privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு - 18 ஆகஸ்ட் 2017

வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 18 ஆகஸ்ட் 2017

-

சென்ற வாரம் 14.08.2017 முதல் 18.08.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் விவசாயப் பிரச்சினைகள், ஐரோப்பா, ஆவணப்படங்கள், புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்திகள் குறித்து உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள்,விமரிசனங்களையும் அறியத் தாருங்கள்! நன்றி
– வினவு

94 குழந்தைகளைக் கொன்ற குடந்தை தீ விபத்து குற்றவாளிகள் விடுதலை !

“தீயில் கருகிய எங்கள் குழந்தைகள் தியாக குழந்தைகளாக உள்ளனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலாவது நீதி வழங்கியிருக்க வேண்டும். மாறாக விடுதலை செய்துள்ளனர். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்“ என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

வீட்டுக்கு வீடு சரக்கு விற்க தமிழக அரசு அனுமதி !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில்; இந்திய வகை மற்றும் வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டில்களும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டிலும், 12 பீர் பாட்டிலும், ஒயின் 12 பாட்டிலும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !

பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.

வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் !

35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.

அடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?

சுதந்திரமாய் வாழ முடியாதது மட்டுமல்ல என்னால் சுதந்திரமாக சாகவும் முடியாது ஆதார் இருந்தால்தான் நான் சட்டப்படி சவம்!

திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !

தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.

ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!

அரிசிக்குப் பதிலாக கோதுமையை வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது ரேஷன் கடையை இழுத்துமூடும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்கள்.

சென்னை மக்கள் : கொடியில காவி மட்டும்தான் இருக்கு ! படக்கட்டுரை

இந்த கொடியில் இருக்க பச்சை “விவசாயம்” அழிஞ்சிடுச்சி. வெள்ளை “சமாதனம்” சுத்தமா இல்ல. காவி மட்டும் தான் இப்ப இருக்கு.

சென்னை ஐஐடி : சூரஜ்ஜை தாக்கிய மணீஷுக்கு தண்டனை இல்லை !

மாணவர்களுக்கான ’டீனு’ம், இணைப் பதிவாளர் ஜெயக்குமாரும், வளாகத்தின் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குமாறு சூரஜ்-ஐ நிர்பந்தித்திருக்கின்றனர்.

மோடி அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை – 71 வது சுதந்திர தின உரை

பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு. அவற்றில் சில உங்களுக்காக….

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு பட்டை நாமம் !

நாடு முழுவதும், 100 -க்கு 5 விவசாயிகள் கூட இந்தக் காப்பீடு திட்டத்திற்கு சொந்த முறையில் பிரீமியம் கட்டவில்லை. எந்த விவசாயியிடமும் பாலிசிக்கான ஆவணமும் இல்லை. 95% விவசாயிகளை அவர்களுக்கே தெரியாமல் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.

விவசாயி தீராத கடனாளியாவது ஏன் ?

புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.

பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் !

இம்மண்டலம் அமைய நாம் அனுமதித்தால், விவசாயம் அழிந்து போவது மட்டுமல்ல; அக்கிராம மக்கள் ஊரையே காலிசெய்து விட்டு அகதிகளாக வெளியேறும் நிலைகூட ஏற்படக் கூடும்.

கல்விக் கொள்ளை ஜேப்பியாரின் புதிய ஆக்கிரமிப்புக்கு உதவும் பொதுப்பணித்துறை !

ஏரியை பராமரிக்காத இந்த துப்புகெட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாராய ரவுடியான ஜேப்பியார் கல்லூரிக்கு சாலை அமைப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்!

பா.ஜ.க மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு இடமில்லை !

மோடியின் குஜராத்தில் உள்ள மஹேசனா நகரில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 762 பெண் குழந்தைகளே இருக்கின்றன.

கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?

துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

இரசியாவில் மானத்தை வாங்கிய இந்திய இராணுவ டாங்கிகள் !

அப்படி இரகசியமாக வைக்கப்பட்ட சமாச்சாரங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துகளாகவும், தற்போது இரசியாவில் டாங்கிகளின் பழுதாகவும் பல்லிளித்திருக்கின்றன.

உ.பி முசுலீம்களுக்கும் திரிபுரா முதல்வருக்கும் சுதந்திரம் இல்லை !

சர்க்காரின் உரையை வாங்கிப் பரிசீலித்த ’பிரச்சார் பாரதி’, சுதந்திர தினத்தின் புனிதத்தையும், தனிச்சிறப்பையும், சர்க்காரின் உரை பாதிக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறி சுதந்திர தின நிகழ்வுகளில் முதல்வரின் உரையை நேரலை செய்ய மறுத்து விட்டது.

ஊழல் செய்யாத உத்தமரா மோடி ?

“மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் செல்வாக்குடன் பராமரிக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?

கிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு

நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் கொண்டு செல்லுமளவிற்கு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பு என்பது அளப்பரியது.

_____________

இந்த செய்தித் தொகுப்பு  உங்களுக்கு பயனளித்திருக்குமென நம்புகிறோம்.

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க