வினவு
வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 18 ஆகஸ்ட் 2017
சென்ற வாரம் 14.08.2017 முதல் 18.08.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.
போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்
ஒரு நாட்டில் சராசரியாக குடிமக்களின் வயது 75 என்றால் ஆபாசப் பட உலகில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு 50 வயது வரை வாழ்வதே மிக மிக அரிது.
ஓவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச். ராஜா !
தனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும் தங்களை 'நாகரீக'மாக மாற்றி வருகிறார்கள். இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம்
கிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு
நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் கொண்டு செல்லுமளவிற்கு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பு என்பது அளப்பரியது.
ஊழல் செய்யாத உத்தமரா மோடி ?
“மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் செல்வாக்குடன் பராமரிக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?
சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !
தின்னச் சோறில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, கௌரவத்தோடு வாழ வேலையில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி கூலி, ஏழை விவசாயிகளின் வேதனைக் குரலைக் கேட்கவும் ஆளில்லையோ?
உ.பி முசுலீம்களுக்கும் திரிபுரா முதல்வருக்கும் சுதந்திரம் இல்லை !
சர்க்காரின் உரையை வாங்கிப் பரிசீலித்த ’பிரச்சார் பாரதி’, சுதந்திர தினத்தின் புனிதத்தையும், தனிச்சிறப்பையும், சர்க்காரின் உரை பாதிக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறி சுதந்திர தின நிகழ்வுகளில் முதல்வரின் உரையை நேரலை செய்ய மறுத்து விட்டது.
தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?
''பூமியின் அடியாழத்திலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும்போது பாறைகள் மீது பெருமளவு அழுத்தம் செலுத்தி வந்த வாயுக்கள் அகற்றப்பட்டு விடுவதால்தான் அவற்றுக்கிடையிலான சமநிலை குலைந்திருக்கிறது''
பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?
பிக்பாஸ் வார நாட்களிலும், கமல் வார இறுதியிலும் வேலை செய்கிறார்கள். மக்களோ 24 X 7 என வாரம் முழுமையும் வேலை பார்க்கின்றனர். அதன்படி இவர்கள் தினசரி ஒன்றரை மணிநேரம் பார்க்கும் பிக்பாஸ் தொடரை வைத்து அந்த வீட்டில் இருக்கும் 101-ஆவது கேமராவாக மாறுகின்றனர்.
சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !
மோடி அரசு கொண்டுவரவிருக்கும் விவசாய நிலக் குத்தகை சட்டம், சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சமர்ப்பணம் செய்யும் சதித்தனங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?
துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.
இரசியாவில் மானத்தை வாங்கிய இந்திய இராணுவ டாங்கிகள் !
அப்படி இரகசியமாக வைக்கப்பட்ட சமாச்சாரங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துகளாகவும், தற்போது இரசியாவில் டாங்கிகளின் பழுதாகவும் பல்லிளித்திருக்கின்றன.
பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் !
இம்மண்டலம் அமைய நாம் அனுமதித்தால், விவசாயம் அழிந்து போவது மட்டுமல்ல; அக்கிராம மக்கள் ஊரையே காலிசெய்து விட்டு அகதிகளாக வெளியேறும் நிலைகூட ஏற்படக் கூடும்.
விவசாயி தீராத கடனாளியாவது ஏன் ?
புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.
பா.ஜ.க மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு இடமில்லை !
மோடியின் குஜராத்தில் உள்ள மஹேசனா நகரில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 762 பெண் குழந்தைகளே இருக்கின்றன.















