Monday, June 17, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் - ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

-

வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் - ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?
தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன் பாதம் சரணம் !!

“சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க.

இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும்.

“அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் விருப்பம். ஆனால் அப்படிக் கேட்பதில் பல ஆபத்துகள் இருக்கின்றன என்பதால், “வைகோ தனது முடிவை மறுபரீசிலனை செய்து, அதிமுக அணியில் பங்கேற்க வேண்டும்” என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு வேண்டுகோளை அன்பு சகோதரி விடவில்லை என்பதும், அன்பு காம்ரேடுகள்தான் விட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சுயமரியாதை இழந்து” என்ற சொல்லுக்கு பொது வரையறையை எப்படி நாம் சொல்லமுடியும்? அது பற்றி நமது வரையறையும் தேர்தலில் பங்கேற்கின்ற கட்சிகளின் வரையறையும் வேறு வேறாக இருக்கலாமல்லவா? கூட்டணிக் கட்சிகளிலேயே சுயமரியாதை பற்றிய வைகோவின் வரையறையும், தா.பா வின் வரையறையும் வேறுபடலாமே!

ஏழு, எட்டு என்று தொகுதி எண்ணிக்கையைக் குறைத்து வைகோவை ஜெ அவமதித்தது என்னவோ உண்மைதான். ஆயினும், “அம்மா எப்ப கூப்டுவாரோ?” என்று போயஸ் தோட்டத்து வாசலில் வைகோ காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. அம்மா என்னிக்கு கூப்புடுவார்னே தெரியாமல், தெனம் காலையில சாப்பாடைக் கட்டிகினு வந்து தா.பா தலைமையில் தோட்டத்து வாயிலில் காத்திருந்தார்கள் வலது இடது தலைவர்கள்.

கோர்ட்டுலயாவது இன்னிக்கு வாய்தான்னு போட்டுட்டா, சாயங்காலத்துக்குள்ள எப்பவாவது கூப்ட்டுறுவாய்ங்க. ஆனா என்னிக்கு வாய்தான்னே தெரியாம நாள் கணக்கில காத்திருக்கிற கொடுமை இருக்கே அது பெருங்கொடுமை. கோர்ட் வாசல்ல வாய்தாவுக்கு ஒக்காந்திருக்கிறவன் கிட்ட, “சார் உங்கள எப்ப கூப்புடுவாங்க?”ன்னு கேட்டு எந்த மீடியாக்காரனும் வந்து டென்சனக் கிளப்ப மாட்டான். இங்கயோ அந்த நிம்மதியும் கிடையாது. டென்சனும் ஆக முடியாது. அம்மா கூப்புடுவாங்களா மாட்டாங்களான்னு தெளிவா தெரியாதபோதே, “இரட்டை இலையின் வெற்றிக்குப் பாடுபடுவோம்”னு டிவிக்கு பேட்டி கொடுக்கணும். கொடுத்தாங்க.

இதெல்லாம் சுயமரியாதைக் கேடுன்னு நாம் நினைக்கலாம். அம்மாவைப் பொருத்தவரை இதெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு வைக்கப்படும் என்ட்ரன்ஸ் எக்ஸாம். இந்தக் கட்டம் வரையில் நடந்த விசயங்கள் எதுவும் தமது சுயமரியாதையை சிதைத்து விட்டதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கருதவில்லை. தங்கள் சுயமரியாதை பத்திரமாக இருப்பதாகவும், வைகோவின் சுயமரியாதைக்குத்தான் அம்மா சோதனை வைத்திருப்பதாகவும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக பல்வேறு விதமான என்ட்ரன்ஸ் எக்ஸாம்களிலும் பாஸ் பண்ணி, ஒவ்வொரு கூட்டணிக் கட்சியிலயும் எத்தனை ஆழ்வார்களுக்கு சீட் என்றும் முடிவாகி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தாகிவிட்டது.  எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்று உடன்பாடு இறுதியாக வேண்டும். அப்புறம் அந்த தொகுதியில யாரை நிப்பாட்றதுன்னு அந்தந்த கட்சி முடிவு செய்யணும். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் கூட்டணி அரசியலில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, தருமம். மரபுகள் தருமங்களை உடைத்துக் கடாசுபவரல்லவோ புரட்சித்தலைவி! அது மட்டுமல்ல, நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து கிடந்தாலும், அப்படிக் காலில் விழுந்து கிடப்பவன் மீது காறித்துப்பி, அதற்கு அவனுடைய எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்வதில் அம்மாவுக்கு எப்பவுமே ஒரு பேரார்வம்.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத நிலையில், கூட்டணிக் கட்சிகள் கேட்டிருந்த தொகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி அடாவடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது போயஸ் தோட்டம். இதனைக் கண்டிக்கின்ற சொரணையோ, ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கும் தைரியமோ கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் இல்லை. தா.பா போன்றோருக்குக் கூடவா சுயமரியாதை இல்லை என்று அவசரப்பட்டு யாரும் எண்ணிவிடக் கூடாது.

கோயிலுக்குப் போகும் பக்தர்கள் வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு செல்கிறார்கள். கேரளத்தில் சட்டையையே கழற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லை என்று சொல்லிவிட முடியுமா? போயஸ் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், காலணிகளுடன் வெட்கம், மானம், சூடு, சொரணை, சுயமரியாதை போன்ற அனைத்தையும் கேட்டிலேயே கழட்டிக் கொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டு நுழைவதுதான் கூட்டணிக் கட்சிகளின் மரபு. “இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு கூட்டணி தருமத்தையும் மரபையும் அம்மா மீறிவிட்டார் என்புது உண்மையே என்றாலும், அதற்காக நாமும் நம்முடைய மரபையும் சம்பிரதாயத்தையும் மீறி திடீரென்று இருமுடியை இறக்கிவிட முடியாது” என்று “குருசாமி” தா.பா கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுருத்தியிருப்பார்.

ஏன் துப்பினார்கள், என்ன மாதிரி சூழ்நிலையில் காறித்துப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அவசரப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிக்கை விடுவதோ, உறவை முறித்துக் கொள்வதோ, மூன்றாவது அணி தொடங்குவதோ அறிவுக்கு உகந்ததல்ல என்பதை மார்க்சிஸ்டுகள் மற்றவர்களுக்கு அறிவுருத்தியிருப்பார்கள்.

இதெல்லாம் தெரியாமல், “மூன்றாவது அணி என்று ஒன்று தொடங்கினால், அதற்கு வைகோ தான் தலைவர்” என்று முன்கூட்டியே துண்டு போட்டு ரிசர்வ் செய்தார் நாஞ்சில் சம்பத். மூன்றாவது அணியின் தலைமைப் பதவிக்கு தா.பா வோ, ராமகிருஷ்ணனோ, கேப்டனோ போட்டிக்கு வரவில்லை. “வடக்கிருந்து சாவதுதான் முடிவு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டால், அதற்கு வைகோ தலைமை தாங்குவதே பொருத்தமாக இருக்கும்” என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும்.

“இன்று 21 தொகுதிக்கு குறைவான எதையும் ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கும் வைகோவிடம், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுமாறும் அதிமுக அணியில் பங்கேற்குமாறும் மார்க்சிஸ்டுகள் கூறுகிறார்களே, இதன் பொருளை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? “12 தொகுதியை வாங்கிக் கொண்டு பொழைக்கிற வழியப் பாருய்யா” என்பதுதான் இதன் பொருள்.

“அம்மாவோடு கூட்டணி வைத்து பத்து இடத்தில் நின்று 2 இடத்திலாவது ஜெயிப்பதா, அல்லது மூன்றாவது அணி அமைத்து முப்பது இடத்தில் நின்று முப்பது இடத்திலும் டெபாசிட் இழப்பதா? எது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது?” என்பதுதான் அன்று வலது இடதுகளின் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதமாக இருந்திருக்கும்.

ஒருவேளை வலதுக்கு 3, இடதுக்கு 4 – இதுதான் முடிவு. என்று அம்மா சொல்லியிருந்தால்? தா.பா வும் மார்க்சிஸ்டுகளும் என்ன செய்திருப்பார்கள்? பதவியை விட சுயமரியாதையே பெரியது என்று கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. சுயமரியாதை இல்லாமல் கட்சி உயிர்வாழ முடியும், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல், கட்சி உயிர் வாழ முடியுமா? உயிரே இல்லாத பிணத்துக்கு சுயமரியாதை இருக்க முடியுமா? ஆகவே, வலதுக்கு ஒண்ணு, இடதுக்கு ஒண்ணரை என்று அம்மா தொகுதி ஒதுக்கியிருந்தாலும் ஒப்புக் கொண்டிருப்பார்கள். பூச்சியத்தை விட ஒண்ணு பெரியது என்ற உண்மையை தா.பா தனது தோழர்களுக்கு புரியவைத்திருப்பார்.

“திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்றுவது, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்பது” என்ற கொள்கைகளுக்காக கூட்டணி அமைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள், அந்தக் கொள்கை வெற்றி பெறுவதற்காக சொந்த தொகுதிகளையும்,  சுயமரியாதையையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று விளக்கமும் சொல்வார்.

பதவிக்காக சுயமரியாதையை தியாகம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் வைகோ. இரண்டையும் தியாகம் செய்யலாம் என்பது வலது இடதுகளின் நிலை. யார் பெரிய தியாகி வைகோ வா, தாபா வா? எது பெரிது – ஒண்ணா ரெண்டா?

_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

 1. வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா ?…

  தேர்தல் 2011 – சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க…

  • குத்தாட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணனெல்லாம் அம்மனாய் வேஷம் கட்டலாம். அம்மா மட்டும் கட்டக்கூடாதா? அப்போது வராத கோபம் இப்போது மட்டும் ஏன்?

 2. I already know vinavu is always supports DMK, I dont know why !? Vinavu last two months are over I came to this site. please dont post your article in tamilmanam

 3. சட்டமியற்றும் சபைகளில், உழைக்கும் மக்களின் குரல் ஒலிப்பதற்கு, பிரதிநித்துவம் வேண்டியே, அடையாளம் உள்ள காம்ரேட்கள், தன்மானம் விட்டு, தலை குனிய வேண்டியிருக்கிறதேயன்றி, சம்பாதிக்க அல்ல என்பதை, முகமில்லா காம்ரேடுகள்,புரிந்து கொள்ள வேண்டும்!

  • //சட்டமியற்றும் சபைகளில், உழைக்கும் மக்களின் குரல் ஒலிப்பதற்கு, பிரதிநித்துவம் வேண்டியே, அடையாளம் உள்ள காம்ரேட்கள், தன்மானம் விட்டு, தலை குனிய வேண்டியிருக்கிறதேயன்றி, சம்பாதிக்க அல்ல என்பதை, முகமில்லா காம்ரேடுகள்,புரிந்து கொள்ள வேண்டும்!//

   ஓ… புரிந்தது.. புரிந்தது….. இந்த ரகசியத்தை இது வரை எந்த காம்ரேடும் என்னிடம் சொல்லியதில்லை. அந்தளவுக்கு நான் ஒர்த் இல்லை போலிருக்கு…

   இந்த சட்டம் சட்டம்னு சொல்றாங்களே அத ஹிலாரி கிளின்டன் அமெரிக்க செனட்டுலதானே நிறைவேற்றுவாங்க? அமெரிக்கா வர போய்வர டிக்கெட்டு செலவுக்கு காம்ரேடுகளுக்கு பைசா தேறுமா? இல்ல அதை பார்லிமெண்டுச் செலவுல சேப்பாய்ங்களா?

   • அருந்ததி (ராய்) புகழ் (பாடும்) அசுரன் அவர்களே! அமெரிக்காவைத் தவிர,உமது கண்களுக்கு வேறேதும் தெரிவதில்லையா?

    சிகப்பு நாடுகளில், சட்டங்கள் சபைகளில் இயற்றப்படுவதில்லை போலும்!

    • //அருந்ததி (ராய்) புகழ் (பாடும்) அசுரன் அவர்களே! அமெரிக்காவைத் தவிர,உமது கண்களுக்கு வேறேதும் தெரிவதில்லையா?

     சிகப்பு நாடுகளில், சட்டங்கள் சபைகளில் இயற்றப்படுவதில்லை போலும்!//

     விக்கிலீக்ஸ்ல அப்படி போடலீங்கண்ணா… நீங்க வேனா பெர்சனலா ஜூலியன் ஆசேஞ்சுக்கு ரெகமண்டு பன்னுங்க….

   • அசுரன் ஜி!
    மிதவாத காம்ரேட், இயக்கத்தின் அபிமான பதிவர் ஒருவர், சில நாட்களுக்கு முன்னர், தன்னுடைய பக்கங்களில், தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளின், இன்றைய நிலை குறித்து அலசியிருந்ததை, படிக்க மறந்திருக்க மாட்டீர், என நம்புகிறேன்!

    • என்னோட கேள்வி ஒன்னே ஒன்னுதானுங்கன்னா… இந்தியாவுல சட்டம் எல்லாம் அமெரிக்காவின் தேவை, விருப்பம், நோக்கம், இலக்குக்கு ஏற்ப இயற்றப்படுதுன்னு சமீபத்துல அம்பலமானவை சொல்லுதுங்கன்னா நீங்களும், மேப்படி காம்ரேடுகளும் வேற மாதிரி சொன்னவுடன் கொஞ்சம் கம்பூசிங்காயிருச்ங்க்ண்ணா…

     //ஓ… புரிந்தது.. புரிந்தது….. இந்த ரகசியத்தை இது வரை எந்த காம்ரேடும் என்னிடம் சொல்லியதில்லை. அந்தளவுக்கு நான் ஒர்த் இல்லை போலிருக்கு…

     இந்த சட்டம் சட்டம்னு சொல்றாங்களே அத ஹிலாரி கிளின்டன் அமெரிக்க செனட்டுலதானே நிறைவேற்றுவாங்க? அமெரிக்கா வர போய்வர டிக்கெட்டு செலவுக்கு காம்ரேடுகளுக்கு பைசா தேறுமா? இல்ல அதை பார்லிமெண்டுச் செலவுல சேப்பாய்ங்களா?//

   • விக்கியின் அடுத்த லீக்ஸ், சீனாதானுங்கோ!! எல்லா இரும்புத் திரைகளும் கிழிபட்டுவிடும்!

    எல்லாமே அமெரிக்கா இல்லைங்கண்ணா! சிலசமயம் சட்டம் போட, நாங்களும் முயலுவோம்! (உ.தா… டாஸ்மேக் வியாபாரம்!)

    • அது சீனாவோ, அமெரிக்காவோ இல்ல க்யுபாவோ மொத்தத்தில் வெளிநாட்டில்தான் எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது இல்லையா? பிரச்சினை என்னவென்றால் இந்தியப் பாராளுமன்றம் ஒரு ரப்பர் ஸ்டாம்பு ன்னு சொல்றாய்ங்களே அதுக்கு ஏன் காம்ரேடுங்க இவ்வளவு பில்டப்பு கொடுக்குறாய்ங்க ரம்மி அவர்களே. இதுதான் இந்த சிறுபிள்ளையின் மூளையை பெருச்சாளி போல பிறாண்டும் கேள்வி…

    • தரகு வேலையே தொழிலாக இருக்குற நாட்டுல சட்டத்த மட்டும் இவிங்களா போட்டுருவாய்ங்களா! சட்டமும் உலகமயம். இந்தியாவுக்கு உலகமே அமெரிக்காதான். உலகமயத்த கம்ப்ளீட்டா ஃபாலோ பண்றது இந்தியாதான்.

    • அமெரிக்காவின் தேவையறிந்து செயல்படுறனாலதான் ஈராக் மாதிரி நிலமை நமக்கு வரலை. இல்லைன்னா இந்நேரம் 1991க்கு முன்னாடி இருந்தமாதிரி ஆயிருப்போம். அசுரன் மாதிரி பேசுறதெல்லாம் சோஷலிசத்தின் எச்சம்.

    • அதாவது கட்டின [obscured] வசதியாவும் பகட்டாகவும் வாழ முடியும்னு சொல்ல வர்றீங்க !!

    • மனைவியை இன்னொருவருடன் வாழ வைத்தால் – என்று திருத்திக் கொள்ளவும்

  • rammy,

   கம்யூனிஸ்டுகள் பாரளுமன்ற ஜனனாயக வழிமுறையை ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுத்தது சரி. ஆனால் எந்த ஒரு ‘பூஸ்வா’ கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், எப்போதும் தனியாக போட்டியிட்டு, பாரளுமன்ற / சட்ட மன்றங்களில் issue based support or opposition and abstenation in ‘confidance’ vote : இப்படி செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும். இப்ப இப்படி சீரழிந்திருக்க வேண்டாம்.

 4. //எது பெரிது – ஒண்ணா ரெண்டா?//

  இது கொஞ்சம் கஸ்டமான கேள்விதான். கணக்குல ஏற்கனவே நமக்கு வாரம், மாசம்…

  பட் கீழ குறிப்பிடும் டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

  //“வடக்கிருந்து சாவதுதான் முடிவு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டால், அதற்கு வைகோ தலைமை தாங்குவதே பொருத்தமாக இருக்கும்” என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும். //

  இதவிட பெரும் கவலை எனது மனதை அப்பி அடைத்து வட்டுகிறது. தமிழன் என்றால் காங்கிரசை புறக்கணி என்று கிளம்பியுள்ள அரசியல் கும்பல் மற்றும் பதிவுலகில் உச்சிக்கு ஏறி சாமியாடும் சிலரை நினைத்தே அந்தக் கவலை.

  • அன்புள்ள தோழர்களுக்கு,

   மூளையின் அளவில் டயனோசாருடன் போட்டியிடும் எங்கள் அருமைத் தலைவன் தியாகுவின் அறிவாற்றல் வாய்ந்த கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு உங்களில் யாருக்கும் அறிவோ, திறமையோ இல்லை என்பது இன்நேரம் அன்டார்டிகாவுக்கு அப்பால் வரை வெட்டவெளிச்சமாகியிருக்கும். எனவே தயவு செய்து பதில் சொல்கிறேன் பேர்வழி என எங்கள் தானைத் தலைவனின் பொன்னான நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என பணிவன்போடு எச்சரிக்கிறேன்.

   இவன்
   ஓதிமுக
   திருப்பூர் கிளை

  • //ஆக திமுக தனது பொன்னான ஆட்சியை தொடரனும் என வினவு விரும்புகிறதா//

   எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்! இங்கு
   இல்லாமை இல்லா நிலை வேண்டும்!

   எனும் பாடலின் பொருள் உணர்ந்து செயல்படுவது, தி.மு.க அரசு ஒன்றுதான்!
   அதன் சேவை தொடர வேண்டும் என, பொதுவுடமை வினவு நண்பர்கள், விரும்புவது தவறாகாது!

   • அப்படிப்போடுங்க தியாகு. தூள் கிளப்பீட்டிங்க. நீங்க இப்பக் கேட்ட படுபயங்கரமான கேள்விக்கு வினவால் பதிலே சொல்ல முடியாது – அட அவ்வளவு ஏன் – ஐன்ஸ்டீனே வந்தாலும் பதில் சொல்ல முடியாது.

    பார்த்திட்டே இருங்க வினவு அப்படியே இந்தக் கேள்வியை மட்டும் ஸ்கிப் பண்ணிட்டுப் போயிடுவாங்க. உங்கள பாத்தா பதிவுலகமே நடுநடுங்கும் போது வினவு மட்டும் பதில் சொல்ல முடியுமா என்ன?

    நீங்க என்ன சாதாரண ஆளா? மார்க்சை விட மார்க்சியமும்; லெனினை விட லெனினியமும் கற்றுத் தேர்ந்த மாபெரும் மார்க்சிய தத்துவனானி ஆயிற்றே?

    வினவு ஐ.டிய ஹேக் பண்ணி யாரோ அடுத்த பதிவைப் போட்ருக்காங்க அதிலயும் நீங்க ஆயி – ச்சீ சாரி – போயி உங்க கேள்விகளைக் குமுறுங்க போங்க.

    https://www.vinavu.com/2011/03/21/a-raja-sadiq-basha/

    ஒருவேளை இந்த பதிவே உங்களைப் பார்த்து பயந்து போய் தான் போட்டாய்ங்களோ!???

 5. “சுயமரியாதை இல்லாமல் கட்சி உயிர்வாழ முடியும்”
  ஒரு திருத்தம்:
  சுயமரியாதை இல்லாவிட்டால் மட்டுமே எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியும் உயிர் வாழ முடியும்.

 6. “வேலிகாத்தான் முட்புதர்களில், நரகலை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் பன்றிகள் படையெடுக்கும் காட்சிகளின் ‘ட்ரெயிலர்’ ஜேஜே கூட்டரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் காட்சி களேபரமானது. பெரிய பன்றி மற்ற பன்றிகளை – அவை கூட்டமாக வந்தாலும் சீறிப்பாய்ந்து மொத்த மலத்தையும் கப்பெனக் கவ்வும் காட்சி இருக்கிறதே… அடடா … அதுதான் நேற்று நடந்தது. ஆனாலும் சிறிய பன்றிகள் அதற்காக ஓடிவிடவில்லை. பம்மி…பம்மி சற்றே மெல்ல அருகில் சென்று பெரிய பன்றி கவ்விய போது சிதறிய எச்சங்களை நக்கி எடுத்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே திரும்பும் காட்சி இருக்கிறதே…..அடடா…. அதுதான் இன்று நடந்தது.”

  இப்படி எனது பதிவில் இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.
  “மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு”! http://hooraan.blogspot.com/2011/03/blog-post_19.html
  இப்போது ட்ரெயிலர் இல்லை. படம் ரிலீசாகி முதல் காட்சி ஓடி முடிந்து விட்டது. அடுத்து தியேட்டர் வாசலில் படத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

  “படம் சூப்பர். இப்படி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.”

  “செம காமெடி சார். வடிவேலெல்லாம் சும்மா… ஜீஜீபி”

  “பர்ஸ்ட் ஹாஃப் செம ஸ்பீடு. நேரம் போனதே தெரியல. செகண்ட் ஹாஃப் ரொம்ப டிராஜெடி. ஐஞ்சு வருசமா கூப்பிட்ட முள்ளுக்காட்டுக் கெல்லாம் கூடவே வந்த வந்த கலிங்கப்பட்டி குட்டி எதுவும் கிடைக்காம பட்டினியா போகும் காட்சி என்னை ரொம்பவும் கலக்கிடிச்சு. தோல் துண்டு தொப்பட்டையானது.”

  “காலைக் காட்சிக்கு வந்தேன். படம் விருவிருப்பா போச்சு. இடைவேளை விட்டாங்க. அவசரமா ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து உட்கார்ந்தா, மறுநாள் காலையிலதான் செகண்ட் ஹாஃப். இடைவேளை நேரம் அதிகம்னாலும் படத்தோட விருவிருப்புக்கு பஞ்சமில்ல”.

  “இடைவேளைக்குப் பிறகு வந்த கருப்புக் குட்டி கொத்தா கவ்விட்டுப் போக, படம் முழுக்க வந்த கலிங்கக்குட்டி பட்டினியா போனது ரொம்ப சோகம்”.

  “படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கருப்புக் குட்டி ரொம்ப சாமார்த்தியசாலி. பாவம் கலிங்கக் குட்டி.”

  “வழக்கமான ஆக்ரோஷம் கருப்புக் குட்டிகிட்ட இல்லாம போனது ஒரு ஏமாற்றம்தான்”.

  “கருப்புக் குட்டிய விட சிவப்புக் குட்டிங்க செம கில்லாடிங்க. கெடச்சத கவ்விட்டு போனது படத்துல சொன்ன செம மெசேஜ்”.

  “குணசித்ர வேடத்துல செவப்புக் குட்டிங்க நடிப்பு சூப்பர்”.

  “படத்துல அடிதடி இல்ல. ரத்தம் சிந்தல. காமெடி, சென்ட்டிமெண்ட் கலந்த படம். குடும்பத்தோட பாக்கலாம்”.

  “எப்பவும் போலவே அம்மா குட்டி அசத்திடிச்சில்ல. அதுதான் படத்துல ஹைலைட்”.

 7. ஓட்டுச் சீட்டு அரசியலில் இவர்கள் எல்லாம் சூயிங்கம் போன்றவர்கள்.பார்க்க பளபளப்பு,ஒரு வகையான மணம்,வாயில் போட்டு சுவைத்தால் முதலில் ஏதோ ஒரு சுவை.அப்புறம் மெல்ல வேண்டியது தான்.வாய் வலிக்க, நாக்கு வறள,தாடை வீஙக,முழி பிதுஙக மென்றுகொண்டே இருக்கலாம்.ஆனால் முழுஙக முடியாது.முட்டை விடலாம்,க்ண்ட இடஙகளில் துப்பி வைக்கலாம்,இருக்கைகளில் ஒட்டி வைக்கலாம்,யாருடைய பேண்டிலோ ,வேட்டியிலோ ஒட்டிக்கொண்டு போவதைப் பார்த்து ரசிக்கலாம்,இதற்கு அழிவு யாரால் எப்படி என்று கண்டுபிடிப்பது கடினம்.அனேகமாக செருப்பில் ஒட்டிக்கொண்டால் சொர சொர தரையில்தேய்த்து தேய்த்து அழிக்கலாம்.சூயிஙகத்தை மென்றால் முகத் தோற்றம் பொலிவடையும் என்று சொல்கிறார்கள்.ஆனால் உண்மையில் வாய்ப்புண்,தொண்டை அழற்சிகுடல் புண் இவையெல்லாம் நிச்சயம் வரும்.சூயிஙகத்தை ஒழிப்பதே சிறந்தது.

 8. பல் இல்லாதவர்கள் தவிர பாக்கி எல்லோரும் மெல்லலாம்.இந்தக் கட்டுரையில் எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த எள்ளல் நடை.பயனும் அதுவே.கட்டுரை முடியும் என்றே நினைக்கவில்லை போங்கள்.தின்ற பின்னும் வாயில் சுவைக்கும் ஒரிஜினல் கடலை மிட்டாய் போல.கட்டுரையில் சொல்லப் பட்டுள்ள நகைப்புக்குரிய நண்பர்கள்,காம்ரேட்டுக்கள் அனைவரும் படிதுப் பார்த்து பின்னூட்டம் போட வேண்டும்.வாழ்க ஜன நாயகம் !!???!!?

 9. வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல
  அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
  தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
  அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறதா??
  “தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா”. அப்போது வை கோ கலைஞரை பார்த்து
  அழ , கருணாநிதி அழ நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து
  தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது
  ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
  அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
  கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.

  வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??

  என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.

 10. விவசாயக் கல்லூரி மாணவிகள் பேருந்துக்குள் வைத்துக் கொளுத்தப்படுவதும், தினகரன் பத்திரிக்கை அலுவலகத்துக்குள் அப்பாவி ஊழியர்கள் வைத்து தீக்கிரையாக்கப்படுவதும் மிகச் சாதாரண நிகழ்வுகளாக நடத்திக்காட்டப்படும் தமிழக அரசியல் சூழலில் கடந்த பதினேழு ஆண்டுகளாக எள் முனையளவும் குற்றம் சாட்ட முடியாத அளவிற்கு பொது மக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் அரசியல் பயணம், திட்டமிட்டு கழுத்தறுக்கப்பட்ட சூழலில் கொதித்தெழுந்து தொண்டர்கள் இரு இடங்களில் ஜெயலலிதாவின் படங்களைக் கொழுத்தியதை வன்மையாகக் கண்டித்த தலைமையின் கண்ணியம் போன்றவை மதிமுக இந்த மண்ணில் நிலைநிறுத்திய அரசியல் ஒழுக்கங்கள்.

  தூத்துக்குடி இன்னொரு போபாலாக மாறிவிடக் கூடாது என்பதற்காக பண்ணாட்டுக் கம்பெனியை மூடச் செயத மக்கள் போராட்டம், லாபத்தில் ஓடிக்கொண்டிருந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலை தனியார்க்கு தாரைவார்க்கப்படப்போவதை அறிந்து அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் வாதாடி அந்த மக்கள் சொத்தை காப்பாற்றியவை போன்றவை மதிமுக இந்த மக்களுக்கு பெற்றுத்தந்த பலன்கள்.

  ஒரு வைகோ என்ன எத்தனை வைகோக்கள் வந்தாலும் புதிய அணை கட்டுவேன் என்று சொன்ன அச்சுதானந்தத்தின் குரலுக்கு உள்ளிருந்த அச்சம் மதிமுக திரட்டிய மக்கள் திரள் ஏற்படுத்திய அச்சம். முல்லைப் பெரியாறு , காவிரி, பாலாறு போன்றவற்றுக்கான போராட்ங்கள் மதிமுக இந்த மண்ணின் பிரச்சனைகளை தொலைநோக்குப் பார்வையில் தீர்ப்பதற்கான மக்கள் போராட்டங்கள்.

  நாடாளுமன்றத்தில் நதி நீர் இணைப்புக்கான ஒரு நபர் மசோதா மதிமுக இந்திய ஒருமைப்பாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு முன் மொழிந்த தீர்வு.

  டில்லி பெரியார் மையம் இடிக்கபடப் போவதற்கான சிக்கலுக்குள் உள்ளான பொழுது அன்றைய உள்துறை அமைச்சரிடம் பேசி அதைத் தடுத்தது மதிமுக திராவிட இயக்கத்திற்கு செய்த அருட்கொடை

  சிவகாசியில் மதிமுக நடத்திய ஊனமுற்றவர்க்கான முகாம்கள், கழக இரத்த வங்கி போன்றவை மதிமுக அரசியலை மீறி இம்மக்களுக்கு செய்த மனிதாபிமான சேவைகள்.

  பேச்சுரிமைக்கு எதிரான பொடாவின் பிரிவை உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மதிமுகவின் திறம் இந்திய அரசியல் அமைப்பின் மானம் காத்த செயல்

  எச்சூழலிலும் சமரசம் செய்துகொள்ளாத ஈழ ஆதரவு மதிமுகவின் தமிழ் இனஉணர்வு.

  பொடா சிறைவாசத்திற்குப் பிறகு நாற்பது தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிபெறுவதற்காக உழைத்த உழைப்பு, மதிமுக கருணாநிதிக்கு கொடுத்த மறுவாழ்வு.

  அறுபது தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு உழைத்த உழைப்பு ஜெயலலிதா இன்னும் அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்க மதிமுக காட்டிய கூட்டணி தர்மம்.

  தேர்தலே அரசியல், காசும் பதவியும் மட்டுமே அரசியல் என்கிற இன்றைய சூழலில் மதிமுக செய்த தேர்தல் புறக்கணிப்பு இளைஞர்களுக்கு மதிமுக காட்டும் புதிய பாதை.

  தன்னை நிலை நிறுத்திக்கொண்டு பிறகு தனி வழி காண்போம் அதுவரை எதார்த்தங்களுக்கு உட்பட்டு கூட்டணிகள் வைத்துக்கொள்வோம் என்கிற ஒரு முடிவே இதுகாறும் ஏற்பட்ட இன்னல்களுக்கு காரணம். அந்தத் தவறான முடிவுகளிலிருந்து விடுபட காலமே ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அந்தச் சூழலை அமையச் செய்ததற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

  மே 13 இருவரில் ஒருவர் காணாமல் போயிருப்பார். கருணாநிதி தோற்று ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் கனிமொழி மட்டுமல்ல கருணாநிதியே கழி திங்க வேண்டியிருக்கும். அனைத்தும் இமாலய ஊழல்கள். ஒருவேளை ஜெயலலிதா தோற்று கருணாநிதி ஜெயித்தால் ஜெயலலிதாவுக்கு கொடாநாடு நிரந்தரம். ஆனால் மதிமுகவிற்கு அப்படியல்ல. கருணாநிதி மாதிரி பயம்கொள்ள மடியில் எவ்வித கனமும் இல்லை. ஜெயலலிதா மாதிரி ஓய்வெடுக்க மதிமுக ஒன்றும் தமிழர் நலனுக்கு எதிரான கட்சியல்ல. விரைவில் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டங்கள் மாவடந்தோறும்! மறுமலர்ச்சி காண அயராது பணிகள்! இன்னல்களுக்கு இடையில் உறூதியுடன் பயணிக்க தயாராகவே இருக்கிறோம். ஏனெனில் நாங்கள் மக்களை நேசிப்பவர்கள்! தமிழை நேசிப்பவர்கள்! தமிழினத்தை நேசிப்பவர்கள்!

  • /////ஜெயலலிதா மாதிரி ஓய்வெடுக்க மதிமுக ஒன்றும் தமிழர் நலனுக்கு எதிரான கட்சியல்ல. ////

   அப்புறம் என்ன ——-க்கு அஞ்சி வருசமா அம்மா கூட கொஞ்சி கொஞ்சி அலைகளாடனு பாட்டு பாடுனிங்க ?..

   ஓபாமா வுக்கு ”ஆம் நம்மால் முடியும்னு “ புக்கு போட்டீக ?..

   பிரபாகரனுக்கு எதிரானவர் தான் புர்ச்சித் தலைவி என்று தெரிந்தும் அப்புறம் எதுக்கு அவுக —— நக்கிட்டு இருந்தீக ?..

  • Wonderful Pandian. Vaiko is the best politician in all sorts in Tamilnadu. MDMK is the party not for the sons and daughters of the party leader’s family but for the people of Tamilnadu.

  • //therdhal purakkanippu ilaingargalukku kattara puthiya paathai//

   super pandiyanne! aanaa endha ilaingarukkunu than solla maranthuttinga!

   aamma yaaru andha seyal veerrrrrarrrrgalllll?

 11. Vinavu,

  You are toomuch. Again and again I am requesting share ur comment about the particular person.Don’t link with cast. I have one doubt that r u supporting DMK?

  ur way of writing is like that only. Also against ur brahmins comments, I can have lot of evidence that who struggled and supported for getting the rights for harijans(as per mahatma word).From bARATHIAR to Nehru ,lot of leaders from brahmins only tried and supported others to grow.

  Don’t spread wrong informations like Karunanithi and his family,periar, veeramani etc.I think u r not a such person.

 12. 14. 2006_ல் இன்றைக்கு எங்களுக்கு ஏற்பட்ட நிலையை அன்றைக்கு கருணாநிதி ஏற்படுத்தினார். வாருங்கள் போகலாம் இல்லையென்றால் நாங்கள் அங்கே(ஜெவிடம்) போகிறோம் என்று நிர்பந்தப்படுத் தி அதிமுக கூட்டணியை தேர்தெடுக்க வைத்த சில தறுதலைகளின் பேச்சை செவிமடுத்தது.

  15. கூட்டணி தர்மம் என்கிற பெயரில் 1760000000 கோடிக்கு அனுமதி தரும் கேடுகெட்ட கூட்டணிக்கு மத்தியில் ஐந்தாண்டுகளாய் கூட்டணியின் தர்மம் காத்து உடனிருந்தது.

  16. 2010_நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்பு அணி மாறி 7 தொகுதியும் ஒரு ராஜ்சபா உறுப்பினர் என்று ஒப்பந்தமும் போட்டுவிட்டு தேர்தலில் தோற்றவுடன் ஒட்டளித்த மை அழியும் முன்பே ஜாகையை மாற்றிய கேவல பச்சோந்தித்தன் இல்லாமை.

  17. தேர்தலுக்கென தனி வேடம் தரிக்க தன் அலமாரியில் தனிஉடை வைத்திருக்கும் கேடுகெட்ட தலைவர்களுக்கு போல் நடிக்க தெரியாதது.

  18. பிச்சாதிபதியாய் அரசியல் தொடங்கி உலக பணக்கார வரிசைக்கு வரும் தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகளை போல் இருக்காமல் பிறவி கோடீஸ்வரானாய் பிறந்து அந்நிலையிலேயே கைசுத்தமாய் வாழ்வது.

  19. எத்தனை குற்றம் சுமத்தப்பட்டாலு ம் ஊழல் குற்றம் சுமத்த வழிதராதது.

  20. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிலேயே இதுவரையில் என்னிடம் தனக்கென எதையும் கேட்காமல் தன் மாநில மக்களுக்காக மட்டுமே கேட்கும் கொள்கைக்காக வாழும் தலைவர் வை.கோ என்று மன்மோகன் சிங் சொன்னது.

  21. வாக்களித்தால் மக்களை வாழ்த்துவதும் தோற்க வைத்தால் மக்களை முட்டாள்கள் என்று தூற்றுவதையுமே பிறவிக்குணமாய் கொண்ட சண்டாள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் தோற்க வைத்த மக்களுக்காகவும் போராடும் தலைவன்.

  22.நதி நீர் இனைப்பை வலியுருதி நாடாலுமன்ட்ரதில ் தனி நபர மசோதா கொன்டு வந்தது

  23.May 1 day declared as holiday by central govt during VP singh period because of vaiko request.

  Thanks Guna

 13. Guna Says,
  வை.கோ என்னுடய தலைவர். ஆனால் இன்று எங்களுக்கு ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகள்? தோல்விகள்? தகுதியான வை.கோ அவர்கள் முன்னணி தலைவராய் தமிழகத்தில் ஆக முடியாமல் போனதற்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன ் பாருங்கள்.
  1. “மனைவி1/மனைவி2/துணைவி என்கிற இல்லறம் இல்லாதது.

  2. வாரிசு அரசியல் செய்ய துணியாதது.

  3. 18 ஆண்டுகள் டெல்லியில் இருந்தும் ஊழல் செய்யாமல் இருந்தது.

  4. உலகில் எங்கெல்லாம் தமிழன் பாதிக்கப்பட்டால ும் அவனுக்காக குரலெழுப்பி போராடியது.

  5. தன் அரசியல் வாழ்வையே ஈழத்து சொந்தங்களுக்காக இழந்து நிற்பது.

  6. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்களின் வாழ்வுரிமையை காக்க 18 ஆண்டுகள் போராடி வென்றது.

  7. முல்லை பெரியாறு உரிமையை நிலைநாட்ட முன்னின்று போராடுவது.

  8. 65000 சிறுவர் சிறுமியர்க்கு தன் சொந்த உழைப்பில் சேர்த்த பணத்தில் மஞ்சள் காமாலை தொடர் முகாம் சிகிச்சை அளித்து அவர்களை காத்தது.

  9. சேது சமுத்திர திட்டத்தை வாஜ்பாய் அவர்கள் மூலமாய் சென்னை தீவுதிடலில் அறிவிக்க வைத்தது.

  10. வி.பி.சிங் “வை.கோ”_விற்கு மத்திய மந்திரி பதவி தருகிறேன் என்ற போது அதை மு.க நயவஞ்சகமாய் தன் மருமகன் மாறனுக்கு திருப்பி விட்ட போதும் விசுவாசத்தின் பொருட்டு அமைதி காத்தது.

  11. “வை.கோ என் மூத்த மகன்” என்று பெருமையுடன் சொல்லி நிதி/ராணுவம் தவிர்த்து உனக்கு எந்த இலாகா வேண்டுமோ அதை நீ எடுத்து கொள்ளலாம் என்று வாஜ்பாய் சொன்ன போதும் தன் சகாக்களுக்கு வழிவிட்டு தன்னை பதவிக்கு முன்னிறுத்தி கொள்ளாதது.

  12. 2004_ல் 4 நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமே தருவேன் என்று மு.க தன் சுயரூபம் காட்டிய போது அதனால் என்ன “நான் நிற்கவில்லை” என் சகாக்கள் நிற்கட்டும் என்று 4 சகாக்களை நிற்கவைத்து வெல்ல வைத்தது.

  13. 2004_ல் தன் 4 உறுப்பினர்களையு ம் கூட்டி கணக்கு காண்பித்து கருணாநிதி 9 அமைச்சர் பதவிகளை வாங்கி தில்லுமுல்லு செய்ததை சோனியாவும் மன்மோகன் சிங்கும் சொல்லிய பிறகும் அமைதியாக இருந்தது.

 14. Guna Says,
  இதை போல் இன்னும் நூறு காரணங்கள் என்னால் பட்டியலிட முடியும்.., வை.கோ_விற்கு தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த தெரியவில்லை என்று இங்கே பலர் விமர்சிப்பதுண்ட ு. என்ன செய்வது என் தலைவனுக்கு அரசியல் விளையாட்டாகவோ சூதாட்டமாகவோ தெரியவில்லை மாறாக அவருக்கு அரசியல் ஒரு நெறிமுறையான ஜனநாயக சேவையாக தெரிகிறது. ஒரு வேளை சூத்திரதாரிகளும ் சூன்யகாரர்களும் துரோகிகளும் சதியாளர்களும் மட்டுமே இங்கே வெல்ல முடியும் என்று ஏதேனும் எழுதப்படாத இழி நெறி உள்ளதோ என்னவோ..? இங்கே நல்ல அரசியல்வாதி அவனுடைய “மக்கள் பணியால்” அங்கீகரிக்கப்பட ுவதை விட “தேர்தல் வெற்றியால்” மட்டுமே அங்கீகரிக்கப்பட ுகிறான்.., விளாத்தி குளத்தில் வை.கோ_வை வீழ்த்தியவன் “பின்னாளில் கொள்ளைக்காரனாய் ” மாறினான். இங்கே தோல்வி வை.கோ_விற்கு அல்ல அந்த கொள்ளைக்காரனுக் கு வாக்களித்த மக்களுக்கே.., இது போன்ற தோல்வி இன்னும் 10 வருமென்றால் அவற்றையும் தாங்கி கொள்ளும் பக்குவம் உள்ள தொண்டர்கள் இன்னும் வை.கோவுடன் இருக்கிறோம்.., நாங்கள் அவருடன் இருப்பது “அதிகாரம்” சுவைக்க அல்ல “இன உணர்வு” காத்திட போராடும் அவனின் வளையா குணத்திற்காக.., ஆம்.., தீ கதிரை எப்படி ஏந்தி பிடித்தாலும் அது மேல் நோக்கி தானே எறியும்.., நாங்கள் மேல் நோக்கியே எறிகிறோம்.., தேங்கி நிற்க நாங்கள் ஒன்றும் குட்டை அல்ல.., 17 ஆண்டுகளாய் ஒடுகிறோம்.., வெற்றியின் அளவு குறைந்திருக்கலா ம் ஆனால் வை.கோ_வின் மக்களுக்கான போராட்டத்தின் வீச்சு குறையவில்லை என்பதை மனசாட்சியுள்ளோர ் ஏற்று கொள்வர்.., இம்மண்ணில் வீரனால் எதிரியை எளிதாய் வீழ்த்திட இயலும் ஆனால் அவ்வளவு எளிதாய் துரோகத்தை வீழ்த்திட முடியாது காரணம் எதிரி கண்ணுக்கு தெரிவதுண்டு ஆனால் துரோகம் உருவமில்லாதது.., எங்களுக்கான களம் எப்போதும் உண்டு.., அக்களத்தில் நாங்கள் இறங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்..,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க