்தச் சட்டம்: ம.அ.க கண்டனம்
தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.















