Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் 'காம்ரேடு'களும்!

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

-

ஜயகாந்த்-கம்யூனிஸ்டு

ழை பெய்ததும் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, பின் அறுவடை செய்யும் விவசாயிகளோடு ஒப்பிடும் போது ஓட்டுக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை என்னவென்று சொல்வது?

ஐந்தாண்டுகள் கொட நாட்டில் படுத்துக் கொண்டே எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு, இறுதி ஆண்டில் ஈர்த்து வரப்படும் கூட்டத்தை வைத்து ஹெலிகாப்டரில் பறந்து ஆர்ப்பாட்டம் செய்த ‘புரட்சித் தலைவி’ தி.மு.க அரசாங்கம் மீது மக்கள் கொண்ட வெறுப்பினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கரையொதுங்கினார்.

அது உழைத்துப் பெற்ற வெற்றியல்ல, உட்கார்ந்து பிடித்த வெற்றி என்றாலும் அம்மாவின் ஆணவத்தை தேர்தலுக்கு முன்பேயே நாம் மட்டுமல்ல அம்மாவின் நிழலை வணங்கி கரையேறிய கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்திருந்தார்கள். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதே வேட்பார்களை வெளியிட்டதாக இருக்கட்டும், பிரச்சாரத்தில் அவர்களை வேண்டாத விருந்தாளியாக பந்தாடியதாக இருக்கட்டும் எதுவும் மறக்கக் கூடிய ஒன்றல்ல.

ஆனாலும் தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் குவிந்திருந்த தமிழக மக்களின் மனநிலையை அம்மாவின் சேட்டைகள் சிதறடித்துவிடும் என்று அவரது அந்தப்புரத்து சாணக்கிய குருக்கள் கொஞ்சம் ஓதியதன் பலனாக அம்மா கொஞ்சம் இறங்கி வந்தார். அப்போதும் கூட ‘கேப்டன்’ விஜயகாந்தும், காம்ரேடுகளான போலிக் கம்யூனிஸ்டுகளும் சுயமரியாதை இன்றி அம்மாவின் அருளைப்பெற அலைந்த கதையும் நமக்கு மறந்திருக்காது.

தேர்தல் முடிவு வந்ததும் கையில் திணிக்கப்பட்ட அந்த வெற்றி தனது கடந்த கால ஆட்சியின் மகத்துவத்தை நினைத்து மக்கள் பயபக்தியுடன் அளித்த வெற்றி என்று ஜெயா பேசினார். “எனது அரசு, எனது திட்டம், எனது தொலை நோக்கு,” என்று எதற்கெடுத்தாலும் அந்த ட்ரிபிள் எக்ஸ்எல் அகந்தை அவ்வப்போது ஆட்டம் போட்டாலும் பார்ப்பன ஊடகங்கள் எதுவும் அதை கண்டு கொள்ளாததோடு ஏதாவது கோரிக்கை இருந்தால் பணிவோடு முன்வைத்து அம்மா பார்த்து ஏதாவது செய்தால் சரி என்று எழுதி வந்தனர். இந்த பக்தி பஜனை மண்டலியில் தினமணி வைத்தியநாதன் முதல் ஆளாய் இருந்தார்.

அம்மாவோடு கூட்டணி வைத்து அடிமைத்தனத்தோடு பணியாற்றியதன் பலனாக தே.மு.தி.கவிற்கு எதிர்க்கட்சி தகுதியும், காம்ரேடுகளுக்கு சில சீட்டுகளும் கிடைத்தன. பிறகு சட்டமன்றத்தில் அவர்களும் அம்மா சரணம் பாடியே காலத்தை ஓட்டினார்கள். சமச்சீர்கல்வி ரத்து என்று வந்த சட்டத்திற்கு போலிக்கம்யூனிஸ்டுகள் முதல் ஆளாய் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள். கேப்டனின்அடிமை எம்.எல்.ஏக்களோ கருணாநிதியை பழித்து அடுக்கு மொழியில் பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்கள்.

ஆனாலும் அம்மா தே.மு.தி.க சில்லறைகளை மதிக்கவில்லை என்பதோடு அவ்வப்போது கலாய்க்கவும் செய்தார். சட்டமன்ற அனுபவம் இல்லாத அந்த கத்துக்குட்டிகள், மேட்டூரில் அணை இருக்கிறது, திருத்தணியில் முருகன் கோவில் இருக்கிறது என்ற வரலாற்று உண்மைகளை பேசி கொல்கிறார்கள் என்று அம்மா அவர்களை எச்சரிக்கவே செய்தார். இவையெல்லாம்  கேப்டன் முன்னிலையில் நடந்திருந்தாலும் பதிலுக்கு திருப்பி சுடுவதற்கு அவரென்ன இராணவத்தில் இருக்கும் கேப்டனா என்ன? ஆர்.கே.செல்வமணி அளித்த அந்த கேப்டன் பதவியையும், வெத்துத் துப்பாக்கியையும் வைத்து மன்சூர் அலிகானை வேண்டுமானால் சுடலாம், அம்மாவை முடியுமா என்ன?

தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் புரட்சித் தலைவி மேயர், நகராட்சி என்று எல்லா பதவிகளுக்கான அ.தி.மு.க அடிமைகள் பட்டியலை அறிவித்து விட்டார். கூட்டணிக் கட்சி என்று பரிதாபத்துடன் கூறிக்கொள்ளும் சில அய்யோ பாவம் அடிமைகள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அம்மாவின் அதிரடிக்கு முன் கால்தூசு.

ஆனாலும் காம்ரேடுகள் விடவில்லை. விடாது போயஸ் தோட்டத்திற்கு காவடி எடுத்தார்கள். ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் (நல்லகண்ணுவிற்கு என்னாச்சு?) வந்தார்கள்; பேசினார்கள்; அம்மா வெளியிட்ட பட்டியல் இறுதியல்ல என்றார்கள். இப்படி என்னவெல்லாம் சமாதானமடைய முடியுமோ அப்படி எல்லாம் பேசினார்கள். ஆனாலும் அவர்களுக்கு மேயர் இல்லை, ஏற்கனவே இருந்த நகராட்சி இடங்களும் இல்லை என்று முதல்கட்ட ‘பேச்சுவார்த்தை’கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் காம்ரேடுகள் இத்தகைய போயஸ்தோட்டத்து அடிமைத்தனத்தில் கொட்டை போட்டவர்கள் என்பதால் ஏதோ சில எலும்புத்துண்டுகள் கிடைக்காமல் போகாது. ஆனால் கேப்டன் நிலையோ இன்னும் பரிதாபம். 29 நபர்களை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு நடந்தது போன்று இப்போதும் அம்மா இறங்கி வரமாட்டார் என்று கேப்டன் வீட்டு நாய்குட்டிக்கு கூடத் தெரியும்.

அப்போதாவது தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது அசுர பெரும்பான்மையில் ஆட்சியை அதிகாரத்துடன் நடத்தும் அம்மாவிடம் ஏதாவது கோரிக்கை வைக்க நினைத்தாலும் அது தொண்டைக்குழியை தாண்டி வருவது கடினம். மேலாக தி.மு.க பெருந்தலைகளே அம்மாவின் ருத்ர தாண்டவத்தை கண்டு கதிகலங்கிய நிலையில் கத்துக்கட்சி கேப்டன் கட்சியினர் என்ன செய்து விட முடியும்?

பத்து மேயர் பதவிகளில் நான்கிலிருந்து இரண்டு வரை, உள்ளாட்சி பதவிகளில் முப்பது சதவீதம் என்று பெருந்தன்மையுடன் மனக்கோட்டை கட்டிய கேப்டன் தற்போது என்ன செய்வது என்று திண்டாடி வருகிறார். அம்மாவின் நூறு நாள் ஆட்சி விழா பஜனை மண்டலிக்கு அவர் போகவில்லை என்பதுதான் பு.த வின் கோபத்திற்கு காரணம் என்று கேப்டனது பாடிகார்டுகளே பேசிவருகிறார்கள்.

அதன்படி கேப்டன் தனியாக தேர்தலில் நிற்பதை அவரது கட்சியினர் யாரும் விரும்பவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக அம்மாவும் அருள்பாலிக்க தயாரில்லை. சில பல எலும்புத் துண்டுகளை கவ்விக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவரது நிலை. காம்ரேடுகளை முதலில் அழைத்து பேசியது போல பெரிய கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவை இன்னும் பேசுவதற்கே அழைக்கவில்லை என்பது வேறு கேப்டனது படை வீரர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. இதெல்லாம் வைகோ அண்ணனின் வசந்த மாளிகை புலம்பலில் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.

அரசியல் வெற்றி என்பது கட்சிகள் தமது சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டி பெறும் போராட்டம் என்பது இல்லாமல் சில வரலாற்று விபத்துக்களால் கிடைத்தால் என்ன நடக்கும்? போயஸ் தோட்டத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு அம்மா போடும் ஆட்டமும், அந்த ஆட்டத்தில் சில எலும்புகளாவது தவறி கீழே விழும் என்று கூட்டணி அடிமைகள் தவமிருப்பதும் மேற்கண்ட விபத்து வெற்றியின் தொடர் விளைவுகள்.

இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற அநாமதேயங்கள் கேப்டன் கட்சிக்கு 51 சதவீத சீட்டு ஒதுக்கீடு தருவோம் என்றெல்லாம் பேசிக் கொல்லுகிறார்கள். இந்தச்சூழலில் லெப்டிணன்ட்டுகளின் கூட்டத்தை கூட்டிய கேப்டன் “எல்லாவற்றும் தயாராக இருக்குமாறு” பேசியிருக்கிறார். முக்கியமாக இந்த சொந்தக்கதை, சோகக்கதையெல்லாம் மீடியாவில் வெளியாகிவிடுவதாகவும், இந்த முறை அப்படி வெளியானால் இனி இந்த கூட்டத்தை கூட்டவே மாட்டேன் என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்.

தனது சொந்த சோகத்தைக் கூட வெளியுலகிற்கு தெரிவிக்காமல் குமுறி குமுறி அழவேண்டிய இந்தக் காட்சி எதை நினைவுபடுத்துகிறது?

 1. நம்புங்கள்! நாங்கள் புரட்சித்தலைவியின் காலில் விழுவது மக்களுக்கு தொண்டு செய்யத்தான், இப்படிக்கு போலிகம்யூனிஸ்டுகள்.

 2. சட்ட மன்றத்தில் மருத்துவர் கிருட்டிணசாமி, சிபிஐ(பொறுக்கிகள்), சிபிஐ(பார்ப்பன), கேப்டன் விஸ்கிகாந்த் என எல்லோரையும் வெத்து வேட்டுகள் என ஜெயலலிதா செருப்பால் அடித்தாலும்… இவர்கள் ஜெவின் சொந்த அடிமைகளை மிஞ்சும் அளவிற்கு விசுவாசம் காட்டதற்கு சரியான விளக்கமாத்தடிதான் இந்த வேட்பாளர் அறிவிப்பு…

  இந்த தேர்தலில் செந்தமிழன் சீமானின் மண்டியிடாத மானம்… வீழ்ந்து விடாத வீரத்திற்கு எத்தனை கவுன்சிலர்கள் இடம் கிடைக்க போகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்…

  எது நடந்தாலும் சரி… தமிழின காவலர்கள் சீமான், நெடுமாறன், கொளத்தூர் மணி, பாரம்பரிய மீனவர் சங்கம், டி.எஸ்.எஸ்.மணி, இயக்குனர் சேரன், பாரதிராஜா, மணிவண்ணன், சத்யராஜ் என அனைவரும் ஓர் அணியில் திரண்டு புரட்சிதலைவி அம்மாவின் வெற்றிக்கு பாடுபடுவார்கள்…

 3. கம்யூனிஸ்ட்டுகள் கண்டிப்பாக புரட்சி செய்திடுவாங்க! தா.பாண்டியனை பார்த்தாலே தெரியுது

 4. comrade என்பதற்கு நல்ல அர்த்தம் கொண்ட வார்த்தை, அதை இந்த நான்கு சீட்டுக்கு நாக்கை தொங்க போட்டு காத்திருக்கும் போலி பொதுவுடைமை வாதிகளுக்கு சூட்டி அசிங்கபடுத்த வேண்டாம் என்று ஆசிரியரை கேட்டுக் கொள்கிறேன்…

 5. உங்களுக்குதான் தேர்தல் நீதி மன்றம் சட்ட சபை இதிலெல்லாம் நமபிக்கையே இல்லையே .அப்புறம் யாரு எங்க கூட்டணி போன என்ன?

 6. பொதுத் தேர்தலில் கேப்டன் கேடட் ஆன கதை அனைவரும் அறிந்ததே. இப்போது என்ன ஆவாரோ?

  உள்ளாட்சித் தேர்தல் நெருங்குகிறது. மலத்தைக் கவ்வ மீண்டும் பன்றிகளின் படையெடுப்பு.

  கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..
  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_29.html

  எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!…
  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

  யாருக்கும் வெட்கமில்லை!
  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_24.html

  மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_19.html

  கேப்டன் கேடட் ஆன கதை!
  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

 7. நரன்! //உங்களுக்குதான் தேர்தல் நீதி மன்றம் சட்ட சபை இதிலெல்லாம் நமபிக்கையே இல்லையே .அப்புறம் யாரு எங்க கூட்டணி போன என்ன?//
  பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அவர் ஏன் கருவரை நுலைவு போராட்டம் நடத்தினார்?
  ம.க.இ.க.க்குதான் கடவுளை அரவே ஆகாது அவங்க ஏன் கருவரை நுலைவு போராட்டம் நடத்தினார்கள், தில்லைப் போராட்டம் நடத்தினார்கள்?
  கம்யூனிஸ்டுகளுக்குதான் முதலாளிகளை பிடிக்காதே அப்புறம் ஏன் கூலி உயர்வுக்காக முதலாளிகளிடம் போராடுகிறீர்கள்?
  பு.மா.இ.மு.க்குதான் தனியார் கல்வி நிறுவனங்களை பிடிக்காதே அப்புறம் ஏன் தனியார் கல்வி நிரறுவனங்களின் கட்டணக்கொள்ளைக்கெதிராக போராடுகிறது? என்றுக் மொக்கையாக கேள்வி கேதாதீர்கள் பாஸ்.

  • பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை////
   .
   .
   வேற எதனா உதாரணம் சொல்லுங்க.இது தப்பு
   25-08-1929 -’குடியரசு’ இதழில் எழுதுகிறார்:-

   ‘‘இன்று நாம் கொண்டாடும் திரு. மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன் சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு. மகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாகச் சொல்லுவேன்’’.

   23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-

   புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

   21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

   ‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
   … பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’

   26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

   ‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’

   26-12-1948 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

   அறிவான தெய்வமே (ராமலிங்கம்) அன்பான தெய்வமே (கிறிஸ்து) அருளான தெய்வம் (மகமதுநபி) சத்யமான தெய்வமே (காந்தி).

   31-12-1948 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

   ‘‘… ஆனால் கிருஸ்துவையோ, மகமது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை ஏன்? அவர்களெல்லாம் லட்சிய புருஷர்களாக ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்’’

   04-06-1959 ‘விடுதலையில்’ எழுதுகிறார்:-

   ‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’

   25-12-1958 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

   ‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’
   *
   *
   அய்யா கருணாநிதி கோஷ்டில கூடத்தான் குழப்பம் இருக்கு!!அதை ஏன் கண்டிக்கல?

   • அய்யா, நீங்க மாம்பழம் சாப்பிடறப்போ..’என்னய்யா இது மாம்பூ சாப்பிடறீங்க? வேற ஏதும் திங்கக் கிடைக்கலையா?’ என்பேனாம் நான்..நீங்க என்ன சொல்லனும்? “அய்யே..நான் சாப்பிடுறது மாம்பழம்தான்” அப்படிங்கணும்..உடனே நான் என்ன கேப்பேன்? “15 நாளைக்கு முன்னாடி மாம்பூதான் இது..அதைத்தான் நீங்க சாப்பிடறீங்க” உடனே..நீங்க ஆமாமா நான் மாம்பூவத்தான் சாப்பிடறேன் அப்படின்னு சொல்லணும்..என்ன புரிஞ்சுதா? (புரியலன்னா..பெரியார் 1958க்கு பிறகும் 15 வருசம் இருந்தார்…1968இல் ஒரு மாநாட்டில்தான் ‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’ங்கிற வாசகத்தை உருவாக்கினார்..அதுவரை அவருடைய நாத்திகம் பரிணமித்தபடிதான் இருந்தது)…

 8. “பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அவர் ஏன் கருவரை நுலைவு போராட்டம் நடத்தினார்?”

  periyar porattam nadathiyathu manitha neyathin adippadaiyil. oru saga manithan kevalamaga nadathapadukiran, avanai oru manithanaga madhikkamal puzhuvaga ninaithu samoogam avanai izhivaga nadathukirathu, midhikkirathu…indha karanathinal andha odukkappattavargalukkaga periyar poradinar. koottani vishayathil vinavu yen comment adikka vendum? oh…oru velai adhe kaaranangalthano? vinavin manithabimaname manidhabimanam. pullarikkudhu saar.

 9. ndha karanathinal andha odukkappattavargalukkaga periyar poradinar////..
  .
  .
  கொஞ்சம் தெளிவாகா பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லவும்.தலித் மக்களுக்காக அவர் என்றுமே போராதியது இல்லை!

 10. பார்பன ஏடுகள் என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அதில் இந்து பத்திரிக்கையும் அடங்குமா ? அப்படியென்றால் இந்து பத்திரிக்கை கட்டுரைகளை அவ்வப்போது கூசாமல் எடுத்து, மொழியாக்கம் செய்து இங்கு வெளியிடுகிறீர்களே ? இரட்டை வேடம் மற்றும் போலித்தனம் தான் இவை.

  பி.கு : பி.சாய்நாத் அவர்களும் ஒரு பார்பனர் தான்.

  • வினவுதான் பதில் சொல்ல வேண்டும்.. ஆனால் சொல்ல மாட்டாரு… கொஸ்டினு அந்த மாதிரி…

  • வழக்கம் போல் அதியமான் தனது அரைகுறை உளறல் மற்றும் பார்ப்பன அடிவருடிதனத்தை நிரூபிக்க இங்கே வந்து லூசுதனமாக கேள்வி கேட்கிறார்…

   தி ஹிந்து ஒரு பார்ப்பன பத்திரிக்கையே… ஈழ போராட்டத்தில் சிங்கள அரசிற்கு தரகு வேலை பார்க்கும் ராம், பார்ப்பனீயத்திற்கும், ஜெயலலிதா போன்ற பார்ப்பன வெறி கொண்ட பாசிஸ்டுகளுக்கு சாமரம் வீசும் தி ஹிந்து பார்ப்பன பத்திரிக்கையே…

   பார்ப்பனராக பிறந்த சாய்நாத்… முதலாளித்துவத்தை அம்பலபடுத்தவால்… தி ஹிந்துவில் வரும் பார்ப்பன வெறி பிடித்த எல்லா பொருள்களையும் ஏற்று கொள்ள வேண்டுமா?

   பார்ப்பனராக பிறந்தவர்கள் எல்லோரும் முதலாளித்துவ அடிவருடிகள் இல்லை என்பதற்கு சாய்நாத் உதாரணமாக இருக்கலாம்…

   சமூக நீதியாளர்கள், பொதுவுடமைவாதிகளுக்கு பார்ப்பனர்கள் எதிரி இல்லை… பார்ப்பனீயம்தான் எதிரி…

   பார்ப்பன ஹிந்து மதம் சொல்லும், வர்ணாசிரமம் சொல்லும், மனுதர்மம் சொல்லும் இழிபிறவியாக… சூத்திர சாதியில் பிறந்த அதியமான்… பார்ப்பன அடிவருடியாகவும், தீவிர பார்ப்பன விசுவாசியாகவும் வாழ்ந்து காட்டி நவீன பார்ப்பனராக முயற்சி செய்தாலும்… பார்ப்பன ஹிந்து மதத்தின் படி இழி பிறப்பான சூத்திர சாதியே…

   சமூதி நீதியாளர்கள், பொதுவுடமைவாதிகள் பார்வையில் சாய்நாத் முதலாளிதுவ எதிர்ப்பாளர்… அதியமான பார்ப்பன அடிவருடி… போதை வஸ்துகளை அடித்து போதை தெளியாமல் இருக்கும் போதைகாரர் போல் முதலாளித்துவ போதையில் இருந்து வெளிவர முடியாத முதலாளித்துவ போதை அடிமை…

   அதியமான் ஏற்று கொண்ட பார்ப்பன ஹிந்து மதத்தின் பார்வையில் சாய்நாத் பிறப்பால் பார்ப்பனராக இருக்கலாம்… பார்ப்பன ஹிந்து மதத்தின் பார்வையில் அதியமான் பிறப்பால் இழிபிறப்பான சூத்திர சாதிகாரர்…

   தி ஹிந்து பத்திரிக்கை… எங்களது கட்டுரைகள் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என சொல்லும் போது… பார்ப்பன அடிவருடி அதியமான் ஹிந்துவில் இருந்து மொழியாக்கம் செய்ய கூடாது என பார்ப்பன ஹிந்துவின் சார்பில் சர்வாதிகாரம் செய்யலாம்… வினவை கேள்வி கேட்கும் அதியமான் தி ஹிந்து கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்திடம் போய் தி ஹிந்து பார்ப்பனர்களுக்கு மட்டுமான பத்திரிக்கை… வினவு போந்து பொதுவுடைமை பேசுபவர்கள் படிக்க கூடாது… அவர்களிடம் விற்க வேண்டாம் என மண்டியிட்டு மன்றாலாம்..

   முதலாளித்துவ… பண… பார்ப்பனீய போதையில் இருந்து வெளிவர மறுவாழ்வு மையம் இல்லாததல்… அதியமான் போன்ற முதலாளித்துவ… பண… பார்ப்பனீய போதைகாரர்களுக்கு… மனிதர்களாக வாழ… மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு… மிக மிக குறைவாக இருக்கிறது…

   • ________________________

    என்னை பற்றி வசவுகளை நேரில் என்னை பார்க்கும் போது பேசு பார்க்கலாம். _________________திருந்த மாட்டீக. அன்று கேணி சந்திப்பில் நாம் உரையாடினோம். மறுபடியும் சந்திப்போம். அப்ப சொல்லு பார்க்கலாம். அப்ப நான் ‘பதில்’ சொல்றேன். வன்முறை கூடாது என்று தான் கருதுகிறேன். ஆனால் உன்னை போன்ற ___________ தர்ம அடி அடித்தால் தப்பில்லை என்று தான் கருதுகிறேன். இரு, இரு, அடுத்த முறை சந்திக்கும் போது வச்சிக்கிறேன்.

    வினவுக்கு தான் நான் எழுப்பிய கேள்வி. அவர்கள் பதிலை தான் எதிர்ப்பார்கிறேன். பண்பில்லாத போலி பெரியார்வாதிகளிடம் இருந்து அல்ல.

    • அதியமான்,

     இப்படி டென்சன் ஆனா எப்புடி?

     நான் எந்த வித வசவுகளையும் செய்யவில்லையே?

     நீங்கள் அடிவருடி கொண்டிருக்கும் பார்ப்பனீயமும், பார்ப்பன ஹிந்து மதமும்… உங்களை எப்படி பார்க்கிறது என சொன்னால் என்னை தகாத வார்த்தைகளால் வசைபாடுவதுதான்… பார்ப்பனீயத்திற்கு சேவையோ?

     உங்களால் என்னை அடிக்க முடியாதா? அதற்கு கூட பார்ப்பனீய பாணியில் தர்ம அடிதான் கொடுக்க வேண்டுமா?

     இந்த பதிவின் மூலம்… உங்களின் பண்பு உலகறிந்த ஒன்றுதானே?

     நீங்கள் கேள்வி கேட்டது பொது தளத்தில்… அதற்கு நான் விளக்கம் கொடுக்க கூடாதோ?

     இனிமேல் தெளிவாக சொல்லி விடலாமே?

     தி ஹிந்து பத்திரிக்கையை… பொதுவுடமைவாதிகள்… பெரியார்வாதிகள் படிக்க கூடாது?

     பார்ப்பனீயத்தை யாரும் கேள்வி கேட்க கூடாது…

     முதலாளித்துவ கோர தாண்டவங்கள் பற்றி யாரும் எழுதவோ… பேசவோ கூடாது…

     எல்லோரும் முதலாளிதுவ… பார்ப்பனீய போதையிலேயே விழுந்து கிடக்க வேண்டும்…

     இதெல்லாம் அதியமான் சர்வாதிகாரியாகும் ஆணையிடலாமே?

     நீங்கள்தான் பெரியார்வாதிகளுக்கு அக்மார்க் முத்திரை கொடுப்பவரோ?

     • தமிழ் குரல் அண்ணே… முதலில் அதியமான் அண்ணன் கேள்வி கேட்டது வினவிடம்… நீங்க ஏன் பர பரன்னு பார பாரவ எழுதி சாய்க்கறீங்க….

      உங்களுடைய பதில், ஏன் இந்து பத்திரிக்கையை படிக்கிறீர்கள் என்ற கேள்விக்கானதாக உள்ளது… ஆனால் கேள்வி அதுவே அல்ல…
      அதியமானின் கேள்வியை மீண்டும் படித்து பாருங்கள்…

      \\தி ஹிந்து பத்திரிக்கையை… பொதுவுடமைவாதிகள்… பெரியார்வாதிகள் படிக்க கூடாது?\\ – இது உங்களுய்டைய அங்கலாய்ப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை…

      அவர் கேட்டது… வினவு ஏன் இந்து பத்திரிகையில் வந்த செய்திக்கு வக்காலத்து வாங்கி அந்த செய்தியை காப்பி செய்து மீள் பிரசுரம் செய்கிறது என்பதே…

      இது தார்மீக அடிப்படியில் ஒரு வாசகன் ஒரு பத்திரிகை ஆசிரியர்க்கு எழுப்பிய கேள்வி.. வாசகர்களுக்கான பொது விவாத கேள்வி அல்லவே… பிறகு நீங்கள் ஏன் ஒரு வாசகனுக்கும் ஆசிரியருக்கும் உண்டான வினா-விடை உறவில் இடை புகுகிறீர்?

      • தமிழ் குரலின் பின்னூட்டத்திலேயே பதில், இருக்கிறதே!.

       அதியமானின் கேள்வி இந்து ராமை நோக்கியும் வந்திருக்க வேண்டும், ”முதலாளித்துவத்தை ஆதரிக்கும் முதலாளித்துவ பார்ப்பனனான இந்து ராம் முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தும் பார்ப்பனன் சாய்நாத்தின் கட்டுரையை ஏன் பிரசுரிக்க வேண்டும்?”

     • தமிழ்,

      நேரில் நாம் உரையாடிய போது, என்னை ‘பார்பனைய அடிவருடி’ என்றெல்லாம் அழைக்காமல், மிகுந்த ‘மரியாதையோடு’ பேசீர் ? ஏன் அப்ப இதை சொல்ல வேண்டியதுதானே. பார்பனியம் என்றால் என்னவென்று எமக்கும் தெரியும். எனது பதிவுகளை, பின்னூட்டங்களை படித்த்தும், எமது நிலைபாடுகளை புரிந்து கொள்ளும் ‘பகுத்தறிவு’ அறவே இல்லாதவர் நீர். சும்மா அறிவுகெட்டதனாமாகவே தொடர்ந்து பேசுகிறார். வினவுவை தொடர்ந்து படிப்பவர்கள் எம்மை ‘பார்பனிய ஆதரவளார்’, இந்து ஃபாசிஸ்ட், இந்துதவ ஆதரவாளர் என்றெல்லாம் கருதுவதில்லை. உமது அறிவு அப்ப்டி. உம்முடன் தொடர்ந்து இங்கு உரையாடவே விருப்பமில்லை. நேரில் வெச்சுகலாம்.

      இந்து பத்திர்க்கை பார்பனீய ஆதரவு பத்திரிக்கையா என்ன ? அதுதான் என் கேள்வி. உண்டு / இல்லை என்ற பதிலை தான் எதிர்பார்த்தேன். அவ்வளவு தான்.

 11. அதியமான் அவர்களே ஹிந்து பத்திரிக்கை பார்பனர்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்று அறிவிக்கசொல்லுங்கள். 10 நாள் கூட தாக்குபிடிக்காது. படுத்துரும். பண்பு பற்றி பார்பனிய சொம்புதூக்கிகள் பாடம் எடுக்ககூடாது. அப்புறம் பீஸ் கட்டமாட்டோம்

 12. , மேட்டூரில் அணை இருக்கிறது ரைடடு, திருத்தணியில் முருகன் கோவில் இருக்கிறதுரைட்டு,சட்ட(ச)பையில் ஒரு எருமை உடகார்ந்து இருப்பது உங்களுக்கு தெரியாதா?

 13. சாட்டை எடுத்து சாத்துங்கள் வினவு. தைரியமான பதிவு! நான் அடிக்கடி இதை பற்றி கூறி இருப்பேன் இருப்பினும் இந்த உரைநடையில் தான் இவர்களுக்கு “சொல்ல” வேண்டும் என்ன செய்வது. ஆர்.கே.செல்வமணி கொடுத்த பட்டம் தான் கேப்டன். GREAT .

   • எங்க ஊரு பாட்டி ஒண்ணு அடிக்கடி கேட்பது :

    “இந்த பஜார் முக்குல யார் யாரோ கூட்டம் பொடுறாங்க. இந்த கோட்டான் கட்சிக்காரவுங்க எப்ப போடுவாங்க? கூட்டத்துக்கு கோட்டான் வந்தா, நேரா பாக்கலாம்னுதான்.” (இதுவரை கிழவி யாரைச் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை).

    “கருப்பு எம்ஜியார்னு சொல்றாங்க… அதான் பாக்கலாமுன்னு…” (இப்போது புரிந்தது!!)

    சட்டசபையில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிற விதமும் அப்படித்தானே இருக்கிறது?

    வாழ்க கோட்டான்!

 14. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது பொதுவாக வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலேயே நிகழ்வது. கட்சி பார்த்துப் போடுவது என்பது குறைவாகவே இருக்கும். எல்லாக் கட்சிகளுமே கூட்டணி சேராமல் தனித்தனியே தேர்தலை சந்திக்கவேண்டும் என்ற என் நீண்டநாள் ஆசை தற்போது நிறைவேறும் போலத் தெரிகிறது. நடக்கட்டும்.. நடக்கட்டும். எல்லாக் கட்சிகளிலுமே அதிகாரப் பசி பிசாசுகள், ஈகோ பேய்கள் ஒன்றையொன்று அடித்துக்கொண்டு அரசியல் புயலில் கரைசேரக் காத்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே நிலை நீடிக்க வேண்டும்!! ஒவ்வொருத்தனும் ஓட்டுக்களைப் பிரித்துக் கொண்டு போகணும். ரிஸல்ட் கன்னாபின்னாவென வரணும். பின், மக்கள் திரள் புரட்சிக்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன!!

 15. போலி கம்யூனிஷ்ட் தலைவர்களின் சுயநலத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சேகுவேரா, பகத்சிங் ஆகியோரை படித்த இளையோரின் உளவியல்தான் என்ன? புரிந்து கொள்ள முடியவில்லை.உணர்வார்களா? எதிர்காலம் இவர்களை நம்பியா …………?

 16. அப்பா ! இந்த ஆர். எஸ். எஸ். அதியமானிடம் ஒரே ரோதனையாகப் போச்சு ! பெரியாரும் எங்கேயும், பார்ப்பனர்களைச் சொல்லவில்லை ! பார்ப்பனியத்தைத்தான் சொன்னார். வினவும் பார்ப்பனர்களைச் சொல்ல வில்லை. ஏன் ம.க.இ.கவின் பொதுச் செயலாளர் மருதையனை நாங்கள் பார்ப்பனர் என்று சொல்வது இல்லை. ஏனென்றால், அவர் எந்த பார்ப்பனிய கருத்துக்களோடும் இல்லை. உணவில் இருந்து வாழ்க்கை வரை உழைக்கும் மக்களுக்காக இருக்கின்றார். ஆகவே அவரைப் பார்ர்பனர் என்று சொல்லவில்லை.ஆனால் அதியமான் ஒரு பார்ப்பான். மக்களுக்கு எதிராக, அம்பிகளிடம் நல்ல பேர் எடுக்கத் துடிக்கும் ஒரு புதிய பார்ப்பான்

  ஆதவன்

  • Aathavan,

   ஆதரமே இல்லாமல் என்னை ஆர்.எஸ்.எஸ் என்று ஏன் பொய்யாக முத்திரை குத்துகிறீர். சாதி, மதவாதங்களை எதிர்ப்பவன் தான் நானும். நான் பல ஆண்டுகளாக எழுதியதை எல்லாம் படிக்காமல், மேற்படி உமது பொய்யை மட்டும் படிப்பவர்கள் தவறாக என்னை கருதக்கூடாதே என்று தான் இப்ப மீண்டும் இங்கு பின்னூட்டம் இட்டு தொலைக்க வேண்டியிருக்கிறது.

   பார்பனர்களுக்கும், பார்பனியத்திற்க்கு வித்தியாசம் எமக்கும் தெரியும். நான் கேட்ட கேள்வி, இந்து பத்திரிக்கை பார்ப்னியத்தை ஆதரிக்கும் பத்திர்க்கையா ? ஆம்/ இல்லை என்ற பதிலை தான் எதிர்பார்த்தேன். ஆம் என்றால் நிருபனம் கேட்டேன். அவ்வளவுதான்.

   பார்பன பத்திரிக்கை என்பதற்க்கு, பார்பனீய சார்பு பத்திர்க்கை என்பதற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வினவு உபயோகித்த சொல் : ’பார்பன’ பத்திரிக்கைகள் தான். எனவே இப்படி கேட்க வேண்டியதாயிற்று. வார்த்தை பிரயோகங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பார்பனர் அல்லாத பலரும் பார்பனியத்தை வழிமொழிகின்றனர் தான். பார்பனர்களில் பலரும் அதை எதிர்ப்பவர்கள் உண்டு தான். இந்த வித்தியாசமெல்லாம் அறிவேன். இன்னும் சொல்லப் போனால் இந்த தமிழ் போன்ற பக்குவமில்லாத போலி பெரியாரிஸ்டுகளுக்கு பார்னிய எதிர்ப்பு என்றால் பார்பன வெறுப்பு என்றே அர்த்தம் செய்துகொள்கின்றனர். அவரில் பல பதிவுகளின் தலைப்புகளே இதை சொல்கிறது.

   பார்பனியத்தை எதிர்ப்பதை ’பார்பனார்களை வெறு’ என்றே பலரும் அர்த்தம் செய்துகொண்டு உள்ளனர். அவர்களை திருத்துவது கடினம்.

 17. அ.தி.மு.க. வின் வெற்றியை ஜனநாயகத்திற்கு
  கிடைத்த வெற்றி என்றோம்!

  ஜெயா பதவி ஏற்பு விழாவில் மோடியுடன்
  கூடி குளாவினோம்!

  ராசபக்சேவிற்கு எதிராக நிறைவேற்றிய
  வெற்றுத் தீர்மானத்தை தமிழ் அமைப்புகள் போல்
  வானாளாவ புகழ்ந்தோம்!

  சமச்சீர் கல்வியை கொண்டுவந்ததை அன்று
  ஆதரித்தோம், இன்று அதை நிறுத்தியதற்காக
  ஜெயாவை புகழ்ந்தோம்!

  வரிவிதிப்பு கொடுமை என்று மக்கள்
  உணர்ந்தார்கள், நாங்களும்தான்,
  ஆனால் உள்ளாட்சிக்காக நல்லாட்சி
  என்று வர்ணித்தோம்!

  சட்ட மன்றத்தில் எங்களுக்குள் போட்டி
  (வலது,இடது) யார் புரட்சித்தலைவியை
  அதிகம் பாராட்டுவது என்பதில்!

  தி.மு.க. வை சரமாரியாக திட்டினோம்
  அம்மாவின் மனம் குளிர வைக்க!

  மூன்று பேரின் உயிர் காக
  கெஞ்சினோம், கதறினோம், கண்ணீர் விட்டோம்
  கண்டுகொள்ளவில்லை, செங்கொடி
  தீக்கரையானாள், தமிழகம் வெகுண்டெழுந்தது
  அப்போது நிறைவேற்றினார் விதி 110 ன் கீழ்
  ஒரு தீர்மானம்!

  அந்த தீர்மானம் அவர்கள் விதியை மாற்றாது
  என்று தெரிந்தும் அம்மாவை பாராட்டிணோம்!

  புத்தாண்டை மாற்றியதற்கு அம்மாவின் மனம்
  நோகாமல் பேசிவிட்டு அமர்ந்தோம்

  மோடியின் உண்ணாவிரதத்திற்கு அதிமுக
  சென்றதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்
  என்று சொன்னோம்!

  பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு
  பணி இடை நீக்கம் செய்யுங்கள் போதும் என்றோம்!

  இப்போது கூடங்குளம் பிரச்சனை சம்பந்தமாக
  தீர்மானம் இப்போது என்ன செய்வது
  பாராட்டுவதா? எதிர்ப்பதா?
  ஒன்றும் புரியவில்லை!

  முதல் பேச்சி வார்த்தை முடிவில்
  ஒப்பந்தம் ஏற்படவில்லை, மாநகராட்சி
  பட்டியல் வெளியீடு
  இது இறுதி பட்டியல் அல்ல!

  பிறகு இது கடைசி பட்டியல் அல்ல!
  இது முடிவான பட்டியல் அல்ல!

  எல்லாம் வீனாய் போனது
  இன்னமும் தொடர்கிறது பேச்சுவார்த்தை!

  வட போச்சே!

 18. ஒரு வழியாக அதிமுக கூட்டனி இறுது வடிவத்திற்கு வந்துவிட்டது. சிபிஐ, சிபிஎம், பு.த., செ.கு.தமிழரசன், சரத்தகுமார், மூமூக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுவிட்டன. 24.09.11 மாலை 5 மணிக்குள் எல்லா கட்சிகளின் ஒதுக்கீடு விவரங்களும் தெரிந்துவிடும். அதிமுக வின் எந்தந்த வேட்பாளருக்கு கண்ணகட்டபோவுதுன்னு தெரியல.

 19. DMK lose pannadhu makkal veruppunallamu kezhattu karunanidhiyin greed, 90 vayasa nrungiyiyum padhavi aasai pola andha aalukku.. adhu oru kaaranam… matrapadi kollakara kootatha backup pannadhu vidama congressoda kootani vechadhu ellathum melaga andha soothu thevadiya payyan vadiveluva pracharam panna vechadhu… andha aala pesavechadhukku ivanungalukku idhuvum venum ionnamum venum.. vadivel torture tamil cinema evo nimmadhiya oirukku

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க