privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னை மக்கள் : கொடியில காவி மட்டும்தான் இருக்கு ! படக்கட்டுரை

சென்னை மக்கள் : கொடியில காவி மட்டும்தான் இருக்கு ! படக்கட்டுரை

-

நாட்டின் 71 -வது சுதந்திர தினம்; வீதிகளில் மூவர்ணத் தோரணங்கள். பள்ளிகளில் குழந்தைகளின் அணிவகுப்பு. நான்கு நாட்கள் தொடர்விடுமுறைக்காக சொந்த ஊருக்கு பயணிக்கும் மக்கள். பாக்கெட்டுகளில் பரவலாக குத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கொடிகள். செய்தித் தாள்களின் முதல் பக்கம் முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் தேசபக்தி விளம்பரம்.

இந்நிலையில் உண்மையிலேயே சுதந்திர தினம் என்னவாக மக்களிடம் நிலவுகிறது? சென்னையில் மக்கள் சிலரைச் சந்தித்தோம்.

வெங்கட், ஆட்டோ டிரைவர்.

இந்த சுதந்திர நாட்டில் தொழில்துறையை அதலபாதளத்திற்கு தள்ளியது, படித்த இளைஞர்களை வேலையில்லாமல் அலையவிட்டது, வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்தவிடாமல் தடுத்தது தான் இந்த சுதந்திர இந்தியா சாதித்தவை.

இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து கொடியை ஏற்றுவது நமக்கு தான் தலைக்குனிவு. கமிசனர் முதல் கான்ஸ்டபிள் வரை கிரிமினல்கள் தான். இந்த நாளை கருப்பு சட்டை அணிந்து துக்க நாளாக அனுசரிப்பது தான் மக்களுக்கு கவுரவம்.

அன்சாரி, செல்பேசி கடை.

வறுமை இல்லாத இந்தியா, எல்லோருக்கும் எல்லாம் எப்போ கிடைக்குதோ அப்போ தான் சுதந்திரம் கிடைச்சிருக்குன்னு அர்த்தம்.  படிக்கிறவங்களுக்கு வேலையும், விவசாயமும் சிறப்பா இருந்தா தேசப்பற்று வரும். அதுக்காக தியேட்டரில் தேசிய கீதம் போட வேண்டிய அவசியம் இல்லை.

ராஜ். தெருவோர புத்தக கடை உரிமையாளர்.

படிச்சவனுக்கு வேலை இல்ல. 90% மார்க் வாங்கினவனுக்கு கூட இவங்களால் வேலை தரமுடியலனா, சுதந்திரம் வாங்கினதுக்கு என்ன அர்த்தம் இருக்கு?

ராஜு. நவக்கலை ஃபிரேம் கடை.

தனி மனித தேவைகளை பூர்த்தி செய்வது தான் சுதந்திரம். அந்த அடிப்படையில் சுதந்திரம் இருக்கு.  வெளிநாட்டு பொருட்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை. நாம் அனுமதிக்கவில்லை என்றால் தனிமை பட்டு விடுவோம்.  தேசியகீதம் தியேட்டரில் போடுவது சரிதான். மூன்று நிமிடம் தேசப்பற்று உணர்வு வரும்.

முத்துக்குமார், ஜோசியம் பார்ப்பவர்.

ரேசன் பொருள் இதுக்கு முன்னாடி மட்டும் எங்க கொடுத்தாங்க.. இனிமே தரமாட்டேன்னு சொல்றதுக்கு. ஏழைபாழை நாங்க எவ்ளோ கஷ்ட படுறோம். எவனோ ஒருத்தன் சொல்றான்னு எல்லாத்தையும் நிறுத்துறான். இது தான் சுதந்திரமா?

இம்தியாஸ், ஆம்பூர் பிரியாணி கடை. 

நாம உற்பத்தி பண்றது அரசி தான். ஆனா அதுவும் இப்ப இல்ல. அந்த விவசாயிங்களுக்கே மரியாத இல்ல. டெல்லில எவ்ளோ போராட்டம் நடக்குது எங்காவது மதிச்சாங்களா?  அப்புறம் எங்க சார் இருக்கு சுதந்திரம்?

துரை, மளிகை கடை வியாபாரி.

சுதந்திர நாடு என்றால் சுயமாக முடிவு எடுக்க வேண்டும். ஆனா இங்க அப்படி இல்லையே. எல்லாத்துக்கும் கட்டாயப்படுத்துராங்களே.  வந்தே மாதரம் பாடுறதுல தப்பில்ல.ஆனா அது என்னன்னே தெரியாதே!

பால்ராஜ். 35 ஆண்டாக பூ வியாபாரம் செய்து வருகிறார்.

எல்லாமே வெளிநாட்டு பொருளு தான். அவன் தான் நம்மள ஆள்றானே. கடைசி வரைக்கும் இந்த அழுவி போறா பொருளைத்தான் நாம விக்கணும். காஸ்ட்லியான பொருள் எல்லாம் அவன் தயாரிப்பான்.

வில்லிங்க்டன், அலங்கார மலர் விற்பனையாளர்.

10 வருடமாக இந்த தொழில் செய்து வருகிறார். நைட்டு 12 மணிக்கு சட்டத்த போட்டு திடீர் திடீர்னு கொண்டு வரதுதான் சுதந்திரமா? ரூபா நோட்டு செல்லாதுன்னு சொன்னதுல இருந்து கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் இல்லாம போய்டுச்சி. வந்தே மாதரம் பாடும்போது ஒரு “வைப்ரேசன்” உணர்வு வருது. அதனால் அது சரி தான். ஆனா எனக்கு பாட்டு தெரியாது.

பார்த்திபன், 10 வருடமாக பூ வியாபாரம் செய்து வருபவர்.

முன்னாடி வெள்ளைக்காரனுக்கு கப்பம் கட்டினோம். இப்போ இவங்களுக்கு கட்டுறோம். அவ்ளோ தான் வித்தியாசம். தேசியக் கொடிய வேற வழி இல்லாம நாட்டுக்காக குத்திகிட்டு இருக்கேன். இந்த கொடியில் இருக்க பச்சை “விவசாயம்” அழிஞ்சிடுச்சி. வெள்ளை “சமாதனம்” சுத்தமா இல்ல. காவி மட்டும் தான் இப்ப இருக்கு.

வாசுதேவன், பூமாலை நார் வியாபாரிகள் சங்கம்.

தேசிய கொடியை ஏற்றுவதற்காக மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.  1947 வாங்குன சுதந்திரம். அங்க காந்தி, சுபாஷ்சந்திரபோஷனா, இங்க ஓமந்தூரார், பெரியார் எல்லாம் போராடி பெற்று கொடுத்த சுதந்திரம்; அது கொஞ்சம் கொஞ்சமா சுருங்கிடுச்சி.  நாம எவ்ளோ தான் படிச்சிருந்தாலும் வெளிநாட்டுகாரன் கிட்ட தான் இன்னும் அடிமையா வேலை செய்யுறோம். அவன் வெளியே போ.. அப்படினு சொன்னா நாம் கேட்டு தான் ஆகணும். இன்னும் நாம அடிமைதான்.

பழனி, நார் வியாபாரம்.  20 ஆண்டாக இந்த தொழிலை செய்து வருகிறார்.

“பாகுபாடு இல்லாம இருக்கிற நிலைமை எப்ப வருதோ அப்பதான் முழு சுதந்திரம் கெடச்சதா அர்த்தம்”. வாழிய செந்தமிழ்.. வாழிய செந்தமிழ்.. வந்தே மாதரம்… வந்தே மாதரம்… இது தான அந்த பாட்டு… 95 ல பத்தாவதுல படிச்சேன். இப்ப மறந்துடுச்சி. இது பாட சொல்றது தப்பு இல்லையே!

சுரேஷ். 25 வருஷமா டீ கடையில் வேலை செய்கிறார்.

சுதந்திரம் அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. நா படிக்கல.. வருஷம் 365 நாளும் டீ ஆத்துவேன். இந்த ஒரு நாள் மட்டும் கொடிய குத்துவேன்!

சுந்தர், வியாபாரி.

மோடி, ஜெயலிலிதா யாரா இருக்கட்டும், இவுங்க எல்லாம் மக்களோட கொஞ்சமாவது ஒட்டி உறவாடி இருந்தா தானே மக்கள் கஷ்டம் புரியும். நம்மை ஆள்பவர்கள் தான் சரியில்லை. அதனால தான் வெளிநாட்டு கம்பனி எல்லாம் இஷ்டத்துக்கு உள்ள வரான்.  தேசிய கீதம் பாடினா தேசபற்று வரும் அது சரி தான். ஆனா வந்தே மாதரம் நான் எதுக்கு பாடனும். அது வங்கமொழி. அத பாட சொல்றது மொழி திணிப்பு தான்.

மோகன் சிங். மத்திய பிரதேசம். கண்டெய்னர் ஓட்டுனர்.

கேயம்பேடு மார்கெட்டிற்கு வந்திருந்த அவரிடம் பேசியதில், “சுதந்திரம் இருக்குன்னு தான் நெனக்கிறேன். ஆனா வடக்க விட இங்க தமிழ்நாடு, ஆந்திராவுல நிறைய சுதந்திரம் இருக்கு” அங்க(வடக்க) வண்டிய நிப்பாட்டி இருந்தா பணம், போன் எல்லாத்தையும் பிடுங்கிட்டு விட்டுடுவானுங்க.  வந்தே மாதரம் படுறது சரி தான். ஆனா அந்த பாட்டு எனக்கு தெரியாது பாய்சாஹப்!

இளவரசன், பக்கிரிசாமி, சண்முகம். சுமை தூக்கும் தொழிலாளிகள். 

நாங்க உழைச்சா தான் எங்களுக்கு சம்பளம். இதுல சுதந்திர தினத்தை எங்க கொண்டாடுறது. எட்டாயிரத்துக்கு மேல சம்பாதிச்சா ரேசன் அரிசி கிடையாதுன்னு சொல்லிருக்கான். இது எங்கயாவது அடுக்குமா..? கூலி வேலை செய்றவன் கூட பொண்ண கட்டிக்க பத்து பவுனு, பெரிய வண்டி கேக்குறான். நாங்க சேத்து வைக்கிறதா? இல்ல அரிசி வாங்கி சாப்பிடுறதா? சிலிண்டர் கூட இல்லன்னு சொல்ராணுவ… இந்த நகரத்துல எங்க போயி வெறகு தேடுறது….

சண்முகம். பழக்கடையில் வேலை செய்பவர்.

நின்னா,நடந்தா உட்கார்ந்தா அதெல்லாம் சுதந்திரமா? நாங்க இங்க லட்சம் பேரு வலை செய்யுறோம். ஏதாவது ஒண்ணுன்னா  ஓடிபோய் பாக்க பக்கத்துல மார்கெட்டுலயே ஒரு மருத்துவமனை இல்லை. அப்புறம் என்ன சுதந்திரம்?

ராஜேந்திரன். மீன்பாடி வண்டி உரிமையாளர்.

வண்டில உக்காந்து பேப்பர் படிசிட்டு இருக்கேன் பாரு இதான் எனுக்கு சுதந்திரம். மோடிக்கும், எடப்படிக்கும் தான் நூத்துகணக்குல போலிசு, ராணுவம் பாதுகாப்பு கொடுக்கும். அவங்களுக்குத் தான் சுதந்திரம் எங்களுக்கு என்ன இருக்கு? இந்த வண்டியும், குப்பையும் தான் வாழ்க்கையே. ரேசன் அரிசி தான் எங்க பாடு. அதுவும் இப்ப ரத்து பன்னிட்டானுங்க. 2022 -ல மாற்றம்னு சொல்றாரு மோடி. அதுக்குள்ளே எலிகறியும், மனுசக்கறியும் தின்னுட்டு தான் சாவனும்.

சசி. மீன்பாடி வண்டி.

எங்களுக்கு உழைக்கிறது தான் சுதந்திரம். மத்த எதுவா இருந்தாலும் அரசாங்கத்தோட முடிவு எங்களுக்கில்ல!

இளங்கோ. பழம் வியாபாரி. கடை உரிமையாளர்.

“ஒரு மனிதன் பொருளாதார ரீதியா முன்னேறுவது தான் உண்மையான சுதந்திரம்” அதுவரை இது சுதந்திர நாடு இல்லை. காலைலேயே கதவ தட்டி நிக்குறான் கடன்காரன்.. எப்படி சார் நிம்மதியா இருக்க முடியும்.

செல்வம். பூண்டு மண்டி.

“ நாம உற்பத்தி பண்ற நாம்மோட ஆதாரமான விவசாயத்தையே அழிச்சிட்ட பிறகு சுதந்திரம் எங்க இருக்கு”

ஐயப்பன். கொடி விற்பனை செய்பவர்.

சீசனுக்கு ஏற்ற தொழில் செய்பவர். “ சுதந்திரத்த பத்தி எனக்கு சொல்ல தெரியாது. நாங்க கொடி விக்குறதால தான் எல்லோரும் வாங்கி குத்திக்கிறாங்க.”

நேர்காணல் – புகைப்படங்கள் : வினவு செய்தியாளர்கள்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ஆம் பிழைப்பையே நாய் பிழைப்பாக ஆக்கினால்தனே மக்கள் பொதுவுடைமை புரட்சி என்று வேறு எத்தன பக்கமாவது போய்த் தொலைக்க மாட்டார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

  2. சுதந்திரம் பத்தி என்னுடைய பார்வையில் மேலே கூறிய பாட்டாளிகள் அனைவரும் தன்னுடைய பொருளாதார (அ)பொது நிலையில் இருந்து கருத்து கூறுகிறார்கள்…
    என்னிடம் கேட்டால் நான்(தனி மனித) நல்லா சாப்பிடுரேன்…வேளையில் இருக்கேன்….நாசமா கூட போறேன்..இதெல்லாம் சுதந்திர தினம் ஒப்பிட்டு பேசல….
    ஆனால் ஒட்டு மொத்த நிலத்தை,,,வளத்தை,,மக்களை,,,அப்படி எல்லாத்தையும் தூக்கு கயிறு போட்டு இறுக்கி கொள்கிராணே இந்த ஆட்சியாளர்கள்…..
    இதுக்காகவா எண்ணிலடங்காத தியாகிகள் உயிர் விட்டு சுதந்திரம் வாங்கினார்கள்…அவர்களின் காலங்களில் கூட இப்படி கொடுமைகள் நடக்கவில்லை…ஆனாலும் மக்களுக்காக நல்ல வாழ்வு வாழ உயிர் துறந்துதனர்….அதை காட்டிலும் கொடுமை நடக்கும் இந்த நாட்டில்(நினைத்து பார்த்தால் மனதில் ஒரு வித காய்ச்சலும்,,,கண்ணீரும் வருது) கொடுமையை,,,,கேவலத்தை மாத்தி அமைக்க இந்த கேடு கேட்ட அரசை முழுவதுமாக அப்புறபடுத்த வேண்டும்…காய்ச்சலுக்கும்,,,கண்ணீருக்கும் மருந்தாய் (நாடு முழுவதும் மக்கள் திரண்டு போராடியும் இந்த அரசு பயப்பட போவதுமில்லை..)அவன் பயப்பட கூடிய வார்த்தையாய் சொல்லுவது மாவோயிஸ்ட்,,,நக்சலைட்டு,,,இவங்க காட்டுகுள்ள இருக்காங்கலாம்….உணர்வுள்ள தோழர்கலே கோன்ஜம் வெளில வாங்க…. கொடுமை ஆட்சியாளர்களை குளை நடுங்கச் செய்ய மக்கள் விடுதலை அடைய…. என் உயிரை ஈய்த்து தற்கொலை படையாய் மாறி எதிரியின் குலைநடுங்கச் செய்தால் அந்த காய்ச்சலுக்கும்,,,கண்ணீருக்கும் மருந்தாகும்..அய்யோ அந்த பச்சிளம் குழந்தை (70)பேர் உயிர் போச்சு…இன்னும் சும்மா இருக்கோமே….
    நாட்டின் விடுதலைக்கு உயிர் நீத்த தியாகிகளை நாம் கொச்சை படுத்திவிட்டோம்…இந்த அரசுக்கு பாடம் புகட்டாத வரை…எவ்வளவு அநீதியை சகிப்பது…

  3. செல்வகுமார் நண்பா உங்கள் ஆதங்கம் கோபம் எல்லாம் மிக மிக நியாயமே.நாம் மக்கள் திரளில்தான் அரசியல் பணி செய்துகொண்டு இருக்கிறோம்.மக்கள் சக்தி மட்டுமே வரலாற்றை உருவாக்கும் என்ற நிதர்சனத்தில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம்.எத்தனை எத்தனை தியாகத் தோழர்கள் கைது சிறை அடக்குமுறை என அனைத்தையும் எதீர்கொண்டு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.கடினமான இந்தப்பணியை தொடர்வேதே பெருந்திரள் மக்கள் திரளை சரியான அரசியல் வழியில் அமைப்பாக்கி அவர்களின் தலைமையில் நாம் அதிகார மாற்றத்தை நிறுவுவதற்குத்தான்.அதனை நோக்கிய போராட்ட
    பயணத்தில் தோழா்கள் தங்களின் சக்தியை மீறியே தீனம் தீனம் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அரச பயங்கரவாதத்தை நாம் மீகச்சாதாரணமாக எடை போட்டு நாம் முறீயடீத்து வீடமுடியாது.சமுக அவலங்களை பார்க்கும்போது ஆத்திரம் அடங்க மறுக்கத்தான் செய்யும்.அந்த ஆத்திரம் அப்படியே இருக்கட்டும்.பாட்டாளீவர்க்கமாக ஒன்றிணைந்து பெருந்திரள் படை வீதீயில் இறங்கும்போது உங்களை யார்ஆல் தடுக்கவோ தடுத்து நிறுத்திடவோ முடீயும்?தொடர்ந்து அரசியல் பணீ செய்வோம்.காத்திருந்தாலும் அவைகள் கன்னீவெடிகளே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க