முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயலலிதாவுக்கு.... ஹிந்து - தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!

ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!

-

கேள்வி 1:
இது அ.இ.அ.தி.மு.க வின் அபார வெற்றியா!
இல்லை தி.மு.க வின் பயங்கர தோல்வியா???

கேள்வி 2:
என்ன காரணம்?

கேள்வி 3:
இந்த வெற்றியில் விஜய்க்கு பங்கு எந்த அளவு?

– மஹாதீர் முஹம்து

_____________________________________________________________________

அன்புள்ள மஹாதீர் முஹம்து

ந்தத் தேர்தல் முடிவில் இளைய தளபதிக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும் ஆத்தா வெற்றி பெற்றதும் நெஞ்சிரைக்க ஓடி வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த தேர்தலுக்கு வேலைசெய்த தனது இரசிகக் குஞ்சுகளுக்கு அவர் வலிந்து நன்றியை தெரிவித்தார். எல்லாம் ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டும் காரியவாதம்தான். இத்தனைக்கும் அவர் தேர்தலில் வெளிப்படையாக பிரச்சாரமோ, டி.வியில் தோன்றி வேண்டுகோளோ கூட தெரிவிக்கவில்லை. எல்லாம் மழுப்பலான அறிக்கைகளோடு முடித்துக் கொண்டார். ஒரு வேளை தி.மு.க மீண்டும் வெற்றி பெற்றால் என்ன நடக்குமோ என்ற சுயநல பயம்தான்.

இதையே சில அரசியலற்ற காரியவாதிகள் “இதற்கு மேல் விஜய் என்ன செய்ய முடியும்” என்று ‘தத்துவ’ விளக்கமும் கொடுப்பார்கள். ஒரு வேளை விஜய் வெளிப்படையாக பிரச்சாரம் செய்திருந்தாலும் அவருக்காக மட்டும் மக்கள் வாக்குகள் சிலிர்ப்புடன் அணிவகுத்திருக்காது. தமிழ்நாட்டில் நட்சத்திரங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலை எம்.ஜி.ஆரோடு முடிந்து விட்டது. ஆனானப்பட்ட ரஜினயே ப்யூஸ் போன நிலையில், விஜயகாந்தெல்லாம் கூட்டணி தயவில் குப்பை கொட்ட வேண்டிய காலத்தில் விஜயெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒரு தேர்ந்த காரியவாதியாக தனது மகன் பிற்காலத்தில் முதலமைச்சராக வருவான் என்று கனவு காண்கிறார். அது தமிழ்சினிமா கதைமாந்தர்கள் சைக்கிளை மிதித்து ஒரு வட்டத்தில் முதலமைச்சராக எழுவதான ரீல் போன்றது.

இந்த வெத்து வேட்டு ஹீரோக்களை விட ஆனது ஆகட்டும் என்று களத்தில் இறங்கிய காமெடியன் வடிவேலு எவ்வளவோ மேல். இதற்கு மேல் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, விளக்கம் அளிப்பதோ தமிழுக்கும், வினவு வாசகருக்கும் இழைக்கப்படும் அநீதி. இந்த பதில் கூட மஹாதீர் முஹம்து போன்ற நல்லவர்கள் கேட்டு விட்டதினாலே எழுதியதுதான். ________________________________________________

இனி முக்கிய கேள்விக்கு வருவோம். இந்த தேர்தல் வெற்றியை எப்படி பார்ப்பது? இது குறித்து வினவில் முன்னர் வந்த இடுகைகளில் சில விசயங்களை கோடிட்டு காண்பித்திருக்கிறோம். இங்கு சற்று விரிவாக…..

_________________________________________________

அ.தி.மு.கவின் மாபெரும் வெற்றி, தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான  ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.

தி.மு.க பிடிக்கவில்லை என்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க பிடிக்கவில்லையென்றால் தி.மு.க இதைத் தாண்டி தமிழக மக்கள் அதி புரட்சிகரமாக யோசிப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? இதுவும் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. இதையே ஒரு ஃபார்முலாவாகக் கொண்டால் மாத்திப் போடு, மாத்தி யோசி, அது இல்லையினா இது என்றும் கூட இந்த தேர்தல் முடிவுகளை சொல்லலாமே?

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவு வாக்குப்பதிவு அதிகம் இருந்தது உண்மைதான். அதனால் ஆளும் கட்சி மீது மக்கள் கடும் சினத்தோடு இருந்திருக்கிறார்கள் என்று ஒரு ஃபார்முலாவையும் இவர்கள் கூறுகிறார்கள். இந்த அதிக வாக்குப்பதிவுக்கும் அந்தக் கடுஞ்சினத்திற்கும் என்ன தொடர்பு? ஏன்? தொடர்பு இல்லையென்றால் வேறு என்ன காரணம்?

நண்பர்களே, தேர்தலையும், அரசியலையும் ஒரு சில கணக்கு விவரங்கள், நல்லது கெட்டது, ஊழல் நேர்மை, என்று சில வாய்ப்பாடுகளோடு மட்டும் சிந்திப்பதற்கு பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம்.  தேர்தல் அரசியலோடு தொடர்புடைய சமூக இயக்கம், மக்கள் மனவோட்டம் என்ன விதிமுறைகளோடு இயங்குகிறது, என்ன விசைகளால் உந்திச் செல்லப்படுகிறது என்பனவற்றை ஆய்வு செய்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றியின் தரத்தையும், தோல்வியின் மகிமையையும் நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவினை வைத்து தினமணி பத்திரிகை, “”தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை “”தினமணி” பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!” என்று மெய்சிலிர்க்கிறது. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு ருத்ரதாண்டவமே ஆடியிருக்கிறார்கள் என்று வார்த்தைகளே வெட்கப்படுமளவு உச்சிமோருகிறது தினமணி.

அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள்! இந்த வரலாறு காணாத தோல்விக்கு காரணமென்று தி.மு.கவின் குற்றப் பட்டியல்களை பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் கூட எழுதவில்லை. மட்டுமல்ல, சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழக மக்கள் ஜெயா கும்பலை வெற்றிபெற வைத்துவிட்டார்களாம். இந்த ‘பரவாயில்லை’ என்பதன் அரசியல் தரத்தை பரிசீலித்துப் பார்க்கும் போது அந்த இமாலாய சாதனையின் அரசியல் வீழ்ச்சியை புரிந்து கொள்ள முடியாதா என்ன?

தி.மு.க படுதோல்வி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி என்பதை மற்றுமொரு தேர்தல் முடிவாக எடுத்துக் கொண்டு போனால் கூட பிரச்சினை இல்லை. அதை ஜாக்கி வைத்து வானத்துக்கு தூக்குவதையும், தங்களது பல்வேறு அபிலாஷைகளை  ஏற்றி அழகு பார்ப்பதையும் பார்த்தால் இவர்கள் அ.தி.மு.கவிற்கு மட்டுமல்ல, தி.மு.கவிற்கும் கருணாநிதியே நினைத்திராத ஆழமான பெருமைகளையெல்லாம் வழங்கி விடுகிறார்கள். தங்களது சொந்த முயற்சியில் எதையும் செய்ய முனையாத, விரும்பாத நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் பாமரர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் பொழிப்புரை, விளக்கம் கொடுத்து தன்னை சூப்பர்மேனாக கருதிக்கொள்ளும் அபத்தத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

தினமணியின் வானாளாவிய பாராட்டின் விளக்கம் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் பெறும் ஒளிதான் என்ன? மே 13 வாக்கு எண்ணிக்கை துவங்கி முன்னணி நிலவரம் உறுதியான நிலையில் மதியம் ஊடகங்களை சந்தித்த ஜெயலலிதா என்ன கூறினார்? தி.மு.க ஆட்சி மாநிலத்தை குட்டி சுவராக்கிவிட்டதாம், கஜானா காலியாம், சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லையாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு அடுத்து அவர் சொன்னதுதான் முக்கியமானது.

தி.மு.க ஆட்சி முடிந்து தான் ஆட்சிக்கு வந்த 91, 2001, 2011 ஆகிய மூன்று முறையும் இப்படித்தான் மாநிலத்தை மீட்டு வளம் கொழிக்க வைத்தாராம். 91 இல் ஆட்சிக்கு வந்து மாநிலத்தை மேம்படுத்தி அடுத்த தேர்தலில் தோல்வியுற்று 96-இல் ஆட்சி தி.மு.கவிற்கு போனதும் மாநிலம் சீர்கேடு அடைந்ததாம்.

கவனியுங்கள் நண்பர்களே, 91-96 ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆட்டம் போட்டதும், முழுத் தமிழகத்தை மொட்டை போட்டதும், பின்னர் வந்த தேர்தலில் அமைச்சர்கள் செருப்படி பட்டதும்தான் வரலாறு. இன்று ஜெயா அதை பொற்காலம் என்கிறார். எனில் பாசிச ஜெயா ஒரு துரும்பளவு கூட மாறவில்லை முன்னிலும் திமிராக பேசுகிறார் என்பதைக்கூடவா தினமணி அம்பிகள் புரிந்து கொள்ள முடியாது?

தினமணி தமிழ் அம்பிகளின் கதை இதுவென்றால் ஹிந்து இங்கிலீஷ் அம்பிகளின் கதையைப் பாருங்கள்! சனிக்கிழமை அன்று ஹிந்து பத்திரிகை தலையங்கத்தில் தினமணியின் கருத்தையே ரொம்பவும் பணிவான மொழியில், பிரச்சினையில்லாமல் எழுதியிருந்தார்கள். அதன் சாரமென்னவென்றால் இந்த ஆட்சி மாற்றம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் என்பதே. கான்வென்டு வர்க்கத்தின் தலைவியான ஜெயலலிதாவுக்கு ஹிந்து பத்திரிகைதான் மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பேசினால் கூட கவலையில்லை, ஹிந்து பத்திரிகை இப்படி பேசுகிறார்கள் என்றதும் ஜெயலலிதா ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவிக்கிறார்,

“இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001-2006இல் எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார். அடுத்த நாள் இந்த நாலுவரிச் செய்தி ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவருகிறது. இடையில் என்ன நடந்திருக்கும்?

ஏற்கனவே மாலினி பார்த்தசாரதியை எப்படியும் கைது செய்ய வேண்டுமென்று மிரட்டிய ஜெயாவின் தர்பாரை மவுண்ரோடு மகாவிஷ்ணு மறந்திருக்கமாட்டார். அதே போன்று தலையங்கத்தில் இந்த முடிவு எதிர்ப்பு அலை என்று எழுதியது அம்மா காதுக்கு போய் மிரட்டல் வந்திருக்கலாம். அல்லது குடும்ப சண்டையில் மூழ்கியிருக்கும் ராம் தலையங்கத்தின் வரிகளை பார்த்து விட்டு அடுத்த நாளே இதை தணிக்கும் வகையில் இந்த செய்தியை திட்டமிட்டு வெளியிட்டிருக்கலாம். ஏனெனில் இந்த தலைப்புச் செய்தி வேறு எந்த ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவரவில்லை.

ஆக இந்த தேர்தல் முடிவுகள் தனது பொற்கால ஆட்சிக்கு ஏங்கிய மக்களின் விருப்பம் என்று பேசும் ஜெயலலிதாவை , வைத்தியநாதனின் தினமணி மேம்போக்காவாவது கண்டிக்குமா?

சரி, 2001லிருந்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி பொற்காலமா, இல்லை அடக்குமுறைக் காலமா? மதமாற்றத் தடை சட்டம், ஆடு-கோழி பலி தடுப்புச் சட்டம், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் என்று பார்ப்பனிய பாசிசம் ஆட்டம் போட்டது இந்தக் காலம்தான். இதனாலேயே 2004 தேர்தலில் 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. அதன் பின்னரே ஜெயலலிதா மேற்கண்ட அடக்குமுறைச் சட்டங்களை திரும்பப் பெறுகிறார். வரலாறு இப்படியிருக்க இதுதான் பொற்காலமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று ஜெயலலிதா பேசுகிறார் என்றால் யார் மீது உள்ள நம்பிக்கையில்?

எல்லாம் தினமலர், தினமணி, ஹிந்து அடிமை அம்பிகள் மேல் உள்ள நம்பிக்கையில்தான். இல்லையென்றால் இன்று தலையங்கம் எழுதியிருக்கும் தினமணி, ஜெயலலிதாவுக்கு சில பல ஆலோசனைகளை மிக மிகப் பணிவாக எடுத்து வைத்து, இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல என்று காலில் விழுகிறது. ஏ துப்பு கெட்ட தினமணியே, ” 91இல் ஊழல் செய்தாய், 2001இல் அடக்குமுறை செய்தாய், இந்த முறையாவது ஒழுங்காக ஆளுகின்ற வழியைப் பார்” என்று கூட சொல்வதற்கு உங்களுக்கு தைரியமில்லையா? பிறகு என்ன நீங்கள் தேர்தல் முடிவு குறித்து தமிழனுக்கு வீரப்பட்டம் கொடுக்கிறீர்கள்?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேரத்தில் காங்கிரசு, தி.மு.க முரண்பாடு வந்து அமைச்சர்கள் ராஜினாமா என்ற நாடகத்தை தினமலர் என்ன எழுதியது தெரியுமா? இது அத்தனையும் ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளானாம். இது இன்று நேற்றல்ல, ஜெயா கும்பல் ஆட்சியைப் பிடித்தது முதல் இப்படித்தான் பேசுகிறார்கள். ஜெயா ஒரு தைரியமான நபராம். முழு கட்சியும் அவரது காலில் விழுந்து கிடப்பதுதான் அதன் அடையாளமாம். பாசிசத்தையே இப்படி தைரியமென்று வியந்தோதும் அம்பிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் உலகம் காறித் துப்பும்.

கருணாநிதியை எதிர்ப்பதில்தான் கொஞ்சம் அரசியல் இருக்கிறதேயன்றி, ஜெயாவை ஆதரிப்பதில் கொஞ்சம் கூட அரசியல் இல்லை. இதுதான் இந்த தேர்தல் முடிவின் யோக்கியதை. அந்த வகையில் அ.தி.மு.கவின் வெற்றி என்பது ஒரு விபத்துதானே ஒழிய அது நேர்மறையில் நடந்ததல்ல.

ஒப்பீட்டளவில் 96-2001 தி.மு.க ஆட்சி என்பது பெரிய ஊழல்கள், ஏகபோகம், குடும்ப ஆட்சியோ இல்லாமல் இருந்தது. எனினும் 2001 தேர்தலில் தி.மு.க தோற்றது. அதை ஒட்டி தலையங்கம் எழுதிய தினமணி ” இது அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு, எனினும் ஜனநாயகத்தின் அழகே தனிதான்” என்றது. ஆக தினமணியே ஒத்துக்கொள்ளும் விதத்தில் இருந்த தி.மு.க ஆட்சி தோற்றதற்கு என்ன காரணம்?

பொதுவில் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க ஆட்சி குறித்து பாமர மக்களிடையே சில மூடநம்பிக்கைகள் உண்டு. ” இவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் மழை பெய்யும், விலைவாசி குறையும், பணப்புழக்கம் இருக்கும்”. இப்போது கூட ஜெயா டி.வியில் பேசிய ஒரு கட்சிக்காரர் இவற்றையே காரணங்களாக கூறுகிறார். அதாவது எந்த அரசியல் விழுமியங்களுமற்ற ஒரு லும்பன் சிந்தனையைக் கொண்டிருக்கும் பாமரர் கூட்டம் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியாக எப்போதும் இருக்கிறது. இந்த தேர்தலில் படித்த லும்பன் கூட்டமும் இதில் சேர்ந்திருக்கிறது.

அதனால்தான் இவர்கள் எல்லாரும் கருணாநிதியை திட்டுகிறார்களே தவிர, நேர்மறையில் அம்மா தகுதியானவர் என்று சொல்வதற்கு தயாரில்லை. ஆனால் ஊடகங்கள் அந்த வேலையை பெரும் ஜால்ரா சத்தத்துடன் செய்து வருகின்றன.

சாராமாகக் கூறில் கருணாநிதி தோற்கடிக்கப்பட்டதில் இருக்கும் அரசியல் ஜெயலலிதாவின் வெற்றியில் இல்லை. இவையெல்லாம் வேறுவழியின்றி போடப்பட்ட வாக்குகளால் மட்டும் வரவில்லை. அரசியலற்ற காரியவாதத்தின் செல்வாக்கு காரணமாகவே இது நடந்திருக்கிறது.

ஜெயாவை முசுலீம்களின் காவல் தெய்வமாக அங்கீகரித்த த.மு.மு.கவின் முகத்தில் கரி பூசும் விதமாக இந்த பதவியேற்பு விழாவில் கொலைகார மோடி கலந்து கொள்கிறார். இப்படி இன்னும் ஒரு சில நாட்களில் பழைய ஜெயலலிதாவை நாம் அப்படியே பார்க்கலாம். ஆனாலும் அதற்கும் கூட நமது ஜால்ரா ஊடகங்கள் புதுப்புது விளக்கங்கள் அளிக்கும். ‘அம்மா’ ஆதரவு காரியவாத மக்கள் கூட்டமும் அதை திக்கெட்டும் புகழாய்ப் பரப்பும்.

இந்த தேர்தல் பரப்புரையில் ஜெயா என்ன பேசினார்? ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரக் குடும்பமாக கருணாநிதி குடும்பம் மாறிவிட்டது, ஊழல் செய்வதில் புது சாதனை படைத்து விட்டது என்றெல்லாம் பேசினார் அல்லவா? இப்போது அதன் பொருட்டு என்ன செய்யப் போகிறார்? கருணாநிதி குடும்பத்திலிருந்து அந்த சொத்துக்களை திரும்ப பறிக்கப் போகிறாரா? அது நடக்க வேண்டுமென்றால் ஜெயாவுக்கு எதிராக கருணாநிதி போட்ட வழக்குகளிலேயே நடந்திருக்க வேண்டுமல்லவா? அத்தனையும் ஊத்தி மூடப்பட்ட நிலையில் இப்போது கருணாநிதிக்கு மட்டும் என்ன நடக்கும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிடாசின் சரக்கு கருணாநிதி அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட உண்மையை பார்க்கும் போது சன்.டிவியிலிருந்து மாதந்தோறும் ஒரு கப்பம் போகாமாலா இருக்கும்? ஆக தமிழக மக்கள் இவ்வளவு ஆர்த்தெழுந்து வாக்கு போட்டு விரட்டியடித்த கருணாநிதிக்கு என்ன தண்டனை? கருணாநிதியே சொன்னது போல மக்கள் அவருக்கு ஒய்வு கொடுத்ததுதான். ஊழலுக்கு தண்டனை பதவி கிடையாது என்றால் அதன் பெயர் தண்டனையா?

இந்த ‘தண்டனை’யை வாங்கிக் கொடுத்த தமிழக மக்களைப் போய் அவர்களே வெட்கப்படுமளவு பாராட்டினால் தகுமா?

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  • திருடா அல்லது திருடி இதற்க்கு மேல் என்ன சாய்ஸ் இருக்கிறது தமிழக மக்களுக்கு.

   அதேபோல் வாய் வலிக்க வசைபாடுவதை தவிர வினவுக்கு வேறு மாற்றை செல்ல தெரியாது.

   செம்புரட்சியோ அல்லது கரும்புரட்சியோ அதையும் சாதாரன மக்களுக்கு புரியும் வகையில் செல்ல தெரியாது

   மன்னிக்வும் பதிவுலக மெக்கைகளில் கெஞ்சம் ரசனையோடு எழுதும் மொக்கை தான் வினவு.

 1. மூக்கணாங்கயிறுகள் மாற்றுவதால் மாடுகள் மகிழ்ச்சி அடையுமா? – ஹோ சி மின்.

 2. //இல்லையென்றால் இன்று தலையங்கம் எழுதியிருக்கும் தினமணி, ஜெயலலிதாவுக்கு சில பல ஆலோசனைகளை மிக மிகப் பணிவாக எடுத்து வைத்து, இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல என்று காலில் விழுகிறது. ஏ துப்பு கெட்ட தினமணியே, ” 91இல் ஊழல் செய்தாய், 2001இல் அடக்குமுறை செய்தாய், இந்த முறையாவது ஒழுங்காக ஆளுகின்ற வழியைப் பார்” என்று கூட சொல்வதற்கு உங்களுக்கு தைரியமில்லையா?//

  இத நீங்க சொல்றீங்க… :)) நேரம் தான்…

  • // இத நீங்க சொல்றீங்க… 🙂 ) நேரம் தான்…//

   சீனு இதன் பொருள் என்னவென்று புரியவில்லையே? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்!

   • “ஒழுங்காக ஆளுகிற வழியைப்பார்” என்று தினமணி சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களே… அதை ஏன் வினவு சொல்லக்கூடாது என்று சீனு கேட்கிறார் என நினைக்கிறேன். ஆனால் வினவு அப்படி சொல்லமாட்டார்கள் என சீனுவுக்குத் தெரியும். அதனால்தான் நேரம் என்கிறார். எனது புரிதல் சரியா…?

 3. இந்த தேர்தலில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவற்றை மக்கள் முக்கிய பிரச்சினைகளாக கருதினாலும் ஊழலை ஒரு பொருட்டாகவெல்லாம் கருதவில்லை. திமுக அதிமுக, காங்., பாஜக இவைகளிடையே வேறுபாடுகளெல்லாம் கிடையாது அனவருமே ஊழல்வாதிகள், மக்கள் விரோத அரசைத்தான் வழங்கியிருக்கிறார்கள் எனவே தேர்தலை புறக்கணிக்கனியுங்கள் என கூறிய்போது, நாங்கள் கூறிய அனைத்தையும் ஆமோதித்துவிட்டு இறுதியாக எங்களிடம் அவர்கள், ”5 வருஷம் அவன் சாப்புட்டுட்டான இந்த 5 வருஷம் இவ சாப்புட்டுட்டு போறாளே” என்று சொன்னது விசித்திரமாக இருந்தது. இந்த மனவோட்டத்தை பெரும்பாலான அடித்தட்டு மக்கள் கொண்டிருந்தது வேதனையாக இருந்தது.

 4. //நாங்கள் கூறிய அனைத்தையும் ஆமோதித்துவிட்டு இறுதியாக எங்களிடம் அவர்கள், ”5 வருஷம் அவன் சாப்புட்டுட்டான இந்த 5 வருஷம் இவ சாப்புட்டுட்டு போறாளே” என்று சொன்னது விசித்திரமாக இருந்தது.//

  ஜனநாயக உணர்வு இல்லாமயைத்தான் இது காட்டுகிறது. இது ஜனநாயகமில்லை என்று சொல்வதன் பொருள் இதுதான். ஜனநாயகம் என்பது சமூகத்தின்/மக்களின் பண்பு வகைப்பட்ட வளர்ச்சியாகும். அது சட்டத்திருத்தத்தில் வருவதல்ல. இந்தியாவில் அத்தகைய பண்பு மாற்றம் நடக்கவேயில்லை எனும் போது மக்களிடம் ஜனநாயக் உணர்வு சார்ந்த அறச்சீற்றம் மட்டும் எப்படி வந்துவிடும்?

 5. துரோகிகள் தங்களது கைதேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தும் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்து மக்கள் அனைத்தையும் மறந்துவிடுகின்றனர். அவர்கள் பாசிஸ்டுகளாகவே இருப்பினும் மன்னித்துவிடுகின்றனர். கூடுதலாக நம் மக்கள் எதையும் சகித்துக்கொண்டு வாழ தங்களை பழக்கப்படுத்திக்கொள்கின்றனர். இந்த நிலப்பிரபுத்துவ சிந்தனை முறை மாறவாவது அதியமான் சொல்லும் உண்மையான கேப்பிட்டலிசம் சீக்கிரம் வரவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

 6. முன்பெல்லாம் பத்திரிக்கைகள் படித்தால் அதில் உள்ள செய்திகளை அப்படியே
  அப்பட்டமாக நம்பித்தொலைவேன்.நிறைய, நிறைய படிக்கும்போது தான் சரிஎது,
  தவறு எது என்று மெதுவாக புரியதொடங்கியது. படிக்கதொடங்கியதுமேஎழுத வந்ததின்
  நோக்கம் புரியதொடங்கியது கிட்டதட்ட 25 வருட தொடர் வாசிப்புக்கு பின்னால் தான்.
  அது வரை என்ன எழவைகொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத நிலையில் தான்.
  நான் இருந்தேன்.இது போல் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்?
  பத்திரிக்கைகள் அனைத்தும் இந்த தேர்தல்க்கு முன்பு…கருணாநிதிக்கு எதிராக …ஒட்டுமொத்தமாக
  களம் இறங்கின. ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சி பொற்கால ஆட்சி என்று மனதைதொட்டு
  ஒரு நபராவது சொல்லட்டும்….அவரை சிபாரிசு செய்வதில் அர்த்தம் இருக்கும்.இதற்க்கு முன்பு
  அவர் ஆட்சியில் நாம் எல்லோரும் நாறிநசநசத்தது …அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவார்களா?
  இல்லையா, ஏதேனும் ஒரு நல்லவரை (ஒரு வேளை இருந்தால்)கைகாட்டி தெரிவிக்கும் அளவுக்கு
  மாற்று வழி அமைக்க வழி செய்து தரலாம்..பத்திரிக்கைகள் எப்போதுமே அதை செய்வதில்லை.
  வெளங்காத படத்தை எடுத்து விட்டு மக்களின் ரசனை என்று தப்பிக்கும் நாதாரிகள் போல…
  அவர்கள் பரபரப்புக்கு எவனையாவது உயர்த்திவிட்டு ….அடுத்த செய்தி கிடைத்தவுடன் இதை மறந்து
  விட்டு …ச்சே….எழுதவே எரிச்சலா இருக்கு. …இப்போ பாருங்க…பாத்திரத்திலிருந்து தப்பி…அடுப்பில் விழுந்த
  கதையாகிடுச்சுவேற வழி இல்ல….இனி சகிச்சுத்தான் ஆகணும்…..இனி எவ்வளவு சீக்கிரம் மாற்றுவழி
  கண்டுபிடித்தால் நல்லது….யாரிடமேனும் உண்டா…?

 7. “இந்த வெற்றியில் விஜய்க்கு பங்கு எந்த அளவு?”

  அளவிடற்கறியது!

  ஓட்டுப் போட்டுவிட்டு, ஜன நாயக கடமை செய்து, வெளியில் வரும்பொழுது அவரே மைக்கைத் தேடிப்போய் தன் திருவாய் மலர்ந்து, ஒரு பெரிய கருத்துரை நிகழ்த்தியது நினைவிருக்கிறதா?

  “மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்கிறார்கள்!”

  இப்போதும் அதையேதான் சொல்லிக்கொண்ண்டிருக்கிறார் :

  “நாந்தான் அப்பவே சொன்னேனே, மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. நான் சொன்னபடியே நடத்திக் காட்டிவிட்டார்கள்”.

  இவர் ரசிகர்களுக்கு போதனை சொன்னபடி, ஜெயலலிதா ஜெயித்துவிட்டார்.

  ஒருகால் கருணானிதி ஜெயித்திருந்தாலும், அவருக்கும் இந்த பிளேட்டை அப்படியே திருப்பிப் போடலாம்.

  தனக்கு ஆப்பு வந்துவிடாமல் தப்பிக்க ஆற்றிய விஜயின் பேருரை அளவிடற்கறியது.
  அவரால்தான் ஜெயித்தார் ஜெயலலிதா.

 8. Vinavu= You are wasting every ones time and energy by not concentrating on issues. How many issues have you taken up directly with Dinamani or Hindu? Have you ever approached them? Wrote to them? Spoke to them/ Why are you fighting with the wind? It is nothing but dog barking at the Sun or Moon.

  You have a lot better to do than publishing rubbish analysis on how others behaved or should behave.

  • Hi Anbu Selvan,
   Your statements are stupid. Why should they (Vinavu) or myself should approach Dinamani or Hindu or write to them. Have you ever “studied” them? Once Sujatha wrote about a person who writes regularly to the Hindu – “If at all I see a column in Hindu from him saying – here in this grave yard the conditions are… – I will not wonder”. I think you belong to that category. Vinavu is no where near to your category. Go and use your time in ,,,,,,, Hindu – why waste here.

  • Anbu Selvan!

   U seem to have not understood the value of such posts from Vinavu or anyone else.

   Newspapers are owned by press barons, the rich business Houses. They toe the line of what is safer for them.

   All of them take a permanent side or a temporary side. In Dinamani and Dinamalar, their permanent side is support to brahminical culture; and their temporary side is to support that party which does not upset the brahminical culture, even if not openly support it.

   For the past 6 decades, these papers were against all dravidian parties coz such parties are bent upon diluting the brahminical culture. After Congress went out of TN politics in the late sixties, these papers had none to support brahmincal culture. Now they found Jeyalalitha, so they give unstinting support to her. Also, note these two papers along with the Hindu, have brahmins as editors and a lot of editorial staff come from that community. As Vinavu wrote in another post about paarppaneeyam, such mighty brahmins as editors are always with captialists and both – the capitalists and the brahmins – help one another flourish.

   In a democracy which liberally affords press freedom, the newspapers may take any side as they like and it is left to them how to use their press freedom.

   But it is people like Vinavau who shd point to the perversion of such press freedom. U cant say they shdn’t. U r saying Vinavu shd lay off. A wrong perception
   dear.

   I would say, if Vinavud does not do i.e pillory these press chemelons, it is better at once Vinavu also start perverting the press freedom.

   Whether I agree with this current post of Vinavu or not, the point remains,and that is the one u shd notice, is that

   such newspapers as Dinamani and Dinamalar, or such like magazines shd be exposed.

   Vinavu has done right; and hope will continue to do that.

   • My point is that the news paper media is obsolete.

    I do not read Hindu or Dinamalar. Only when some one is giving a link here I go to read there. Newspapers are obsolete with the new TV media.
    One of the main reasons for DMK losing is its own Sun TVs coverage of Spectrum.

    The Circulation numbers given by IRS for 2010 is – 73 lakhs for Dina thanthi( number 3 in Indian languages) 52 lakhs for Dinakaran( number 7 in India in Indian languages)
    Hindu is read only by 21 lakh people.

    Dinamani or Dinamalar or Hindu can never influence masses. What is the point in taking issues with them?

    My point is Why are you sensationalizing some thing which is not even going to the masses?

    You have better and real issues to focus than writing some thing which is degradation of your readers intellectual capacity.
    if you want to take a stand against Brahminism then the best thing is to do what I do.. Do not read Dinamalar Hindu or Dinamani.. Read Economic Times

 9. முன்பெல்லாம் பத்திரிக்கைகள் படித்தால் அதில் உள்ள செய்திகளை அப்படியே
  அப்பட்டமாக நம்பித்தொலைவேன்.நிறைய, நிறைய படிக்கும்போது தான் சரிஎது,
  தவறு எது என்று மெதுவாக புரியதொடங்கியது. படிக்கதொடங்கியதுமேஎழுத வந்ததின்
  நோக்கம் புரியதொடங்கியது கிட்டதட்ட 25 வருட தொடர் வாசிப்புக்கு பின்னால் தான்.
  அது வரை என்ன எழவைகொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத நிலையில் தான்.
  நான் இருந்தேன்.இது போல் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்?

  பெரும்பாலான இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை பாதையும் இதுதாங்க.

  விஜய் எல்லாம் அரசியலில் ஓரு ஆள் என்று பேசும் போதே எரிச்சலை விட சிரிப்பாய் இருக்கிறது.

 10. வினவு குழு,

  திமுக, அதிமுக… இவர்கள் இரண்டு பேரையும் தவிர வேறு மாற்று என்ன? எல்லோரையும் திட்டலாம். சரியானதுதான். ஒவ்வொரு முறை இவர்களிடம் குறை காணும்போது, அதற்க்கு நிகரான, சரியான் விஷயம் எது, மாற்று எது, என்றும் சொல்லலாமே?

  அதிகப்படியாக, எதிர்மறையான விஷயங்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தால், ஒரு தேக்கம் வந்துவிடுகிறது. ”வினவா? உள்ள நுழைஞ்சாலே, ஒரே திட்டா இருக்கும். தெனமும் இதத்தான் வாசிக்கிறேன், வேற வேற பேர்ல” அப்பிடிங்கிற மனநிலை வந்திருது.

  வேறு என்ன மாதிரி எழுதலாம்?

  அன்புடன்,
  சுந்தர்…

 11. .முதலில் ஒன்று புரிந்து கொள்ள்வேன்டும் ஜெ.வுக்கு பார்பனர்கள் அதிக ஆதரவு,பத்திரிக்கைகள், மற்றும் முன்னாள் தேர்தல் கமிஷனர்,இவர்கள் ஆதரவு, அடுத்து, கலைங்ர் அவர்களின் குடும்ப ஊழல், மின்சார வெட்டு, இவை அனைத்தும் மக்களை பெரிதும் பாடாயப்டுத்தியது இந்தனால் தான் அதிமுக அதிக இடன்களை வெற்றி பெற முடிந்தது. இதில் விஜய் எஙிருந்து வருகிரார், அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை தான், ஆட்சிக்கு வந்ததும் முதல் அடி மக்களின் வரிப்பனம் 1500 கோடி போனது ( சட்ட்சபை மாற்றம்) அடுத்து என்ன ஆகுமோ இப்போதே அரசு ஊழியர்களின் வயித்தில் புளி தான்

 12. //தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.//

  உண்மையான காரணம் உங்கள் கட்டுரையில் தெளிவாக சொல்லப்படவில்லையே..!!

 13. //ஆட்சிக்கு வந்ததும் முதல் அடி மக்களின் வரிப்பனம் 1500 கோடி போனது ( சட்ட்சபை மாற்றம்) அடுத்து என்ன ஆகுமோ இப்போதே அரசு ஊழியர்களின் வயித்தில் புளி தான்//

  இதில் அந்த 1500 கோடி போனது, அந்த கட்டிடத்தை கட்டியதால் தான். தேவையில்லாமல், இவரோட ஆசைக்காக மக்களின் வரிப்பணத்தை கொண்டு கட்டினார். இந்த அம்மையாரும் ஈகோ பிரச்சினையினால் அந்த கட்டிடத்தை உபயோகிக்க மறுக்கிறார். முதலில் தேவையில்லாமல் கட்டிய கருணாநிதியை சொல்லுங்கள்.

  அந்த கட்டிடத்தை ஒழுங்காக உபயோகப்படுத்தவில்லையென்றால் அந்த 1500 கோடி போனதற்கு இருவருமே காரணம்.

  அரசு ஊழியர்களின் வயிற்றில் புளியை பற்றி வருத்தப்படுகிறீர்கள். அந்த ஊழியர்களினால் இத்தனை காலம் மக்களின் வயிற்றில் கறைத்த புளிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள். இது தேவை தான் என்பேன். இனியாவது அரசு அலுவலகங்கள் வேலை ஒழுங்காக நடக்கிறதா பார்ப்போம்.

  • எந்த ஒன்றையுமே ஓட்டு மொத்தமாக குறை சொல்லாதீர்கள் சீனு சார் ! எங்கும் சில உண்மையான உழைப்பாளிகள் இருக்கிறார்கள்.
   வினவு வின் கட்டுரை மிகச் சிறந்த கருத்தாய்வு. பாராட்டுக்கள்

 14. தினமணியின் தடுமாற்ற தலையங்கம் – சொல்லியா தரவேண்டும்

  இந்த தினமணியின் தலையங்கம், புதிய தமிழக அரசு என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று நேரிடையாக சொல்லாமல், புதிய முதல்வர் அனைத்தும் அறிந்தவர் என்று நினைப்பது சரியில்லை.

  http://www.shansugan.net/2011/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/

 15. 2005ல் கட்சி ஆரம்பித்த விஜயகாந்திற்கு இருக்கும் செல்வாககில் 1% கூட உங்களுக்கு கிடையாது.ஒன்று மக்கள் ஆதரவைப் பெற்று அரசியல் அமைப்பாக மாறி நேரடியாக் அரசியல் செய்யுங்கள்.இல்லையேல் நாங்கள் ஆயுதப் புரட்சியில்தான் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்று அறிவித்து விட்டு களத்தில் செயல்படுங்கள்.எல்லோரையும் திட்டும் முட்டாள்த்தனமான அரசியலைத் தவிர உங்களிடம் என்ன அரசியல் இருக்கிறது.
  25 ஆண்டு காலம் பத்திரிகை நடத்திய்,சுவர் புரட்சி செய்து நீங்கள் சாதித்தது என்ன.
  நீங்கள் மாற்று சக்தியா இல்லை வாய்ச்சவடால் பேர்வழிகளா.

 16. புதிய கட்டிடத்தில் தமிழ் கலை, கலாச்சாரம், பண்பாடு, ரசனை ஏதாவது இருக்கிறதா? ஏதொ தண்ணீர் தொட்டிபோல் இருக்கிறது

 17. ஸுன்டர்,

  திட்டி மட்டும் கொண்டிருக்காமல் என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களே !அப்போதே நீங்கள் வளர்ச்சியை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து விடுகீறீர்கள் ! வாழ்த்துக்கள் !

  வினவு மற்றும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எல்லாவற்றிலும் இறுதியில்
  உழைக்கும் மக்கள் போராடினால்தான் இதற்கு ஒரு தீர்வு உண்டு என்று இருக்கும். அதையே உங்களுக்கு சொல்கின்றேன்.

  தனிமரம் தோப்பாகாது என்பார்கள். தனிமனித சாகச வாதம் எல்லாம் சினிமாவில் தான் எடுபடும்; ஆகவே புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் என்று நிறைய அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் இணைநது பணியாற்றுவது ஒன்றுதான் நமது முன் உள்ள ஒரே வழி.

  ஆதவன்

 18. ஆதவன்,

  “வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டீர்கள்!” ??? இதையேத்தான் எல்லாரும் சொல்லி சொல்லி, இதற்க்கு மேல் யோசிக்கவைக்காமல் செய்துவிட்டீர்கள். மேலும், இதற்க்கு மேல் யோசிக்க என்ன இருக்கிறது?

  அம்மா, தாத்தா, இவர்களை விட்டால் எங்களுக்கு வேறு என்ன வழி? ஒரே வழி, இவர்களை (மற்றும் இவர்கள் போன்றவர்களை) போட்டுத்தள்ளுவது! (மன்னிக்கவும்!)

  அப்படி போட்டுத்தள்ளவும் எனக்கு தெம்பு கிடையாது. நக்சல் என்ற அமைப்பு கூட, இந்த அரசியல்வியாதிகளிடம் மாட்டிக்கொண்ட, சின்னஞ்சிறு வியாதிகள், போலீசுகள், அப்பாவி மக்கள் இவர்களை வதைத்து என்ன பயன்?

  இந்த அரசியால்வியாதிகள் போலவே, நல்லவர்கள் போல் நடித்து, அவர்கள் கூடவே இருந்து, அவர்களை போட்டுத்தள்ளலாமே? ஒவ்வொரு கிளையாய் ஒடித்து, எப்போது முழு மரத்தையும் வெட்டி முடிப்பது? வேறை அறுப்பதுதானே சரியான முடிவு?

  நாங்கள் போலீசை கடத்திவிட்டோம், வட்டச் செயளாலரை கொன்றுவிட்டோம் என்பது எல்லாம் சும்மா வெத்து வேட்டு. வேறு போலீசோ அல்லது இன்னொரு வட்டச் செயளாலரோ கிடைக்காமலா போய்விடுவார்கள்.

  தலைமையை போடுங்கள்! எடுபிடிகளை அல்ல!

  மன்னிக்கவும், நிறையவே உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்!!!

 19. அடுத்த முதல்வர் “விஜயகாந்த்” அல்ல அடுத்த முதல்வர் “ரஜினிகாந்த்”(படத்துல)

 20. “வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டீர்கள்!” ??? இதையேத்தான் எல்லாரும் சொல்லி சொல்லி, இதற்க்கு மேல் யோசிக்கவைக்காமல் செய்துவிட்டீர்கள். மேலும், இதற்க்கு மேல் யோசிக்க என்ன இருக்கிறது?

  சுந்தர் ! உங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைக் கோரியும், வினவத்துவங்கிய போதே உங்கள் தேடல் ஆரம்பமாகி விட்டது என்பதற்காக இதனைச் சொன்னேன் !

  //அம்மா, தாத்தா, இவர்களை விட்டால் எங்களுக்கு வேறு என்ன வழி? ஒரே வழி, இவர்களை (மற்றும் இவர்கள் போன்றவர்களை) போட்டுத்தள்ளுவது! (மன்னிக்கவும்!)

  அப்படி போட்டுத்தள்ளவும் எனக்கு தெம்பு கிடையாது. நக்சல் என்ற அமைப்பு கூட, இந்த அரசியல்வியாதிகளிடம் மாட்டிக்கொண்ட, சின்னஞ்சிறு வியாதிகள், போலீசுகள், அப்பாவி மக்கள் இவர்களை வதைத்து என்ன பயன்?

  இந்த அரசியால்வியாதிகள் போலவே, நல்லவர்கள் போல் நடித்து, அவர்கள் கூடவே இருந்து, அவர்களை போட்டுத்தள்ளலாமே? ஒவ்வொரு கிளையாய் ஒடித்து, எப்போது முழு மரத்தையும் வெட்டி முடிப்பது? வேறை அறுப்பதுதானே சரியான முடிவு?

  நாங்கள் போலீசை கடத்திவிட்டோம், வட்டச் செயளாலரை கொன்றுவிட்டோம் என்பது எல்லாம் சும்மா வெத்து வேட்டு. வேறு போலீசோ அல்லது இன்னொரு வட்டச் செயளாலரோ கிடைக்காமலா போய்விடுவார்கள்.

  தலைமையை போடுங்கள்! எடுபிடிகளை அல்ல!//

  நான் எந்த இடத்தில் இப்படிச் சொல்லி உள்ளேன் ? நீங்கள் ஏற்கனவே புதிய ஜனநாயகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலிய அமைப்புகள் பற்றிய ஒரு முன்முடிவோடு பேசுகீறீர்கள் என்று நினைக்கின்றேன் !

  இவர்கள் (உங்கள் பார்வையில் உள்ள) நக்சல்போல நீங்கள் மேலேச் சொன்ன கடத்தல், கொலை முதலிய சாகச வாதங்களில் இயங்குவது இல்லை ! புதிய ஜனநாயகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலிய அமைப்புகள் பகிரங்கமாக தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றனர். இவர்களுக்கும் தாத்தா பாட்டி தம்பி அப்பா அம்மா எல்லோரும் உண்டு. உழைக்கும் வர்க்கம் என்னும் மிகப்பெரிய சொந்தமும் உண்டு.

  நீங்கள் இவர்களோடு இணைந்து செயல்படுங்கள்

  புதிய ஜனநாயகம் வாங்கிப் படித்து வாருங்கள் உங்களுக்குப் புரியும் !

 21. if dinamalam! and The Nandu go on like this for another 10 years, TN will not be in stage to be recovered. our children will have been spoiled to the core with manipulated minds. total morons!

 22. Dear Vinavu,
  Thanks for your excellent comments on DMK and AIADMK.
  I come to know a lot about the politics of so called many Politicians. Continue to see such comments from you all.
  Thanks.
  In solidarity,
  Arul Durai S

 23. அருமையான கரு உள்ள கட்டுரை.

  மேலும் இது இரென்யகசிபுகலின் காலம்.

  1.கலானிதி மாரன்.2.தயானிதி மாரன்.3.விஜைய்.4.ராகுல் காந்தி
  5.சிம்பு.6.ரஜினிகந்த் மகள்கள்.7.பாகியராஜ் மகன் சாந்தனு.
  பார்பனர்கள் நமது திராவிட சமுதாயத்தில் உள்ள திறமையான
  ஆண்களாக திருமணம் செய்து கொண்டு அதன் மூலம் பிறந்த
  வாரிசுகலின் மூலம் நமது திராவிட மக்களய் அதிகாரம் செய்கிரர்கள்.
  இது புரிந்தவர்களூக்கு புரியும்.

  • திறமையான ஆண்களா, அல்லது பிரபலபான ஆண்களா? உங்கள் தொகுப்பில் உள்ள எல்லோரும் திறமையானவர்களா? பிரபலம்தான் சரி என்று தோன்றுகிறது… பசை உள்ள இடத்தில் ஒட்டிகொண்டு, தங்களையும் தங்கள் வாரிசுகளையும் வளர்க்கிறார்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க