மக்கள் அதிகாரக் கழகம்
To love – marry beyond caste, religion Need Democracy | Revolutionary Anti-caste marriage |...
The RSS, BJP, and the Sangh Parivar on one side, and their subservient allies — the dominant caste supremacist outfits and political partie s— keep nurturing the poison of caste pride, desperate to preserve this rotten system somehow.
நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் – தேவாலயங்களில் அத்துமீறல்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச சங்கப் பரிவாரங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கின. அடுத்ததாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளன.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர் || நூல்
சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களின் பங்களிப்பையும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டை நிறுவ வேண்டிய அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் || நூல்
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.
பணி நிரந்தரம் கோரும் செவிலியர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.
பாசிச சக்திகள் மென்மேலும் வளரக்கூடாது என்பதில் போராடும் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கும் அந்த பொறுப்பு வேண்டும். தனியார்மய - தாராளமய - உலகமய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது,போலீசு ஆட்சியை நடத்துவது ஆகியவை பாசிச சக்திகளுக்குப் பயன்தரக்கூடியவையாகும்.
ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.
தருமபுரி: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குளறுபடியை உடனடியாக சரி செய்!
தமிழ்நாடு அரசு நேரடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து ஆலை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுக விழா!
இந்த மணவிழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அழைக்கிறோம்.
நீதிபதி செம்மல் மீதான இடைநீக்க நடவடிக்கை இயற்கை நியதிக்கும் அறத்திற்கும் எதிரானது!
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக போலீசு செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதற்காகவே ஒரு நீதிபதி பழிவாங்கப்படுகிறார் என்பது இன்றைய அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பதற்கான சான்றாகும்.
சாதி மறுப்பு புரட்சிகர மண விழா தொடர்பான ஓர் முக்கிய அறிவிப்பு!
சாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கத்துடன் வெண்மணி ஈகியர் நாளில் நடக்க இருந்த சாதி மறுப்பு புரட்சிகர மண விழா டிசம்பர் 25-க்கு பதில் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி வைக்கப்படுகிறது.
இ ஃபைலிங் முறைக்கு எதிரான தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க
அதிவேக இணைய வசதி, மின் வசதி, ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே இனி வழக்கறிஞராக நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து பல தலைமுறைகளாக வழக்கறிஞராக இருப்பவர்கள், பெரும் பணக்கார கும்பல் மட்டுமே நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும் அல்லது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகும்.
ம.அ.க. மாநில தலைமைக் குழுவின் ஆறாவது கூட்டம் || தீர்மானங்கள்
மக்கள் அதிகாரக் கழகத்தின் ஆறாவது மாநில தலைமைக் குழு கூட்டம் டிசம்பர் 08, 09 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்காலகட்டத்தில் தேசிய, சர்வதேசிய நிலைமைகளைப் பரிசீலித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் | ம.அ.க.
நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையை சட்டத்துக்கு புறம்பாகவும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் பொதுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லாத போதும் திட்டமிட்டு வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவதற்காக நீதிபதி இச்செயலை செய்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்! | ம.அ.க கண்டனம்
நீதிபதி சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பானது முன் தீர்ப்புகளையும் சட்டங்களையும் கணக்கில் கொள்ளாமல் இந்து மத வெறி பாசிஸ்டுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அமைந்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜி. ஆர். சுவாமிநாதனின் உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறது.
லெப். சாமுவேல் கமலேசன் பணிநீக்க வழக்கு – இந்துராஷ்டிரத்தை நிறுவும் ஆபத்தான தீர்ப்பு!
ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு எதிராக உயர் அதிகாரிகளால் வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? மேற்கண்ட தீர்ப்பானது, இராணுவம் மட்டுமல்ல அரசின் அனைத்து உறுப்புகளையும் காவிமயமாக்கி இந்து இராஷ்டிரத்தை நிறுவுவதற்கான தீர்ப்பாகும்.













