வினவு
கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!
கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !
The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)
1905 முதல் ரசியப்புரட்சியின் எழுச்சியை ஒரு போர்க்கப்பல் மாலுமிகள் கலகம் செய்வதின் வழியாக காட்டும் இயக்குநர் ஐசன்ஸ்டீனின் மவுனப்படம். வடிவ நேர்த்திக்காக திரைப்பட அறிவாளிகளும், உள்ளடக்க எழுச்சிக்காக தொழிலாளி வர்க்கமும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க படம். வீடியோ இணைப்பு! பாருங்கள், எழுச்சியின் அவசியத்தை உணருங்கள்!!
5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!
கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா?
முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!
இமானுவேல் சேகரனை ஆள்வைத்துக் கொன்ற முத்துராமலிங்கம் அப்பாவி என்பதுதான் பெ.தி.கவின் நிலைப்பாடா? அது உண்மையெனில் இப்போது பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அவ்வியக்கத்தினர் பேசுவது நாடகமா?
அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!
சட்டமன்றத்தில் அம்மாவின் அடிமையாக கருணாநிதியை அடுக்கு மொழியில் பழித்து பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து பதவிசாக காலத்தை ஓட்டி வந்தவர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் ஆப்பு விரைவாக செருகப்பட்டுள்ளது
எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!
எல்லா வகை அபாயங்களோடும் வாழும் நமது நாடுகளில் விபத்து என்பது சமூக வகைப்பட்டதாக, நிறுவன ரீதியாக இருக்கிறது. அதை வெறுமனே மொக்கை உபதேசங்களோடு கடந்துவிடலாம் என்பது இயக்குநரது துணிபு.
‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!
ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி தரக் குறைவுக்குத்தான் வழிவகுத்திருக்கிறது. பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனது
மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
1200 தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் என்பதல்ல விஷயம். இவர்களுக்காக மானேசர் தொழிற்பேட்டையிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!
தற்போது சோமாலியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருக்கம் மக்களுக்காக மேற்குலக ஊடகங்கள் மக்களிடம் காணிக்கை போடுமாறு கேட்டு வருகின்றன. இனி அந்த கோரிக்கை அமெரிக்க மக்களுக்காகவும் இருக்குமோ?
ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.
அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!
விபத்தில் காயமடைந்தவர்களை சுமந்து சென்றால் பணம் கிடைக்காது, வண்டியையும் கழுவ வேண்டும், பிற சவாரிகளையும் இழக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களை அப்படி செய்யச் சொன்னது எது? திருமண விருந்து வேலையை நிறுத்தி விட்டு சிதறிக்கிடக்கும் மனிதச்சதை கண்டு நிலை தவறாமல், காயம் பட்ட உயிர்களை அந்த சமையல் தொழிலாளிகள் காப்பாற்றியது எதனால்?
ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”
நேற்றுவரை இலவசங்களே கூடாது என்று கூப்பாடு போட்ட ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை துதிபாடிக் கொண்டிருக்கின்றன.
விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்!!
இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்? நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் 'தேசபக்தர்கள்' இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன?
கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?
ஒரு பா.ஜ.க பெருச்சாளியின் வளைக்குள்ளே…
ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை.



